09-01-2021 15:00
கேலாங் கிழக்கு பூங்கா
மகளை நீச்சல் பயிற்சி பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன். எந்த பக்கம் செல்ல வேண்டுமென்று என்று முடிவு செய்யாமலேயே ஓட ஆரம்பித்தேன். குறைந்த தூரம் ஆனால் வேகமாக ஓட வேண்டும் என்று முடிவு செய்தேன். "மாங்குயிலே பூங்குயிலே" என்று எஸ்பிபி ஆரம்பித்தார். இன்று இந்த பாடலின் தொடக்க இசையைக் கேட்கும்போது என்னியோ மோரிகோன் (Ennio Morricone )எண்ணத்தில் வந்தார்.நேற்று அவரைப் பற்றி ஒரு கட்டுரை படித்தேன் அதில் அவர் ஒரு திரைப்படத்திற்கு முழு இசையையும் அவரே கையால் எழுதுவார் என்று குறிப்பிட்டிருந்தது. இளையராஜாவும் அப்படியே செய்யவார் என்றும் வாசித்திருக்கிறேன். இந்த பாடலின் இசையையும் "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது" பாடலின் இசையையும் ஒன்று சேர்த்தால் ஒரு நல்ல சிம்பனி இசை கோர்வை வருமென்று எண்ணிக் கொண்டே ஓடி முடித்தேன்.
No comments:
Post a Comment