The Path to the Truth is a labor of the heart, not of the head. Make your heart your primary guide! Not your mind. Meet, challenge, and ultimately prevail over your nafs with your heart. Knowing your self will lead you to the knowledge of God.
Elif Shafak துருக்கிய பெண் எழுத்தாளர். மிகவும் பிரபலமானவர். அவரின் படைப்புகளில் முக்கியமானது இது. இருவேறு கதைகள் ஆனால் அதன் மைய்யக் கருத்து ஒன்றே. முதலாவது எலாவின் கதை. எலா (Ella ) கணவன் மற்றும் குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்கிறாள். தான் சந்தோசமாக இருப்பதாக அவள் நம்புகிறாள்.தனது தினசரி வேலைகளைத் தவறாமல் செய்கிறாள். இருந்தாலும் அவளுக்கு அந்த வாழ்க்கையில் ஒரு வெறுமை. இந்த சூழ்நிலையில்தான் அவள் புதிதாக வேலைசெய்யும் இடத்திலிருந்து ஒரு புத்தகத்தின் வெளிவராத பிரதியைக் கொடுத்து அவளை மதிப்பீடு செய்யச் சொல்கிறார்கள் . அந்த புத்தகத்தின் பெயர் "Sweet Blasphemy" எழுதியவர் Aziz Zahara.
A life without love is of no account. Don’t ask yourself what kind of love you should seek, spiritual or material, divine or mundane, Eastern or Western. … Divisions only lead to more divisions. Love has no labels, no definitions. It is what it is, pure and simple. “Love is the water of life. And a lover is a soul of fire! “The universe turns differently when fire loves water.
பல நாட்களுக்கு பிறகு அந்த புத்தகத்தைப் வாசிக்க ஆரம்பிக்கிறாள். இந்த புத்தகத்தின் கதைதான் இந்த நாவலின் இரண்டாவது கதை.அது
ரூமி(Rumi) மற்றும்
சாம்ஸ் (Shams of Tabriz ) அவர்களின் நட்பை பற்றியது. ரூமி கவிஞர் ஆகுவதற்கு முன்பே மிகவும் பிரபலமான பேச்சாளர். மசூதியில் சொற்பொழிவு நடத்துபவர். அவர் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த சூழ்நிலையில்தான் சாம்ஸ் ரூமியை சந்திக்க வருகிறார். சாம்ஸிற்கு தான்தான் ரூமியின் "spiritual companion"-ஆக வேண்டுமென்பது ஏற்கனவே தெரியும் . இந்த இரு காலங்களுக்கிடையே கதை நகர்கிறது.
When you step into the zone of love, language as we know it becomes obsolete. That which cannot be put into words can only be grasped through silence.
எலா Aziz Zahara-விற்கு கடிதம் எழுதுகிறாள் . அவரும் பதில் எழுதுகிறார்.அவர்களின் நட்பு வளர்கிறது. ரூமிக்கு எப்படி சாம்சோ அதுபோல எலாவிற்கு Aziz . சாம்ஸ் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்பவன். அனைத்தையும் அன்பு செய்பவன். அவன் ஒரு சுஃபி (Sufi). அவனது கதை ஒரு துயரமானது. காதலியை இழந்து குடியில் மூழ்கி அனைத்தையும் இழந்து இறுதியில் சுஃபி லாட்ஜ்ல் சேர்ந்து தெளிந்து மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். எல்லையில்லா அன்பின் சக்தியை எலாவிற்கு அவர் வழங்குகிறார். எலா தன் வாழ்வைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.
If you want to change the way others treat you, you should first change the way you treat yourself. Unless you learn to love yourself, fully and sincerely, there is no way you can be loved. Once you achieve that stage, however, be thankful for every thorn that others might throw at you. It is a sign that you will soon be showered in roses.
சாம்ஸ் அன்பின் பரிணாமங்களை ரூமிற்கு தனது செயல்கள் மூலம் எடுத்துரைக்கிறார். அவர் ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் அன்பு செய்கிறார். ரூமியை அவரது குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளியே கொண்டுவந்து வெளியுலகத்தை அவருக்கு காண்பிக்கிறார்.ரூமி மெதுவாக அவரின் பேரன்பில் இணைகிறார். அவர்களின் நட்பு தெய்வீகமானது ஆனால் ஊர் மக்களோ ரூமியின் இளைய மகனோ அதைப் புரிந்து கொள்ளவில்லை.
In general, one shouldn't be too rigid about anything because "to live meant to constantly shift colours.
நாவல் முழுவதும் ஒருவிதமான திகில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த கதை அப்படியொன்றும் திகில் கதையல்ல ஆனால் முன் பின் கதை சொல்லலும் வெவ்வேறு கதாபாத்திரங்களின் நோக்கில் கதை விரிவதும் இக்கதைக்கு ஒரு திகில் உணர்வை ஏற்படுத்துகிறது. நிகழ்கால கதையை விட ரூமி மற்றும் சாம்ஸின் வரலாற்று நிகழ்வுகள் அழகாக சொல்லப்பட்டுள்ளது. ஆங்காகே சொல்லப்பட்டுள்ள அன்பின் விதிகள் கதைக்கு வலு சேர்க்கின்றன.
Whatever happens in your life, no matter how troubling things might seem, do not enter the neighborhood of despair. Even when all doors remain closed, God will open up a new path only for you. Be thankful! It is easy to be thankful when all is well. A Sufi is thankful not only for what he has been given but also for all that he has been denied.
வாசிக்கலாம் !
No comments:
Post a Comment