Tuesday, January 23, 2018

The Vegetarian - Han Kang


பல மாதங்களாக வாசிக்க வேண்டுமென்று நினைத்த புத்தகம். இந்த வருடத்தில் நான் வாங்கின முதல் புத்தகம்.கொரிய மொழியில் எழுதியது. நான் வசித்தது ஆங்கில மொழிபெயர்ப்பு.   வாங்கிய உடன் வாசிக்க ஆரம்பித்தேன் கதை மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  Yeong-hye தான் இந்த கதையின் நாயகி. திடிரென்று ஒருநாள் தான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்து அதன்படி செயல்படுகிறாள். அவளின் அந்த முடிவால் எப்படி ஒரு குடும்பமே உடைகிறது என்பதுதான் கதை.

தி வெஜிடேரியன்: 
நாயகியின் உறவினர்கள் மூவரால் மூன்று பாகங்களாக கதை சொல்லப்படுகிறது . முதலில் அவளது கணவன் அவள் எப்படி திருமணமாகி ஐந்து வருடங்களில் எந்த ஒரு சிறு சண்டைசச்சரவுகளில்  ஈடுபட்டதில்லையென்றும் மனைவியாக அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்தாலென்றும் கூறுகிறான்.அவன் ஒரு சாதாரண வேலை செய்யும் சாதாரண மனிதன் ,அவன் அவளில் திருப்தி கொள்கிறான். ஆனால் அவளின் அசைவ உணவு உண்ணாமை அவனுள்  பல விதமான எண்ணங்களை உருவாகுகிறது. நாயகி தான் ஒரு கொடூரமான கனவு கண்டதாக சொல்கிறாள் ஆனால் அவனால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை.இறுதியாக நாயகியின் குடும்பத்தார் அவளது வாயினுள் அசைவ உணவை திணிக்கிறார்கள் ,அதற்க்குப்பிறகு அவள் தன் கையை அறுத்துக்கொள்கிறாள்   அத்துடன் முதல் பாகம் முடிகிறது.

மங்கோலியன் மார்க் :
முதல் பாகத்திலேயே நாயகிக்கு எதிரான பாகுபாடு தொடங்குகிறது . இரண்டாவது பாகத்தில் அவளது அக்காளின் கணவனின் பார்வையில் நாயகியின் அசைவ உணவு உண்ணாமை விவரிக்கப்படுகிறது. இவன் ஒரு கலைஞன் .புகைப்படம் /வீடியோ எடுப்பது மற்றும் வரைவது இவனது வேலை. மங்கோலியன் ஸ்பாட் நாயகியின் உடலில் இன்னும் இருக்கிறது என்று தெரிந்தவுடன் அவன் சலனப்படுகிறான்.  அதற்க்குப்பிறகு நடப்பதெல்லாம் ஒரு திடுக்கிடும் கதை. இந்த பாகம் தென்கொரிய இலக்கிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Flaming Tree :
மூன்றாவது பாகம் நாயகியின் அக்காளின் பார்வையில் விரிகிறது. அவள் தன் தங்கை இப்படியானதற்கு தான் ஒரு காரணமோ ? என்று எண்ணிக்கொண்டே இருக்கிறாள்.சிறு வயதில்  தந்தை எப்போதும் தங்கையையே அடித்தார் ,தான் ஏன் ஏதும் செய்ய முடியவில்லை என்று சிந்தித்துக்கொண்டே இருக்கிறாள். அவளால் தனது கணவனை மன்னிக்கவே முடியவில்லை . தானும் தனது தங்கை போல மாறிக்கொண்டுவருவதாக எண்ணுகிறாள். தாய் தந்தை தங்கையை கைவிட்டப் பிறகு இவளே அவளுக்கு எல்லாம் செய்கிறாள்.

இந்த மூன்று நபர்களும் தாங்கள் எவ்வாறு   Yeong-hye-ன் முடிவால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை அவர்களே சொல்வது கதைக்கு வலுசேர்க்கிறது. ஒவ்வொருவரும் தங்களின் சொந்த  பிரச்னைகளை நாயகியின் செயல் மூலம் ஆராய்கின்றனர். நாயகியின் கதைதான் மிகவும் குழப்பமானது. கனவுக்குள் வாழ்கிறாள். கொரிய உணவு கலாச்சாரத்தில் அசைவ உணவு என்பது ஒரு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று . நாயகியின் குடும்பமும் அப்படியே. அவர்களால் அவள் ஏன் இவ்வாறு மாறினால் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் இரண்டு வாழ்கை வாழ விரும்பவில்லை - ஒன்று தனெக்கென்று மற்றொன்று குடும்பம் மற்றும் சமூகத்திற்கு. இந்த இரண்டு வாழ்க்கைக்கிடையே அவள் போராடுகிறாள்.  இது அவளின் போராட்டம்  தனது மாற்றத்தை ஏற்காத சமூகத்திற்கு எதிராக.

