19-01-2021 08:28
தஞ்சோங் கத்தோங் ரோடு - கிழக்கு கடற்கரை பூங்கா
நான்கு நாட்கள் கடுமையான வேலை. சரியாக தூங்கவில்லை அதனால் ஓடவும் இல்லை. நேற்று இரவு நான்றாக தூங்கினேன். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது அர்னாப் கோஸ்வாமிக்கும் பார்த்தோ தாஸ்குப்தாவிற்கும் இடையே நடந்த வாட்சப் குறுஞ்செய்திகள் தான். அர்னாப்பை யாரும் கேள்விக் கேட்டமாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.கடற்கரையை அடைந்தபோது ஓடிக் கொண்டிருந்த பாடலுக்கு கவனம் சென்றது. "ஒரு ஜீவன் அழைத்து" என்று இளையராஜா பாடிக் கொண்டிருந்தார். இந்த பாடலிலும் பின்னணி இசை ஒரு மினி சிம்பனி. யாராவது இளையராஜாவின் பாடல்களின் பின்னணி இசையை ஒன்று சேர்த்து ஒரு சிம்பனி உருவாக்கமாட்டார்களா என்று எண்ணிக் கொண்டேன்.சற்று தூரம் சென்றவுடன் இரு பாட்டிகள் ஒரு நீளப் பலகையின் மேல் "tap dance" ஆடிக் கொண்டிருந்தனர். மிக மெதுவாக ஆனால் இருவரும் தங்களின் ஷுக்களால் ஒரே போல ஒலி எழுப்பினர். நான் ஓடுவதை நிறுத்திவிட்டு அருகில் நின்று அவர்கள் ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்."slowness has its own beauty .." என்று எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்தது.அழகு ! மீண்டும் ஓட அரம்பித்தபோது சித்ரா "கண்ணாளனே.." என்று உருகிக்கொண்டிருந்தார்.எதிரே ஒருவர் வெகுவிரைவாக ஓடி வந்து கொண்டிருந்தார்.அவரது ஒவ்வொரு steps-ம் அழகு. சிலருக்கே அப்படி அமையும். Eluid Kipchoge ஓடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நான் ஓடுவதை நான் வீடியோவில் கூட பார்த்ததில்லை.திரும்பி வீட்டிற்கு ஓட ஆரம்பித்தபோது கடுமையான வெய்யில். என்னை முந்திக் கொண்டு ஒருவர் ஓடினர் அவரைப் பின் தொடர்ந்து கிழக்கு கடற்கரையை விட்டு வெளியே வரும்வரை ஓடினேன். அதன் பிறகு மெதுவாக ஓடி வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment