05-01-2021 8:31
தஞ்சோங் காத்தோங் ரோடு - கிழக்கு கடற்கரை பூங்கா
கடுமையான வெய்யில்.தொடக்கத்திலேயே வேகமா ஓட ஆரம்பித்தேன்.எண்ணம் முழுவதும் கிழக்கு கடற்கரை பூங்காவை விரைவில் அடைவதிலேயே இருந்தது.பூங்காவை அடைந்தபோது குளிர்ந்த காற்று என்னை வரவேற்றது.கடற்கரையில் சிலர் குப்பைகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு காலை வணக்கத்தை சொல்லிக் கொண்டே ஓடினேன். எனக்கு முன் நேற்று பார்த்த பெரியவர் ஓடிக் கொண்டிருந்தார். அவரைத் கடந்து சென்றபோது திரும்பி தலையை ஆட்டினேன். அவரும் பதிலுக்கு தலையை ஆட்டினார்.கவனம் ஓடிக் கொண்டிருந்த பாடலில் சென்றது. எஸ்பிபி "பனி விழும் மலர்வனம்" பாடிக் கொண்டிருந்தார்.பாடலில் இருந்து எண்ணம் நேற்று ஜாக் மா பற்றி படித்த கட்டுரைக்கு சென்றது. எண்ணம் மீண்டும் ஓடிக் கொண்டிருந்த பாடலுக்கு சென்றபோது ஹரிஹரன் "என்னை தாலாட்ட வருவாளா " என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் தூத்துக்குடியில் "காதலுக்கு மரியாதை" படம் பார்த்த சம்பவம் தான் ஞாபத்தில் வரும். இன்றும் அதுதான் ஞாபகத்தில் வந்தது . சிரித்துக் கொண்டே ஓடினேன். பத்து கிலோமீட்டரை அடைந்தவுடன் போனில் "துள்ளல்" playlist-ஐ தேர்வு செய்து shuffle-லில் ஓட விட்டேன். முதலில் ஒலித்தத்து "நக்கீலீசு கொலுசு (Nakkileesu Golusu )" பாடல். ஓடும் வேகம் என்னை அறியாமலேயே இந்த பாடல்களைக் கேட்டால் கூடும். இன்றும் அது தான் நடந்தது. பாடல்களில் கவனத்தை செலுத்திக் கொண்டே வேகமாக ஓடி வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment