Wednesday, June 6, 2018

உலகக்கோப்பை கால்பந்து - 2 அவசியம் படிக்க வேண்டிய (கால்பந்து ) புத்தகங்கள்


கிரிக்கெட்டிற்கு என்றே ஒரு தனி இலக்கியம் உண்டு. மிகவும் பழமையானதும் பெரிதும் கூட. கிரிக்கெட்டிற்கு பிறகு பிரபலமானாலும் கால்பந்தில்  மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பல நல்ல புத்தங்கள் வந்துள்ளன. இது பெரும்பாலும் தென்னமெரிக்க நாடுகளில் இருந்துதான் வந்துள்ளன. அவசியம் படிக்க வேண்டிய கால்பந்து சம்பந்தமான புத்தகங்கள் :
1.Soccer in sun and shadow by Eduardo Galeano 
Image from booktopia.com.au
மிகவும் எளிய முறையில் கால்பந்தின் தோற்றம் மற்றும் அதன் வளர்ச்சியை தனக்கே உரிய ஸ்டைலில் Eduardo Galeano எழுதியுள்ளார். கால்பந்து வீரர்களையும் கோல்களையும் மிகச் சிறந்த முறையில் விவரித்துள்ளார். நான் திரும்ப திரும்ப படிக்கும் ஒரு புத்தகம்.

2.How Soccer Explains the World: An Unlikely Theory of Globalization by Franklin Foer
Image from Goodreads
கால்பந்தை ஒரு நாட்டின் சமூக மற்றும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் நூல். கிளப் அணிகளிக்கிடையே நடக்கும் மத இன அரசியலை மிகத் தெளிவாக எடுத்துக்கூறும் ஒரு நூல். கால்பந்து என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல அதுவே பல அரசியல் மாற்றங்களுக்கு காரணம் என்பதை பல எடுத்துக்காட்டோடு கூறும் நூல். அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

3.Fear and Loathing in La Liga by Sid Lowe
Image from Goodreads
கால்பந்து ரசிகர்களுக்கு நன்கு  தெரிந்த இரண்டு   குழுக்களைப் பற்றிய மிகவும் முக்கியமான நூல். பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் குழுக்களின் வரலாற்றையும் பகைமையையும் தெளிவா எடுத்துரைக்கும் புத்தகம் . ஆசிரியர் சித் லோ ஒரு சிறந்த கால்பந்து கட்டுரையாளர். அவரின் ஸ்பானிஷ் கால்பந்தின் புரிதல் அபாரமானது. இந்த இரண்டு அணிகள் மக்களால் மற்றும் அரசால்  எவ்வாறு அதிகாரத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பயன்படுத்தப்பட்டது என்பதை விரிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

4.Futebol nation by David Goldblatt
Image from Goodreads

பிரேசில் என்றால் நாம் எல்லோருக்கும் மனதில் தோன்றுவது கால்பந்துதான் இந்த புத்தகத்தில்  கால்பந்து எவ்வாறு பிரேசிலில் நுழைந்தது மற்றும் அது எவ்வாறு கலாச்சாரச் சின்னமாக மாறியது என்பதை மிகவும் எளிமையான நடையில் ஆசிரியர் கூறியுள்ளார். இந்த புத்தகத்தை வாசித்து முடித்தப் பிறகு என்னையறியாமல் ஒருவித சோகம் பற்றிக்கொண்டது.எவ்வளவு உயிரிழப்புக்கள். பிரேசில் கால்பந்து அணியும் படிப்படியாக தங்களது மிகவும் கவர்ச்சிகரமான 'ginga' ஸ்டைலைவிட்டு எப்படியும் வெல்ல வேண்டுமென்று ஐரோப்பிய அணுகுமுறையைப் பின்பற்ற ஆரம்பித்தது அதுவே அவர்களின் தோல்விக்கும் காரணமானது. பிரேசிலை புரிந்துக்கொள்ள வாசிக்கவேண்டியப்  புத்தகம்.

5.The Mixer by Michael Cox
Image from Goodreads
இங்கிலிஷ் பிரீமியர் லீக் ரசிகர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். பிரீமியர் லீக்கின் வரலாற்றை இவ்வளவு எளிதாகவும் சுவாரசியமாகவும் இனி சொல்வது சற்று கடினம்தான். விதிகளின் மாற்றம் எவ்வாறு வீரர்களையும் போட்டிகளையும் மாற்றின என்பதை வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கிறது . பிரீமியர் லீக்கில் எவ்வாறு பயிற்சியாளர்கள் பலவிதமான யுத்திகளை பயன்படுத்தினர் மற்றும் அந்த யுத்திகளின் 25 ஆண்டுகால வளர்ச்சி முதலியவற்றை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார். Must read!

கவனிக்கத்தக்க பிற புத்தங்கள் :
1.The Damn United by David Peace
2.The Ball is Round by David Goldblatt
3. Soccernomics by Simon Kuper

No comments: