30-01-2021 05:20
கிழக்கு கடற்கரை பூங்கா
இன்று half marathon ஓட வேண்டுமென்று நேற்றே முடிவு செய்திருந்தேன்.அதன்படி இன்று 4:43 மணிக்கே எழுந்து மூன்று பிரட்டுகளும் ஒரு கோப்பை கருப்பு காபி குடித்துவிட்டு போனில் பாட்டை play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன்.குளிர்ந்த காற்று.இரண்டாவது கிலோமீட்டரிலேயே சரியான வேகத்தை அடைந்தேன்.அதே வேகத்தை குறைந்தபட்சம் 15 கிலோமீட்டருக்கு maintain செய்தால் தான் நான் இரண்டு மணிக்குள் ஓடி முடிக்க முடியும் என்று எனக்கு தெரியும் அதனால் பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பனிக்கு playlist-ஐ மாற்றினேன்.எண்ணம் முழுவதும் சிம்பனியில் தான் இருந்தது. பீத்தோவனின் வாழ்க்கை வரலாறு எண்ணத்தில் வந்து வந்து மறைந்தது. 12 கிலோமீட்டர் வரை அதே வேகத்தில் ஓடினேன். அதன் பிறகு வேகம் அதுவாகவே குறைந்தது நான் இந்தமுறை "துள்ளல்" playlist-ஐ shuffle-ல் போட்டேன். முதல் பாடல் "ஆல் தோட்ட பூபதி.." வந்தது மீண்டும் என் வேகம் கூடியது.பாடல்களில் இசைக்கேற்ப என் ஓட்டத்தின் வேகம் முன்னும் பின்னுமாக மாறியது.18-வது கிலோமீட்டரில் வேகம் மிகவும் குறைந்தது ஆனால் நான் நிற்கவில்லை. இன்னும் minimum மூன்று கிலோமீட்டர்கள் ஓட வேண்டும். "Classical shorts" ப்ளயலிஸ்ட்-ஐ ஓடவிட்டேன். Verdi-யின் Aida Triumphal March முதலில் ஒலித்தது.இந்த நேரத்தில் இந்த இசை தேவையானது. புத்துணர்வை கொடுத்தது.வீட்டை அடைந்தபோது சரியாக 1:44 நிமிடங்கள் கடந்திருந்தது. 21 கிலோமீட்டருக்கு மேலாகவே ஓடினேன்... அதிகாலையில் கிழக்கு கடற்கரை பூங்காவில் ஓடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அமைதியான அழகு! இன்று நிலா மேலும் அழகு. ஓடுபவர்களை விட சைக்கிளில் சென்றவர்கள் அதிகம். சிங்கப்பூரில் நிறைய பேர் சைக்கிள் race சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் .. நல்லது என்று எண்ணிக் கொண்டேன் .