Monday, October 22, 2018

நிழலற்ற பெருவெளி - தாஹர் பென் ஜீலோவ்ன்


இது ஒரு ரகசிய சிறைச்சாலையில் நடக்கும் கதை. 1971-ல் மொராக்கோ அரசருக்கு எதிரான கொலை முயற்சியில் ஈடுப்பட்ட வீரர்களில் 58 பேரை Tazmamart சிறையில் அடைப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. இந்த சிறை ஒரு கொடூரமான இடம்.பத்தடி நீளம் ஐந்தடி அகலம் மட்டுமே கொண்ட இருட்டு அறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். அவர்கள் நேராக எழுந்து நிற்க முடியாது. அது அறையல்ல அது ஒரு கல்லறை -வாழும் கல்லறை.
நம்பிக்கை என்பது பயம் இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் .தற்கொலை என்பது தீர்வாகாது.கடும்சோதனை என்பது சவால் . எதிர்ப்பு என்பது கடமை,வேண்டுகோள் அல்ல.
சலீம் என்ற கைதிதான் இந்த கதையின் கதை சொல்லி.  கதை சொல்லியென்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அவன் தான் விடுதலை ஆகும் வரை மற்றவர்களுக்கும் தனக்கும் கதை சொல்லிக் கொண்டே இருக்கிறான்.பலவிதமான கதாப்பாத்திரங்கள் பலவிதமான பின்னணிகள் கொண்ட கதை இது. அது கைதிகளின் துயரத்தை மட்டும் சொல்லும் கதை அல்ல. என்னை பொறுத்தவரை தேடல் தான் இக்கதையின் மய்யம். அவன் வெளியில் வாழ்ந்த வாழ்க்கை மற்றும்  சிறை வாழ்க்கை  இரண்டிலும் மாறி மாறி தன்னை தேடுகிறான். வெளி வாழ்வை மறக்க பெரிதும் சிரமப்படுகிறான்.
The hardest and most unbearable silence was that of light.  A powerful and manifold silence.  There was the silence of the night, always the same, and then there was the silence of the light.  A long and endless absence.
வெளி வாழ்வில் அவன் மதத்தை பெரிதும் பொருட்படுத்தாதவன் ஆனால் சிறையோ அவனை ஒரு சூஃபி அளவிற்கு மாற்றுகிறது. தனிமை அவனை கேள்வி கேட்க வைக்கிறது.கடந்த காலத்தை மறந்தும் எதிர் காலத்தைப் பற்றி நினைக்காமலும் தனது அனைத்து புலன்களையும் சிந்தனைகளையும் நிகழ்காலத்தில் நிறுத்தி தனது வாழ்வை இறைவனுக்கு ஒப்படைத்து சிறை வாழ்க்கையை நடத்துகிறான்.அவனுடைய ப்ளாக்கில் உள்ள மற்ற கைதிகள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இறப்பு அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இறப்பும் ஒரு பக்கம் அவர்களை துயரப்படுத்தினாலும் மற்றொரு பக்கம் அவர்களுக்கு அது நிம்மதியையும் போர்வைகளையும் கொடுக்கிறது. 

கரீம் ஒரு அற்புத பிறவி.அவன்தான் மற்ற சிறைவாசிகளுக்கு நேரம் சொல்லி. அவனால் நேரத்தை துல்லியமாக சொல்ல முடியும். தொழுகை நேரத்தை அவனே மற்றவர்களுக்கு சொல்கிறான் .அவனது சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக நிசப்தமாகிறது.ஒரு விதத்தில் கரீம் தான் அவர்களின் நம்பிக்கையும் கூட. அவனது இறப்பு அவர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்துகிறது .மற்றொருவன் ஆச்சார் அவன் ஒரு முன்னாள் போர் வீரன். எப்போதும் அடுத்தவர்களை வசைபாடிக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு எழுத படிக்க தெரியாது. அவனுக்கும் சலீமிற்கும் நடக்கும் உரையாடல் பல விசயங்களை நாம் புரிந்து கொள்ள உதவும். ஆச்சாருக்கு சலீம் குரானை வாசிக்க கற்றுக்கொடுக்கிறான். அவனும் கற்க ஆரம்பிக்கிறான். இருந்தாலும் அவனது வெறுப்பு குறையவே இல்லை.சலீம் கூறுவது போல "பசியைவிட வெறுப்பே அங்கு பலரைக்  கொன்றது".

மற்றொரு கதை சலீமிற்கும் அவனது தந்தைக்குமான உறவு. அவனது தந்தை சலீம் தன் மகனே அல்ல என்கிறான்.தன் மகன் ஒரு போதும் அரசருக்கு எதிராக போராடுபவன் அல்ல என்கிறார். சலீமை பொறுத்தவரை அவனது தந்தை அரச மாளிகை கோமாளி.அவனது அம்மாவும் சரி அவனும் சரி அந்த மனிதனை வெறுக்கவில்லை.சிறையில் சலீம் அனைவரையும் அன்பு செய்ய கற்றுக்கொள்கிறான்.இக்கதையில் ஒளியின்மைற்கு முக்கியான பங்கு உண்டு. ஒளி இல்லாததால் ஒருவன் எவ்வாறு உளவியல் பூர்வமாக பாதிக்கப்படுகிறான் என்பதை இக்கதை தெள்ளத்தெளிவாக கூறுகிறது. ஒரு சிறிய வெளிச்சம் கூட அவர்களை பல மடங்கு ஊக்கப்படுத்துகிறது.
We had two assets: our bodies and our minds. I quickly decided to use all possible means to save my brain. I protect my conscience and intellect. The body belongs to our captors, was in their power. They tortured without touching it, amputating a limb or two simply by denying us medical care. But my thoughts had to remain out of reach: my real survival, freedom, my refuge, my escape.
பதின்னெட்டு ஆண்டுகளுக்கு பிறகு சலீம் மற்றும் சிலர் விடுவிக்கப் படுகிறார்கள்.  சிறைச்சாலையை இடித்துவிட்டார்கள். அவர்கள் அனைவரும் பட்ட துயரத்தின் சின்னம் இனிமேல் உலகில் இல்லை ஆனால் துயரத்தின் வடு என்றும் அவர்களோடு இருக்கும். இந்த கதை உண்மை சம்பவத்தைத் தழுவியது.சுயசரிதை போன்ற தோற்றத்தைத் தந்தாலும் இது சுயசரிதை அல்ல.பல இடங்களில் எனக்கு கண்ணீர் வந்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒருவித உணர்ச்சி. இக்கதை மனிதனின் துயரத்தை மட்டும் பேசவில்லை அவனின் வாழ்வு போராட்டத்தின் மகத்துவதைத்தான் அதிகமாக பேசுகிறது.

இது நான் வசிக்கும் தாஹர் பென் ஜீலோவ்னின் இரண்டாவது புத்தகம். இதுவே இரண்டில் சிறந்தது.தமிழில் எஸ்.அர்ஷியாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வாசிக்க கடினமாக இருந்தது. முக்கியமாக பெயர்கள். நான் பலப் பக்கங்களை ஆங்கிலத்திலும் வாசித்தேன் .இது பல பெரிய பரிசுகள் பெற்ற படைப்பு. இந்த புத்தகத்தின் ஆங்கில பெயர் -"This Blinding Absence Of Light".

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

Thursday, October 18, 2018

The Language Of The Game - Laurent Dubois


கால்பந்து தெரியாதவர் இந்த உலகில் வெகு சிலரே. இந்த புத்தகம் கால்பந்தாட்டத்திற்கு ஒரு காதல் கடிதம். கால்பந்து மைதானத்தில் முக்கியமானவர்களான கோல்கீப்பர் ,defender ,மிட்பீல்டர் ,forward , பயிற்சியாளர், நடுவர் மற்றும் ரசிகர்கள் ஆகியவர்களைப் பற்றியது இந்தப் புத்தகம் . ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி.

கால்பந்து எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது மற்றும் அது எவ்வாறு மக்களை ஒன்றிணைத்து என்று பல எடுத்துக்காட்டுடன் கூறுகிறார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு அல்ஜிரியா. 1958-ல் அல்ஜிரியா ஒரு பிரெஞ்சு காலனி . பிரெஞ்சு கால்பந்து அணியில் பல அல்ஜிரியர்கள் இடம் பெற்றிருந்தனர். ஒரே இரவில் அவர்கள் அனைவரும் அல்ஜிரிய அணிக்கு விளையாட சம்மதித்தது பல போட்டிகளில் விளையாடினர். கால்பந்தே விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பங்காக மாறியது.

There are good reasons for soccer’s universal appeal. It is a simple game, easy to learn and grasp. A few instructions, a finger pointed at the goal, and off you go. It is democratic in this sense, and also in the way that it accommodates all kinds of body shapes and sizes. In fact many great soccer players are of slight or short physique. 

கோல்கீப்பர் ஒரு அணி தோல்வியடைந்த உடன் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுவது இவர் தான். வெகு சில நேரமே வெற்றிக்கு இவர் காரணம் என அனைவரும் கொண்டாடுவர். இத்தாலி மற்றும் ஜுவென்டஸ் (Juventus) அணியின் முன்னாள் கோல்கீப்பர் Buffon தனது கோல் போஸ்டிற்கு ஒரு முகநூலில் ஒரு கடிதம் எழுதியுள்ளார் - கீழே அது :
I was 12 when I turned my back on you, denying my past to guarantee you a safe future.
"I went with my heart.
"I went with my instinct.
"But the day I stopped looking you in the face is also the day that I started to love you.
"To protect you.
"To be your first and last line of defence.
"I promised myself that I would do everything not to see your face again. Or that I would do it as little as possible. It was painful every time I did, turning around and realising I had disappointed you.
"Again.
"And again.
"We have always been opposites yet we are complementary, like the sun and the moon. Forced to live side by side without being able to touch. Team-mates for life, a life in which we are denied all contact.
"More than 25 years ago I made my vow: I swore to protect you. Look after you. A shield against all your enemies. I've always thought about your welfare, putting it first even ahead of my own.
"I was 12 when I turned my back on my goal. And I will keep doing it as long as my legs, my head and my heart will allow."
இதைவிட சிறப்பாக கோல்கீப்பரை மற்றும் கோல் போஸ்டை பற்றி யாரும் எழுத முடியாது. இந்த புத்தகத்தில் Laurent இக்கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

 The Forward பகுதியில் மரடோனா பற்றியே அதிகம்.தற்போதைய வீரர்கள் பற்றி எதுவும் இந்த புத்தகத்தில் இல்லை. Defender மற்றும் மிட்பீல்டர் வீரர்களின் வளர்ச்சியைக் பல எடுத்துக்காட்டுடன் விவரித்துள்ளார்.கால்பந்தின் விதிகள் மிகவும் எளிதானது ஒன்றைத்தவிர அது offside. offside விதியைப் பற்றி மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். offside-ன் வரலாறு மிகவும் சுவாரசியமானது. . 1992-ல் மற்றொரு முக்கியமான விதி மாற்றமான backpass நிகழ்ந்தது. இந்த மற்றும் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது என்றால் மிகையாகாது. இந்த விதியைப் பற்றியும் மிக தெளிவாக எழுதியுள்ளார்.

பல விசயங்களை கால்பந்திற்கு புதியவர்களுக்கு விளக்குவது போல எழுதியுள்ளார். பல பகுதிகளில் அமெரிக்க கால்பந்து கலாச்சாரம் வருகிறது . பெரும்பாலான எடுத்துக்காட்டுகளை  பெண்கள் கால்பந்திலிருந்து கூறியுள்ளார். நான் வாசித்த மற்ற பல கால்பந்து புத்தகங்களில் பெண்கள் கால்பந்திற்கு இவ்வளவு இடம் இல்லை அதுவே இப்புத்தகத்தின் மிக பெரிய பலம்.இந்த புத்தகத்தின் highlight இங்கும் அங்குமாக வரும் முன்னாள் வீரர்களைப் பற்றிய சுவாரசியமான துணுக்குகள்தான்.

கால்பந்து ரசிகர்கள் தவறவிடக் கூடாத புத்தகம்.

Tuesday, October 9, 2018

The Forty Rules Of Love - Elif Shafak


The Path to the Truth is a labor of the heart, not of the head. Make your heart your primary guide! Not your mind. Meet, challenge, and ultimately prevail over your nafs with your heart. Knowing your self will lead you to the knowledge of God. 
Elif Shafak துருக்கிய பெண் எழுத்தாளர். மிகவும் பிரபலமானவர். அவரின் படைப்புகளில் முக்கியமானது இது. இருவேறு கதைகள் ஆனால் அதன் மைய்யக் கருத்து ஒன்றே. முதலாவது எலாவின் கதை. எலா (Ella  ) கணவன் மற்றும் குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்கிறாள். தான் சந்தோசமாக இருப்பதாக அவள் நம்புகிறாள்.தனது தினசரி வேலைகளைத் தவறாமல் செய்கிறாள். இருந்தாலும் அவளுக்கு அந்த வாழ்க்கையில் ஒரு வெறுமை. இந்த சூழ்நிலையில்தான் அவள் புதிதாக வேலைசெய்யும் இடத்திலிருந்து ஒரு புத்தகத்தின் வெளிவராத பிரதியைக் கொடுத்து அவளை மதிப்பீடு செய்யச் சொல்கிறார்கள் . அந்த புத்தகத்தின் பெயர் "Sweet Blasphemy" எழுதியவர் Aziz Zahara.
A life without love is of no account. Don’t ask yourself what kind of love you should seek, spiritual or material, divine or mundane, Eastern or Western. … Divisions only lead to more divisions. Love has no labels, no definitions. It is what it is, pure and simple. “Love is the water of life. And a lover is a soul of fire! “The universe turns differently when fire loves water.
பல நாட்களுக்கு பிறகு அந்த புத்தகத்தைப் வாசிக்க ஆரம்பிக்கிறாள். இந்த புத்தகத்தின் கதைதான் இந்த நாவலின் இரண்டாவது கதை.அது ரூமி(Rumi)  மற்றும் சாம்ஸ் (Shams of Tabriz ) அவர்களின் நட்பை பற்றியது. ரூமி கவிஞர் ஆகுவதற்கு முன்பே மிகவும் பிரபலமான பேச்சாளர். மசூதியில் சொற்பொழிவு நடத்துபவர். அவர் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த சூழ்நிலையில்தான் சாம்ஸ் ரூமியை சந்திக்க வருகிறார். சாம்ஸிற்கு தான்தான் ரூமியின் "spiritual companion"-ஆக வேண்டுமென்பது ஏற்கனவே தெரியும் . இந்த இரு காலங்களுக்கிடையே கதை நகர்கிறது.
When you step into the zone of love, language as we know it becomes obsolete. That which cannot be put into words can only be grasped through silence.
எலா Aziz Zahara-விற்கு கடிதம் எழுதுகிறாள் . அவரும் பதில் எழுதுகிறார்.அவர்களின் நட்பு வளர்கிறது. ரூமிக்கு எப்படி சாம்சோ அதுபோல எலாவிற்கு Aziz . சாம்ஸ் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்பவன். அனைத்தையும் அன்பு செய்பவன். அவன் ஒரு சுஃபி (Sufi). அவனது கதை ஒரு துயரமானது. காதலியை இழந்து குடியில் மூழ்கி அனைத்தையும் இழந்து இறுதியில் சுஃபி லாட்ஜ்ல் சேர்ந்து தெளிந்து மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். எல்லையில்லா அன்பின் சக்தியை எலாவிற்கு அவர் வழங்குகிறார். எலா தன் வாழ்வைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.
If you want to change the way others treat you, you should first change the way you treat yourself. Unless you learn to love yourself, fully and sincerely, there is no way you can be loved. Once you achieve that stage, however, be thankful for every thorn that others might throw at you. It is a sign that you will soon be showered in roses.
சாம்ஸ் அன்பின் பரிணாமங்களை ரூமிற்கு தனது செயல்கள் மூலம் எடுத்துரைக்கிறார். அவர் ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் அன்பு செய்கிறார். ரூமியை அவரது குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளியே கொண்டுவந்து வெளியுலகத்தை அவருக்கு காண்பிக்கிறார்.ரூமி மெதுவாக அவரின் பேரன்பில் இணைகிறார். அவர்களின் நட்பு தெய்வீகமானது ஆனால் ஊர் மக்களோ ரூமியின் இளைய மகனோ அதைப் புரிந்து கொள்ளவில்லை.
In general, one shouldn't be too rigid about anything because "to live meant to constantly shift colours.
நாவல் முழுவதும் ஒருவிதமான திகில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த கதை அப்படியொன்றும் திகில் கதையல்ல ஆனால் முன் பின் கதை சொல்லலும் வெவ்வேறு கதாபாத்திரங்களின் நோக்கில் கதை விரிவதும் இக்கதைக்கு ஒரு திகில் உணர்வை ஏற்படுத்துகிறது. நிகழ்கால கதையை விட  ரூமி மற்றும் சாம்ஸின் வரலாற்று நிகழ்வுகள் அழகாக சொல்லப்பட்டுள்ளது.  ஆங்காகே சொல்லப்பட்டுள்ள அன்பின் விதிகள் கதைக்கு வலு சேர்க்கின்றன.
Whatever happens in your life, no matter how troubling things might seem, do not enter the neighborhood of despair. Even when all doors remain closed, God will open up a new path only for you. Be thankful! It is easy to be thankful when all is well. A Sufi is thankful not only for what he has been given but also for all that he has been denied.
வாசிக்கலாம் !

Wednesday, October 3, 2018

Children of the Days - Eduardo Galeano



எடுவர்டோ கலேனோ லத்தீன் அமெரிக்க எழுத்தாளர். கால்பந்து எழுத்தாளர்களிலேயே அதிகம் விரும்பி வாசிக்கப்படுபவர் .நான் அப்படிதான் அவரின் "Soccer in Sun and Shadow" புத்தகத்தை வாசித்தேன். எள்ளலும் கவிதையுமாய்  அவரது எழுத்து  என்னுள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. பிறகு  அவரின் "Memory  Of Fire " புத்தங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அப்புத்தகங்களை முடிப்பதற்குள் நான் இந்த புத்தகத்தைப் நூலகத்தில் பார்த்தேன். உடனே எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்து முடித்தவுடன் தோன்றியது இந்த புத்தகத்தை வாங்கி என் மகளுடன் வாசிக்கவேண்டுமென்று.

நமக்கு வரலாறென்பது வெற்றிபெற்றவர்களின் பார்வையில் இருந்துதான் எப்போதும் சொல்லுப்பட்டதுண்டு.இது சற்று வித்தியாசமான உலக வரலாறு. வருடத்தின்  ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரலாற்று நிகழ்வை கலேனோ விவரிக்கிறார்.பெரும்பாலான நிகழ்வுகள் எனக்கு தெரியாதவை. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு இது. மனித வாழ்வின் அவலத்தை மிக  எளிதாக எல்லோரும் சிந்திக்கும் அளவிற்கு எழுதி இருக்கிறார். மீண்டும் மீண்டும் லத்தீன் மற்றும் மாயா நாகரீகத்திற்கு செல்கிறர். எவ்வளவு உண்மைகள்!

கலேனோ இந்த புத்தகத்தில் எல்லாவற்றையும் பற்றியும் எழுதியுள்ளார். காலனித்துவம் ,ஏகாதிபத்தியம் ,முதலாளித்துவம் , பெண்ணுரிமை என அனைத்தையும் சிறு வரலாற்று நிகழ்வுடன் விவரித்துள்ளார்.  புத்தகத்திலிருந்து சில பகுதிகள் கீழே :

ஜனவரி 3:
On the third day of the year 47 before Christ, the most renowned library of antiquity burned to the ground.

After Roman legions invaded Egypt during one of the battles waged by Julius Caesar against the brother of Cleopatra. Fire devoured most of the thousands upon thousands of papyrus scrolls in the library of Alexandria.

A pair of millennia later, after American legions invaded Iraq during George W. Bush's crusade against an imaginary enemy, most of the thousands upon thousands of books in the library of Baghdad were reduced to ashes. 

Throughout the history of humanity only one refuge kept books safe from war and conflagration, the walking library, an idea that occurred to the grand vizier of Persia, Abdul Kassem Ismael at the end of the 10th century. 

This prudent and tireless traveler kept his library with him. 117,000 books aboard 400 camels formed a caravan a mile long. The camels were also the catalog. They were arranged according to the title of the books they carried. A flock for each of the 32 letters of the Persian alphabet.

ஜனவரி 24
Civilizing Father. 

On this day in 1965, Winston Churchill passed away. 

In 1919, when presiding over the British Air Council, he had offered one of his frequent lessons in the art of war: 

'I do not understand this squeamishness about the use of gas. I am strongly in favor of using poison gas against uncivilized tribes. The moral effect should be so good and would spread a lively terror,' 

And in 1937, speaking before the Palestine Royal Commission, he offered one of his frequent lessons on the history of humanity: 


'I do not admit that a great wrong has been done to the red indians of America or the black people of Australia, by the fact that a stronger race, a higher-grade race, has come in and taken their place.'

மார்ச் 16

Storytellers

Around this day and others,festivals are held to celebrate people who tell tales out loud,writing in the air.

Storytellers have several divinities to inspire and support them.

One is Rafuema,the grandfather who recounted the origin of Huitoto people in the Araracuara region of Colombia.

Rafuema told the story that the Huitotos were born from the words that told the story of their birth.And every time he told  it , the Huitotos were born again.

ஆகஸ்ட் 29

Coloured Man

Beloved white brother:
When I was born,I was black.
When I grew up, I was black.
When Im in the sun , I am black.
When I fall ill, I am black.
When I die, I will be black.

And meanwhile you:
When you were born,you were pink.
When you grew up,you were white.
When you're in the sun,you turn red.
When you feel cold, you turn blue.
When you feel fear,you turn green.
When you fall ill,you turn yellow.
When you die,you will be grey.
So,which of us is the coloured man?

 By Leopold Senghor, poet of Senegal

இது  ஒரு பொக்கிசம் .அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Tuesday, September 18, 2018

பெரும் சாதனை .. எலியட் கிப்சோகே (Eliud Kipchoge)!


நான் மிகவும் எதிர்பார்த்த மரத்தான் பந்தயம் இந்த வருட பெர்லின் மரத்தான்தான் அதற்கு காரணம் எலியட் கிப்சோகே. மரத்தான் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னரே உலக சாதனைப் பற்றிய பேச்சுக்கள் தொடங்கின அது மேலும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. Nike-ன் இரண்டுமணிக்குள் மரத்தான் பந்தயத்தில் முதலாவதாக வந்தவர்தான் இந்த எலியட் கிப்சோகே. அது மட்டும் அவரது சாதனை அல்ல. இவர் பங்கேற்ற 11 மராத்தானில் 10ல் முதலிடம். இப்போது பல நிபுணர்கள் இவரே அகச் சிறந்த மரத்தான் வீரர் என்கின்றனர்.
Only the disciplined ones in life are free. If you are undisciplined, you are a slave to your moods and your passions - Kipchoge
எலியட் கிப்சோகே கென்யா நாட்டுக்காரர். நான்கு பிள்ளைகளில் இவரே கடைசி.அம்மா ஒரு ஆசிரியை . தந்தையை சிறு வயதிலேயே இழந்தவர். பள்ளிக்கு தினமும் ஓடியே சென்றார். மற்ற நேரங்களில் பால் விற்று தன்னால் முடிந்த பொருளாதார பங்களிப்பை குடும்பத்திற்கு வழங்கினார். தனது பதினாறாவது வயதில் பேட்ரிக் சங் (Patrick Sang) என்ற பயிற்சியாளரை சந்தித்து தனது ஆர்வத்தை தெரிவித்தார். பேட்ரிக் சங் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் . பேட்ரிக் சங் கிப்சோகேவிற்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அவர்களது கூட்டணி இன்றும் தொடர்கிறது.

எலியட் கிப்சோகே பலமுறை உலக சாதனையை நூலிலையில் தவறவிட்டவர்.இந்த சூழ்நிலையில்தான் பெர்லின் மரத்தானில் மீண்டும் தான் பங்கேற்கப் போவதாக அறிவித்தார்.அப்போதே ரசிகர்கள் இது எலியட் கிப்சோகேவின் உலகசாதனை முறை என்றனர். எதிர்பார்த்தது போல எலியட் கிப்சோகே உலக சாதனை புரிந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காதது அவர் எடுத்துக்கொண்ட நேரம்  - 2:01:39 (மனுசன் மெஷின் மாதிரி ஓடிருக்காப்ல ). இதில் மேலும் ஆச்சிரியமென்றால் இறுதி 17 கிலோமீட்டர் அவர் ஒருவரே தனியாக ஓடியதுதான். அவரோடு எந்த
pacemaker-ம் ஓடவில்லை.  Pacemakers என்பவர்கள் முன்னிலையில் இருக்கும் வீரர்களுக்கு ஊக்கம் தருவதற்காக அவர்களுடைய வேகத்திலேயே சில கிலோமீட்டர்கள் ஓடுபவர்கள். வெவ்வேறு வேகத்திற்கு வெவ்வேறு pacemakers உண்டு. கீழே எலியட் கிப்சோகேவின் பெர்லின் மரத்தான் ஐந்து கிலோமீட்டர் split :

தூரம்          நேரம் எடுத்துக்கொண்டது              மொத்த நேரம்
5km                        14:24                                   14:24
10km                        14:37                                   29:01
15km                        14:36                                   43:37
20km                        14:19                                   57:56
21.0975km                  3:10                                1:01:06
25km                       14:28                                1:12:24
30km                       14:21                                1:26:45
35km                       14:16                                1:41:01
40km                       14:31                                1:55:32
42.195km                   6:07                                2:01:39

அதாவது ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டரைக் கடப்பதற்கு கிப்சோகே எடுத்துக்கொண்டது சராசரியாக 14:24:90 நிமிடங்கள்(!). மேலேயுள்ள புள்ளிவிவரத்தில் மற்றொன்று முக்கியமானது அவர் இரண்டாது பாதியை முதல் பாதியைவிட விரைவாக கடந்தது. இதற்கு முந்திய உலக சாதனை நேரம் 2:02:57 . டெனிஸ் கிமெட்டோ என்பவரால் 2014 பெர்லின் மரத்தானில் நிகழ்த்தப்பட்டது.இப்போது அதை கிப்சோகே 2:01:39-ஆக குறைத்துள்ளார். அதாவது முந்தையதை விட 78 வினாடிகள் குறைவு. இந்த மாதிரி உலக சாதனைகளுக்கிடையே  பெரிய வித்யாசம் வருவது 1967-ற்கு பிறகு இப்போதுதான்.

இந்த பெர்லின் மரத்தானைப் பொறுத்தவரை சிறப்பு என்னவென்றால்  கிப்சோகே எந்த திட்டமுமின்றி ஓடியதுதான். எனக்கு அப்படிதான் படுகிறது. ஏனென்றால் தொடக்கமுதல் இறுதிவரை அவரின் வேகம் குறையவே இல்லை. ஒரு இடத்தில் கிப்சோகேவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை மற்றும் படிப்படியாக pacemakers-சும் ஒருவர்பின் ஒருவராக நின்றுவிட்டனர்.இருந்தும் கிப்சோகே எந்த சலனமும் அடையாமல் ஓடினார் அவரது ஒரே எதிரி நேரம்தான். அவர் சோர்வடைந்ததற்கான எந்த அறிகுறியும்(தோல்பட்டை சுருங்குவது, கால்கள் தடம் மாறுவது ) இல்லாமல் இறுதிக் கோட்டைக்  கடந்தார் . கடந்த பிறகும் நிற்காமல் ஓடி தனது பயிற்சியாளரை கட்டித் தழுவினார். அந்த புகைப்படம் ஒரு ஆவணம் .இனி வரும் வீரர்களுக்கு அது ஊக்கத்தைக் கொடுக்கும்.
Only the disciplined ones are free in life. If you are undisciplined you are a slave to your emotions and your passions - Eliud Kipchoge
எலியட் கிப்சோகே ஒரு தேர்ந்த வாசகர்.அவர் பேசும்போது பல குறிப்போடு பேசுபவர்.தனது ஒவ்வொரு நாள் பயிற்சியையும் எழுதிவைத்துக் கொள்பவர்.தற்போது அவரிடம் பதினைந்து பயிற்சி ஏடுகள் உள்ளன. வருடத்திற்கு ஒன்று . ஆம் அவர் பயிற்சி ஆரம்பித்து பதினைந்து வருடங்களாகின்றன. அவருடைய ஒரு பதிவு  "Motivation + Discipline = Consistency".
இதுவரை கிப்சோகே எந்த ஒரு ஊக்கமருந்து விசயங்களில் சிக்கதாவர். அவ்வாறே வருங்காலத்திலும் இருப்பார் என்று நம்பூவோம்.

பெர்லின் மரத்தான் முடிந்த பிறகு கிப்சோகே கொடுத்த பேட்டியில் வளரும் மரத்தான் வீரர்களுக்கு அவர் கூறிய அறிவுரை  "Of course, training is important. But more important is the passion you put in it. You have to strongly believe that you are able to make it and be able to run this distance. That’s the magic of a marathon."  ஆம் மரத்தான் என்பது ஒரு மேஜிக் தான்.

இந்த சாதனை கொண்டாட பட  வேண்டியது. கொண்டாடுவோம் .

Wednesday, September 12, 2018

ஓ ... செரினா !!

செரினா வில்லியம்ஸ் உலகின் மிக சிறந்த டென்னிஸ் வீரர் என்பதில்  எவருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் அவர் யு எஸ் ஓப்பன் இறுதி போட்டியில்  செய்தது சரியா? என்பதே இப்போது டென்னிஸ் ரசிகர்களுக்கிடையே எழும் பெரும் கேள்வி. செரினா வில்லியம்ஸ் விளையாட்டிற்கு அப்பாற்பட்டு பல சமூகம் ,இனம் மற்றும் பெண்ணியம் பற்றி தொடர்ச்சியாக பேசியும் எழுதியம் வருபவர்.  பலவிதமான இன்னல்களுக்கிடையே வில்லியம்ஸ் சகோதரிகள் டென்னிஸ் உலகத்தை தங்களின் பக்கம் திருப்பி அதை தங்கள் கைகளுக்குள் வைத்திருந்தனர் என்றால் மிகையாகாது.
  • பயிற்சியாளர் சைகைமூலம் பயிற்சி அளித்தது.
  • டென்னிஸ் racquet-ஐ சேதப்படுத்தியது .
  • நடுவரை கள்ளன் என்று அழைத்து .
மேற்கூறிய அனைத்தும் போட்டி விதிகளின்படி  தவறு. நடுவர் செய்தது விதிகளின்படி சரியே. பிறகு ஏன் செரினா இவ்வளவு கோபப்பட்டார் என்பது புரியாத புதிரென்றாலும் அதற்கு சில காரணங்கள் என்று நான் நம்புவது முதலில்  பயிற்சியாளர் சைகைமூலம் பயிற்சி அளித்தார் என்பதை செரினா ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பயிற்சியாளரை பார்க்க வில்லையென்றாலும் பயிற்சியாளர் செய்தது தவறுதான். செரினாவின் கோபத்திற்கு இன்னொரு காரணம் பல ஆண் வீரர்கள் தங்கள் பயிற்சியாளர்களால் பலமுறை பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் அதுமட்டுமல்லாமல்  பல ஆண் வீரர்கள் மிக மோசமாக நடுவரைத்  திட்டியுமுள்ளனர்  அப்போதெல்லாம் விதிகள் இவ்வளவு தீவிரமாக நடுவார்களால் பின்பற்றபடவில்லை.

நடுவர் கார்லோஸ் இதற்கு முன்னரும் பல முன்னணி வீரர்களுக்கு விதிகளின் படி தண்டனை வழங்கியுள்ளார். நாம் நடுவரை இந்த போட்டியில் குறை சொல்ல முடியாது . மற்ற நடுவர்கள் விதியை சரியாக பின்பற்றவில்லை என்பதற்காக கார்லோஸ் செய்தது தவறென்று ஆகாது. இங்குதான் ITF(International Tennis Federation) ,ATP (The Association of Tennis Professionals) மற்றும் WTA(The Women's Tennis Association)  விதிகள் இருபாலருக்கும் சமமாக பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதி செய்யவேண்டும்.

செரினா தனது மகளை இதில் இணைத்து சரியல்ல. அது தேவையில்லாதது. அவரின் மகளே அவரின் இச்செயலை ஏற்றுக்கொள்ளமாட்டாள். மேல கூறியதுபோல டென்னிசிலும் பெண்களுக்கே அதிக  கட்டுப்பாடுகள் அதை உடைத்தெறிவதே செரினாவின் நோக்கமென்றால் அதை இவ்வாறு செய்வது சரியல்ல. இந்த சம்பவங்களில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்தது அது நயோமி ஒசாக்காவின் அற்புதமான ஆட்டத்தை  மக்கள் மறந்தது. இந்த இறுதி போட்டியை ஒசாக்காவிற்காகத்தான் நான் பார்த்தேன் ஏனென்றால் அவர் ஒரு ஜப்பானியர். ஆண்களில் நிஷிகோரியையும் நான் follow செய்வதுண்டு.

ஒசாக்காவின் கதையும் செரினாவை போன்றதுதான். அமெரிக்க தந்தைக்கும் ஜப்பானிய தாயிற்கும் பிறந்தவர் ஒசாக்கா. அவருக்கு ஒரு அக்காவும் உண்டு. அவரும் டென்னிஸ் வீரர்தான்.ஜப்பானில் இவ்வாறு கலப்பு திருமணத்தின் குழந்தைகளை "half " (அரை ) ஜப்பானியர் என்று அழைப்பதுண்டு. ஜப்பானிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை அமெரிக்காவிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த சூழ்நிலையில்தான் ஒசாக்காவும் அவரது சகோதிரியும் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்கள். ஒசாக்கா செரினாவின் தீவிர ரசிகை . செரினாதன் அவருக்கு ரோல் மாடல்.ஒசாக்கா சகோதரிகள் சில வருடங்களுக்கு முன்னரே டென்னிஸ் ஆர்வலர்களால் அடுத்த வில்லியம்ஸ் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள். ஒசாக்காவின் மிக உன்னதமான தருணம் இப்படி அழுகையிலும் கோஷத்தாலும் நிகழ்ந்தேறியது வருத்தமளிக்கிறது.

டென்னிஸ் நிர்வாகிகள் செரினாவை தண்டித்தது சரியென்றாலும் விதிகள் இருபாலருக்கும் சமமாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.செரினா நடுவர் கார்லோஸிடம் மன்னிப்பு கேட்ப்பாரெனில் அதுவே அவர் அவர் பெயருக்கு செய்யும் பெரும் சிறப்பு.

Thursday, September 6, 2018

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage - Haruki Murakami


Everything has boundaries. The same holds true with thought. You shouldn't fear boundaries, but you should not be afraid of destroying them. That's what is most important if you want to be free: respect for and exasperation with boundaries.
அது என்னவோ தெரியல  ஹருகி முரகாமி புத்தகம் என்றால் என்னை அறியாமலே வாசிக்க ஒரு ஆர்வம் . அந்த ஆர்வத்தில்தான் இந்த புத்தகத்தைப்  பார்த்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். இவருடைய முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு விதமான dullness இருக்கும் இதிலும் அப்படித்தான். சுக்குரு ஒரு என்ஜினீயர் ரயில் நிலயம் வடிவமைப்பவன். முப்பத்தியாறு வயதானவன்.அவனது வாழ்கை ஒரேவிதமான வழக்கங்களை (monotonous routine ) கொண்டது. அவனது தற்போதைய காதலி அவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவனது கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறாள். சுக்குரு தனது நெருங்கிய நண்பர்கள் தன்னை திடீரென ஒதுக்கி வைத்துவிட்டார்கள் தானும் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை என்கிறான்.
As we go through life we gradually discover who we are, but the more we discover, the more we lose ourselves.
சுக்குரு தன்னிடம் எந்த தனித்திறமையும் கலையறிவும் இல்லை என்று நம்புபவன்.மற்றவர்களோடு சரியாக பழகாதவன். அவர்கள் ஐந்துபேர் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்.அவர்கள் ஒரு கட்சிதமான பென்டகன் (Pentagon )போல. அவர்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி தங்களுக்குள் யாரும் dating செய்யக்கூடாது.சுக்குருவை தவிர அனைவரின் பெயர்களிலும் வண்ணத்தின் பெயருள்ளது. அதுவே தன்னை அவர்களிடமிருந்து பிரித்துக்காட்டுகிறது என்று நினைக்கிறான். ஏன் அவர்கள் தன்னை திடீரென ஒதுக்கிவைகிறீர்கள் என்று கேட்க தைரியமில்லாதவன்.
Talent is like a container. You can work as hard as you want, but the size will never change. It'll only hold so much water and no more.
காதலியின் உந்துதலால் பதினாறு வருடங்களுக்கு பிறகு தனது பால்ய நண்பர்களை ஒவ்வொருவராக சென்று பார்க்கிறான்.ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் நடந்தவற்றை விளக்குகிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் அவனுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் ஒற்றுமைக்காக அவன் பலிகடாக்கப்படுகிறான்.ஒன்றன்பின் ஒன்றாக தனது ஆழ்மனதில் இருந்த ரகசியங்களும் அவனுக்கு வெளிப்படுகிறது. தான் யார்? தனது கடந்த காலம் எத்தகையது ? என பல கேள்விகள் அவனுள் எழுகிறது.அவன் தன்னைப்பற்றி மேலும் பல விவரங்களை தெரிந்துகொள்கிறான்.
You can hide memories but you can't erase the history that produced them.
மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம் ஹைடா. நீச்சல் குளத்தில் சந்தித்து நண்பனானவன். அவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகுகிறார்கள். ஹைடவும் திடீரென அவனை விட்டுச் செல்கிறான். அவன் ஏன் அப்படி செய்தான்? அவனுக்கு இவன்மேல் காதலா? அல்லது சுக்குருவின் கனவு ஹைடாவிற்கு எவ்வகையிலோ தெரிந்தா? பல கேள்விகளுடன் அந்த உறவு முடிகிறது.ஹைடாவிற்கும் மற்ற நான்கு நண்பர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றபோது ஏன் இந்த ஹைடா கதாப்பாத்திரம் இடையில் வருகிறது?
No matter how honestly you open up to someone, there are still things you cannot reveal. 
முரகாமி தனக்கே உரிய பாணியில் பலவித உளவியல் விசயங்களை சுக்குரு மூலம் விவரித்துள்ளார். ஒருவனை அவன் யாரென்று எப்படி மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதையும் அந்த நான்கு நண்பர்களின் முடிவுகொண்டு விவரித்துள்ளார்.கனவில் வரும் கற்பழிப்புகள் மற்றும்  தன் புதிய ஆண் நண்பருடன் உறவு பற்றிய விவரங்கள் ஏன் என்றே தெரியாமல் தவிக்கும் சுக்குரு. ஏன் இந்த கனவுகள் வந்துகொண்டே இருக்கிறது என்று அவனுக்கு புரியவே இல்லை. இந்த பயணம் மற்றும் சந்திப்புக்கள் அவனுக்கு அமைதி தந்ததா ?  என்ற கேள்வி தொங்கிக்கொண்டே இந்த நாவல் முடிகிறது. முரகாமிக்கே உரிய நடையில் முடிகிறது. என்னைப் பொறுத்தவரை சுக்குரு தனது மன அமைதியை கண்டுகொண்டான் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவன் தேடல் நிற்கவே நிற்காது. அவனுடைய குணம் அப்படிதான் அவன் அதை அறியாவிட்டாலும்.
The human heart is like a night bird. Silently waiting for something, and when the time comes, it flies straight toward it.
எல்லா முரகாமியின் நாவலிலுள்ளது போல இதிலும் இசை முக்கிய கதாப்பாத்திரம்.இந்த நாவலில் பிரான்ஸ் லிஸ்ஸ்ட்டின்  (Franz Liszt ) Le mal du pays என்ற இசைக்கோவை வந்து கொண்டே இருக்கிறது. இந்த இசைக்கோவை  "Years of Pilgrimage" என்ற தொகுப்பில் உள்ளது. அற்புதமான பியானோ இசை இந்த நாவலை வாசிக்கும்போது பெரும்பாலும் நான் இந்த இசையைக் கேட்டேன் . நாவலில் இரண்டு விசயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது . முதலாவது சுக்குருவின் வேலை - இரயில் நிலையம் வடிவமைப்பது. ஜப்பானில் ஒவ்வொரு ரயில் நிலையமும் ஒரு குட்டி கவிதையைப் போல அதிலும் நாகனோவிற்கு செல்லும் வழியிலுள்ள நிலையங்கள் மேலும் அழகு.சுக்குரு தன் வேலையை விரும்பி செய்கிறான். இரண்டாவது அவன் வார இறுதியில் தவறாமல் செய்யும் நீச்சல். நீச்சல் அவனுக்கு ஒரு புது உலகத்தைக் காட்டுகிறது. நீச்சலைப் பற்றி முரகாமி மிகவும் அழகாக எழுதியுள்ளார்.
நாவலில் சில இடங்களில் தட்டையான எழுத்துநடை இருந்தாலும்  பல இடங்களில் கவித்துவமான எழுத்துநடை நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

Monday, September 3, 2018

Sadako's Cranes - Judith Loske


சடகோ சசாகி ஜனவரி  7 1943-ல்  ஹிரோஷிமாவில் பிறந்தவர். அணு குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் பிரபலமானவர். குண்டுவீச்சால் லுகேமியா அவருக்கு வந்தது. மருத்துவமனையில் இருந்தபோது  அவர் ஜப்பானிய நம்பிக்கையின்படி நோய் குணமாவதற்காக   பேப்பர் கொக்குகள் செய்தார். பிற்காலத்தில்  பேப்பர் கொக்குகள் அமைதியின் சின்னமாக மாறின.  அவர் பிரபலமானதற்கு அதுவே முக்கிய காரணம். இது அவரின் கதை.

நாங்கள் ஜப்பான் சென்றபோது ஹிரோஷிமாவிற்கு சென்றோம். ஹிரோஷிமாவை வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது. அதுவும் அந்த இடிந்த கட்டிடமும் அருங்காட்சியமும் என்றும் நினைவில் நிற்பவை.நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கும் அமைதி பூங்காவிற்கும் நடந்தபோது எங்கும் நாங்கள் கண்டது பேப்பர் கொக்குகள்தான். மாணவர்களும் சுற்றுலா பயணிகளும் பேப்பர் கொக்கு மாலைகளை பூங்காவைச் சுற்றி தொங்கவிடுகிறார்கள். அந்த பூங்காவில் சடகோவின் சிலை உள்ளது.

இது குழந்தைகளுக்கான புத்தகம். மிகவும் அழகான வரைபடங்கள் கொண்டது.  1954 ஆகஸ்ட் ஆறாம் தேதி வழக்கம்போல சடகோ விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென பெரும் சத்தத்துடன் கரும்புகை பரவியது . முதலில் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. அனைத்தும் இயல்பாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் 1954-ல் கழுத்தில் கட்டி தோன்றுகிறது.தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் பிரச்சனைகள் வருகிறது .இறுதியாக மருத்துவர்கள் அவளுக்கு  லுகேமியா இருப்பதாக கொண்டுபிடிக்கிறார்கள் . மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அவளது தந்தை பேப்பரில் கொக்கு செய்தால் குணமாகலாம் என்கிறார். அந்த நம்பிக்கையில் அவள் கொக்கு செய்ய ஆரம்பிக்கிறாள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொக்குகளை செய்தால். இறுதியில் சிகிச்சை பலனின்றி 1955 அக்டோபர் 25 அன்று மரணமடைகிறாள். அப்போது அவளுக்கு வயது 12.

இன்று அமைதியின் அடையாளமாக இந்த கொக்குகள்  இருக்கின்றன.உலகம் முழுவதும் குழந்தைகள் பேப்பரில் கொக்குகள் செய்து ஹிரோஷிமாவிற்கு அனுப்பி வைகின்றனர்.அணு ஆயுதம் ஒரு பெரும் துயரம். இந்த புத்தகம் குழந்தைகளுக்கு ஒரு பாடம். அந்த துயரத்தை எஸ்.ராமகிருஷ்ணன் மிக தெளிவாக கீழ் காணும் காணொளியில் எடுத்துரைக்கிறார் .


அவசியம் அனைவரும்  தெரிந்துக் கொள்ளவேண்டிய விசயம்.

நன்றி :குலுக்கை

Friday, August 31, 2018

Hello , Mr.Hulot - David Merveille


வார்த்தைகள் இல்லாத வரைபடங்கள் கொண்ட புத்தகம்.  பக்கங்களைத்  திருப்பத் திருப்ப ஒருவித உற்சாகம் பற்றிக்கொண்டது. ஹுலோட்  (Hulot) அவர் செய்யும் வெவ்வேறு செயல்களின் தொகுப்பு இந்த புத்தகம்.பிரெஞ்சு மொழியில் வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்ற புத்தகம். நான் படித்தது (பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும்) ஆங்கிலத்தில்.


யார் இந்த ஹுலோட் ? ஹுப்லோட் என்பவர் பிரெஞ்சின் பிரபலமான சினிமா கதாபாத்திரம். சார்லி சாப்ளின் கதைகளை தழுவி எடுக்கப்பட்ட படங்களில் இடம்பெற்ற கதாப்பாத்திரம் . இந்த நகைசுவை படங்களை இயக்கி நடித்தவர் பிரெஞ்சின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ஜகியூஸ் டாட்டி  (Jacques Tati ).இந்த புத்தகம் இப்படங்களை தழுவியது.ஒவ்வொரு பட தொகுப்புக்கும் ஒரு தலைப்பு. "The Moon Walk " என்ற தலைப்பில் உள்ள படத்தொகுப்பு அழகு. பேருந்து நிலையத்தில் காத்திருத்தல் , விலங்கியல் பூங்கா ,  பனி விளையாட்டு மற்றும் பல.


அனைத்து படங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. டேவிட் மெர்வெயிலே (David Merveille ) 2004-ல் ஹுலோட் படங்களைப் பார்த்ததாகவும் அதுவே அவரை இந்த புத்தகத்திற்கு அடித்தளமாக அமைந்ததாக கூறுகிறார்.

அற்புதமான புத்தகம் .எந்த நேரத்திலும் பார்க்கலாம் சிரிக்கலாம் .