நாயகியின் செயல்கள் மூலம் மனித அடையாளத்தையும் , அக்காளின் கணவனின் செயல்கள் மூலம் கலையில் மனித உடலின் முக்கியதையும் மற்றும் அக்காளின் செயல்கள் மூலம் மனித உறவின் ஆழத்தையும் இக்கதை எடுத்துரைக்கிறது. கதையில் பல இடங்களில் வன்முறை மிகவும் எளிதாக இடம்பெற்றுள்ளது. கதையில் பெரும்பாலும் பெயர்களே குறிப்பிடவில்லை பதிலாக கணவன் , அக்காள் மற்றும் மாமன்  என்றே குறிப்பிடப்படுகிறது. இது திட்டமிட்டே ஆசிரியரால் கையாளப்பட்டுள்ளது. அவர் குடும்ப கட்டுமானத்தையே கேள்விக்குள்ளாக்குகிறார் .  இன்று கூட ஒருவன் தன்னை வெஜிடேரியன் என்று சொன்னால் உடனே ஒரு விதமான பார்வை அவன் மேல் செலுத்தப்படுகிறது. அது அறியாமையே . என்னை  பொறுத்தவரை அவளது கணவன் அவளின் முடிவை மதித்து ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் ஆனால் அவன் அப்படி செய்யவில்லை .அவன் ஆணாதிக்கத்தின் ஒரு பகுதி . தனது அக்காளின் கணவனோ காமத்திற்கும் கலைக்கும் இடையில் போராடுகிறான்.  அவனையும்தான் யாரும் புரிந்து கொள்ளவில்லை.முதலில் அசைவ உணவை மறுக்கும்  நாயகி இறுதியில் மனிதத்தையே மாறுக்கிறாள்.
Time was a wave, almost cruel in its relentlessness.
இந்த கதையின் கரு எப்படி வந்தது என்பதற்கு ஆசிரியர் " ஒரு பெண்  மரமாக மாறின  உருவம் என்னுள் வந்தது அதை வைத்து சிறுகதை ஒன்று எழுதினேன். பிறகு அதைவைத்தே நாவலை எழுதினேன் " என்றார்.  இக்கதையில் நாயகி இறுதியில் மரமாகவே மாற விரும்புகிறாள்.  இப்புத்தகம் பல விருதுகளை பெற்றுள்ளது முக்கியமாக 2016-ஆன மேன் புக்கர் (Man Booker International  Prize ) விருது.

அவசியம் வாசிக்க வேண்டிய  ஒரு  வினோத படைப்பு !

Monday, January 15, 2018

வாசித்த புத்தகங்கள் -2017


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அனைவரும் தாங்கள் வாசித்த புத்தகங்களை பட்டியலிட வேண்டுமென்று பல முறை வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதுபோல நானும் நான் வசித்த புத்தகங்களை பட்டியலிடுகிறேன் யாருக்காவது பயன்படும் என்ற நம்பிக்கையில்.

  1. புயலிலே ஒரு தோணி - ப .சிங்காரம்
  2. கார்வாலோவின் தேடல் - கே.பி.பூரணச்சந்திர தேஜஸ்வி
  3. Chinaman - Shehan Karunatilaka
  4. Mao's Great Famine - Frank Dikotter
  5. விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம் - சி.மோகன்
  6. Nine Lives: In Search of the Sacred in Modern India - William Dalrymble
  7. உறுபசி (Urupasi) - எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
  8. Sapiens : A Brief History of Humankind - Yuval Noah Harari
  9. கெடை காடு (Kedai Kaadu) - ஏக்நாத்
  10. கசாக்கின் இதிகாசம் (Khasakin Itihasam) - ஓ வி விஜயன் ( O. V Vijayan)
  11. The Bees - Laline Paull
  12. சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்
  13. The Tuner of Silences - Mia Couto
  14. காதல் கலை ( The Art Of Love - Ovid)
  15. மெதுத்தன்மை ....Slowness - Milan Kundera
  16. அவமதிப்பு (Disgrace - J.M. Coetzee)
  17. ரோபோக்களின் எழுச்சி (The Rise Of Robots - Martin Ford)
  18.  ஒரு சுருக்கமான திருமணத்தின் கதை  - அனுக் அருட்பிரகாசம் (The story Of A Brief Marriage - Anuk Arudpragasam)
  19. அஜ்வா - சரவணன் சந்திரன் (Ajwaa - Saravanan Chandran)
  20. மறையும் கலை (The Art Of Invisibility - Kevin Mitnick)
  21. மனித தோற்றம் (Origin) - டான் பிரௌன் (Dan Brown)
  22. பதின் -எஸ். ராமகிருஷ்ணன் (Pathin - S.Ramakrishnan)
  23. கறுப்புக் கொடியின் கீழ் ( Under The Black Flag - Sami Moubayed)
  24. Atomised - Michel Houellebecq
  25. Everything I don't Remember - Jonas Hassen Khemini
  26. February Flowers - Fan Wu
  27. Foucault's Pendulum - Umberto Eco
  28. Folded Earth - Anuradha Roy
  29. The Narrow Road To The Deep North - Richard Flannagan
  30. The Way To Paradise - Mario vargas llosa
  31. Sea Of Poppies - Amitav Ghosh
  32. How To Get Filthy Rich In Rising Asia - Mohsin Hamid
  33. The Reasons Of Things - A C Grayling
  34. இடக்கை -எஸ்.ராமகிருஷ்ணன்
  35. Diary Of The Fall - Michel Laub
  36. The Pastoral Symphony - Andre Gide
  37. Conclave - Robert Harris 
  38. The Japanese Lover - Isabel Allende
  39. Oishinbo: Fish, Sushi & Sashimi - Tetsu Kariya 
  40. தூக்கிலிடுபவரின் குறிப்புகள் -சசி வாரியர்
  41. From The Ruins Of Empire - Pankaj Mishra
  42. Second Hand Time - Svetlana Alexievich
  43. Connectography -  Parag Khanna
  44. கடைசி நண்பன் (The Last Friend - Tahar Ben Jelloun)
இலக்கில்லாமல்  random-அ ஏதாவது புத்தகத்தை எடுத்து படிப்பதுதான் என் பழக்கம் பட்டியலிலுள்ள பல புத்தங்களை நான் அதை படிப்பதற்கு முன் கேள்விப்பட்டதில்லை ஆனால் அவை அனைத்தும் என்னை செம்மை படுத்தின என்பதுதான் உண்மை . 

மேலும் வாசிப்போம் !