Wednesday, June 19, 2019

Hector & The Search For Happiness - Francois Lelord


“Knowing and feeling are two different things, and feeling is what counts.” 
ஹெக்டர் ஒரு மனநல மருத்துவர். எல்லோரின் கவலைகளையும் பொறுமையுடன் கேட்பவர்.கேள்விகளைக் கேள்விகளால் எதிர் கொள்பவர்.  அவரிடம் வரும் அனைவருமே தாங்கள் மகிழ்ச்சியாகவில்லை என்றே கூறுகிறார்கள். அதனால் மகிழ்ச்சி என்றால் என்ன என்று அறிய ஒரு பயணம் செய்கிறார் அது தான் இந்த நாவலின் கதை.
“The basic mistake people make is to think that happiness is the goal!”
முதலில் சீனா செல்கிறான் அங்கு அவனது நண்போனோடு சுற்றுகிறான். அவன் நண்பன் வேலை வேலை என்று அலைபவன் . அதற்கு  அவன் கூறும் காரணங்கள் நம்மில் பலருக்கும் பொருந்தும். ஒரு பெண்ணோடு உறவு கொள்கிறான் அவளின் கதையைக் கேட்டு வருந்துகிறான். ஒரு புத்தத் துறவியை சந்திக்கிறான். அவர் பயணத்தின் இறுதியில் தன்னை வந்து சந்திக்குமாறு சொல்கிறார்.அடுத்து ஒரு ஆப்பிரிக்க நாட்டிற்கு செல்கிறன் அங்கு மற்றொரு நண்பனை சந்திக்கிறான். அவன் ஒரு மருத்துவர். மற்றொரு பெண்ணையும் அங்கு சந்திக்கிறான் ஏழ்மையில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அந்த நிகழ்வுகளை மகிழ்ச்சியா இல்லையா என்று எழுதிவைத்துக் கொள்கிறான்.
Making comparisons can spoil your happiness.Happiness often comes when least expected.Sometimes happiness is not knowing the whole story.Happiness is caring about the happiness of those you love.Happiness is feeling useful to others.Happiness is a certain way of seeing things.Many People see happiness only in their future.Many People think that happiness come from having more power and money.Happiness is knowing how to celebrate.
அமெரிக்கா செல்கிறான் அங்கு தனது முன்னாள் காதலியின் வீட்டில் தங்குகிறான். அவளை தான் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று எண்ணுகிறான். அவளது கணவன் மகிழ்ச்சியை கணக்கிட  ஒரு பார்முலா உருவாக்கலாம் என்று சொல்லி தான் எழுதிய பட்டியலைக் கேட்கிறான். இருவரும் சேர்ந்து ஒரு பார்முலா உருவாக்க முயல்கிறார்கள். ஹெக்டருக்கும் மகிழ்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்பவருக்கும் நடக்கும் உரையாடல் ஹெக்டரை தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. பயணம் முடிந்து அவன் புத்துயிர் பெற்று  மீண்டும் தனது மனநல மருத்துவத்தை தொடங்குகிறான். தனது காதலியுடன் வாழ்வை இனிதாக ஆரம்பிக்கிறான். பயணம் அவனை மாற்றியது . 

இந்த கதையில் எதையுமே ஆழமாக ஆராயவில்லை எல்லாமே மேலோட்டமாக சொல்லப்படுகிறது. அதுவே இப்புத்தகத்தை சிரமமில்லாமல் படிக்க முடிகிறது என்று நான் நினைக்கிறேன்.வாசிக்கும் போது  பல இடங்களில் சத்தமாக சிரித்தேன். இந்த புத்தகம் பிரெஞ்சில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .ஒரே அமர்வில் வாசிக்க கூடிய புத்தகம்.

வாசிக்கலாம்.

Tuesday, June 11, 2019

Strange Weather in Tokyo - Hiromi Kawakami


If the love is true, then treat it the same way you would a plant- feed it, protect it from the elements- you must do absolutely everything you can. But if it isn’t true, then it’s best to just let it wither on the vine.
மற்றொரு அழகிய ஜப்பானிய நாவல். அது என்னவோ தெரியல ஜப்பானிய நாவல்கள் என்றால் எனக்கு தனி விருப்பம்.புத்தகக் கடையில் இந்த புத்தகத்தின் அட்டை என்னை மிகவும் கவர்ந்தது. உடனே வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.  இது சுசிக்கோ என்ற பெண்ணுக்கும் அவளது பள்ளி ஆசிரியருக்கும் இடையே நடக்கும் கதை. இருவரும் bar-ல் சந்திக்கிறார்கள். அடிக்கடி சந்திக்கிறார்கள்.சுசிக்கோ திருமணமாகாதவள்.  தனக்கென்று ஒரு வீட்டில்  ஓரளவு  வாழ்வை திருப்திகரமாக வாழ்ந்து கொண்டிருப்பவள். பள்ளி ஆசிரியர் (sensei ) ஓய்வு பெற்றவர்,அவரும் தனியாக வாழ்கிறார்.  எப்போதும் கையில் ஒரு briefcase வைத்திருப்பார்.ஒரு ரசனையான மனிதர் .எதையும் ரசித்து ருசித்து அனுபவித்து செய்பவர்.
Everyone causes trouble for someone at some point in their lives.
இந்த இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வாறு தெரிந்து புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் இந்த புத்தகத்தின் கதை.இருவருக்கும் பல விசயங்களில் ஒரே மாதிரியான ரசனை. கதை நிகழும் இடம் டோக்கியோ மற்றும் சுற்றுப்புறம். முக்கியமான இடம் அந்த bar. மிக சில வரிகளில் மிக அழகாக இந்த இடங்களை ஹிரோமி விவரித்துள்ளார்.சுசிக்கோ  பல முறை பல விசயங்களை பேச நினைத்து பேசாமல் போகிறாள்.ஆசிரியரோ தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேசமாட்டார்.
If not kept in check, night-time thoughts are prone to amplification.
 இருவரும் கதை முழுவதும் எதேட்ச்சையாகத்தான் சந்தித்துக் கொள்கிறார்கள் . சுசிக்கோ தன்னை அறியாமல் ஆசிரியரிடம் மிகவும் நெருக்கமாகிறாள். அவளுக்கு ஒருசில ஆண்களோடு உறவிருந்தது ஆனால் எதுவும் திருமணம் வரை செல்லவில்லை. ஆசிரியரோடு பழகும் போது அவளோடு படித்த ஒருவனோடு தொடர்பு ஏற்படுகிறது.அவனோடு இருந்தாலும் அவளுக்கு ஆசிரியரின் நினைப்பே வருகிறது. அவளே பல கேள்விகள் கேட்டுக்கொள்கிறாள். அவளோட தனிமைதான் இந்த உறவுக்கு காரணம் என்று நான் நினைக்கின்றான்.ஆசிரியருக்கோ(sensei) அவளை பற்றி அப்படி எண்ணம் இல்லை. அவர் தனது மனைவின் வாழ்கைப் பற்றி கூறுகிறார்.
It seemed as if we had ended up in a time that didn’t exist anywhere.
அனைத்தையும் இருவரும் தெரிந்து கொண்டபின்னர் அவர்கள் "official relationship "என்று தங்களின் உறவை சொல்லிக்கொள்கிறார்கள்.சில ஞாபகங்கள் சில எதிர்பார்ப்புகள் என்று அவர்களின் நட்பு அப்படியே தொடர்கிறது.ஒரே அமர்வில் படிக்கக்கூடிய புத்தகம். மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .கதை அப்படியொன்றும் புதிதானது இல்லைதான் ஆனால் சொல்லிய விதம்தான் சிறப்பு. ஒரு மெல்லிய புன்னையுடன் வாசிக்கக்கூடிய புத்தகம். அங்கங்கே ஹைக்கூ கவிதைகள் கதைக்கு மேலும் அழகு.கதையின் மற்றொரு சிறப்பு அதில் வரும் உணவைப் பற்றிய விவரிப்பு.
Even a cracked pot has a lid that fits.
வாசிக்கலாம்.

Monday, June 10, 2019

The Great Firewall Of China - James Griffiths


சீனாவின் இணைய கட்டுப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததுதான் ஆனால் எவ்வாறு சீன கம்யூனிச அரசு அதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறது என்பது ஒரு புரியாத புதிர்.இந்த புத்தகம் அதற்கு பதில் சொல்ல முயற்சித்திருக்கிறது. இணையம் பரவலாக உபயோகத்தில் வந்தவுடன் பலரும் எதிர்பார்த்தது செய்திகளும் மக்கள் தொடர்பும் அனைவருக்கும் எளிதாகவும் தடையில்லாமலும் கிடைக்குமென்று. அது ஓரளவு நடந்ததென்றாலும் பல நாடுகள் இணையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தன ஆனால் யாரும் சீனாவைப்போல் வெற்றிபெறவில்லை.

சீன இணைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அமெரிக்க நிறுவனங்கள்தான். அவைதான் இணைப்புக்கு தேவையான அனைத்து hardwares மற்றும் சாப்ட்வேர்களை கொடுத்தார்கள்.  சீன அரசு  விரைவிலையே இணையத்தின் சக்தியைப் புரிந்து கொண்டனர். இதில் என்ன கொடுமையென்றால் அந்த சாப்ட்வேர் மற்றும் hardware - லேய in-build சென்சார் இருந்தன . படிப்படியாக கட்டுப்பாடுகளை விதித்தனர். இணைய கட்டுபாட்டிற்கென்றே அரசில் தனி பிரிவுகள் தொடங்கப்பட்டன. இணையம் பெரிதாக அரசும் அதைப் பெரிதாக கட்டுப்படுத்தியது.

சீனாவில் Facebook ,கூகிள் மற்றும் ட்விட்டர் இல்லை .அதற்கு பதிலாக அவர்களால் அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட Baidu , WeChat மற்றும் Alibaba உள்ளன.  இந்நிறுவனங்கள்  மக்களின் அனைத்து இணைய செயல்பாடுகளையும் சீன அரசோடு பகிர்ந்து கொள்கின்றன.  சீன அரசு தனது விதிமுறைகளை ஏற்காத வெளிநாட்டு  நிறுவனங்களை அங்கே இயங்க அனுமதிக்கவில்லை. கூகிளின் கதை அதற்கு நல்ல எடுத்துக்காட்டு .சீன அரசையோ அல்லது சீனர்களைப் பற்றியோ ஏதாவது தவறாகவோ அல்லது மாற்றுக் கருத்தோ வெளியிட்டால் உடனே சீன அரச தீவிர நடவடிக்கை எடுக்கிறது. சீனாவிற்குள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சீன அரசு மாற்று கருத்து கொண்டவர்களை இணையம் மூலம் தண்டிக்கிறது. இதை பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார் ஜேம்ஸ் .

சீனாவின் இந்த இணைய கட்டுப்பாட்டுத் திட்டம் மற்ற சர்வாதிகார அரசுக்கு பெரும் வரப்பிரசாதம். உகாண்டா ரஷ்யா போன்ற நாடுகள் சீனாவிடம் இருந்து இந்த டெக்னாலஜியை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. மற்ற நாடுகளில் மக்கள் இந்த மாதிரியான கட்டுப்பாடுகளை மிகவும் தீவிரமாக எதிர்த்தனர் ஆனால் பெரும்பான்மையான சீனர்கள் அப்படி எதிர்க்கவில்லை. அது ஒரு புரியாத புதிர். ஒரு சில நாட்கள் facebookயும் கூகிளையும் தடை செய்தாலே நாம் வெகுண்டு எழுகிறோம்.
டெக்னாலஜி எப்படியெல்லாம் நமது அனைத்து செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு பெறுகிறது  அதை எவ்வாறு அரசாங்கங்கள் கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த புத்தகத்தை விட தெளிவாக சொல்லிவிட முடியாது .

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் .