Wednesday, August 15, 2018

Bullfight - Yasushi Inoue


இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் நடக்கும் கதை. அந்தப் போரால் ஜப்பான் பெரும் அழிவைப் பெற்றது. எங்கும் இடிந்த மற்றும் சிதைந்த கட்டங்கள். நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை தலைகீழானது. இந்த சூழ்நிலையில்தான் சுகமி ஒரு பத்திரிக்கைக்கு எடிட்டராக பொறுப்பேற்கிறான். சுகமி திருமணமானவன் குழந்தைகளையும் மனைவியையும் போர் பாதுகாப்பிற்க்காக வேறு இடத்தில் தங்கவைத்துள்ளான். ஒரு நாள்  தாஷிரோ என்பவன் சுகமியிடம் காளை சண்டை  பற்றி குறி  அதற்கு  அவனது பத்திரிகை ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறுகிறான். முதலில் ஈடுபாடில்லை என்றாலும் தாஷிரோ காளை மேல் பார்வையாளர்கள் பந்தயம் கட்டலாம் என்று சொன்னவுடன் சுகமிக்கு ஒருவித ஈர்ப்பு வருகிறது. போட்டியை நடத்துவதாக ஒத்துக்கொள்கிறான்.

சுகமி தனது முழு நேரத்தையும் போட்டியை நடத்துவதிலேயே செலவிடுகிறான்.அவனது உதவியாளர்கள் எச்சரிப்பையும் மீறி அவன் பெரும் பணம் செலவிடுகிறான். அவன் அதை நடத்தியே தீருவது என முடிவு செய்து அனைத்து வேலைகளையும் செய்கிறான். ஒகாபே என்ற பணக்காரனின் உதவியை பெறுகிறான். அவனுக்கு தெரியும் அது சரியான வழியில் வந்த பணமல்ல என்று இருந்தும் ஏற்றுக்கொள்கிறான். பத்திரிக்கையின் எதிர்காலத்தையே கேளிவிக்குள்ளாக்கும் அளவுக்கு செலவுகள் கூடிக்கொண்டே இருக்கிறது. எப்படியும் தன்னால் அனைத்தையும் திரும்ப பெற முடியுமென்று நம்புகிறான்.
It’s not which bull wins and which loses that they want to see decided, it’s whether they themselves have won or lost.
சுகமி தனது பத்திரிக்கையின் விமர்சர்கள் கூறுவது போல " A sensitive poet type would undoubtedly have been able to point out a certain shadow of emptiness, of devil-may-care negligence, of loneliness darkening the pages of a paper that was popular among smart city kids. These were qualities that Tsugami, who gave the paper its editorial direction, carried within himself, though he kept them carefully concealed."  இது சகிக்கோவிற்கு  மட்டும்தான் தெரியும்.

இதற்கிடையே சுகமிக்கும் சகிக்கோவிற்கும்  உள்ள உறவின் கதை. அவனுக்கும் சகிக்கோவிற்கும் மூன்று வருட தொடர்பு. சகிக்கோ போரில் கணவனை இழந்தவள். முதல் சந்திப்பிலேயே அவளுக்கு சுகமியிடம் காதல். அவர்கள் இருவரின் உறவு எவருக்கும் தெரியாது. எதற்கும் கவலைப்படாத அவனது தோற்றம் அவளுக்கு பிடித்திருந்தது. அவனைவிட்டு விலகவேண்டுமென்று பலமுறை எண்ணி விலகாமல் இருப்பவள். அவள் அவனை மிகவும் நேசிக்கிறாள் ஆனால் அவனோ அவளை ஏனோதானோ என நடத்துகிறான். அவர்களின் உறவு ஒருவித உடைந்த கண்ணாடி போல. இருவருக்கும் தெரியும் அவர்களால் சாதாரணமாக வாழ இயலாதென்று. அனைவரும் காளைகளின் மேல் பந்தயம் காட்டுகிறார்கள். அவனும் அவளும் கூட. அது அவர்களின் வாழ்க்கையின் மேல் கட்டப்பட்ட பந்தயம்.

இது ஒரு தனி மனிதனின் கதையானாலும் ,அன்றைய ஜப்பானைதான் ஆசிரியர் விவரித்துள்ளார். பலவிதமான கதைமாந்தர்கள் கதைக்கு மேலும் அழகு. உலகப்போருக்கு பின்னர் ஜப்பானியர்கள் எவ்வாறு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினார்கள் என்பதையும் இக்கதையின் மூலம் கூறியுள்ளார் ஆசிரியர். மிக அருமையான மொழிபெயர்ப்பு . ஜப்பானின் உயரிய பரிசான  "Akutagawa prize " வென்ற புத்தகம் இது. ஆசிரியர் யசூஷி இனோ ஜப்பானின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர்.

No comments: