அலுவலகத்திலிருந்து வீடுவரை
22-01-2020 18:15
ஓட ஆரம்பித்தவுடன் வாக்மேனில் "என்னை தாலாட்ட வருவாளா" பாடல் ஒலித்தது. இந்த பாடல் என்னை தூத்துக்குடிக்கு கொண்டு சென்றது. நான் "காதலுக்கு மரியாதை" அங்குதான் முதன்முதலில் பார்த்தேன். "கரகாட்டக்காரன்" படத்திற்க்கு பிறகு நான் திரையரங்கில் பார்த்த படம்.அக்கா திருமணம் முடித்த அவர்கள் வீட்டிற்கு முதல் தடவை தூத்துக்குடி சென்றேன். கார்னேசன் திரையரங்கு என்று நினைக்கிறேன். சரியான கூட்டம். எனக்கு அது பெரும் அனுபவம். இதற்கு முன்பு அவ்வளவு கூட்டத்துடன் திரைப்படம் பார்த்ததில்லை. பலபேர் நின்றுகொண்டு பார்த்தனர். அப்படியே தூத்துக்குடியிலிருந்து க்ரிஷ்ணகிரிக்கு சென்றது மனம். அங்கு ஒரு திரையரங்கில் ஒரு படம் நானும் நண்பனும் பார்த்தோம் படப்பெயரும் திரையரங்கு பெயரும் ஞாபகம் இல்லை ஆனாலும் அந்த அனுபவத்தை மறக்க முடியாது. அந்த படம் முழுவதையும் கழுத்தை ஒரு பக்கம் நீட்டிக் கொண்டுதான் பார்த்தோம். திரையரங்கே ஒரு சாய்த்து காட்டியிருக்கிறார்கள். சிரித்துக் கொண்டே ஓடி முடித்தேன்.