Wednesday, August 15, 2018

Bullfight - Yasushi Inoue


இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் நடக்கும் கதை. அந்தப் போரால் ஜப்பான் பெரும் அழிவைப் பெற்றது. எங்கும் இடிந்த மற்றும் சிதைந்த கட்டங்கள். நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை தலைகீழானது. இந்த சூழ்நிலையில்தான் சுகமி ஒரு பத்திரிக்கைக்கு எடிட்டராக பொறுப்பேற்கிறான். சுகமி திருமணமானவன் குழந்தைகளையும் மனைவியையும் போர் பாதுகாப்பிற்க்காக வேறு இடத்தில் தங்கவைத்துள்ளான். ஒரு நாள்  தாஷிரோ என்பவன் சுகமியிடம் காளை சண்டை  பற்றி குறி  அதற்கு  அவனது பத்திரிகை ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறுகிறான். முதலில் ஈடுபாடில்லை என்றாலும் தாஷிரோ காளை மேல் பார்வையாளர்கள் பந்தயம் கட்டலாம் என்று சொன்னவுடன் சுகமிக்கு ஒருவித ஈர்ப்பு வருகிறது. போட்டியை நடத்துவதாக ஒத்துக்கொள்கிறான்.

சுகமி தனது முழு நேரத்தையும் போட்டியை நடத்துவதிலேயே செலவிடுகிறான்.அவனது உதவியாளர்கள் எச்சரிப்பையும் மீறி அவன் பெரும் பணம் செலவிடுகிறான். அவன் அதை நடத்தியே தீருவது என முடிவு செய்து அனைத்து வேலைகளையும் செய்கிறான். ஒகாபே என்ற பணக்காரனின் உதவியை பெறுகிறான். அவனுக்கு தெரியும் அது சரியான வழியில் வந்த பணமல்ல என்று இருந்தும் ஏற்றுக்கொள்கிறான். பத்திரிக்கையின் எதிர்காலத்தையே கேளிவிக்குள்ளாக்கும் அளவுக்கு செலவுகள் கூடிக்கொண்டே இருக்கிறது. எப்படியும் தன்னால் அனைத்தையும் திரும்ப பெற முடியுமென்று நம்புகிறான்.
It’s not which bull wins and which loses that they want to see decided, it’s whether they themselves have won or lost.
சுகமி தனது பத்திரிக்கையின் விமர்சர்கள் கூறுவது போல " A sensitive poet type would undoubtedly have been able to point out a certain shadow of emptiness, of devil-may-care negligence, of loneliness darkening the pages of a paper that was popular among smart city kids. These were qualities that Tsugami, who gave the paper its editorial direction, carried within himself, though he kept them carefully concealed."  இது சகிக்கோவிற்கு  மட்டும்தான் தெரியும்.

இதற்கிடையே சுகமிக்கும் சகிக்கோவிற்கும்  உள்ள உறவின் கதை. அவனுக்கும் சகிக்கோவிற்கும் மூன்று வருட தொடர்பு. சகிக்கோ போரில் கணவனை இழந்தவள். முதல் சந்திப்பிலேயே அவளுக்கு சுகமியிடம் காதல். அவர்கள் இருவரின் உறவு எவருக்கும் தெரியாது. எதற்கும் கவலைப்படாத அவனது தோற்றம் அவளுக்கு பிடித்திருந்தது. அவனைவிட்டு விலகவேண்டுமென்று பலமுறை எண்ணி விலகாமல் இருப்பவள். அவள் அவனை மிகவும் நேசிக்கிறாள் ஆனால் அவனோ அவளை ஏனோதானோ என நடத்துகிறான். அவர்களின் உறவு ஒருவித உடைந்த கண்ணாடி போல. இருவருக்கும் தெரியும் அவர்களால் சாதாரணமாக வாழ இயலாதென்று. அனைவரும் காளைகளின் மேல் பந்தயம் காட்டுகிறார்கள். அவனும் அவளும் கூட. அது அவர்களின் வாழ்க்கையின் மேல் கட்டப்பட்ட பந்தயம்.

இது ஒரு தனி மனிதனின் கதையானாலும் ,அன்றைய ஜப்பானைதான் ஆசிரியர் விவரித்துள்ளார். பலவிதமான கதைமாந்தர்கள் கதைக்கு மேலும் அழகு. உலகப்போருக்கு பின்னர் ஜப்பானியர்கள் எவ்வாறு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினார்கள் என்பதையும் இக்கதையின் மூலம் கூறியுள்ளார் ஆசிரியர். மிக அருமையான மொழிபெயர்ப்பு . ஜப்பானின் உயரிய பரிசான  "Akutagawa prize " வென்ற புத்தகம் இது. ஆசிரியர் யசூஷி இனோ ஜப்பானின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர்.

Monday, August 6, 2018

Are You An Echo ? - Misuzu Kaneko


ஜப்பானிய கவிஞர் மிசுஸு கணேக்கோவின் வாழ்க்கை வரலாறு, கவிதைகள் மற்றும்  அழகான வரைபடங்கள்  கொண்ட புத்தகம் . நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் இந்த புத்தகத்தைப் பார்த்தேன். உடனே வாசிக்க ஆரம்பித்தேன். மிகவும் எளிய மொழியில் எழுதப்பட்ட கவிதைகள். இவருடைய கவிதைகள் இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்டது. அவருடைய நண்பர்  யசாகி பதினாறு வருடம் பல  போராட்டங்களுக்குப் பிறகு  மிசுஸுவின் கவிதைகளை சேகரித்து வெளியிட்டுள்ளார்.   மிசுஸுவின் சகோதரரை தேடி கண்டுப்பிடித்து அவரிடம் இருந்த மிசுஸுவின் டைரியைப்  பெற்றார்.  அதில்  512 குழந்தைகள் கவிதைகள் இருந்தன, பெரும்பாலானவை அச்சில் வராதது. அதிலிருந்து சில முக்கிய கவிதைகளை எடுத்து இந்த புத்தகத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் கவிதைகள் உள்ளன.

மிசுஸுவின் வாழ்க்கை பெரும் துயரிலானது. சிறு வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். கணவர் சரியில்லாதலால் திருமண வாழ்க்கை நான்கு வருடங்களிலேயே முடிந்தது. மிசுஸுவை பெரிதும் பாதித்தது தனது ஒரே குழந்தையை பிரிந்ததுதான். தனது இருப்பத்தியேழாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.  அவர் மிகவும் பிரபலமானது 2011 சுனாமியின் பொது அவரது கவிதை "Are You An Echo ?"  விளம்பரத்தில் வந்தபோதுதான்.

Are You an Echo?

If I say, “Let’s play?”
you say, “Let’s play!”

If I say, “Stupid!”
you say, “Stupid!”

If I say, “I don’t want to play anymore,”
you say, “I don’t want to play anymore.”

And then, after awhile,
becoming lonely

I say, “Sorry.”
You say, “Sorry.”

Are you just an echo?
No, you are everyone.

Snow Pile

Snow on top
must feel chilly,
the cold moonlight piercing it.

Snow on the bottom
must feel burdened
by the hundreds who tread on it.

Snow in the middle
must feel lonely
with neither earth nor sky to look at.



Big Catch

At sunrise, glorious sunrise
it’s a big catch!
A big catch of sardines!

On the beach, it’s like a festival
but in the sea, they will hold
funerals
for the tens of thousands dead.

மிசுஸுவின் கவிதைகள் இயற்கையின் மீது பெரும் இரக்கம் கொண்டவை.  விலங்குகள் ,மரம் ,செடி கோடி, மீன் கடல் என அனைத்தயும் இரக்கத்துடன் பார்க்கிறது இவருடைய கவிதைகள்.

Fish 

I feel sorry for the fish in the sea.

Rice is grown by people,
cows are raised on pastures,
even carp are fed in their ponds.

But the fish in the sea-
no one looks after them;
they do no harm.
And yet, here I am about to eat one.

I feel sorry for the fish in the sea.

Waves

Waves are children
laughing and holding hands.
Together,they come.

Waves are erasers
wiping away words
written on the sand.

Waves are soldiers
advancing from the open sea,
firing their guns.

Waves are forgetful,
leaving pretty,pretty shells
behind on the sand.


Day And Night

After day comes night,
after night comes day.

From where can i see
this long,long rope,
its one end, and the other?

இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து ஓவியங்களும் மிகவும் அழகாக உள்ளன. சிறிது மங்கா சாயல் உள்ளது.

அற்புதமான புத்தகம்.


Saturday, August 4, 2018

Convenience Store Woman - Sayaka Murata


நான் ஜப்பான் ரசிகன். ஜப்பானைப் பற்றி தேடித்தேடி படிப்பவன். என்னமோ ஜப்பானியர்களின் வாழ்க்கைமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த தேடலில் தான் இந்த புத்தகத்தை பற்றி தெரிந்துகொண்டேன். இது ஒரு வித்தியாசியமான கதை.  தற்போது ஜப்பானில் நிலவும் சில முக்கிய பிரச்சனைகளை இக்கதையில் ஆசிரியர் விவரித்துள்ளார்.  சமீபகாலமாக ஜப்பானிய ஆண்கள் வீட்டில் தனியாக இருப்பதையே அதிகமாக விரும்புகிறார்கள். உடலுறவு கொள்ளாத திருமணவாழ்கை . ஏற்கனவே ஜப்பானில் குழந்தைப்பிறப்பு குறைந்துகொண்டே வருகிறது.  இந்த சூழலில் நிகழும் கதை.
“This society hasn't changed one bit. People who don't fit into the village are expelled: men who don't hunt, women who don't give birth to children. For all we talk about modern society and individualism, anyone who doesn't try to fit in can expect to be meddled with, coerced, and ultimately banished from the village.” 
கதையின் நாயகியை புரிந்து கொள்வது சற்று கடினம்.இப்படியும் இருப்பார்களா என்ற எண்ணமே இறுதிவரை இருந்தது. கெய்க்கோ வீட்டில் முதல் குழந்தை சிறுவயது  முதல் தேவையென்றால் வன்முறையில் ஈடுபடுபவள். அவளுக்கு அவையெல்லாம் சரியாகவே படுகிறது. வாசிக்கும் நமக்கும் அவள் செய்வது சரிதான் என்று தோன்றுகிறது.  எது சரி
எது தவறு என்று சமூகம்தான் தீர்மானிக்கிறது. சமூகம் எப்படி ஒருவரது வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதை மிக அழகாவும் எதார்தமாகவும் இக்கதையின் மூலம் ஆசிரியர் எழுதியுள்ளார்.
When something was strange, everyone thought they had the right to come stomping in all over your life to figure out why. I found that arrogant and infuriating, not to mention a pain in the neck. 
பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு "Hiiromachi Station Smile Mart" என்ற கடையில் வேலையில் சேர்கிறாள் கெய்க்கோ. தொடர்ந்து 18 வருடங்கள் அதே கடையில் வேலை செய்கிறாள். அவள் ஏன் அந்த வேளையிலேயே இருக்கிறாள் என்று அனைவரும் கேட்கிறார்கள். அவளோ அவள் தங்கை சொல்வதுபோல் அனைவரிடமும் தனக்கு உடம்புக்கு சரியில்லை என்று அனைவரிடமும் சொல்கிறாள். அவள் திருமனம் செய்யாமல் இருப்பதையும் அனைவரும் ஏன் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் அதே கடையில் வேலை பார்க்க  ஷிராக (Shiraha) வருகிறான். அவனைப் பற்றி சொல்வதென்றால் அவன் மனிதர்கள் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறான்.
You eliminate the parts of your life that others find strange--maybe that's what everyone means when they say they want to 'cure" me.
சந்தர்ப்ப சூழ்நிலையும் கெய்க்கோவின் "getting cured" முயற்சியும் அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் தங்கவைக்கிறது. அவர்களுக்கிடையே எந்த உடலுறவும் இல்லை . ஆனால் மற்றவர்கள் அவர்களை  தம்பதியர் என்று நம்புகிறார்கள். ஷிராக எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருக்கிறான். அவனுக்கு இந்த setup பிடித்திருந்தது. அவனை  பொறுத்தவரை "Strong men who bring home a good catch have women flocking around them, and they marry the prettiest girls in the village. Men who don’t join in the hunt, or who are too weak to be of any use even if they try, are despised".அவனின் வலியுறுத்தலினால் கெய்க்கோ அவள் வேலையை விடுகிறாள். அவளது வாழ்வே தலைகீழாக மாறுகிறது. அவள் ஒரு இன்டெர்வியூவிற்கு செல்கிறாள் ஆனால் வழியில் ஒரு கடையைப் பார்க்கிறாள். எல்லாமே மாறுகிறது.  அந்த கடை தன்னோடு பேசுவதாக நம்புகிறாள் .இறுதியில் அவளால் வேறேதும் செய்ய முடியாதென்றும். கடை வேலைதான் தன வாழ்கை என்று முடிவெடுக்கிறள். ஷிராக அவளை கோபத்துடன் திட்டுகிறான்.
The normal world has no room for exceptions and always quietly eliminates foreign objects. Anyone who is lacking is disposed of. So that’s why I need to be cured. Unless I’m cured, normal people will expurgate me
ஏன் கெய்க்கோவை இந்த சமூகம் ஒரு சாதாரண பெண்ணாக ஏற்றுக்கொள்ளவில்லை ? அவளை ஏன் வாழ்க்கையில் தோல்வியடைந்த பெண்ணாக இந்த சமூகம் பார்க்கிறது? திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தவறா? சம்பளம் குறைந்தது என்றாலும் தனக்கு மகிழ்ச்சி தரும் வேலையிலேயே இருப்பது தவறா ? இந்த கட்டமைப்புக்களை உருவாக்கியது யார் ? ஷிராக கூறுவது போல் மனிதன் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறானா ? ஒருவர் என்னதான் செய்ய வேண்டும் இந்த சமூகம் தன்னை ஒரு சாதாரண நபராக கருதுவதற்கு ? என்ற பல முக்கியமான கேள்விகளை இந்த புத்தகம் எழுப்புகிறது.

