02-03-2021 08:30
கிழக்கு கடற்கரை பூங்கா
இன்று குறைந்த தூரம்தான் ஓட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். அதனால் சற்று வேகத்துடன் ஓட ஆரம்பித்தேன், இன்று T.S Eliot எழுதிய "Ash Wednesday" என்ற கவிதையைச் சொல்லிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். நேற்றுப் போல இன்றும் கவிதை முழுவதுமாக நினைவில் வரவில்லை. இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கவிதையை முதன் முதலில் கோயம்பத்தூரில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் ஒரு பாதிரியார் சொல்லத்தான் கேட்டேன். அவர் இந்த கவிதையை ரசித்து உருகிச் சொன்னார். அவர் சொன்ன இந்த கவிதை சரியா தவறா என்று கூட எனக்குத் தெரியாது ஆனால் அவர் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. மூன்று கிலோமீட்டர்கள் ஓடிய பிறகு போனில் 'mixed songs' playlist-ஐ play செய்தேன். "ஆசிச்சவன் ஆகாயத்தில்' என்று சூர்யா (மலையாள நடிகர்) பாடிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல் முடிந்தவுடன் பாடல்களை முழுவதும் நிறுத்திவிட்டு ஓடினேன். ஏனோ பாடல்கள் கேட்க விருப்பம் இல்லாமல் போனது.வீட்டிற்கு செல்ல இன்னும் ஏழு கிலோமீட்டர்கள் ஓட வேண்டும். மனதில் எதுவுமே தோன்றவில்லை ஒருவிதமான சோர்வு ஒட்டிக்கொண்டது. மெதுவாக ஓடி வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment