Tuesday, September 15, 2020

ரன்னிங் டைரி - 112

  15-09-2020 08:18

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்தவுடனே எண்ணத்தில் வந்தது ராபர்ட் பிரஸ்ட்டின்  (Robert Frost) "Road Not Taken" கவிதை தான். அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அடங்கிய புத்தகம் சென்ற வாரம் எனக்கு கிடைத்தது. ஒரு சில கவிதைகளை நேற்று இரவு வாசித்தேன் . எனக்கு பிடித்திருந்தது. அதிலும் மேல கூறிய கவிதை சிறு வயதில் மனப்பாடமாக தெரியும் . இப்போது கொஞ்சம் தெரியும். ஏன் அவரைப் பற்றி பெரிய அளவில் தமிழில் பேசப் படவில்லை என்று யோசித்துக் கொண்டே ஓடினேன்.எனக்கு பிடித்த தமிழ் கவிதைகளை பிரிண்ட் அவுட்  எடுத்து ஒரு புத்தகம் போல வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

1 comment:

தமிழச்சி சிவா-ஆயிஷா மைந்தன் said...

அன்பரே! வணக்கம்! தங்கள்  ரன்னிங் டைரி -காக தினமும் காத்திருக்கிறேன்! சுவாரசியமாக எழுதுகிறீர்! வாழ்த்துகள் தினமும் பதிவிடுங்கள்! நன்றி!