சயாக முரட்டாவிடம் கெய்க்கோ கதாபாத்திரத்தை பற்றி என்ன நினைகிறீர்கள் என்று கேட்டதற்கு **"I think Keiko was the most natural when she was as naked as nature intended, like in kindergarten, when she was able to say what she would like to say. But when she started working at a convenience store, she became so constrained by it, and those constraints turned her into a very human creature. When she wears the mask of a cashier, she can act like a human, as if she were a human. It’s not her original self, but it enables her to meet people who accept her and don’t treat her like a weirdo. She was freed from her isolation, so in that sense, it meant freedom for Keiko."

கடை ஊழியர்களின் வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளார்  முரட்டா. அங்கு நிகழும் சின்ன சின்ன விசயங்களையும் மிக சுவாரஸ்யமாக கூறியுள்ளார். அதுவே வாசிப்பை நல்ல அனுபவமாக்குகிறது .இந்த புத்தகம் ஜப்பானின் முதன்மை இலக்கிய விருதான அக்குடகவா(Akutagawa) விருதை வென்றது .கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

**நன்றி lithub 

Tuesday, July 31, 2018

வேள்வித் தீ - எம்.வி . வெங்கட்ராம்


"ஒரு மின்னலோ இடியோ இல்லை; இருக்கத் தேவை இல்லாதவற்றை இடித்துத் தள்ளுவதற்காகப் பூமியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைப் போல் மழை அடர்த்தியாகவும் கனமாகவும் மிக நிதானமாகவும் பெய்து கொண்டிருந்தது."  - இப்படித்தான் இந்த கதை தொடங்குகிறது.

இந்தக் கதை சௌராஷ்டிரா சமூகத்தில் நடக்கிறது. கண்ணன் ஒரு பட்டு நெசவாளி. குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு நெசவுக்கு வருகிறான். தந்தை இறந்தப் பின் தாயுடன் தனிக்குடித்தனம் செல்கிறான். படிப்படியாக முன்னேறி சொந்த தறி வைக்கும் அளவுக்கு முன்னேறுகிறான்.கௌசல்யா என்ற பெண்ணை திருமணம் முடிகிறான். அவனது வாழ்வு நான்றாகதான் சென்று கொண்டிருந்தது ஹேமா என்ற பணக்கார விதவைப் பெண் வரும் வரை.

கண்ணன் மற்றும் அவனின் சகோதரர்களின் உறவு பொருளியல் சார்ந்தது. கண்ணனின் வளர்ச்சியில் அவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. அவர்களின் அம்மா இறந்த பிறகு நடக்கும் சொத்துச் சண்டையே அதற்கு உதாரணம். மிக நுட்பமாக  உறவுகளால்  ஏற்படும் உளவியல் பிரச்சன்னைகளை ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார்.கண்ணனுக்கும் அவனது தாயாருக்கும் இடையேயான நட்பு ஒரு காலகட்டத்தில் சிதையுறுகிறது. அதற்கு காரணம் தனது ஒரே மகளை தன் மகன் சரியாக கவனிக்கவில்லையென்று அவள் எண்ணுகிறாள். ஆனால் கண்ணன் தன்னால் முடிந்ததை செய்துகொண்டுதான் இருந்தான்.

கண்ணன் மற்றும் கௌசல்யாவின் உறவு ஒரு நல்ல கணவன்-மனைவி உறவு. கௌசல்யா கணவனின் வருமானத்தில் குடும்பத்தை சிறப்பாவாகவே நடத்தி வந்தாள். தறி வேலைகளிலும் தன்னால் முடிந்ததை செய்து வந்தாள். ஹேமா கௌசல்யாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறாள். இந்த இரு பெண்களுக்கிடையே உள்ள நட்பை ஆசிரியர் மிகவும் எதார்த்தமாக கூறியுள்ளார்.  நம்மால் அடுத்து கதையில் என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகிக்க  முடிகிறது - இறுதி முடிவைத் தவிர.

கண்ணன் கௌசல்யா மற்றும் ஹேமாவிற்கு இடையே உள்ள உறவுதான் கதையின் மைய்யப் புள்ளி. கௌசல்யாவிடம் அனைத்தும் இருந்தும் கண்ணன் ஹேமாவிடம் உறவு கொள்கிறான். அவனே அதை எதிர்பார்க்கவில்லை. அனைத்தையும் இழக்கிறான். அவன் ஏன் ஹேமாவிடம் காமம் கொண்டான் ? மனித மனதின் புரியாத புதிர் இது. ஹேமாவை நாம் புரிந்து கொள்ளமுடியும் ஏனென்றால் அவள் வயது மற்றும் சூழ்நிலை அப்படி.  அவள் உடலின் தேவையும் கூட.

கண்ணன் மற்றும் சாரநாதன் உறவு எதார்த்தமானது. கண்ணன் சாரநாதனை நன்றாகத்தான் நடத்துகிறான். இருந்தும் இருவருக்கும் இடையே ஒருவிதமான இடைவெளி இருந்துகொண்டேயிருக்கிறது.இந்த கதை உறவுகளை பற்றியது. எவ்வாறு உறவுகள் தனி மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாது என்பதை இதைவிட சிறப்பாக சொல்வது கடினம்தான். ஒருவனால் அனைத்து சொந்தங்களையும் எப்போதும் ஒரேபோல கையாள்வது கடினம் அதை கண்ணன் படிப்படியாக அறிந்து கொள்கிறான்.

சௌராஷ்டிரா சமூகத்தின் வாழ்க்கையை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். நெசவு தொழில் உள்ள சிக்கல்களையும்  பிரச்சனைகளையும் அவர்களை பெரும் முதலாளிகள் அடிமைகள் போல நடத்துவதையும் படிக்க வேதனையாக உள்ளது. இந்த கதை தலைமுறைகளுக்கு முன்னாள் நடந்தாலும் இன்னும் இம்மக்கள் அப்படிதான் கஷ்டப்படுகிறார்கள்.

அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

Monday, July 23, 2018

குறைந்த ஒளியில் - பிரபு காளிதாஸ்


பிரபு காளிதாஸை சாருநிவேதிதா இணையதள வழியாக எனக்குத்  தெரியும் . அவர் ஒரு புகைப்படக் கலைஞர். அவர் facebook-ல் எழுதிய பதிவுகளில் இருந்து சிறந்ததை எடுத்து புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறது உயிர்மை பதிப்பகம்.

"அட ஆமலே "  என்று சொல்லவைக்கிற பதிவுகள்தான் அதிகம். பிரபு காளிதாஸிற்கு கமல் மேல் ஏன் அவ்வளவு கோபம் என்று தெரியவில்லை . கமலை விமர்சிப்பதற்கு அவருக்கு முழு உரிமையுண்டு. அதுதான் இந்த புத்தகத்தின் வெற்றி . தனக்கு சரியென்றுபட்டத்தை எந்த சமரசமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அனுபவங்களை சுவாரசியமாக கூறுவது கடினம் ஆனால் பிரபு காளிதாஸ் அதை சிறப்பாக செய்துள்ளார் என்றுதான் எனக்குப் படுகிறது.

"நீங்க என்ன கேமரா வெச்சிருக்கீங்க ?" என்னும் பத்தியில் நம்மில் பலர் செய்யும் முட்டாள்தனமான விசயத்தை எடுத்துக்கட்டிருக்கிறார். "என்ன நடக்கிறது குழந்தைகளுக்கு ..?" என்னும் பத்தியில் குழந்தைகளை மொபைல் போன் எப்படி  கெடுக்கிறது என்பதை சொல்லியுள்ளார்.நாம் தெரிந்ததுதான் ஆனால் நாம் மாறமாட்டோம். "பாட்டு மட்டும் எங்கேர்ந்து வருது ?" என்னும் பத்தி ஒரு சிறுகதைப் போல உள்ளது."வெளித்தோற்றம்" என்னும் கட்டுரை சமகால நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

ஒரு கட்டுரைக்கும்  அடுத்ததுக்கும் சுத்தமாக தொடர்ச்சியே இல்லை. ஆனாலும் சுவாரசியம் குறையவில்லை. சில பத்திகளை தவிர்த்திருக்கலாம். தினசரி வாழ்கை முதல் உலக சினிமா என பலவிதமான தளங்களில் கட்டுரைகள் இந்த புத்தகத்தில் உள்ளன. இன்னும் கொஞ்சம் விவரமாக எழுதியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

வாசிக்கலாம் !

Saturday, July 21, 2018

பதினாறாம் காம்பவுண்ட் - அண்டோ கால்பர்ட்


எதார்தமாகத்தான் இந்தப் புத்தகத்தை நூலகத்தில் பார்த்தேன். எழுத்தாளர் பெயர் எங்க ஊர் பெயர் .உடனே எடுத்து படிக்க ஆரம்பித்தேன். மொத்தமே 136 பக்கங்கள்தான் , ஒரே முனைப்பில் படித்து முடித்தேன்.

பிரவீன் ஒரு கப்பல் மாலுமி .பல வருடங்களுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பி வருகிறான் . அவன் குடும்பம் வசிக்கும் இடம்தான் பதினாறாம் காம்பவுண்ட். இந்த காம்பவுன்ட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு கதை. பிரவீனுக்கு எல்லாமே அவனின் ஆச்சி தான். பிரவீனுக்கும் அவனது மாமன் மகள் ஸ்வீட்டிக்கும் காதல் ஏற்படுகிறது. குடும்பமும் அதற்கு ஒத்துக்கொள்கிறது. கதையின் முடிவை நான் ஓரளவு கணித்துவிட்டேன். ஏனென்றால் கதையில் வரும் சம்பவங்கள் நான் எங்கள் ஊரில் கேள்விப்பட்டதுதான்.

கதையில் இரண்டு கதாப்பாத்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. முதலாவது பிரவீனின் ஆச்சி ஜொஸி. எங்கள் ஊரின் அநேகமாக அனைத்து அம்மச்சிகளும் அப்பத்தாக்களும் அப்படித்தான் இருப்பார்கள் .

"தேவமரியாளுக்கு அருளை வழங்குவதும் ,அவளிடமே கருணைக்கு இறைஞ்சுவதுமாய் .. இடையிடையே பரலோகப் பிதாவையும் ஒருவழி செய்வதுமாய் ஜெபமாலை சொல்லி முடிப்பாள் .."  

பேரன் வருகிறான் என்றதும் அவள் செய்யும் செயல்களை பலமுறை  நான் எங்கள் வீடுகளில் பார்த்திருக்கிறேன்.மிகவும் எதார்த்தமான பாத்திரப் படைப்பு . இரண்டாவது கதாபாத்திரம் தூத்துக்குடி. ஆம் இந்த கதையில் தூத்துகுடியும் ஒரு கதாப்பாத்திரம்தான். தூத்துக்குடியை இவ்வளவு உயிரோடு யாரும் ஒரு நாவலில் எழுதி இதுவரை நான் படித்ததில்லை. அனைத்து முக்கியமான இடங்களும் கதையில் வருகிறது. அனைத்தும் நான் நடந்து திரிந்த இடங்கள்.  கதையில் வரும் ஆல்டர் பாய்ஸ்(Alter Boys ) பற்றிய சம்பவங்கள் பல சர்ச்களில் நடப்பதுதான். அந்த உடையை போடறதுக்கு நடக்கும் சண்டைகள் மறக்க முடியாதது . எனக்கு அனுபவம் உள்ளது.

காத்திருப்பு  வருகை மற்றும் இறப்பு - இவை மூன்றும்தான் இந்த கதையின் மைய்யப் பொருள் .ஒவ்வொன்றும் ஒரு செய்தியைச் சொல்லி செல்கிறது. கதையினூடே பல விசயங்களை சொல்லிச்செல்கிறார்  ஆசிரியர்.  கிறிஸ்தவர்களுக்கிடையே உள்ள பாகுபாடுகள் மற்றும்  பரதவர்களின் வரலாற்றை  மிக சுருக்கமாக சொல்லிருக்கிறார்.ஒவ்வொரு அத்தியாயமும் தேதியோடு தொடங்குவதால் ஒருவிதமான பதற்றத்தை  உண்டாக்குகிறது எளிய நடை அதை மேலும் ஸ்வாரஸ்யமாக்குகிறது.

வாசிப்போம் !

Wednesday, June 6, 2018

உலகக்கோப்பை கால்பந்து - 2 அவசியம் படிக்க வேண்டிய (கால்பந்து ) புத்தகங்கள்


கிரிக்கெட்டிற்கு என்றே ஒரு தனி இலக்கியம் உண்டு. மிகவும் பழமையானதும் பெரிதும் கூட. கிரிக்கெட்டிற்கு பிறகு பிரபலமானாலும் கால்பந்தில்  மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பல நல்ல புத்தங்கள் வந்துள்ளன. இது பெரும்பாலும் தென்னமெரிக்க நாடுகளில் இருந்துதான் வந்துள்ளன. அவசியம் படிக்க வேண்டிய கால்பந்து சம்பந்தமான புத்தகங்கள் :
1.Soccer in sun and shadow by Eduardo Galeano 
Image from booktopia.com.au
மிகவும் எளிய முறையில் கால்பந்தின் தோற்றம் மற்றும் அதன் வளர்ச்சியை தனக்கே உரிய ஸ்டைலில் Eduardo Galeano எழுதியுள்ளார். கால்பந்து வீரர்களையும் கோல்களையும் மிகச் சிறந்த முறையில் விவரித்துள்ளார். நான் திரும்ப திரும்ப படிக்கும் ஒரு புத்தகம்.

2.How Soccer Explains the World: An Unlikely Theory of Globalization by Franklin Foer
Image from Goodreads
கால்பந்தை ஒரு நாட்டின் சமூக மற்றும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் நூல். கிளப் அணிகளிக்கிடையே நடக்கும் மத இன அரசியலை மிகத் தெளிவாக எடுத்துக்கூறும் ஒரு நூல். கால்பந்து என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல அதுவே பல அரசியல் மாற்றங்களுக்கு காரணம் என்பதை பல எடுத்துக்காட்டோடு கூறும் நூல். அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

3.Fear and Loathing in La Liga by Sid Lowe
Image from Goodreads
கால்பந்து ரசிகர்களுக்கு நன்கு  தெரிந்த இரண்டு   குழுக்களைப் பற்றிய மிகவும் முக்கியமான நூல். பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் குழுக்களின் வரலாற்றையும் பகைமையையும் தெளிவா எடுத்துரைக்கும் புத்தகம் . ஆசிரியர் சித் லோ ஒரு சிறந்த கால்பந்து கட்டுரையாளர். அவரின் ஸ்பானிஷ் கால்பந்தின் புரிதல் அபாரமானது. இந்த இரண்டு அணிகள் மக்களால் மற்றும் அரசால்  எவ்வாறு அதிகாரத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பயன்படுத்தப்பட்டது என்பதை விரிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

4.Futebol nation by David Goldblatt
Image from Goodreads

பிரேசில் என்றால் நாம் எல்லோருக்கும் மனதில் தோன்றுவது கால்பந்துதான் இந்த புத்தகத்தில்  கால்பந்து எவ்வாறு பிரேசிலில் நுழைந்தது மற்றும் அது எவ்வாறு கலாச்சாரச் சின்னமாக மாறியது என்பதை மிகவும் எளிமையான நடையில் ஆசிரியர் கூறியுள்ளார். இந்த புத்தகத்தை வாசித்து முடித்தப் பிறகு என்னையறியாமல் ஒருவித சோகம் பற்றிக்கொண்டது.எவ்வளவு உயிரிழப்புக்கள். பிரேசில் கால்பந்து அணியும் படிப்படியாக தங்களது மிகவும் கவர்ச்சிகரமான 'ginga' ஸ்டைலைவிட்டு எப்படியும் வெல்ல வேண்டுமென்று ஐரோப்பிய அணுகுமுறையைப் பின்பற்ற ஆரம்பித்தது அதுவே அவர்களின் தோல்விக்கும் காரணமானது. பிரேசிலை புரிந்துக்கொள்ள வாசிக்கவேண்டியப்  புத்தகம்.

5.The Mixer by Michael Cox
Image from Goodreads
இங்கிலிஷ் பிரீமியர் லீக் ரசிகர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். பிரீமியர் லீக்கின் வரலாற்றை இவ்வளவு எளிதாகவும் சுவாரசியமாகவும் இனி சொல்வது சற்று கடினம்தான். விதிகளின் மாற்றம் எவ்வாறு வீரர்களையும் போட்டிகளையும் மாற்றின என்பதை வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கிறது . பிரீமியர் லீக்கில் எவ்வாறு பயிற்சியாளர்கள் பலவிதமான யுத்திகளை பயன்படுத்தினர் மற்றும் அந்த யுத்திகளின் 25 ஆண்டுகால வளர்ச்சி முதலியவற்றை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார். Must read!

கவனிக்கத்தக்க பிற புத்தங்கள் :
1.The Damn United by David Peace
2.The Ball is Round by David Goldblatt
3. Soccernomics by Simon Kuper

Tuesday, June 5, 2018

உலகக்கோப்பை கால்பந்து - 1


உலகக்கோப்பை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது ரொபேர்ட்டோ பாஜியோ தான். 1994 உலகக்கோப்பையின் கதாநாயகன் ரோமரியோ என்றால் வில்லன் பாஜியோ. அந்த பெனல்ட்டி கிக் மறக்கமுடியாதது. நான் பார்த்த முதல் உலகக்கோப்பை ஆனால் என் நினைவில் நின்றது வெற்றிபெற்ற பிரேசில் அணியல்ல மாறாக தோல்வியடைந்த இத்தாலிதான் அதிலும் குறிப்பாக பாஜியோதான்.  அன்றுமுதல் நான் இத்தாலி அணியின் ரசிகன்.
ரொபேர்ட்டோ பஜ்ஜியோ
image from wikipedia

1994-ல் எல்லோரும் பிரேசில் மற்றும் ரோமரியோவை பற்றி பேசிக்கொண்டிருக்குபோது  நாங்கள் ரசித்தது  பாஜியோவைத்தான் .ஏன் என்று தெரியவில்லை ஒரு வேளை அவரது அழகிய  ஹேர்ஸ்டைலா ?. அப்போது அவரை "தி டிவைன் போனிடைல் (The Divine Ponytail)" என்றழைத்தனர். நான் அதிகமாக கால்பந்து விளையாடியது கிடையாது. பெரும்பாலான இந்திய குழந்தைகள்போல கிரிக்கெட்தான் எங்களின் பிரதான விளையாட்டு. ஆனால் எங்கள் ஊரில் சில சிறந்த கால்பந்து வீரர்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் பள்ளி அணியில் விளையாடியவர்கள். அவர்களின் திறமையை நண்பர்கள் கூறும்போது ஆச்சிரியமாக இருக்கும். நான் அவர்கள் யாரும் கால்பந்து விளையாடி பார்த்ததே இல்லை. அதனால் கால்பந்து வீரர்கள் மீது ஒருவித ஈர்ப்பு இப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது.  

சிங்கப்பூர் வந்தபிறகு படிப்படியாக கிரிக்கெட்டை பின்னுக்குத்தள்ளி தடகளமும் கால்பந்தும் என்னுள் குடியேறியது .இப்போது கிரிக்கெட் பார்ப்பதைவிட கால்பந்து பார்ப்பதுதான் அதிகம். அதற்கு ஒரு காரணம் சிங்கப்பூர் விளையாட்டுச் சூழல். இங்கு கால்பந்திற்கே பள்ளியிலும் மீடியாவிலும் முன்னுரிம்மை. தினசரி நாளிதழில் இரண்டு முதல் மூன்று பக்கங்கள் தினமும் கால்பந்து பற்றிய செய்தி வருகிறது. இங்கிலிஷ் பிரீமியர் லீக் பற்றிய செய்தியே அதிகம். இதனாலேயே நானும் கால்பந்தை பற்றிய நுணுக்கங்களை வாசிக்கவும் அதை ஆராயவும் கற்றுக்கொண்டேன். கடந்த பத்து வருடங்களில் கால்பந்தே எனது வாசிப்பில் பெரும் பகுதியை எடுத்துக்கொண்டது. இன்னும் இரண்டு வாரங்களில் உலகக்கோப்பை கால்பந்து ஆரம்பிக்கவுள்ளது. பலவிதமான எதிர்பார்ப்புகள்.

ரஷ்யா 
பலவித சர்ச்சைகளுக்குப் பிறகு ரஷ்யாவில் உலகக்கோப்பை தொடங்கவுள்ளது . ரஷ்யா கால்பந்து ஜாம்பவான் இல்லை .அங்கு கோரோப்கா (korobka) எனப்படும் சின்ன திடலில் விளையாடும் கால்பந்துதான் பிரபலம். ரஷ்யா கால்பந்து குண்டர்களுக்கு (hooligans)  மிகவும்  பிரபலம். இருந்தாலும் FIFA 2018 உலகக்கோப்பையை நடத்த ரஷ்யாவிற்கு அனுமதி அளித்தது.இதற்கு  FIFA-வின் லஞ்சம் மற்றும் ஊழல் ஒரு காரணம்.  12 அரங்கங்களில் 32 அணிகள் 65 போட்டிகளில் விளையாட உள்ளன.முதல் மற்றும் இறுதி போட்டிகள் பிரசித்திப்பெற்ற Lushniki அரங்கில் நடக்கவுள்ளது. 35000-கும்  மேற்பட்ட தன்னார்வல தொண்டூழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
 
எந்த அணிக்கு support செய்வது?
எந்த அணி வெல்லுமென்று சொல்லவே முடியாது ஆனால் ஒன்று மட்டும் உறுதி பல திருப்பங்களையும் ஆச்சிரியங்களையும்  இந்த உலக கோப்பைக் கொடுக்குமென்பது . உலக கோப்பையை அனுபவிக்க வேண்டுமென்றால் ஏதாவது அணியை ஆதரித்து அவர்களின் பயணத்தை பின்தொடர்வது முக்கியம். அப்படி செய்தால் போட்டிகளில் ஈடுபாடு அதிகமாகும்.  கிட்டத்தட்ட  பங்கேற்கும் அனைத்து   நாட்டு மக்களின் இரண்டாவது favorite அணி பிரேசில்தான். பங்கேற்காத நாடுகளில் பிரேசில்தான் முதல் favorite. இந்த முறை எனக்கு பிடித்த இத்தாலி விளையாடவில்லை எனவே இந்த முறை எனது support அர்ஜென்டினாவிற்கே அதற்கு முக்கிய  காரணம் மெஸ்ஸி.  முடிவுகள் ஏதாயினும் ஒரு மாதத்திற்கு கொண்டாட்டம் நிச்சியம் .

Wednesday, May 9, 2018

Langston Hughes - கவிதைகள்


கவிதைக்கும் எனக்கும் நீண்ட தூரம் .ஆனால் 2017-ல்  ஒரு முடிவு எடுத்து தினமும் ஒரு கவிதை வாசிக்க ஆரம்பித்தேன். பல கவிதைகள் எனக்கு புரியவில்லை இருந்தாலும் விடாமல் படித்தேன். கவிதை எவ்வளவு சக்தி வாய்ந்தது. கவிதை வாசிப்பு  ஒரு விதமான பரவசத்தை என்னுள் உண்டாகியது . எனக்கு கவிதையை ரசிக்க கற்றுக்கொடுத்தது யாரென்றால் ஒருவர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர் தொடர்ந்து கவிதை பற்றி பேசியும் எழுதியும் வருகிறார். இன்னொருத்தர் அழகியசிங்கர். இவரும் தொடர்ந்து கவிதைகள் மற்றும்  அவை சம்பந்தமான தகவல்களை தன் முகப்புத்தகத்தில் வெளியிட்டு வருகிறார்.

தமிழ் கவிதைப் புத்தகம் நான் சென்ற நூலகத்தில் இல்லை. அதனால் நூலகத்தில் ஆங்கில கவிதை புத்தங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். பல ஆங்கில கவிதை நூல்கள் இருந்தன. முதலில் எனக்கு தெரிந்த கவிஞர்களின் புத்தகத்தைத் தேடினேன். எனக்கு தெரிந்த என்றால் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்ததுதான் பெரும்பாலும் - ஷேக்ஸ்பியர், வெர்டஸ்ஒர்த் மற்றும் ராபர்ட் பிரஸ்ட் .  அவர்களின் கவிதைகள் தெரியுமா என்று கேட்டல் இரண்டே கவிதைகள்தான் மனதிற்கு வருகிறது .ஒன்று ராபர்ட் பிரஸ்ட் எழுதிய  "The Road Not Taken" மற்றும்  வெர்டஸ்ஒர்த்தின் "Daffodils". சிறுவர்கள் பக்கம் சென்று தேடியபோது  கிடைத்த முதல் புத்தகம்  "Poetry For Young People  - Langston Hughes" .  சிறிதாக இருந்ததால் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன் .
Langston Huges
photo courtesy - Wikipedia

லாங்ஸ்டன் ஒரு ஆப்ரிக்கா அமெரிக்கர்.  பெப்ரவரி 1 1920-ல்  பிறந்தவர் . அப்பா விட்டுச்சென்ற பிறகு பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்தவர். பாட்டியின் கதையில்தான் தான் அனைத்தையும் கண்டடைந்ததாக அவர் பின்னர் கூறினார். இவரின் பல கவிதைகளில் அந்த பாட்டி வருகிறார். இந்த புத்தகத்தில் அவரின் மிகப் பிரபலமான கவிதைகள் சில உள்ளது .

எனக்கு பிடித்த லாங்ஸ்டனின் கவிதைகள்

Youth

We have tomorrow
Bright before us
Like a flame.

Yesterday
A night-gone thing,
A sun-down name.

And dawn-today
Broad arch above the road we came.

We march!

I Dream a World

I dream a world where man
No other man will scorn,
Where love will bless the earth
And peace its paths adorn
I dream a world where all
Will know sweet freedom's way,
Where greed no longer saps the soul
Nor avarice blights our day.
A world I dream where black or white,
Whatever race you be,
Will share the bounties of the earth
And every man is free,
Where wretchedness will hang its head
And joy, like a pearl,
Attends the needs of all mankind-
Of such I dream, my world!

Mother to Son

Well, son, I’ll tell you:
Life for me ain’t been no crystal stair.
It’s had tacks in it,
And splinters,
And boards torn up,
And places with no carpet on the floor—
Bare.
But all the time
I’se been a-climbin’ on,
And reachin’ landin’s,
And turnin’ corners,
And sometimes goin’ in the dark
Where there ain’t been no light.
So boy, don’t you turn back.
Don’t you set down on the steps
’Cause you finds it’s kinder hard.
Don’t you fall now—
For I’se still goin’, honey,
I’se still climbin’,
And life for me ain’t been no crystal stair.

இவரின் கவிதைகள்  பெரும்பாலும் சமூகநீதி மற்றும் இன அடக்குமுறை பற்றியதாக உள்ளது.இவருடைய மற்ற கவிதைகளையும் படிக்க வேண்டும் .  அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய கவிஞர். 

Monday, May 7, 2018

The Golden Legend - Nadeem Aslam


நூலகத்தில் எதார்த்தமாக பார்த்தவுடன் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இந்த புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கதையைப் பற்றி ஒன்றும் தெரியாது .  படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது இவ்வுலகு எவ்வளவு பயங்கரமானாலும் மனிதம் ,காதல் மற்றும் அன்பு என்றும் வெல்லும். கதை நடக்கும் இடம்  கற்பனை நகரமான  சமனா (zamana). இஸ்லாமியர்கள் பெரும்பான்மை ஆனால் அவர்களுக்குள்ளும் பிரிவினை. இங்கு கிறிஸ்தவர்கள் மிகவும் கீழ்த்தனமாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கென்று எல்லாமே தனி .  இந்த சூழ்நிலையில்தான் மசூத் மற்றும் நர்கிஸ் தம்பதியர் ஒரு கிறிஸ்தவ குடும்பத்திற்கு வெகுநாட்களாக உதவி செய்து வந்தனர். மசூத் மற்றும் நர்கிஸ் இருவரும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள் . அவர்கள் கிறிஸ்தவ பெண்ணான ஹெலனை படிக்க வைத்து தங்கள் சொந்த பெண்போல நடத்துகிறார்கள்.
This world is the last thing the God will ever tell us
மசூத் புத்தகங்களை புது கட்டிடத்திற்கு மாற்றிக்கொண்டிருக்கும் போது அமெரிக்கன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்படுகிறான். இந்த சம்பவம் நர்கிஸ் மற்றும் ஹெலன் குடும்பத்தையே தலைகீழாக மாற்றி அமைக்கிறது. நர்கிஸ் அந்த அமெரிக்கனை மன்னிக்க வேண்டுமென்று அரசாங்கம் நிர்பந்திக்கிறது . அவளோ அதில் எதிலும் தனக்கு விருப்பமில்லை என்று விலகிச்செல்கிறாள் . ஆனால் அரசாங்கம் அவளை மிரட்டுகிறது. மற்றொரு பக்கம்  இஸ்லாமியர்கள் நர்கிஸ் அவனை மன்னிக்கக்கூடாது  என்று மிரட்டுகிறார்கள் . இதற்கிடையில்  கிறிஸ்தவரான லில்லி (ஹெலனின் தந்தை)  மற்றும் முஸ்லீம் விதவையான ஆயிஷாவின் காதல் .இந்தக்  காதலால் சமனா கலவரபூமியாக மாறுகிறது. நர்கிஸ் ஹெலன் மற்றும் இம்ரான் தங்கள் வீட்டிலிருந்து தப்பித்து மசூத் மற்றும் நர்கிஸ் கட்டிய தீவிற்கு செல்கிறார்கள் .அங்கு ஹெலனும் இம்ரானும் காதல் கொள்கிறார்கள். இந்த இருவரின் கடந்த காலம் வன்முறையால் நிறைந்தது. மதத்தைத் தாண்டின மனிதநேயம் அவர்களை ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவுகிறது.

அந்த தீவு ஒரு குறியீடு . அந்த  தீவில் உள்ள கட்டிடங்கள் மத நல்லிணக்கத்திற்காகக்  கட்டப்பட்டவை ஆனால் அது முழுதாகக்  கட்டிமுடிக்கப்படவில்லை . இறுதியில் ஒருவரும் அங்கு தங்கவில்லை. அங்குதான் யாரும் தங்களைத் தேட மாட்டார்கள் என்று அவர்கள் மூவரும் அங்கு செல்கிறார்கள். அவர்கள் அங்கு தங்கியிருந்த நாட்கள் மிகவும் மகிழ்ச்சியானவை . இம்ரான் தன் கதையைச் சொல்கிறான். காஷ்மீரில் நடந்த மற்றும் நடக்கும் பிரச்சனைகளை ஆசிரியர் அவன் மூலம் விவரிக்கிறார்.  இந்திய இராணுவத்தின்  (தீய)செயல்களைப்  பெரிதாக விளக்குகிறார்.

இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரம் கிறிஸ்தவ ஆயர் சாலமன். அவர் இராணுவ அதிகாரியிடம் கூறும் பதில் முக்கியமானது -
Major Burhan : I would do anything for Pakistan
Bishop Soloman : For the Pakistani state, perhaps. Not the Pakistani people
பாகிஸ்தானிய அரசு அமெரிக்க அரசின் அடிமைபோல செயல்படுவதாக காட்டப்படுகிறது . அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆயர் சாலமன்  நீதிமன்றத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறார். ஏன் நீதிமன்றத்தில்? அவருக்கு தெரியும் அங்கு அவருக்கும் அவரை சார்ந்தவருக்கும் நீதி கிடைக்காதென்று.

மசூதின் வீடு பலவிதமான பொருட்களால் அலங்கரிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ஹாகிய சோபியா மற்றும் கொர்டோபா மசூதியின் மாதிரி வடிவங்கள். இந்த இரண்டும் இஸ்லாமிய படையெடுப்புக்கு முன்பு கிறிஸ்தவ ஆலயங்கள். ஏன் ஆசிரியர் இந்த இரண்டு கட்டிடங்களை மட்டும் தேர்ந்தெடுத்தார் ?  நர்கிஸின் ரகசியம் இதில்தான் உள்ளதா? அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் ஏனென்றால் நர்கிஸும் கிறிஸ்தவள் சூழ்நிலை காரணமாக இஸ்லாமியராக வாழ்கிறாள்.  மற்றொரு முக்கியமான பொருள் " That They Might Know Each Other" என்ற புத்தகம். தலைப்பே ஒரு விதமான கேள்வியை எழுப்புகிறது. மசூதிற்கு நர்கிஸின் ரகசியம் தெரிந்திருக்கலாம். 

எளிய மொழிநடை . பல இடங்களில் கவிதை ததுமும் வாக்கியங்கள் வாசிப்பை மேம்படுத்துகிறது.  இந்த உலகின் வீழ்ச்சிக்கிடையிலும் அதில் உள்ள இயற்கையின் அழகை ஆசிரியர் மிக அழகா எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் இன்றைய பாகிஸ்தான் எப்படி உள்ளது என்று புரிந்துகொள்ள ஓரளவு  உதவும்.  கிறிஸ்தவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை வாசிக்க நம்ப முடியவில்லை ஆனால் அதுதான் உண்மை. 

நல்ல கதை.வாசிக்கலாம்.