Monday, December 20, 2021

பிடித்த நாற்பது

இரண்டு வாரங்களுக்கு முன்பு என் மகள் என்னிடம் நீங்கள் வாசித்ததிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த  fiction எது என்று கேட்டாள். நான் ஒரே ஒரு புத்தகத்தை சொல்வது கடினம் என்றேன். அதற்கு அவள் அப்போ உங்களுக்கு நாற்பது வயதாகப் போகிறது அதனால் நாற்பது புத்தங்கள் சொல்லுங்கள் என்றாள். சரியென்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் நாற்பது தமிழில் நாற்பது என்றேன் .

சிறு வயதிலிருந்தே அப்பா மூலம் வாசிப்பினுள் நுழைந்தேன். அப்போது எங்கள் ஊரில்  நூலகம் இருந்ததே எங்களுக்குத் தெரியாது.  சிறுவர்மலர் வாரமலர் எப்போதாவது ஆனந்தவிகடன் அவ்வளவுதான். ஆனால் தினமும்  பேப்பர் வாசிப்போம். அந்த பழக்கம்தான் பின்னாளில் புத்தக வாசிப்பிற்கு இழுத்துச் சென்றது.பாம்பன் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு பள்ளிப் படிப்பிற்கு சென்றபோது கடைகளில் பார்த்த புத்தகங்களால் ஒருவித ஆர்வம் தோன்றியது. அந்த ஆர்வத்தை இன்றுவரை அணையாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். புத்தகங்களை தேடிச் சென்று வாங்கி வாசிப்பது அப்போது ஆரம்பித்தது. அப்பா புத்தகம் வாங்குவதற்கென்றே தனியாக பணம் தருவார். சென்னையிலிருந்து கல்லூரி படிப்பிற்கு கோவை சென்றபோது தான் முதல் முறையாக தமிழ் நாவல்கள் வாசிக்க ஆரம்பித்தேன். பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது.

கீழேயுள்ள புத்தகப் பட்டியலில் பெரும்பான்மையான புத்தகங்கள் நான் சிங்கப்பூர் வந்த பிறகு வாசித்தவை. அதிலும் பெரும்பான்மையான புத்தகங்கள் சிங்கப்பூர் நூலங்களில் இன்றும் உள்ளன. "The Divine Comedy - Dante " இந்த புத்தகத்தை வருடந்தோறும் நான் வாசிக்கிறேன்.என் படுக்கை அறையில் எப்போதும் இருக்கும் புத்தகம் இது. என் சிந்தனையை மாற்றிய புத்தங்களில் முக்கியமானது "The Stranger - Albert Camus". மூன்று முறை  வாசித்திருக்கிறேன். பல கேள்விகள் இன்னும் இருகின்றன."Crime and Punishment by Fyodor Dostoevsky" இந்த புத்தகத்தை முதல் முறை  ஒரு பயணத்தின்(சிங்கப்பூர் -சென்னை-விஜயவாடா -சென்னை -பாம்பன் -சென்னை -சிங்கப்பூர் ) போது வாசித்தேன். அபூர்வமான அனுபவம். அதற்குப் பிறகு இந்த புத்தகத்தை ஒரு முறை வாசித்திருக்கிறேன் . Invisible Cities - Italo Calvino சில மணித்துளிகளில் வாசித்து முடித்தேன். அபாரமான படைப்பு.Italo Calvino கதை சொல்லும் தாத்தா போல. Gabriel Garcia Marquez -ன் One Hundred Years Of Solitude நாவலை ஒரு வாரத்திற்கு மேலாக வாசித்தேன். இந்த நாவலை மறக்க முடியாது. சென்ற மாதம் காலமான என் பெரியப்பாவிடம் பல முறை இந்த புத்தகத்தைப் பற்றி பேசியிருக்கிறேன். I Am a Cat - Natsume Soseki  இந்த புத்தகத்தை MRTயில்  பயணம் செய்யும் போது மட்டுமே வாசித்தேன்.பலவிதமான அனுபவங்கள் தந்த நாற்பது புத்தகங்கள் .

1)The Divine Comedy - Dante 

2)The Stranger - Albert Camus 

3)One Hundred Years Of Solitude -Gabriel Garcia Marquez

4)Crime and Punishment - Fyodor Dostoevsky

5)Things Fall Apart - Chinua Achebe

6)War and Peace - Leo Tolstoy

7)Maus - Art Spiegelman

8)The Brothers Karamazov - Fyodor Dostoyevsky

9)Anna Karenina - Leo Tolstoy

10)The Decameron - Giovanni Boccaccio

11)Atlas Shrugged by Ayn Rand

12)Gilead - Marilynne Robinson

13)I Am a Cat - Natsume Soseki

14)The Thief - Fuminori Nakamura

15)2666 - Roberto Bolano

16)Hopscotch - Julio Cortazar

17)The Tunnel - Ernesto Sabato

18)The Feast of the Goat - Mario Vargas Llosa

19)The Gift of Rain - Tan Twan Eng

20)Swann's Way -  Marcel Proust

21)Pere Goriot - Honore de Balzac

22)The Unbearable Lightness of Being - Milan Kundera

23)Disgrace - JM Coetzee

24)The Name Of The Rose - Umberto Eco

25)My Name Is Red - Orhan Pamuk

26)The Trial - Franz Kafka

27)Blindness - Jose Saramago

28)Invisible Cities - Italo Calvino

29)Night - Elie Wiesel

30)Solaris- Stanisław Lem

31)The Rings of Saturn - WG Sebald

33)The Little Prince - Antoine de Saint-Exupery

34)Soul Mountain - Gao Xingjian

35)The Book of Disquiet - Fernando Pessoa

36)The Three-Body Problem - Cixin Liu

37)Season of Migration to the Nation - Tayeb Salih

38)Giovanni's Room - James Baldwin

39)The Scarlet Pimpernel - Baroness Orczy

40)Great Expectations - Charles Dickens

தமிழில் நாற்பது:

1)தாண்டவராயன் கதை -பா.வெங்கடேசன் 

2)காவல் கோட்டம்  - சு.வெங்கடேசன் 

3)உப்பு நாய்கள்  - லஷ்மி சரவணக்குமார் 

4)நீலகண்டம்  -சுனீல் கிருஷ்ணன் 

5)சுபிட்ச முருகன்  - சரவணன் சந்திரன் 

6)அஞ்ஞாடி  - பூமணி 

7)தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ் 

8) ஆழி சூழல் - ஜோ .டி  குருஸ் 

9)வேனல் - காலப்பிரியா 

10)பருக்கை  - வீரபாண்டியன் 

11)வலம்  -  விநாயக முருகன் 

12)துறைவன்  - கிறிஸ்டோபர் ஆன்றணி 

13)ஜீவனாம்சம் - சி சு செல்லப்பா 

14) உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன் 

15)கரமுண்டார் வூடு - தஞ்சை பிரகாஷ் 

16) கடல்புரத்தில்  - வண்ண நிலவன் 

17)கூகை  - சோ.தர்மன் 

18)சிலுவைராஜ் சரித்திரம்  - ராஜ் கௌதமன் 

19)அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

20)காதுகள் - எம். வி. வெங்கட்ராம்

21)இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா 

22)ஒற்றன் - அசோகமித்திரன்

23)இடைவெளி - சம்பத் 

24)கன்னி -பிரான்சிஸ் கிருபா 

25)நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்

26)பிறகு - பூமணி 

27)கோவேறு கழுதைகள் - இமையம் 

28)காடோடி - நக்கீரன்

29)வேள்வித் தீ - எம்.வி.வெங்கட்ராம்

30)சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் 

31)புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்

32)ஜே.ஜே: சில குறிப்புகள் -  சுந்தர ராமசாமி

33)காடு - ஜெயமோகன் 

34)விசாரணைக் கமிஷன் -சா.கந்தசாமி

35)சாய்வு நாற்காலி  -தோப்பில் முஹம்மது மீரான் 

36)ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி 

37)விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - சி.மோகன்

38)ஆப்பிளுக்கு முன் - சி. சரவணகார்த்தியேன்

39)கருக்கு - பாமா

40)பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு


Monday, March 29, 2021

ரன்னிங் டைரி - 192

 29-03-2021 08:37

கிழக்கு கடற்கரை பூங்கா 

மொசார்டின் 41வது சிம்பனியை play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன். கவனம் முழுவதும் இசையில்தான் இருந்தது. பத்து கிலோமீட்டர் ஓடியதே தெரியவில்லை. இந்த சிம்பனியைப் பற்றி என்னத்த சொல்ல .. just amazing .. முக்கிய சாலையை அடைந்தபோது வயதான இந்திய தம்பதியர் என்னை நோக்கி கைகாட்டினார். நான் earpiece-ஐ காதுகளிலிருந்து எடுத்துவிட்டு அவர்களை நோக்கிச் ஓடினேன். அந்த தாத்தா ஆங்கிலத்தில் "கிழக்கு கடற்கரை பூங்காவிற்கு எந்த வழியில் செல்ல வேண்டும் " என்று கேட்டார். நான் வழியைக் காட்டினேன். "நன்றி " என்றார். " கடற்கரை நல்ல இருக்குமா?" என்று கேட்டார். உடனே நான் ஒரு சிறிய உரையை நிகழ்த்தினேன். அவர்கள் பொறுமையாய் கேட்டுவிட்டு."நான் நீங்கள் இந்தியர்  என்று நினைத்தேன். இவ்வளவு விசயங்களை கடற்கரைப் பற்றி சொல்கிறீர்கள்" என்றார். நான் "நான் "இந்தியர் தான் . இந்த கடற்கரைக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வருகிறேன்." என்றேன். "சரி வருகிறோம்" என்று சொல்லிவிட்டு கடற்கரையை நோக்கி நடந்தார்கள். நான் நடந்து வீட்டை அடைத்தேன்.

ரன்னிங் டைரி - 191

 27-03-2021 17:00

கேலாங் பூங்கா 

இரண்டு சுற்றுக்கள் ஓடலாம் என்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன். மலேசியா வாசுதேவன்  "ஆசை நூறு வகை.." ஆரம்பித்திருந்தார். நான் இருபது நிமிடத்திற்குள் ஓடி முடிக்க நினைத்திருந்தேன். அதனால் ஆரம்பித்ததே சற்று வேகமாக ஆரம்பித்தேன். முதல் சுற்று பத்து நிமிடத்திற்குள் ஓடி முடித்தேன். இரண்டாவது சுற்று தொடங்கியபோது "டிங் டாங் ..இரண்டும் ஒன்றோடு .." ஆரம்பித்தது. பாடலைப் பாடிக் கொண்டே ஓடினேன். டிராபிக் சிக்னலில் நின்றேன். அதன் பிறகு ஓட  மனம்  வரவில்லை. நடக்க ஆரம்பித்தேன். பழைய புத்தகக் கடையைப் பார்த்ததும் நின்று புத்தகங்களை புரட்டினேன்."Godel ,Escher ,Bach : An Eternal Golden Braid" புத்தகம் கையில் கிடைத்தது. பல வருடங்களுக்கு முன் சில பக்கங்கள் வாசித்திருக்கிறேன். அந்த புத்தகத்தை பேருந்தில் வைத்துவிட்டு இறங்கி விட்டேன். அதற்குப் பிறகு இன்றுதான் இந்த புத்தகத்தை தொடுகிறேன். வாசிக்க ஆரம்பித்தேன். கடைக்காரர் இரண்டு டாலர்கள் போதும் என்றார். நான் கொடுத்துவிட்டு புத்தகத்தைத் எடுத்து வந்தேன்.

Saturday, March 20, 2021

ரன்னிங் டைரி - 190

20-03-2021 06:25

கிழக்கு கடற்கரை பூங்கா

வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் எமிலி டிக்கின்ஸன் எழுதிய  "Because I could not stop for death.." கவிதை ஞாபகத்தில் வந்தது. நேற்று இரவு "Poetry for beginners -Margaret Chapman & Kathleen Welton" புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.அதில் இந்த கவிதை இருந்தது. வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்த கவிதையை வாசித்தேன்.அற்புதமான கவிதை -இறப்புடன் ஒரு பயணம். சற்று தூரம் நடந்து விட்டு போனில் மொசார்டின் -Symphony 41 in C Minor" play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது மாநில உரிமைகள் பற்றிய "one nation .." இந்த கட்டுரைதான். இந்த தேர்தல் தமிழ் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்த சிறிது நேரத்திலேயே இருவர் என்னை முந்திச் சென்றனர். நான் அவர்களை பின்தொடர ஆரம்பித்தேன்.பதினெட்டு நிமிடங்களில் அவர்களுடன் நான் நான்கு கிலோமீட்டர்களுக்கு மேல் ஓடிருந்தேன். அதற்குமேல் என்னால் அந்த வேகத்தில் ஓட முடியவில்லை. வேகத்தை மிகவும் குறைத்தேன். கவனம் சிம்பனியில் சென்றபோது மொசார்ட் தனி உலகை படைத்துக் கொண்டிருந்தார். எனக்குப் பிடித்த சிம்பனிகளில் இதுவும் ஒன்று. சில நாட்களுக்குப் பிறகு இன்றுதான் கேட்டேன்."Amadeus" திரைப்படம் ஞாபகத்தில் வந்தது. இது மொசார்டின் இறுதி சிம்பனி.அவருடைய இறுதி மூன்று சிம்பனிகள் அடுத்தடுத்து வெகு குறைந்த நாட்களில் எழுதப்பட்டது. மூன்றும் அற்புதமானவை. மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாகா கேட்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் .இந்த சிம்பனிகள் ..  One of the greatest artistic achievement.. என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, March 17, 2021

ரன்னிங் டைரி - 189

17-03-2021 08:26

கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட ஆரம்பித்தவுடன் மனதில் வந்தது புக்கவோஸ்கி எழுதிய "The Laughing Heart" கவிதைதான் . வெகுநாட்களுக்குப் பிறகு நேற்று இந்த கவிதையை மீண்டும் வாசித்தேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தவுடன் போனில் பாடல்களை ஓட விட்டேன். எழுத்தாளர் சரவணன் கார்த்திகேயன் அவர் இளையராஜாவின் பாடிய பாடல்களை "Voice of God" என்ற folder-ல் வைத்திருந்ததாக ஒரு பதிவில் எழுதி இருந்தார். நான் "என்னோட ராஜா" என்ற ஒரு playlist வைத்திருக்கிறேன். அதைத்தான் இன்று ஓடவிட்டேன்.  "அடி ஆத்தாடி .." என்று ஆரம்பித்தது. ராஜாவின் குரல் ஒரு தனி வகை. ஏனோ கவனம் முழுவதும் இசையில் தான் இருந்தது. மனதில் ஏதும் தோன்றவில்லை. வீட்டை அடையும்போது  "எம் பாட்டு எம் பட்டு .."  என்று ராஜா பாடிக்கொண்டிருந்தார்.

Tuesday, March 16, 2021

ரன்னிங் டைரி - 188

 16-03-2021 09:00

கிழக்கு கடற்கரை பூங்கா

கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் வில்லியம் ஷேக்ஸ்பியரின் "Carpe Diem" கவிதைதான். நேற்று அலுவகத்தில் ஷேக்ஸ்பியரின் முழுப் படைப்பு புத்தகத்தைப் எடுத்துப் பார்த்தேன். அப்போது இந்த கவிதை உள்ள பக்கம் திறந்தது. இந்த புத்தகம் நான் ஜப்பான் சென்றபோது தங்கியிருந்த ஹோட்டலில் நான் இரண்டு புத்தங்களை வைத்துவிட்டு books exchange பகுதியில் இருந்து எடுத்து வந்தேன்.   கிட்டத்தட்ட இரண்டு கிலோக்கள் இருக்கும். அதை சிங்கப்பூருக்கு கொண்டுவதற்கு படாத பாடுபட்டேன்.அதை எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன்.இன்றைய ஓட்டம் முழுவதும் ஜப்பான் பயண நினைவிலேயே இருந்தது. அதிவிரைவு ரயில் , Sushi ,Sake ,Manga, Ghibli studio படங்கள் ,சுமோ ,ஐஸ் ஸ்கேட்டிங் ,Bento box ,Samurai இப்படி ஒவ்வொன்றும் ஞாபகத்தில் வந்து சென்றது. ஒரு மணி நேரம் ஓடி வீடு திரும்பினேன் 

Saturday, March 13, 2021

ரன்னிங் டைரி - 187

13-03-2021 06:05

கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது ராபெர்ட் ஜி இங்கர்ஸல் எழுதிய "The Creed Science" தான். எவ்வளவு உண்மை. இன்று இது எவ்வளவு அவசியம். மீண்டும் வரிகளை சொல்லிப் பார்த்தேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது போனில் playlist-ஐ shuffle-ல் போட்டுவிட்டு ஓடினேன். காந்தி  எழுதிய "The Ideal Bhangi" என்ற கட்டுரைதான் முதலில் எண்ணத்தில் வந்தது . நேற்று இரவு மனித கழுவுகளை அகற்றுவதைப்  பற்றிய தொடர் ஒன்றை பfirstpost இணையதளத்தில் படித்தேன். அதன் விளைவு இன்று ஓடும்போது இந்த கட்டுரை ஞாபகத்தில் வந்தது. என்னை முந்திக் கொண்டு இருவர் ஓடினர். நான் அவர்களைப் பின்தொடர முடிவு செய்தேன். அப்படியே அவர்களின் பின் ஏழு கிலோமீட்டர் ஓடினேன். அவர்கள் தொடர்ந்து ஓடினார்கள். நான் திரும்பி ஓடினேன். பாடலுக்கு கவனம் சென்றபோது "காதல் மகாராணி .." ஓடிக் கொண்டிருந்தது. என்ன beat ! .  ஒருவர் தனியாக நீந்திக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்துக் கொண்டே ஓடினேன். அவர் கடலில் மிதந்தார். ஒரு நாய் கரையில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. நான் playlist-ஐ நிறுத்திவிட்டு கடலைப் பார்த்துக் கொண்டே ஓடினேன். குளிர்ந்த காற்று. நான் பல போட்டிகளில் பார்த்த ஒருவர் என்னைக் முந்திச் சென்றார். நான் அவருடன் ஓட ஆரம்பித்தேன். அவர் ஒரு தமிழர். நான் பெயரைக் கேட்கவில்லை. ஆனால் அவர் தமிழில் கைபேசியில் பேசிக் கொண்டே ஓடினார். ஐந்து கிலோமீட்டர் அவருடன் ஓடினேன். அதன்பிறகு நான் திரும்பி முக்கிய சாலைக்கு ஓடினேன். அங்கிருந்து மளிகை கடைக்கு சென்று நின்றேன். கடைக்காரர் "இளையராஜா இல்லையென்றால் நமக்கு கஷ்டம்தான்" என்றார். நான்  "ஓடுவதற்கும் அவர் தேவை கடை திறப்பதற்கும் அவர் தேவை"  என்றேன். மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

Wednesday, March 10, 2021

ரன்னிங் டைரி - 186

 10-03-2021 18:05

கிழக்கு கடற்கரை பூங்கா

நல்ல வெய்யில்.  ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது கீழே உள்ள இரா. மீனாட்சி அவர்களின் கவிதைதான் :

===

மதுரை நாயகியே

  -இரா. மீனாட்சி

===

மதுரை நாயகியே!

மீனாட்சித்தாயே!

படியேறி

நடை தாண்டி

குளம் சுற்றி

கிளி பார்த்து

உன்னருகே ஓடிவரும்

உன்மகளை

உன்மகனே 

வழிவம்பு செய்கின்றான்

கோயிலிலும் காப்பில்லை

உன் காலத்தில்-

அழகி நீ

எப்படி உலாப்போனாய்?

===

நேற்று இரவு இந்தக் கவிதையை மீண்டும்  வாசித்தேன்.  சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு இணைய தளத்திலிருந்து copy செய்து வைத்திருந்தேன். அற்புதமான கவிதை. மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தவுடன் போனில் playlist-ஐ shuffle-லில் ஓட விட்டேன். " ஒரு ஜீவன் அழைத்தது.." என்று இளையராஜாவும் சித்ராவும் பாடகிக் கொண்டிருந்தனர். பாடல் ஓடிக் கொண்டிருக்கும்போது கோகுல் பிரசாத் அவர்களின் இளையராஜாவை பற்றிய பதிவுதான்.எனக்கு இந்த பாடலின் இசை மிகவும் பிடிக்கும். மீண்டும் மீண்டும் இந்த பாடலை ஓடவிட்டேன்.வீட்டிற்குத் திரும்பி வரும்போதுதான் கவனித்தேன். வழக்கத்திற்கு மாறாக நிறையப் பேர் கடற்கரையில் விளையாடிக் கொண்டும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். இந்த கோவிட் காலத்தில் இன்றே முதல் முறையாக  இப்படியானக் காட்சிகளைப் பார்த்தேன். என்னை முந்திக் கொண்டு ஒருவர் ஓடினார். அவரின் வலது தோளில் சிகப்பு .பச்சை மற்றும் கறுப்பு நிறத்தில் பச்சைக் குத்திருந்தது. அது என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டுமென்று அவரைப் பின்தொடர்ந்து ஓடினேன். நான் அவர் அருகில் சொல்லும்போதெல்லாம் அவர் வேகத்தைக் அதிகரித்தார். என்ன ஆனாலும் பரவாயில்லை இன்று அவர் என்ன  பச்சைக் குத்திருக்கிறார் என்று பார்த்தே ஆகவேண்டுமென்று நானும் விடாமல் பின்தொடர்த்தேன் ஐந்து கிலோமீட்டருக்குப் பிறகு நான் அவருக்கு மிக அருகில் பின்தொடர்ந்தேன். அவர் பச்சைக் குத்தி இருந்தது ஒரு பெண்ணின் உருவம் பச்சை முகம் கருப்பு முடி மற்றும் சிகப்பு கழுத்து.அவரை முந்திச் சென்றேன்.  நான் முக்கிய சாலையை அடைந்த போது அவரும் என் பின்னல் வந்து கொண்டிருந்தார். போக்குவரத்து சிக்னலில் இருவரும் நின்றோம் . நான் அவரிடம் "nice tattoo" என்றேன். அவர் சிரித்துக் கொண்டே "you are running good " என்றார். நான் சிரித்தேன். இருவரும் இரு திசையில் சென்றோம். நான் நடந்து வீட்டை அடைந்தேன்.

Tuesday, March 9, 2021

ரன்னிங் டைரி - 185

 08-03-2021 18:25

கிழக்கு கடற்கரை பூங்கா 

மழை மேகம். playlist-ஐ ஆரம்பித்து விட்டு ஓடத் தொடங்கினேன்."என்ன சத்தம் இந்த நேரம் .."  ஆரம்பித்தது. பல நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சாயங்காலம் ஓடினேன். உடம்பு இந்த சூழலுக்கு சரிசெய்ய பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது ஒரு சீரான வேகத்தை அடைந்தேன்.எக்கச்சக்கமான இந்தியர்கள் நடந்து கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்தனர். பெரும்பாலோர் பேசிக் கொண்டே நடந்தனர். ஆறு கிலோமீட்டருக்குப் பிறகு பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பனியை ஓடவவிட்டேன். ஏனோ இந்த சிம்பனியை கேட்கும்போதெல்லாம் வேறெந்த நினைப்பும் வருவதில்லை. கவனம் முழுவதும் இசையில் மட்டுமே இருந்தது. பீதோவனோடு வீட்டை அடைந்தேன்.

Sunday, March 7, 2021

ரன்னிங் டைரி - 184

  07-03-2021 05:45

வீட்டைச் சுற்றி கேலாங் மீன் சந்தை 

நல்ல குளிர். வில்லியம் வெர்ட்ஸ்வோர்த்தின் "My Heart Leaps Up" கவிதையைச் சொல்லிப் பார்த்தேன். முழுவதும் சொல்ல முடிந்தது. அற்புதமான கவிதை .இன்றும் earpiece எடுத்துச் செல்லவில்லை. வேகமாக ஓடினேன். குறைவான தூரம். சிக்னலில் சைக்கிளில் சென்றவர் என்னைப் பார்த்து கைகாட்டினார். நானும் கைகாட்டினேன். சிக்னலைக் கடந்தபோது பேப்பர் போடுபவர் சத்தமாக "கண்டா வரச் சொல்லுங்க .." என்று ரசித்துப் பாடிக் கொண்டுச் சென்றார். மாதா கோவில் கதவு பூட்டி இருந்தது. "ஞானம் நிறை .." பாடல் மனதில் வந்து சென்றது. மீன் சந்தை சாலை வந்ததும் என்னென்ன வாங்க வேண்டுமென்று மனதில் பட்டியல் போட ஆரம்பித்தேன். பட்டியல் போட்டு முடியும்முன் சந்தையை அடைந்திருந்தேன்.


Saturday, March 6, 2021

ரன்னிங் டைரி - 183

 06-03-2021 06:00

கிழக்கு கடற்கரை பூங்கா 

நல்ல குளிர்.  இன்று கலீல் ஜிப்ரானின் "On Children" கவிதையைச் சொல்லிப் பார்த்தேன். கிட்டத்தட்ட முழுக் கவிதையையும் சொன்னேன். அந்தக்  கவிதை எவ்வளவு உண்மை.

Your children are not your children.

They are the sons and daughters of Life’s longing for itself.

They come through you but not from you,

And though they are with you yet they belong not to you.

போனில் பாடல்களைப் ஓட செய்தேன். "இது ஒரு பொன்மாலை பொழுது .."  ஆரம்பித்தது. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது ஆம்புலன்சும் காவல் கார்களும் நின்றிருந்ததன. ஒரு பெண்ணை காவலர்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர். என்ன நடந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டே ஓடினேன் . சற்றுதூரம் ஓடினேன் .மீண்டும் மீண்டும் எண்ணத்தில் ஆம்புலன்சே வந்தது.  ஏனோ அதற்குமேல் ஓட மனம்வரவில்லை. திரும்பி வீட்டிற்கு ஓட ஆரம்பித்தேன்.முக்கிய சாலையை அடைந்தபோது இருவர் கையில் கிரிட்கெட் பேட்டோடு என்னை நோக்கி நடந்து வந்தனர்.எங்க விளையாட போறீங்க என்று கேட்டேன். ஹாஸ்டல தான் அண்ணா என்றார்கள். நான் கிரிக்கெட் மேட்ச் விளையாடி  பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. பேட்டைப் பிடித்தே இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பேட் ஒன்று வாங்க வேண்டுமென்று  எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, March 3, 2021

ரன்னிங் டைரி - 182

 03-03-2021 09:00

உபியிலிருந்து வீடுவரை 

கடுமையான வெய்யில். ஓடுவாதா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டே பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன். சிக்னலில் பேருந்து வர எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கைபேசியில் பார்த்தபோது பதினான்கு நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்றது. காத்திருப்பத்திற்கு பதில் ஓடுவதே சிறந்தது என்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன்.earpiece இல்லை. வெகுநாட்களுக்குப் பிறகு இன்றுதான் காதில் எதுவும் இல்லமால் ஓடினேன். ஓட ஆரம்பித்தக் கனமே எண்ணத்தில் தோன்றியது இரண்டு வார்த்தைகள்  "lateral surveillance". ஒரு வாரமாக அதைப் பற்றி வாசித்து வருகிறேன். குடிமகனே குடிமகனைக் கண்காணித்தல். மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே இதை அமல்படுத்தி இருக்கிறார்கள் என்று வாசித்த ஞாபகம்.  அதன் பெயர்  C-Plan app. "To receive inputs from Certain identified individuals in villages across the state". யார் அந்த "certain identified individuals". எப்படி இவர்களை தேர்வு செய்கிறார்கள் என்பதெல்லாம் மார்மமாக இருக்கிறது. ஹைதராபாத்தில் "Hawk Eye" என்ற செயலி நடைமுறையில் இருக்கிறது. அது "to empower common man to become Citizen Police" என்று விளம்பரப்படுத்தப்படுகிறது . பல நாடுகளில் இப்படி இருக்கிறது  .  Right to Privacy மற்றும் Right to freedom of speech and expression என்னவாகும் . இது எங்கு போய் முடியுமோ என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Tuesday, March 2, 2021

ரன்னிங் டைரி - 181

 02-03-2021 08:30

கிழக்கு கடற்கரை பூங்கா 

இன்று குறைந்த தூரம்தான் ஓட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். அதனால் சற்று வேகத்துடன் ஓட ஆரம்பித்தேன், இன்று  T.S  Eliot  எழுதிய "Ash Wednesday" என்ற கவிதையைச் சொல்லிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். நேற்றுப் போல இன்றும்  கவிதை முழுவதுமாக நினைவில் வரவில்லை. இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கவிதையை முதன் முதலில்  கோயம்பத்தூரில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் ஒரு பாதிரியார் சொல்லத்தான் கேட்டேன். அவர் இந்த கவிதையை ரசித்து உருகிச் சொன்னார். அவர் சொன்ன இந்த கவிதை  சரியா தவறா என்று கூட எனக்குத் தெரியாது ஆனால் அவர் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. மூன்று கிலோமீட்டர்கள் ஓடிய பிறகு போனில்  'mixed songs' playlist-ஐ play செய்தேன். "ஆசிச்சவன் ஆகாயத்தில்' என்று சூர்யா (மலையாள நடிகர்) பாடிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல் முடிந்தவுடன் பாடல்களை முழுவதும் நிறுத்திவிட்டு ஓடினேன். ஏனோ பாடல்கள் கேட்க விருப்பம் இல்லாமல் போனது.வீட்டிற்கு செல்ல இன்னும் ஏழு  கிலோமீட்டர்கள் ஓட வேண்டும். மனதில் எதுவுமே தோன்றவில்லை ஒருவிதமான சோர்வு ஒட்டிக்கொண்டது. மெதுவாக ஓடி வீட்டை அடைந்தேன்.

Monday, March 1, 2021

ரன்னிங் டைரி - 180

01-03-2021 08:32

கிழக்கு கடற்கரை பூங்கா 

இன்றிலிருந்து ஓடும்போதெல்லாம் ஒரு கவிதை நினைவில் இருந்து சொல்லவேண்டுமென்று நேற்று இரவு முடிவு செய்தேன். அதென்ன படியே இன்று காலையில் எழுந்தவுடன் HW  Longfellow  எழுதிய  "A  Psalm of Life " என்ற கவிதையை வாசித்தேன். வாக்மேனில் பாடல் ஏதும் போடாமல் ஓட ஆரம்பித்தேன் . வாசித்த கவிதையைச் சொல்லிப் பார்த்தேன். என்னால் முழுவதையும் ஞாபகத்தில் இருந்து சொல்ல முடியவில்லை. முதல் இருவரிகள் மற்றும் இரண்டு stanzaகளும் மட்டும் தான் நினைவில் இருந்தது.

Life is real! Life is earnest

   And the grave is not its goal.

Dust thou art, to dust returnest,

   Was not spoken of the soul.


Lives of great men all remind us

   We can make our lives sublime,

And, departing, leave behind us

   Footprints on the sands of time;

ஓடிக் கொண்டே தொலைபேசியை எடுத்து Poetry Foundation வலைத்தளத்தில் இந்த கவிதையை மீண்டும் வாசித்தேன். முழுவதும் வாசித்து முடித்தவுடன் இளையராஜா பாடல்களை shuffle-லில் போட்டுவிட்டு ஓடினேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது வெய்யில் முகத்தில் அறைந்தது. இன்று வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் பாட்டில் எடுத்து சென்றது மிகவும் உதவியாய் இருந்தது. தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது "Metanoia" என்ற வார்த்தை மனதில் தோன்றியது. எங்கு படித்தது ? யாரவது சொல்லிய வார்த்தையா? என்று யோசித்துக் கொண்டே ஓடினேன். ஆறு கிலோமீட்டர் ஓடிய பிறகு திடீரென்று ஞாபகத்தில் வந்தது Father Raniero Cantalamessa அவர்களின் உரையில் படித்தது. இந்த தவக்காலத்தில் தெரிந்துக் கொள்ளவேண்டிய வார்த்தைதான். திரும்பி ஓடிவரும் போதுதான் கவனம் ஓடிக் கொண்டிருந்த பாடலில் சென்றது மனோவும் சித்ராவும்  "குடகு மலை .." பாடிக் கொண்டிருந்தனர். ஏனோ நேற்றுப் பார்த்த மௌனராகம் திரைப்படம் ஞாபகத்தில் வந்தது. ஜானகி அம்மாவிற்கும் சுவர்ணலதாவிற்கும் இடைப்பட்ட வசீகரக் குரல் சித்ராவிற்கு. என் playlist-ல் சித்ராவின் பாடல்கள்தான் அதிகம். மலையாளம் தெலுங்கு உட்பட.எதிரே ஓடி வந்தவரால் கவனம் பாடலில் இருந்து அவரிடம் சென்றது. பல தடவை பார்த்த அந்த தாத்தா என்னைப் பார்த்து கைகாட்டி சிரித்தார். நானும் அவ்வாறே செய்தேன்.இன்று செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன் .

