பிரபு காளிதாஸை சாருநிவேதிதா இணையதள வழியாக எனக்குத் தெரியும் . அவர் ஒரு புகைப்படக் கலைஞர். அவர் facebook-ல் எழுதிய பதிவுகளில் இருந்து சிறந்ததை எடுத்து புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறது உயிர்மை பதிப்பகம்.
"அட ஆமலே " என்று சொல்லவைக்கிற பதிவுகள்தான் அதிகம். பிரபு காளிதாஸிற்கு கமல் மேல் ஏன் அவ்வளவு கோபம் என்று தெரியவில்லை . கமலை விமர்சிப்பதற்கு அவருக்கு முழு உரிமையுண்டு. அதுதான் இந்த புத்தகத்தின் வெற்றி . தனக்கு சரியென்றுபட்டத்தை எந்த சமரசமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அனுபவங்களை சுவாரசியமாக கூறுவது கடினம் ஆனால் பிரபு காளிதாஸ் அதை சிறப்பாக செய்துள்ளார் என்றுதான் எனக்குப் படுகிறது.
"நீங்க என்ன கேமரா வெச்சிருக்கீங்க ?" என்னும் பத்தியில் நம்மில் பலர் செய்யும் முட்டாள்தனமான விசயத்தை எடுத்துக்கட்டிருக்கிறார். "என்ன நடக்கிறது குழந்தைகளுக்கு ..?" என்னும் பத்தியில் குழந்தைகளை மொபைல் போன் எப்படி கெடுக்கிறது என்பதை சொல்லியுள்ளார்.நாம் தெரிந்ததுதான் ஆனால் நாம் மாறமாட்டோம். "பாட்டு மட்டும் எங்கேர்ந்து வருது ?" என்னும் பத்தி ஒரு சிறுகதைப் போல உள்ளது."வெளித்தோற்றம்" என்னும் கட்டுரை சமகால நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
ஒரு கட்டுரைக்கும் அடுத்ததுக்கும் சுத்தமாக தொடர்ச்சியே இல்லை. ஆனாலும் சுவாரசியம் குறையவில்லை. சில பத்திகளை தவிர்த்திருக்கலாம். தினசரி வாழ்கை முதல் உலக சினிமா என பலவிதமான தளங்களில் கட்டுரைகள் இந்த புத்தகத்தில் உள்ளன. இன்னும் கொஞ்சம் விவரமாக எழுதியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
வாசிக்கலாம் !
1 comment:
:) vasikkalam!
Post a Comment