29-03-2021 08:37
கிழக்கு கடற்கரை பூங்கா
மொசார்டின் 41வது சிம்பனியை play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன். கவனம் முழுவதும் இசையில்தான் இருந்தது. பத்து கிலோமீட்டர் ஓடியதே தெரியவில்லை. இந்த சிம்பனியைப் பற்றி என்னத்த சொல்ல .. just amazing .. முக்கிய சாலையை அடைந்தபோது வயதான இந்திய தம்பதியர் என்னை நோக்கி கைகாட்டினார். நான் earpiece-ஐ காதுகளிலிருந்து எடுத்துவிட்டு அவர்களை நோக்கிச் ஓடினேன். அந்த தாத்தா ஆங்கிலத்தில் "கிழக்கு கடற்கரை பூங்காவிற்கு எந்த வழியில் செல்ல வேண்டும் " என்று கேட்டார். நான் வழியைக் காட்டினேன். "நன்றி " என்றார். " கடற்கரை நல்ல இருக்குமா?" என்று கேட்டார். உடனே நான் ஒரு சிறிய உரையை நிகழ்த்தினேன். அவர்கள் பொறுமையாய் கேட்டுவிட்டு."நான் நீங்கள் இந்தியர் என்று நினைத்தேன். இவ்வளவு விசயங்களை கடற்கரைப் பற்றி சொல்கிறீர்கள்" என்றார். நான் "நான் "இந்தியர் தான் . இந்த கடற்கரைக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வருகிறேன்." என்றேன். "சரி வருகிறோம்" என்று சொல்லிவிட்டு கடற்கரையை நோக்கி நடந்தார்கள். நான் நடந்து வீட்டை அடைத்தேன்.
2 comments:
அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை மேலும் பதிவிட நான் உங்களை வேண்டுகிறேன்.
உடனுக்குடனான செய்திகளை நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் காண https://newstamil25.blogspot.com/ என்ற பக்கத்திற்கு வாருங்கள் , நன்றி
அருமை...
"ரன்னிங் டைரி"
https://www.scientificjudgment.com
Post a Comment