செரினா வில்லியம்ஸ் உலகின் மிக சிறந்த டென்னிஸ் வீரர் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் அவர் யு எஸ் ஓப்பன் இறுதி போட்டியில் செய்தது சரியா? என்பதே இப்போது டென்னிஸ் ரசிகர்களுக்கிடையே எழும் பெரும் கேள்வி. செரினா வில்லியம்ஸ் விளையாட்டிற்கு அப்பாற்பட்டு பல சமூகம் ,இனம் மற்றும் பெண்ணியம் பற்றி தொடர்ச்சியாக பேசியும் எழுதியம் வருபவர். பலவிதமான இன்னல்களுக்கிடையே வில்லியம்ஸ் சகோதரிகள் டென்னிஸ் உலகத்தை தங்களின் பக்கம் திருப்பி அதை தங்கள் கைகளுக்குள் வைத்திருந்தனர் என்றால் மிகையாகாது.
டென்னிஸ் நிர்வாகிகள் செரினாவை தண்டித்தது சரியென்றாலும் விதிகள் இருபாலருக்கும் சமமாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.செரினா நடுவர் கார்லோஸிடம் மன்னிப்பு கேட்ப்பாரெனில் அதுவே அவர் அவர் பெயருக்கு செய்யும் பெரும் சிறப்பு.
- பயிற்சியாளர் சைகைமூலம் பயிற்சி அளித்தது.
- டென்னிஸ் racquet-ஐ சேதப்படுத்தியது .
- நடுவரை கள்ளன் என்று அழைத்து .
மேற்கூறிய அனைத்தும் போட்டி விதிகளின்படி தவறு. நடுவர் செய்தது விதிகளின்படி சரியே. பிறகு ஏன் செரினா இவ்வளவு கோபப்பட்டார் என்பது புரியாத புதிரென்றாலும் அதற்கு சில காரணங்கள் என்று நான் நம்புவது முதலில் பயிற்சியாளர் சைகைமூலம் பயிற்சி அளித்தார் என்பதை செரினா ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பயிற்சியாளரை பார்க்க வில்லையென்றாலும் பயிற்சியாளர் செய்தது தவறுதான். செரினாவின் கோபத்திற்கு இன்னொரு காரணம் பல ஆண் வீரர்கள் தங்கள் பயிற்சியாளர்களால் பலமுறை பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் அதுமட்டுமல்லாமல் பல ஆண் வீரர்கள் மிக மோசமாக நடுவரைத் திட்டியுமுள்ளனர் அப்போதெல்லாம் விதிகள் இவ்வளவு தீவிரமாக நடுவார்களால் பின்பற்றபடவில்லை.
நடுவர் கார்லோஸ் இதற்கு முன்னரும் பல முன்னணி வீரர்களுக்கு விதிகளின் படி தண்டனை வழங்கியுள்ளார். நாம் நடுவரை இந்த போட்டியில் குறை சொல்ல முடியாது . மற்ற நடுவர்கள் விதியை சரியாக பின்பற்றவில்லை என்பதற்காக கார்லோஸ் செய்தது தவறென்று ஆகாது. இங்குதான் ITF(International Tennis Federation) ,ATP (The Association of Tennis Professionals) மற்றும் WTA(The Women's Tennis Association) விதிகள் இருபாலருக்கும் சமமாக பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதி செய்யவேண்டும்.
செரினா தனது மகளை இதில் இணைத்து சரியல்ல. அது தேவையில்லாதது. அவரின் மகளே அவரின் இச்செயலை ஏற்றுக்கொள்ளமாட்டாள். மேல கூறியதுபோல டென்னிசிலும் பெண்களுக்கே அதிக கட்டுப்பாடுகள் அதை உடைத்தெறிவதே செரினாவின் நோக்கமென்றால் அதை இவ்வாறு செய்வது சரியல்ல. இந்த சம்பவங்களில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்தது அது நயோமி ஒசாக்காவின் அற்புதமான ஆட்டத்தை மக்கள் மறந்தது. இந்த இறுதி போட்டியை ஒசாக்காவிற்காகத்தான் நான் பார்த்தேன் ஏனென்றால் அவர் ஒரு ஜப்பானியர். ஆண்களில் நிஷிகோரியையும் நான் follow செய்வதுண்டு.
ஒசாக்காவின் கதையும் செரினாவை போன்றதுதான். அமெரிக்க தந்தைக்கும் ஜப்பானிய தாயிற்கும் பிறந்தவர் ஒசாக்கா. அவருக்கு ஒரு அக்காவும் உண்டு. அவரும் டென்னிஸ் வீரர்தான்.ஜப்பானில் இவ்வாறு கலப்பு திருமணத்தின் குழந்தைகளை "half " (அரை ) ஜப்பானியர் என்று அழைப்பதுண்டு. ஜப்பானிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை அமெரிக்காவிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த சூழ்நிலையில்தான் ஒசாக்காவும் அவரது சகோதிரியும் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்கள். ஒசாக்கா செரினாவின் தீவிர ரசிகை . செரினாதன் அவருக்கு ரோல் மாடல்.ஒசாக்கா சகோதரிகள் சில வருடங்களுக்கு முன்னரே டென்னிஸ் ஆர்வலர்களால் அடுத்த வில்லியம்ஸ் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள். ஒசாக்காவின் மிக உன்னதமான தருணம் இப்படி அழுகையிலும் கோஷத்தாலும் நிகழ்ந்தேறியது வருத்தமளிக்கிறது.
நடுவர் கார்லோஸ் இதற்கு முன்னரும் பல முன்னணி வீரர்களுக்கு விதிகளின் படி தண்டனை வழங்கியுள்ளார். நாம் நடுவரை இந்த போட்டியில் குறை சொல்ல முடியாது . மற்ற நடுவர்கள் விதியை சரியாக பின்பற்றவில்லை என்பதற்காக கார்லோஸ் செய்தது தவறென்று ஆகாது. இங்குதான் ITF(International Tennis Federation) ,ATP (The Association of Tennis Professionals) மற்றும் WTA(The Women's Tennis Association) விதிகள் இருபாலருக்கும் சமமாக பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதி செய்யவேண்டும்.
செரினா தனது மகளை இதில் இணைத்து சரியல்ல. அது தேவையில்லாதது. அவரின் மகளே அவரின் இச்செயலை ஏற்றுக்கொள்ளமாட்டாள். மேல கூறியதுபோல டென்னிசிலும் பெண்களுக்கே அதிக கட்டுப்பாடுகள் அதை உடைத்தெறிவதே செரினாவின் நோக்கமென்றால் அதை இவ்வாறு செய்வது சரியல்ல. இந்த சம்பவங்களில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்தது அது நயோமி ஒசாக்காவின் அற்புதமான ஆட்டத்தை மக்கள் மறந்தது. இந்த இறுதி போட்டியை ஒசாக்காவிற்காகத்தான் நான் பார்த்தேன் ஏனென்றால் அவர் ஒரு ஜப்பானியர். ஆண்களில் நிஷிகோரியையும் நான் follow செய்வதுண்டு.
ஒசாக்காவின் கதையும் செரினாவை போன்றதுதான். அமெரிக்க தந்தைக்கும் ஜப்பானிய தாயிற்கும் பிறந்தவர் ஒசாக்கா. அவருக்கு ஒரு அக்காவும் உண்டு. அவரும் டென்னிஸ் வீரர்தான்.ஜப்பானில் இவ்வாறு கலப்பு திருமணத்தின் குழந்தைகளை "half " (அரை ) ஜப்பானியர் என்று அழைப்பதுண்டு. ஜப்பானிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை அமெரிக்காவிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த சூழ்நிலையில்தான் ஒசாக்காவும் அவரது சகோதிரியும் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்கள். ஒசாக்கா செரினாவின் தீவிர ரசிகை . செரினாதன் அவருக்கு ரோல் மாடல்.ஒசாக்கா சகோதரிகள் சில வருடங்களுக்கு முன்னரே டென்னிஸ் ஆர்வலர்களால் அடுத்த வில்லியம்ஸ் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள். ஒசாக்காவின் மிக உன்னதமான தருணம் இப்படி அழுகையிலும் கோஷத்தாலும் நிகழ்ந்தேறியது வருத்தமளிக்கிறது.
டென்னிஸ் நிர்வாகிகள் செரினாவை தண்டித்தது சரியென்றாலும் விதிகள் இருபாலருக்கும் சமமாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.செரினா நடுவர் கார்லோஸிடம் மன்னிப்பு கேட்ப்பாரெனில் அதுவே அவர் அவர் பெயருக்கு செய்யும் பெரும் சிறப்பு.
No comments:
Post a Comment