Sunday, February 28, 2021

ரன்னிங் டைரி - 179

 27-02-2021 05:45

கிழக்கு கடற்கரை பூங்கா 

வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் என்னை சுண்டி இழுத்தது எதிரே தங்க நிறத்தில் இருந்த நிலாதான். எண்ணத்தில் வந்தது  நேற்று  வாசித்த ஜி.கனிமொழியின் "இந்த நிலவு...." கவிதைதான். சொல்லிப் பார்த்தேன் முதல் இரண்டு அடிகள்தான் ஞாபகத்தில் வந்தது. 

'இந்த நிலவு ஏனிப்படி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது 

இந்த நிலவு ஏனிப்படி அகண்டிருக்கிறது '

ஐந்து நிமிடம்  நின்று நிலாவைப் பார்த்தவிட்டு ஓட ஆரம்பித்தேன். நிலாவைப் பற்றிய வேறேதும் தமிழ் கவிதைகள் இருக்கிறதா  என்று யோசித்துக் கொண்டே ஓடினேன். எனக்கு எந்த கவிதையும் ஞாபகத்தில் வரவில்லை. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது கவனம் ஓடிக் கொண்டிருந்த மூவரின் மேல் சென்றது. மூவரையும் பல பந்தயங்களில் பார்த்திருக்கிறேன். சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தனர் .நான் அவர்களைத் தொடர முடிவு செய்து ஓடினேன். கவனம் முழுவதும் அவர்களின் கால்களில் தான் இருந்தது. அவர்களுடனே பன்னிரெண்டு கிலோமீட்டர் ஓடினேன். அதன் பிறகு அவர்களை முந்திச் சென்று ஒரு கிலோமீட்டர் ஓடினேன்.அதன் பிறகு நான் நிற்றுவிட்டேன் அவர்கள் சிறிது நேரத்தில் என்னைக் கடந்து சென்றபோது கைகாட்டி "well done"  என்றார்கள். நானும் கைகாட்டிச் சிரித்தேன். இரண்டு கிலோமீட்டர்கள் நடந்து வீட்டை அடைந்தேன்.


Thursday, February 25, 2021

Messi : Lessons in Style - Jordi Punti



இந்த புத்தகத்தை ஒரு வருடத்திற்கும் மேலாக தேடினேன். இந்த புத்தகத்தைப் பற்றி பலர் நல்ல விதமாக கூறியுள்ளனர்.அதிலும் நான் விரும்பி வாசிக்கும் கால்பந்து கட்டுரையாளர்கள் மிகவும் நல்ல விதமாக கூறியிருந்தால் எனக்கு எப்போது இந்த புத்தகம் கையில் கிடைக்கும் என்ற ஏக்கமும் தேடலும் இருந்து கொண்டே இருந்தது. வேறொரு புத்தகத்தை தேசிய நூலக இணையதளத்தில் தேடிக் கொண்டிருந்தபோது திடீரென்று இந்த புத்தகம் ஞாபகத்தில் வந்தது.தேடினேன் புத்தகம் நூலகத்தில் இறக்குகிறது என்று தெரிந்தது. அன்று காலையே நூலகத்திற்கு சென்று இந்தப்  புத்தகத்தை எடுத்தேன். நூலகத்திலிருந்து அலுவலகத்தை அடையும் முன்னரே பாதி புத்தகத்தை வாசித்துவிட்டேன்.

மெஸ்ஸியைப் பற்றி வெளியான புத்தகங்களில் பெருபானவற்றை நான் வாசித்திருக்கிறேன். அவரைப் பற்றி தெரியாத விசயங்கள் என்று பெரிதாக ஏதும் இல்லை இணையத்தில் தேடினாலே அனைத்தும் கிடைக்கும்.ஆனால் இந்த புத்தகம் சற்று வித்தியாசமானது. இது ஒரு ரசிகன் அதுவும் அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் பார்வையில் மெஸ்ஸி விவாதிக்கப்பட்டுள்ளார். உண்மையைச் சொன்னால் இப்புத்தகம் "ode to Messi". இருப்பது ஒன்று குறு அத்தியாகங்களில் மெஸ்ஸியை அணு அணுவாக ரசித்து எழுதியிருக்கிறார் ஜோர்டி. 

ஜோர்டி ஒரு catalan மொழி எழுத்தாளர். பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இவரும் ஒரு உறுப்பினர். கடந்த பத்து வருடங்களில் கேம்ப் நூவ்வில் (camp nou) நடந்த அனைத்து போட்டிகளையும் நேரில் பார்த்தவர்.மைதானத்தில் மெஸ்ஸியின் ஒவ்வொரு அசைவையும் மக்கள் எப்படிப் பார்த்தார்கள். அவர்களின் நினைவில் மெஸ்ஸி எப்படி உருமாறுகிறார் என்பதை அற்புதமாக எழுதியுள்ளார்.மெஸ்ஸி விளையாடுவதை நிறுத்தினால் இவர்கள் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்றும் ஊகித்து எழுதியிருக்கிறார்.  மரடோனாவா மெஸ்ஸியா ? என்ற கேள்விக்கு எல்லாவிதத்திலும் பதில் தேட முயற்சித்திருக்கிறார். பதினெட்டாவது அத்தியாயத்தில் மெஸ்ஸி மற்றும் ஹாரிப்போட்டார் ஒப்பீடு அருமை. இருவரும் மேஜிக் செய்பவர்கள். அவர்களின் படிப்படியான வளர்ச்சியும் அவர்களோடு வளர்ந்த ரசிகர்கள் எப்படி மெஸ்ஸியை எதிர்கொண்டார்கள் என்பதையும் அழகாக விவரித்துள்ளார் ஜோர்டி .

"I remember" என்ற இருபதாவது அத்தியாயம் தான் எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் மெஸ்ஸியின் கோல்கள் மற்றும் இதர சாதனைகளின் பட்டியல் ஒன்றை கொடுத்துள்ளார். ரசித்து ரசித்து தயார் செய்துள்ளார்.2019-ல் நானும் அப்படி ஒரு  பட்டியல் தயார் செய்தேன். விளையாட்டு ரசிகனுக்கு அது ஒரு சுகம். ஒன்பதாவது அத்தியாயத்தில் இட்டாலோ கால்வினோ Six Memos for the Next Millennium புத்தகத்தில் ஒரு நல்ல  இலக்கிய படைப்பு கீழேயுள்ள ஐந்து குணங்களை கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

  1. Lightness
  2. Quickness
  3. Exactitude
  4. Visibility
  5. Multiplicity 

ஜோர்டி இந்த ஐந்து குணங்களும் மெஸ்ஸியிடம் இருப்பதாக கூறுகிறார். ஒவ்வொன்றையும் எடுத்துக்காட்டோடு விளக்கியுள்ளார்.இப்படி ஒரு எழுத்தாளர் ஒரு விளையாட்டு வீரனுக்கு கிடைப்பது பெரும் தவம். அந்த விதத்தில் மெஸ்ஸி அதிர்ஷ்டசாலி. நாமும் தான்.

கால்பந்து ரசிகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Wednesday, February 24, 2021

ரன்னிங் டைரி - 178

24-02-2021 08:30

கிழக்கு கடற்கரை பூங்கா 

ஆறு கிலோமீட்டர் வரை கவனம் முழுவதும் மூச்சிலே இருந்தது. ஒரே சீரான வேகத்தில் ஓடினேன். திரும்பி ஓடியபோது அப்படி அமையவில்லை. திரும்பியவுடன் எண்ணத்தில் தோன்றியது எப்போது மீண்டும் running events நடக்கும் என்ற கேள்விதான். கடைசியாக ரேஸில் ஓடியது எப்போது என்று யோசித்துக் பார்த்தேன். எனக்கு ஞாபகத்தில் வரவில்லை.என்னை முந்திக் கொண்டு  ஆறு பேர் அடங்கிய  ஒரு குழு ஓடிச் சென்றது. எனக்கு இப்படி குழுக்களைப் பார்த்தால் அவர்களுடன் சேர்ந்து ஓட ஆசைப் பாடுவேன். இன்றும் அப்படித்தான். அவர்களுக்கு இணையாக வேகத்தைக் கூட்டினேன். அவர்களோடு மூன்று கிலோமீட்டர்கள் ஓடினேன்.மெயின் ரோட்டிற்கு வந்த பிறகு மார்ஸல் ப்ரௌஸ்ட் எண்ணத்தில் தோன்றினார். அவரின் Swann's Way புத்தகத்தைப் பற்றி ஒரு புத்தகம் நேற்று பார்த்தேன்.Swann's Way படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Tuesday, February 23, 2021

ரன்னிங் டைரி - 177

 23-02-2021 08:35

கிழக்கு கடற்கரை பூங்கா 

கடுமையான வெய்யில். பேருந்து நிலையத்தில் இருந்து ஓட ஆரம்பித்தேன்.வாக்மேனில் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாட ஆரம்பித்தார். வீட்டிற்கு அருகில் ஒருவர் என்னைக் கை கட்டி நிறுத்தி "your specs is awesome" என்றார். நான் சிரித்தேன். அவர் "brand ?" என்று கேட்டார். நான் "Rudy Project" என்றேன். அவர் "Oh  I never heard of it" என்றார். நான் "see you" என்று சொல்லிவிட்டு ஓட்டத்தை தொடர்ந்தேன்.நான் அவரை காபி கடையில் சில தடவை பார்த்திருக்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன் கண்ணாடி போடுவதென்றாலே ஒருவிதமான கூச்சம் ஒட்டிக் கொண்டுவிடும். யாரும் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று எண்ணிக் கொண்டே ஓடுவேன். படிப்படியாக அது மாறி இப்போதெல்லாம் கண்ணாடி போடாமல் ஓடுவதே இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டேன். நான் வாங்கிய முதல் கண்ணாடி ஞாபகத்தில் வந்தது.அது இன்னும் என்னிடம் இருக்கிறது. எப்போதாவது போட்டுக் கொள்வேன்.  கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்த போது சென்ற வாரம் பார்த்த பெரியவர் நடந்து வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்து சிரித்தார்.நானும்  சிரித்தேன். பாடலில் கவனம் சென்றபோது "அடி ஆத்தாடி .." என்று ஜானகியும் இளையராஜாவும் பாடிக் கொண்டிருந்தனர். ஏனோ அப்போது நேற்றுப் பார்த்த இயக்குநர் ரத்னகுமாரின் பேட்டி ஞாபகத்தில் வந்தது. என்னத்த சொல்ல .. என்று எண்ணிக் கொண்டேன்.என் முன்னே ஓடிக் கொண்டிருந்தவர் திடீரென்று வேகத்தைக் அதிகரித்தார் நானும் அவருக்கு இணையாக ஓட வேண்டுமென்று முடிவு செய்து வேகத்தை அதிகரித்தேன். அவர் கிழக்கு கடற்கரை பூங்காவை விட்டு வெளியே செல்லும்வரை அவருக்கு இணையாக ஓடினேன். அதன் பிறகு மெயின் ரோட்டில்  சைக்களின் பின்னல் ஓடி வீடை அடைந்தேன்.

The Standardization of Demoralization Procedures - Jennifer Hofmann

 


இந்த ஆண்டு நான் வாசித்து முடித்த முதல் ஆங்கில நாவல். வழக்கம்போல நூலகத்தில் தேடியபோது கிடைத்த புத்தகம். இதற்கு முன் இந்த புத்தகத்தைப் பற்றி நான் வாசித்ததோ கேட்டதோ கிடையாது. இப்படி எதுவும் தெரியாமல் நூலகத்தில் எடுத்து படித்தப் புத்தங்கள் என்றுமே என்னை ஏமாற்றியது கிடையாது. இந்த புத்தகமும் அப்படித்தான். எடுத்த உடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே வாசிப்பில் முடித்து விடலாம். 

1989-ல்  கிழக்கு பெர்லினில் லாரா என்ற பெண் திடீரென்று காணாமல் போய்விடுகிறாள். அவளைத் தேடும்  Bernd Zeiger-ன் கதை தான் இது. இந்த Bernd Zeiger ஒரு stasi போலீஸ் அதிகாரி .பல வருடங்களுக்கு முன் அரசாங்கத்திற்கு எதிராக செய்யப்படுபவர்களை எப்படி demoralize செய்வது பற்றி புத்தகம் எழுதி பெயர் பெற்றவர். லாராவை தேடும் போது அவர் தனது பழைய நினைவுகளுக்குச் செல்கிறார். அவர் திருமணம் ஆகாதவர்.  அவரின் ஒரே நட்பு லாராதான். அவளே அவரின் எண்ணங்களை அக்கிரமித்திருந்தாள். தனிமையின் துயரத்தை மிக நுட்பமாக பல கதாப்பாத்திரங்கள் மூலம் சொல்லிச் செல்கிறார்.  அதுவம் எப்போதும் அரசால் கண்காணிக்கப்படும் தனிமை.

 பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு சென்ற ஜெர்மனிய விஞ்ஞானி Held தேசத் துரோக குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கும் Bernd Zeiger-க்கும் ஒருவிதமான நட்பு உருவாகிறது. உண்மையில் அவர்கள் இருவரும் இரு துருவங்கள். நட்பாக பழகி Held-ஐ ஏமாற்றுகிறார் Zeiger. ஜெர்மனியின் கம்யூனிச அரசின் இறுதி நாட்களில் நடந்த சம்பவங்கள் மிகவும் கொடுமையானது.ஹிட்லர் மேற்கு ஜெர்மனியின் உருவாக்கம் என்று சொல்லியே அரசு மக்களைத் தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.இக்கதையில் அந்த நேரத்தில் மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை ஒரு த்ரில்லர் போல சொல்கிறார் ஜெனிபர்.மனிதர்களை பல இடங்களில் விலங்குகளின் குணங்களை கொண்டு விவரிக்கிறார்.பல இளைஞர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.  திடீரென்று எப்படி பலர் காணாமல் போகிறார்கள் என்பதை எண்ணும் Bernd Zeiger அதற்கும் Held-ற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று சந்தேகப் படுகிறார். சந்தேகத்தை தீர்க்க அவர் செய்யும் செயல்களே கதையின் மீதி. அவர் எழுதியே புத்தகமே அவரை நிலைகுலைய வைக்கிறது.

Bernd Zeiger - dark and haunting. அவர் எப்போதும் சமநிலையில் இல்லமால் இருப்பது போல ஒரு பிம்பம் ஆனால் அவர் அப்படியொன்றும் இல்லை. இக்கதையை ஒரு science fiction என்றும் கூறலாம். ஒரு நாளின் நிகழ்வுகள் மூலம் கதையை நகர்த்தியது இந்த கதைக்கு நல்ல உத்தி. அதனாலேயே வாசகருக்கு ஒருவித பதட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இது மற்ற திரில்லர் மாதிரி இல்லை. ஒரு விதமான dull திரில்லர் (இதுவே ஒரு முரண்பாடு). கிறிஸ்தவ மதத்தின் குறியீடுகள் அங்கங்கே வந்து கொண்டே இருக்கின்றன். நம்பிக்கையையும் ஒருவனின் மனசாட்சிக்கு புறம்பான செயலையும் அது கேள்வி கேட்கிறது. வாசித்து முடித்த பின்னரும் Bernd Zeiger என்னை சுற்றிக் கொண்டே இருக்கிறார்.  நான் அவரிடம் கேள்விகள்  கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

வாசிக்கலாம்.


Monday, February 22, 2021

ரன்னிங் டைரி - 176

22-02-2021 08:30

கிழக்கு கடற்கரை பூங்கா 

கடந்த இரண்டு வாரங்களில் ஐந்து தடவை ஓடினேன். ஆனால் அதைப் பற்றி எழுத முடியாமல் போய்விட்டது . இன்று ஓட ஆரம்பித்தவுடன் "கண்டா வரச் சொல்லுங்க" பாடலை play செய்தேன். அந்த அம்மாளின் குரல் வசீகரமானது.எனக்கு ஏனோ அந்த பாடலின் இசைப் பிடிக்கவில்லை. வீடியோ பார்த்தபோது இருந்த புல்லரிப்பு பாடல் கேட்கும்போது இல்லை.அந்த பாட்டு முடிந்தவுடன் சாருநிவேதிதாவின் தேகம் நாவலின் சிதரவதைக் காட்சிகள் வந்தது. திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது. ச்சே என்ன இது என்று எண்ணி நின்றுவிட்டேன். பீத்தோவனிடம் சரணடைவது என்று முடிவு செய்து ஐந்தாவது சிம்பனியை play செய்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். கவனம் முழுவதும் இசையிலேயே இருந்தது.பீத்தோவனுக்கு நன்றி சொல்லி ஓடி முடித்தேன்.

Monday, February 1, 2021

ரன்னிங் டைரி - 175

01-02-2021 08:50

கிழக்கு கடற்கரை பூங்கா 

நல்ல வெய்யில்.  ஓட ஆரம்பித்ததே சற்று வேகத்துடன் தான். 22 நிமிடத்தில் ஐந்து கிலோமீட்டரை கடந்திருந்தேன். இப்படியே கண்டிப்பாக தூரம் முழுமைக்கும் ஓட முடியாது என்று எனக்குத் தெரியும் அதனால் ஐந்து கிலோமீட்டருக்கு சற்று கூடுதலாக ஓடியவுடன் வேகத்தைக் குறைத்தேன். ஏழு கிலோமீட்டருக்குள் மூச்சு வாங்கியது.மேலும் வேகத்தைக் குறைத்தேன்.எதிரே சென்ற வாரம் பார்த்த தாத்தா ஓடி வந்து கொண்டிருந்தார். நான் கை காட்டினேன். அவரும் அதையே செய்தார். நான் அவரைக் கடந்து சென்றேன்.அப்போதுதான் காதில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கு கவனம் சென்றது "Right Round -Flo Rida" ஓடிக் கொண்டிருந்தது. shuffle-லில் போடும்போது பல மாதங்களுக்கும் மேலாக இந்த பாடல் வந்ததே இல்லை. இன்றுதான் வந்தது. இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் சில வருடங்களுக்கு முன் என்னோடு வேலைப் பார்த்தவர் தான் ஞாபகத்தில் வருவார். அவர்தான் இந்த பாடலை எனக்கு அறிமுகப் படுத்தினார். அவர் இப்போது எங்கு இருக்கிறாரோ என்று எண்ணிக் கொண்டேன்.பாடலில் இருந்து கவனம் எதிரே நடந்து வந்து கொண்டிருந்த இரு இந்தியவர்கள் மீது சென்றது. அவர்கள் சத்தமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு வந்தனர். அதைக் கேட்டவுடன் அரவிந்தன் கண்ணையன் அவர்களின் நேற்றைய முகநூல் பதிவுதான் ஞாபகத்தில் வந்தது. அந்த பதிவு ஒரு வகையான உரையாடலை நடத்திக் கொண்டிருக்கிறது. வீட்டிற்கு சென்று பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டேன். பத்தாவது கிலோமீட்டரிலிருந்து ஓட முடியவில்லை. நடந்தே வீட்டை அடைந்தேன்.

Saturday, January 30, 2021

ரன்னிங் டைரி - 174

30-01-2021 05:20

கிழக்கு கடற்கரை பூங்கா 

இன்று half marathon ஓட வேண்டுமென்று நேற்றே முடிவு செய்திருந்தேன்.அதன்படி இன்று 4:43 மணிக்கே எழுந்து மூன்று பிரட்டுகளும் ஒரு கோப்பை கருப்பு காபி குடித்துவிட்டு போனில் பாட்டை play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன்.குளிர்ந்த காற்று.இரண்டாவது கிலோமீட்டரிலேயே சரியான வேகத்தை அடைந்தேன்.அதே வேகத்தை குறைந்தபட்சம் 15 கிலோமீட்டருக்கு maintain செய்தால் தான் நான் இரண்டு மணிக்குள் ஓடி முடிக்க முடியும் என்று எனக்கு தெரியும் அதனால் பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பனிக்கு playlist-ஐ மாற்றினேன்.எண்ணம் முழுவதும் சிம்பனியில் தான் இருந்தது. பீத்தோவனின் வாழ்க்கை வரலாறு எண்ணத்தில் வந்து வந்து மறைந்தது. 12 கிலோமீட்டர் வரை அதே வேகத்தில் ஓடினேன். அதன் பிறகு வேகம் அதுவாகவே குறைந்தது நான் இந்தமுறை "துள்ளல்" playlist-ஐ shuffle-ல் போட்டேன். முதல் பாடல் "ஆல் தோட்ட பூபதி.." வந்தது மீண்டும் என் வேகம் கூடியது.பாடல்களில் இசைக்கேற்ப என் ஓட்டத்தின் வேகம் முன்னும் பின்னுமாக மாறியது.18-வது கிலோமீட்டரில் வேகம் மிகவும் குறைந்தது ஆனால் நான் நிற்கவில்லை. இன்னும் minimum மூன்று கிலோமீட்டர்கள் ஓட வேண்டும். "Classical shorts" ப்ளயலிஸ்ட்-ஐ ஓடவிட்டேன். Verdi-யின் Aida Triumphal March முதலில் ஒலித்தது.இந்த நேரத்தில் இந்த இசை தேவையானது. புத்துணர்வை கொடுத்தது.வீட்டை அடைந்தபோது சரியாக 1:44 நிமிடங்கள் கடந்திருந்தது. 21 கிலோமீட்டருக்கு மேலாகவே ஓடினேன்... அதிகாலையில்  கிழக்கு கடற்கரை பூங்காவில் ஓடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அமைதியான அழகு! இன்று நிலா மேலும் அழகு. ஓடுபவர்களை விட சைக்கிளில் சென்றவர்கள் அதிகம். சிங்கப்பூரில் நிறைய பேர் சைக்கிள் race சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் .. நல்லது என்று எண்ணிக் கொண்டேன் .

Thursday, January 28, 2021

ரன்னிங் டைரி - 173

28-01-2021 08:25

கிழக்கு கடற்கரை பூங்கா 

குளிர்ந்த காற்று. ஓடுவதற்கு ஏற்ற வானிலை.ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது 10:30 மணிக்குள் அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென்று. சில நிமிடங்களில் சரியான வேகத்தை அடைந்தேன். அதே வேகத்தில் 10 கிலோமீட்டர் ஓடவேண்டுமென்று முடிவு செய்து அப்படியே ஓடினேன்.ஒரே வேகத்தில் ஓடுவது ஒருவிதமான தியானம் போல தினமும் அப்படி அமையாது. இன்று எனக்கு அமைந்தது.முப்பது நிமிடத்திற்குள் ஒன்பது கிலோமீட்டருக்கும் மேலாக ஓடினேன். பிறகு வேகத்தை குறைத்தேன்.ஓடிக் கொண்டிருக்கும் இசையில் எண்ணம் சென்றது Miles Davis-ன்  Kind of Blue" . எனக்கு Miles Davis பற்றி அதிகம் தெரியாது ஆனால் அவரின் இசையை கேட்க கேட்க ஒன்று மட்டும் புரிந்தது அவர் ஒரு மேதை (genius). அவரின் ட்ரம்பெட்டின் இசையில் ஒருவித மேஜிக் இருக்கிறது.கிழக்கு கடற்கரை பூங்காவில் இருந்து வெளியே வந்தவுடன் நான் மீண்டும் வேகத்தைக் கூட்டினேன் .முக்கிய சாலையில் ஒரு விபத்து. இரண்டு கார்கள் மோதிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்தவுடன் நான் நின்று விட்டேன். அங்கிருந்து நடந்து வீட்டை அடைந்தேன்.

டாக்ஸி ஓட்டுனருடன்

 டாக்ஸி ஓட்டுனருடன் 

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று(27-01-2021) அலுவலகத்திற்கு சென்றேன்.மகனுக்கு பள்ளிக்கு நேரம் ஆகியதால் டாக்ஸி பிடித்து சென்றோம். ஓட்டுநர் ஒரு மலாய் சிங்கப்பூரர். என் அப்பாவின் வயதிருக்கும். பயணம் ஆரம்பித்தவுடனேயே ஓட்டுநர் என்னைப் பார்த்து "இந்தியரா?" என்று கேட்டார்."ஆமாம்" என்றேன்."நேற்று இந்திய செய்தி கேட்டிங்களா?" என்று கேட்டார்.நான் "கேட்டேன் ..என்ன ஆச்சு ?" என்றேன். அவர் "நேற்று ஒரு மாஜிஸ்திரேட் ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கிறார் படிச்சிங்களா?" என்று கேட்டார். நான் " அந்த சிறுமியின் sexual assault  case-அ " என்று கேட்டேன். "அவர் "ஆமாம் அது தான்.. அதெப்படி இப்படி தீர்ப்பு சொல்ல முடியும் எனக்கு குழப்பமாக இருக்கு " என்றார்.|எனக்கும் தான்"  என்றேன். "உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கிறதா" என்று கேட்டார். "ஆமாம் என் முதல் பிள்ளை பெண் தான்" என்றேன். "keep her safe and  be careful" என்றார். நான் தலையை ஆட்டினேன். "உங்களுக்கு எப்படி இந்த தீர்ப்பைப் பற்றி தெரியும்" என்று கேட்டேன். அவர் "என் இந்திய நண்பர்கள் கோபத்தோடு என்னிடம் சொன்னார்கள்" என்றார்.

Tuesday, January 26, 2021

ரன்னிங் டைரி - 172

 26-01-2021 08:30

கிழக்கு கடற்கரை பூங்கா 

கடுமையான வெய்யில்.ஓடும் முன் "துள்ளல்" playlist-ஐ play செய்துவிட்டு ஓடினேன்.ஏனென்றால் இந்த வெய்யிலில் நல்ல beat இல்லாமல் ஓடுவது கடினம் . முதலில் வந்த பாடல் "Its a final countdown". இந்த பாடல் சரியான தொடக்க பாடல். பாடல் முடிவதற்கு முன் நான்  ஒரு சரியான வேகத்திற்கு வந்திருந்தேன். இரண்டாவது பாடல் "Its my life" தொடங்கும்போது நான் கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்திருந்தேன்.வெய்யில் சூடு கூடிக் கொண்டே இருந்தது. வெய்யிலின் சூடிற்கும் என் ஓட்டத்தின் வேகத்திற்கும் ஒருவிதமான போட்டி ஆரம்பித்தது. நான் வெய்யில் அடிக்கும் பகுதியில் வேகமாகவும் நிழல் பகுதியில் மெதுவாகவும் ஓடினேன். இப்படியாக முப்பது நிமிடங்கள் ஓடினேன். நின்று "Believer- Imagine Dragons" பாடலை போட்டு விட்டு மீண்டும் ஓட ஆரம்பித்தேன்.ஓடிய சிறிது நேரத்தில் என்னை முந்திக் கொண்டு முதியவர் ஓடினார். நான் அவரைப் பின் தொடர்ந்து கிழக்கு கடற்கரையை விட்டு வெளியேறும் வரை ஓடினேன். அதன் பிறகு வீட்டை நோக்கி ஓடியபோது நண்பன் ஒருவனின் பிறந்தநாள் என்று ஞாபகம் வந்தது.அற்புதமான மனிதன்..இன்று அவனுடன் பேச வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Monday, January 25, 2021

ரன்னிங் டைரி - 171

 25-01-2021 08:40

உபியிலிருந்து வீடுவரை 

இன்று நீண்ட தூரம் ஓடவேண்டுமென்று நினைத்திருந்தேன். அதன்படியே என்னை தயார் செய்து ஓடவும் ஆரம்பித்தேன்.ஒரு சில நிமிடங்களிலேயே சிக்னல் வந்தது. அருகில் நின்றிருந்தவர் கையை கண்முன் அசைத்தார். நான் earpiece-ஐ எடுத்துவிட்டு என்ன என்று கேட்டேன். அவர் "என்ன அண்ணா இன்னக்கி திமுக டிரஸ் போடல ?" நான் சிரித்தேன். "நீங்கதான் அவரா?" என்று அவரைப் பார்த்துக் கேட்டேன்."ஆம" என்றார். சில மாதங்களுக்குக் முன்பு சிவப்பு t-shirt மற்றும் கருப்பு shorts போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தபோது இவர் "நீங்க திமுகவா?" என்று கேட்டார்.இன்று  "கண்ணாடி சூப்பர்ணா .." என்றார்.நான் கண்ணாடியை கழற்றி விட்டு சிரித்தேன். நான் அவரிடம் "தேர்தல் வருது யாருக்கு ஓட்டு போடுவீங்க?" என்று கேட்டேன்."அண்ணண் சீமானிற்கு" என்றார். எனக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை. "இவைங்க ஒழுங்கா ஒரு சின்னம் கொடுத்தா நாங்க நெறைய எடத்தில வின் பண்ணுவோம்" என்றார். நான்  " அவர் நெறைய பொய் சொல்றரே" என்றேன். "அவைங்க சொல்றதெல்லாம் பொய் அண்ணன் பொய் சொல்லமாட்டார்" என்றார். "இந்த தடவ திமுக ஜெயிக்கும் ஆனா நாங்களும் நெறைய எடத்துல வின் பண்ணுவோம்" என்றார். பச்சை விளக்கு எரிந்தவுடன் நான் "சரி பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.நல்ல வெய்யில். நான் அவருடன் நடந்த உரையாடலை நினைத்துக் கொண்டே ஓடினேன்.போன் கால் கவனத்தை திசைத் திருப்பியது.நின்று பேசினேன். கஸ்டமர் ஒருவருக்கு அப்ளிகேசனில் பிரச்னை அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு ஓடி வீட்டிற்கு செல்லும் பேருந்தை பிடித்து வீட்டை அடைந்தேன்.

 


Saturday, January 23, 2021

ரன்னிங் டைரி - 170

 23-01-2021 06:25

கிழக்கு கடற்கரை பூங்கா 

வழக்கத்தைவிட இன்று சற்று தாமதாமாத்தான் ஓட ஆரம்பித்தேன். "பீமிஷா " என்ற வார்த்தைதான் எண்ணத்தில் வந்து கொண்டே இருந்தது . 'பீஷ்மா " என்ற தெலுங்கு திரைப்படத்தின் பெயரை கடந்த சில மாதங்களாக பீமிஷா என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏனோ இந்த வார்த்தை பிடித்துவிட்டது.பாடலில் கவனம் சென்றபோது "அப்பணி தீயணி .." எஸ்பிபியும் ஜானகியும் .. இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் சிரஞ்சீவியின் நடனம் தான் மனதில் வரும்.இன்றும் அதுதான் நடந்தது.எதிரே இரண்டு பெரியவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் நேற்று வாசித்த இரண்டு கட்டுரைகள்தான் எண்ணத்தில் வந்தது. இரண்டும் காந்தியை பற்றியது .. அவரைப் போல ஒருவர் விமர்சிக்கபட்டது கிடையாது என்ற எண்ணம் தான் வந்தது. அவரின் கொள்கைகள் இன்றும் தேவைதான்..கவனம் எதிரே ஓடி வந்து கொண்டிருந்த சட்டை அணியாத ஓடும் குழுவின் மேல் சென்றது. இதுவரை நான் எந்த ஒரு குழுவுடன் சேர்ந்து ஓடியது கிடையாது. ஆனால் ஓடவேண்டுமென்ற ஆசை நான் ஓட ஆரம்பித்ததிலிருந்து இறக்குகிறது. குழுவுடன் ஓடுவது நம் திறனை மேம்படுத்தும். திரும்பி வீட்டிற்கு ஓட ஆரம்பித்தபோது "Fantasy Symphony - Berlioz " -ஐ ஓடவிட்டு என் ஓட்டத்தை தொடர்ந்தேன் ..வீட்டை அடையும் வரை Berlioz என்னை தன் இசையின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

ரன்னிங் டைரி - 169

 21-01-2021 16:30

தஞ்சோங் கத்தோங் -உபி வரை 

நல்ல வெய்யில். ஓட ஆரம்பித்தபோது எண்ணத்தில் வந்தது "faith begins precisely where thinking leaves off" என்று வாக்கியம் தான். இந்த வாக்கியம் "Fear and Trembling -Soren Kierkegaard' புத்தகத்தில் உள்ளது. இன்று காலையில் சில பக்கங்களைப் படித்தேன்.முழுவதையும் படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.சென்ற வருடம் வாசிக்க  நினைத்து வாசிக்காத புத்தங்கள் ஒவ்வொன்றும் மனதில் தோன்றின.Oliver Sacks-ன் Musciophilia இந்த வருடம் கண்டிப்பாக வாசிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.கவனம் ஓடிக் கொண்டிருந்த பாடலுக்கு சென்ற போது எரிக் கிளாப்டன் "Cocoine" பாடிக் கொண்டிருந்தார். பாடல் முடியும் முன் உபியில் இருந்தேன். 

Wednesday, January 20, 2021

ரன்னிங் டைரி - 168

 19-01-2021 08:28

தஞ்சோங் கத்தோங் ரோடு - கிழக்கு கடற்கரை பூங்கா

நான்கு நாட்கள் கடுமையான வேலை. சரியாக தூங்கவில்லை அதனால் ஓடவும் இல்லை. நேற்று இரவு நான்றாக தூங்கினேன். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது  அர்னாப் கோஸ்வாமிக்கும் பார்த்தோ தாஸ்குப்தாவிற்கும் இடையே நடந்த வாட்சப் குறுஞ்செய்திகள் தான். அர்னாப்பை யாரும் கேள்விக் கேட்டமாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.கடற்கரையை அடைந்தபோது ஓடிக் கொண்டிருந்த பாடலுக்கு கவனம் சென்றது. "ஒரு ஜீவன் அழைத்து" என்று இளையராஜா பாடிக் கொண்டிருந்தார். இந்த பாடலிலும் பின்னணி இசை ஒரு மினி சிம்பனி. யாராவது இளையராஜாவின் பாடல்களின் பின்னணி இசையை ஒன்று சேர்த்து ஒரு சிம்பனி உருவாக்கமாட்டார்களா என்று எண்ணிக் கொண்டேன்.சற்று தூரம் சென்றவுடன் இரு பாட்டிகள்  ஒரு நீளப் பலகையின் மேல் "tap dance" ஆடிக் கொண்டிருந்தனர். மிக மெதுவாக ஆனால் இருவரும் தங்களின் ஷுக்களால் ஒரே போல ஒலி எழுப்பினர். நான் ஓடுவதை நிறுத்திவிட்டு அருகில் நின்று அவர்கள் ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்."slowness has its own beauty .." என்று எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்தது.அழகு ! மீண்டும் ஓட அரம்பித்தபோது சித்ரா "கண்ணாளனே.." என்று உருகிக்கொண்டிருந்தார்.எதிரே ஒருவர் வெகுவிரைவாக ஓடி வந்து கொண்டிருந்தார்.அவரது ஒவ்வொரு steps-ம் அழகு. சிலருக்கே அப்படி அமையும். Eluid Kipchoge ஓடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நான் ஓடுவதை நான் வீடியோவில் கூட பார்த்ததில்லை.திரும்பி வீட்டிற்கு ஓட ஆரம்பித்தபோது கடுமையான வெய்யில். என்னை முந்திக் கொண்டு ஒருவர் ஓடினர் அவரைப் பின் தொடர்ந்து கிழக்கு கடற்கரையை விட்டு வெளியே வரும்வரை ஓடினேன். அதன் பிறகு மெதுவாக ஓடி வீட்டை அடைந்தேன்.

Tuesday, January 19, 2021

ரன்னிங் டைரி - 167

 14-01-2021 08:30

தஞ்சோங் கத்தோங் ரோடு - கிழக்கு கடற்கரை பூங்கா 

இன்று இருபது நிமிடமே ஓட முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன். பல மாதங்களுக்குப் பிறகு இன்று ரவி சங்கர் மற்றும் பிலிப் கிளாஸ் இருவரின் இசை தொகுப்பான "Passages" இருந்து "Ragas in minor scale" என்ற இசை கோர்வையை play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன்.  ஏனோ இந்த இசை எப்போது கேட்டாலும் என்னை மெய்மறக்கச் செய்யும் .இன்றும் அதுதான் நடந்தது மெய்மறந்து ஓடினேன்.இரண்டு முறை ஓடவிட்டு கேட்டுக் கொண்டே ஓடி வீட்டை அடைந்தேன்.


Wednesday, January 13, 2021

ரன்னிங் டைரி - 166

 13-01-2021 08:55

உபியிலிருந்து மெரின் பரேட் -தஞ்சோங் கத்தோங் ரோடு 

மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று தான் காலையில் கடுமையாக மழை பெய்யவில்லை. நான் ஓட ஆரம்பித்தபோது மழைத் தூறியது. மெதுவாக ஓட ஆரம்பித்தேன். கவனம் முழுவதும் பாதையிலேயே இருந்தது. எங்கே வழுக்கி விழுந்துவிடுவோமே என்று எண்ணிக் கொண்டே ஓடினேன்.யூனுஸ் ரயில் நிலையம் அருகில் வந்தவுடன் மெரின் பரேட் செல்லலாம் என்று முடிவு செய்து அந்த பாதையில் ஓடினேன்.கவனம் ஓடிக் கொண்டிருந்த பாடலுக்கு சென்றபோது அங்கு எஸ்பிபி "பொத்தி வச்ச மளிகை .." பாடிக் கொண்டிருந்தார். இந்த பாடலும் இளையராஜாவின் மேன்மையைக் காட்டும் அற்புதமான பாடல். இந்த பாடலின் பின்னணி இசையை என்னவென்று சொல்வது! பாடல் முடிந்ததும் "Classical Shorts" playlist-ஐ ஓட செய்தேன். முதலில் வந்தது Khachaturian's Sabre dance கோர்வை தான்.ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது கடந்த வாரம் நடந்த நிகழ்வுதான். என் மகளுக்கு இந்த இசைக் கோர்வையை அறிமுகப்படுத்தினேன். எனக்கு இந்த இசை அவளுக்கு பிடிக்குமா என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. காதில் earpiece வைத்து play செய்தவுடன் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள் கைகளை இசைக்கு ஏற்றாற்போல் அசைக்க ஆரம்பித்தாள். முடிந்தவுடன் அவளிடம் பிடித்திருந்ததா என்று கேட்டேன். "i loved it" என்றாள். எனக்கு பெரும் மகிழ்ச்சி. மற்ற சிம்பனி இசை தொகுப்புக்களையும் அவளுக்கு அறிமுகப் படுத்த வேண்டுமென்று எண்ணிக் கொண்டே மனதில் ஒரு நீள பட்டையலைத் தயாரித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Saturday, January 9, 2021

ரன்னிங் டைரி - 165

 09-01-2021 15:00

கேலாங் கிழக்கு பூங்கா 

மகளை நீச்சல் பயிற்சி பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன்.  எந்த பக்கம் செல்ல வேண்டுமென்று என்று முடிவு செய்யாமலேயே ஓட ஆரம்பித்தேன். குறைந்த தூரம் ஆனால் வேகமாக ஓட வேண்டும் என்று முடிவு செய்தேன். "மாங்குயிலே பூங்குயிலே" என்று எஸ்பிபி ஆரம்பித்தார். இன்று இந்த பாடலின் தொடக்க  இசையைக் கேட்கும்போது என்னியோ மோரிகோன் (Ennio Morricone )எண்ணத்தில் வந்தார்.நேற்று அவரைப் பற்றி ஒரு கட்டுரை படித்தேன் அதில் அவர் ஒரு திரைப்படத்திற்கு முழு இசையையும் அவரே கையால் எழுதுவார் என்று குறிப்பிட்டிருந்தது. இளையராஜாவும் அப்படியே செய்யவார் என்றும் வாசித்திருக்கிறேன். இந்த பாடலின் இசையையும் "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது" பாடலின் இசையையும் ஒன்று சேர்த்தால் ஒரு நல்ல சிம்பனி இசை கோர்வை  வருமென்று எண்ணிக் கொண்டே ஓடி முடித்தேன்.

Friday, January 8, 2021

ரன்னிங் டைரி - 164

 07-01-2021 8:30

தஞ்சோங் கத்தோங் ரோடு - கிழக்கு கடற்கரை பூங்கா 

மழை மேகம்.ஓட ஆரம்பித்த உடனே எண்ணத்தில் தோன்றியது அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் கலவரம்தான்.ஜனவரி 21-ம் தேதிக்கு முன் ஏதோ ஒன்று பெரிதாக நடக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் இப்படி நடக்கும் என்று கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை.steve Bannon முகம் வந்து போனது.இன்னும் என்ன நடக்குமோ? என்று எண்ணிக் கொண்டேன். மாணவர்கள் கடற்கரையை சுத்தம் செய்து  கொண்டு இருந்தனர். கடற்கரையில் கூட்டம் அதிமாகிக் கொண்டே இருக்கிறது என்று எண்ணம் தோன்றியது. வெளிநாட்டவர்களே அதிகம் தெரிகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.சாரல் அடிக்க ஆரம்பித்தது. நான் துள்ளல் playlist-ஐ துள்ளல் தெரிவுசெய்து விட்டு வேகமாக ஓட ஆரம்பித்தேன்.முந்தா நேற்று பார்த்த பெரியவர் எதிரே ஓடி வந்து கொண்டிருந்தார். கை காட்டி சிரித்தேன் அவரும் கை காட்டி சிரித்து விட்டு என்னைக் கடந்து சென்றார்.போன் அலறியது. வாடிக்கையாளர் ஒருவர் application-ல் ஒரு சிறிய பிரச்னை என்று whatsapp செய்தி அனுப்பியிருந்தார்.ஓடிக் கொண்டே நான் அதைப் படித்தேன் .நான் பதில் அனுப்பவில்லை. எண்ணத்தில் இன்று செய்யவேண்டிய பணிகள் அனைத்தும் வந்தது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எப்போதும் வேலை அதிகமா இருக்கும். இன்றும் அப்படிதான் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, January 6, 2021

