27-02-2021 05:45
கிழக்கு கடற்கரை பூங்கா
வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் என்னை சுண்டி இழுத்தது எதிரே தங்க நிறத்தில் இருந்த நிலாதான். எண்ணத்தில் வந்தது நேற்று வாசித்த ஜி.கனிமொழியின் "இந்த நிலவு...." கவிதைதான். சொல்லிப் பார்த்தேன் முதல் இரண்டு அடிகள்தான் ஞாபகத்தில் வந்தது.
'இந்த நிலவு ஏனிப்படி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
இந்த நிலவு ஏனிப்படி அகண்டிருக்கிறது '
ஐந்து நிமிடம் நின்று நிலாவைப் பார்த்தவிட்டு ஓட ஆரம்பித்தேன். நிலாவைப் பற்றிய வேறேதும் தமிழ் கவிதைகள் இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டே ஓடினேன். எனக்கு எந்த கவிதையும் ஞாபகத்தில் வரவில்லை. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது கவனம் ஓடிக் கொண்டிருந்த மூவரின் மேல் சென்றது. மூவரையும் பல பந்தயங்களில் பார்த்திருக்கிறேன். சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தனர் .நான் அவர்களைத் தொடர முடிவு செய்து ஓடினேன். கவனம் முழுவதும் அவர்களின் கால்களில் தான் இருந்தது. அவர்களுடனே பன்னிரெண்டு கிலோமீட்டர் ஓடினேன். அதன் பிறகு அவர்களை முந்திச் சென்று ஒரு கிலோமீட்டர் ஓடினேன்.அதன் பிறகு நான் நிற்றுவிட்டேன் அவர்கள் சிறிது நேரத்தில் என்னைக் கடந்து சென்றபோது கைகாட்டி "well done" என்றார்கள். நானும் கைகாட்டிச் சிரித்தேன். இரண்டு கிலோமீட்டர்கள் நடந்து வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment