உலகக்கோப்பை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது ரொபேர்ட்டோ பாஜியோ தான். 1994 உலகக்கோப்பையின் கதாநாயகன் ரோமரியோ என்றால் வில்லன் பாஜியோ. அந்த பெனல்ட்டி கிக் மறக்கமுடியாதது. நான் பார்த்த முதல் உலகக்கோப்பை ஆனால் என் நினைவில் நின்றது வெற்றிபெற்ற பிரேசில் அணியல்ல மாறாக தோல்வியடைந்த இத்தாலிதான் அதிலும் குறிப்பாக பாஜியோதான். அன்றுமுதல் நான் இத்தாலி அணியின் ரசிகன்.
ரொபேர்ட்டோ பஜ்ஜியோ image from wikipedia |
1994-ல் எல்லோரும் பிரேசில் மற்றும் ரோமரியோவை பற்றி பேசிக்கொண்டிருக்குபோது நாங்கள் ரசித்தது பாஜியோவைத்தான் .ஏன் என்று தெரியவில்லை ஒரு வேளை அவரது அழகிய ஹேர்ஸ்டைலா ?. அப்போது அவரை "தி டிவைன் போனிடைல் (The Divine Ponytail)" என்றழைத்தனர். நான் அதிகமாக கால்பந்து விளையாடியது கிடையாது. பெரும்பாலான இந்திய குழந்தைகள்போல கிரிக்கெட்தான் எங்களின் பிரதான விளையாட்டு. ஆனால் எங்கள் ஊரில் சில சிறந்த கால்பந்து வீரர்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் பள்ளி அணியில் விளையாடியவர்கள். அவர்களின் திறமையை நண்பர்கள் கூறும்போது ஆச்சிரியமாக இருக்கும். நான் அவர்கள் யாரும் கால்பந்து விளையாடி பார்த்ததே இல்லை. அதனால் கால்பந்து வீரர்கள் மீது ஒருவித ஈர்ப்பு இப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது.
சிங்கப்பூர் வந்தபிறகு படிப்படியாக கிரிக்கெட்டை பின்னுக்குத்தள்ளி தடகளமும் கால்பந்தும் என்னுள் குடியேறியது .இப்போது கிரிக்கெட் பார்ப்பதைவிட கால்பந்து பார்ப்பதுதான் அதிகம். அதற்கு ஒரு காரணம் சிங்கப்பூர் விளையாட்டுச் சூழல். இங்கு கால்பந்திற்கே பள்ளியிலும் மீடியாவிலும் முன்னுரிம்மை. தினசரி நாளிதழில் இரண்டு முதல் மூன்று பக்கங்கள் தினமும் கால்பந்து பற்றிய செய்தி வருகிறது. இங்கிலிஷ் பிரீமியர் லீக் பற்றிய செய்தியே அதிகம். இதனாலேயே நானும் கால்பந்தை பற்றிய நுணுக்கங்களை வாசிக்கவும் அதை ஆராயவும் கற்றுக்கொண்டேன். கடந்த பத்து வருடங்களில் கால்பந்தே எனது வாசிப்பில் பெரும் பகுதியை எடுத்துக்கொண்டது. இன்னும் இரண்டு வாரங்களில் உலகக்கோப்பை கால்பந்து ஆரம்பிக்கவுள்ளது. பலவிதமான எதிர்பார்ப்புகள்.
ரஷ்யா
பலவித சர்ச்சைகளுக்குப் பிறகு ரஷ்யாவில் உலகக்கோப்பை தொடங்கவுள்ளது . ரஷ்யா கால்பந்து ஜாம்பவான் இல்லை .அங்கு கோரோப்கா (korobka) எனப்படும் சின்ன திடலில் விளையாடும் கால்பந்துதான் பிரபலம். ரஷ்யா கால்பந்து குண்டர்களுக்கு (hooligans) மிகவும் பிரபலம். இருந்தாலும் FIFA 2018 உலகக்கோப்பையை நடத்த ரஷ்யாவிற்கு அனுமதி அளித்தது.இதற்கு FIFA-வின் லஞ்சம் மற்றும் ஊழல் ஒரு காரணம். 12 அரங்கங்களில் 32 அணிகள் 65 போட்டிகளில் விளையாட உள்ளன.முதல் மற்றும் இறுதி போட்டிகள் பிரசித்திப்பெற்ற Lushniki அரங்கில் நடக்கவுள்ளது. 35000-கும் மேற்பட்ட தன்னார்வல தொண்டூழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
எந்த அணிக்கு support செய்வது?
எந்த அணி வெல்லுமென்று சொல்லவே முடியாது ஆனால் ஒன்று மட்டும் உறுதி பல திருப்பங்களையும் ஆச்சிரியங்களையும் இந்த உலக கோப்பைக் கொடுக்குமென்பது . உலக கோப்பையை அனுபவிக்க வேண்டுமென்றால் ஏதாவது அணியை ஆதரித்து அவர்களின் பயணத்தை பின்தொடர்வது முக்கியம். அப்படி செய்தால் போட்டிகளில் ஈடுபாடு அதிகமாகும். கிட்டத்தட்ட பங்கேற்கும் அனைத்து நாட்டு மக்களின் இரண்டாவது favorite அணி பிரேசில்தான். பங்கேற்காத நாடுகளில் பிரேசில்தான் முதல் favorite. இந்த முறை எனக்கு பிடித்த இத்தாலி விளையாடவில்லை எனவே இந்த முறை எனது support அர்ஜென்டினாவிற்கே அதற்கு முக்கிய காரணம் மெஸ்ஸி. முடிவுகள் ஏதாயினும் ஒரு மாதத்திற்கு கொண்டாட்டம் நிச்சியம் .
No comments:
Post a Comment