ரன்னிங் டைரி - 163

06-01-2021 8:31

உபியிலிருந்து வீடுவரை 

மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்த உடனேயே நான் படித்துக் கொண்டிருக்கும் " Hacking Darwin - Jamie Metzl " புத்தகம்தான் எண்ணத்தில் தோன்றியது. அதற்கு காரணம் அந்த பள்ளியில் சிறுவர்கள் சிறுமியர்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக எனக்கு தோன்றியது. இந்த புத்தகம் அடுத்த 20-25 வருடங்களில் உயிரியலில் நடக்க இருக்கும் முன்னேற்றங்களைப் பற்றி பேசுகிறது. அதுவும் குழந்தைப் பிறப்பைப் பற்றி விரிவாக பேசுகிறது. இதுவரை படித்ததே கண்னை கட்டுகிறது. சிக்னலின் சிவப்பு விளக்கு  என்னை ஓடிக் கொண்டிருக்கும் பாடலுக்குச் கவனத்தை இட்டுச் சென்றது . எஸ்பிபி   "காதல் மகாராணி" பாடிக் கொண்டிருந்தார்.என்ன பீட் !ஏனோ சிறு வயதில் கேட்ட  "Drum Beat" என்ற ஆல்பம் ஞாபகத்தில் வந்தது. முதல் சிக்னலைக் கடந்தவுடன் அடுத்த சில நொடிகளில் இரண்டாவது நிறுத்தம். நின்றேன். மீண்டும் ஓட ஆரம்பித்தபோது எண்ணத்தில்  Willaim Carlos Williams எழுதிய " The Red Wheelbarrow "  என்ற கவிதை வந்தது. சம்பந்தமே இல்லாமல் இந்த கவிதை ஏன் எண்ணத்தில் வந்ததென்று தெரியவில்லை. கவிதையை இருமுறை சொல்லிப் பார்த்தேன்.இப்போது வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கிறது.யூனோஸ் பேருந்து நிலைய food court-ல் நின்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் ஓட ஆரம்பித்தேன். அந்த வளைவில் திரும்பும்போது கேன் வில்லியம்சன் எண்ணத்தில் வந்தார். அவரின் பேட்டிங்கை கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பார்த்தேன். சமீபத்தில் நான் மிகவும் ரசித்த பேட்டிங் இவருடையது தான். கிரிக்கெட் வீரர்களுக்கு இவர் ஒரு முன்மாதிரி. இன்று அவர்கள் பாகிஸ்தானை ஆல் அவுட் செய்வார்கள் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Tuesday, January 5, 2021

ரன்னிங் டைரி - 162

 05-01-2021 8:31

தஞ்சோங் காத்தோங் ரோடு - கிழக்கு கடற்கரை பூங்கா 

கடுமையான வெய்யில்.தொடக்கத்திலேயே வேகமா ஓட ஆரம்பித்தேன்.எண்ணம் முழுவதும் கிழக்கு கடற்கரை பூங்காவை விரைவில் அடைவதிலேயே இருந்தது.பூங்காவை அடைந்தபோது குளிர்ந்த காற்று என்னை வரவேற்றது.கடற்கரையில் சிலர் குப்பைகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு காலை வணக்கத்தை சொல்லிக் கொண்டே ஓடினேன்.  எனக்கு முன் நேற்று பார்த்த பெரியவர் ஓடிக் கொண்டிருந்தார். அவரைத் கடந்து சென்றபோது திரும்பி தலையை ஆட்டினேன். அவரும் பதிலுக்கு தலையை ஆட்டினார்.கவனம் ஓடிக் கொண்டிருந்த பாடலில் சென்றது. எஸ்பிபி "பனி விழும் மலர்வனம்" பாடிக் கொண்டிருந்தார்.பாடலில் இருந்து எண்ணம் நேற்று  ஜாக் மா  பற்றி படித்த கட்டுரைக்கு சென்றது. எண்ணம் மீண்டும் ஓடிக் கொண்டிருந்த பாடலுக்கு சென்றபோது ஹரிஹரன் "என்னை தாலாட்ட வருவாளா " என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் தூத்துக்குடியில் "காதலுக்கு மரியாதை"  படம் பார்த்த சம்பவம் தான் ஞாபத்தில் வரும்.  இன்றும் அதுதான் ஞாபகத்தில் வந்தது . சிரித்துக் கொண்டே ஓடினேன். பத்து கிலோமீட்டரை அடைந்தவுடன் போனில் "துள்ளல்" playlist-ஐ தேர்வு செய்து shuffle-லில் ஓட விட்டேன்.  முதலில் ஒலித்தத்து "நக்கீலீசு கொலுசு (Nakkileesu Golusu )" பாடல். ஓடும் வேகம் என்னை அறியாமலேயே இந்த பாடல்களைக் கேட்டால் கூடும். இன்றும் அது தான் நடந்தது. பாடல்களில் கவனத்தை செலுத்திக் கொண்டே வேகமாக ஓடி வீட்டை அடைந்தேன்.

Monday, January 4, 2021

ரன்னிங் டைரி - 161

04-01-2021 8:30

தஞ்சோங் காத்தோங் ரோடு - மவுண்ட் பேட்டன் ரோடு - கிழக்கு கடற்கரை பூங்கா 

குளிர் காற்று. மூன்று நாட்களுக்குப் பிறகு சற்று வெய்யில் அடித்தது ஆனால் எனக்கு குளிராகத்தான் இருந்தது.ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது முகநூலில்  நடக்கும்  "இளையராஜாவா ரஹ்மானா?" விவாதம்தான். எனக்கு இளையராஜாவின் இசைப் பிடிக்கும். இதுவரை என் வாழ்நாட்களில் அதிகம் கேட்டது அவரது இசையைத் தான். அதிலும் இந்த பத்து வருடங்களில் மேகத்திய கிளாசிக்கல் இசை குறிப்பாக பீத்தோவனின் இசையைக் கேட்க ஆரம்பித்தப் பிறகு இளையராஜாவின் இசையை என்னால் மேலும் ரசிக்க முடிகிறது.  அதற்காக ரஹ்மானின் இசை குறைவானது என்று என்றுமே நான் சொன்னதில்லை சொல்லப்போவதும் இல்லை. என் வாழ்வில் மறக்க முடியாத துயரமான  இரவில் ரஹ்மானின் இசை தான் என்னோடு எனக்கு ஆறுதலாக இருந்தது. எதிரே ஓடி வருபவர் கை காட்டினார் கவனம் இசையில் இருந்து அவருக்கு சென்றது. ஊற்று நோக்கினேன் அவர் நான் செல்லும் கோவிலின் பங்குதந்தை. "Good morning father" என்றேன். அவரும்  "Good morning, happy new year" என்றார். சற்று வேகமாக ஓடுவது போல் தோன்றியது. அப்போதுதான் கவனித்தேன் பத்து நிமிடத்திற்குள் கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்திருந்தேன். வேகத்தை குறைத்தேன். கவனத்தை மூச்சில் கொண்டு நிறுத்தினேன். வழக்கம் போல் சற்று நேரம்தான் அதை செய்ய முடிந்தது. எண்ணம் முழுவதும் வாக்மேனில் ஓடிக் கொண்டிருக்கும் பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பனிக்கு சென்றது. என்ன செய்தாலும் எங்கு சென்றாலும் இந்த சிம்பனியை கேட்காவிட்டால் ஏதோ மாதிரி ஆகிவிடுகிறது. அப்போதுதான் முதல் movement ஆரம்பித்திருந்தது. என்னத்த சொல்ல! வலது பக்கத்தில் நீலக் கடல் காதில் பீத்தோவன், இதற்கு மேல் என்ன வேண்டும். பத்து கிலோமீட்டர் ஓட முடிவு செய்திருந்தேன். ஆனால் இசையின் உந்துததால் பதினான்கு கிலோமீட்டர் ஓடி வீடு திரும்பினேன்.

Saturday, January 2, 2021

வாசித்த புத்தகங்கள் -2020

வாசித்த புத்தகங்கள் -2020

 1.The Outsider - Albert Camus

2.The Plague - Albert Camus

3.இச்சா  - ஷோபா சக்தி 

4.பேய்ச்சி - நவீன் 

5.If Cats Disappeared From The World - Genki Kawamura

6.The Brothers Karamazov - Fyodor Dostoevsky

7.The Wanderers - Meg Howrey

8.தீம்புனல் -கார்ல் மார்க்ஸ் 

9.தேகம் - சாரு நிவேதிதா 

10.The Divine Comedy - Dante (Re-read)

11.The Ninth: Beethoven - Harvey Sachs

12. The RSS - Walter R Anderson & Shridhar D. Damle

13. Snow Hunters - Paul Yoon

14.புகை நடுவில்  - கிருத்திகா  

15.Pops - Michael Chabon

16.Narrow Road To The Interior - Basho

17.Time Travel - James Gleick

18.All My Cats - Bohumil Hrabal

19.சிங்கடி முங்கன் - வைக்கம் முகம்மது பஷீர் 

20.எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - வைக்கம் முகம்மது பஷீர் 

21. எட்றா வண்டியெ - வா.மு. கோமு 

22.How to stay sane in an age of division - Elif Shafak 

23. தூர்வை - சோ. தர்மன் 

24.நீலகண்டம் - சுனில் கிருஷ்ணன் 

25. காதல் கடிதம்  - வைக்கம் முகம்மது பஷீர் 

26.சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன் 

27. துறைவன் - கிறிஸ்டோபர் ஆன்றணி 

28.நான்காம் சுவர் - பாக்கியம் சங்கர் 

29.வேனல் - கலாப்ரியா 

30.அலை வரிசை  -ம.காமுத்துரை 

31.ஏந்திழை - ஆத்மார்த்தி 

32.தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்  - சாதனா 

33.Sabrina - Nick Drnaso

34.வரப்புகள் - பூமணி 

35.Blue Mind - Wallace J. Nichols

36.A Little History Of Economics - Niall Kishtainy

37.The Age of Surveillance Capitalism - Shoshana Zuboff

38.Selected Poems - Derek Wallcott

49.சுளுந்தீ - முத்துநாகு 

50.பட்டக்காடு  - அமலராஜ் பிரான்சிஸ் 

51. கடலெனும் வசீகர மீன்தொட்டி - சுபா செந்தில்குமார் 

52.Twilight of Democracy - Anne Appleebaum

53.The Jungle Grows Back - Robert Kagan

54.The World : A Brief Introduction - Richard Hass

55.The complete poetry Maya Angelou

56. The Twenty-Six Words That Created The Internet - Jeff Kosseff

57.Aphorisms- Kafka

58.Entangled Life - Merlin Sheldrake

59.Discovering Pope Francis:The Roots Of Jorge Mario Bergoglio's Thinking - Brian Lee, Thomas L.Knoebel

60.கரமுண்டார் வூடு - தஞ்சை பிரகாஷ் 

61. A Hero Born - Jin Yong

62.Miyazaki World : A Life In Art - Susan Napier

63.How Democracy Ends -  David Runciman

64. 1975 - இரா.முருகன் 

65.How Democracry Die - Steven Levitsky and Daniel Ziblatt

66.By Heart 101 Poems to Remember

67.இரண்டாம் இடம் - எம் டி வாசுதேவன் நாயர் 

68.Gratitude - Oliver Sacks