Tuesday, September 18, 2018

பெரும் சாதனை .. எலியட் கிப்சோகே (Eliud Kipchoge)!


நான் மிகவும் எதிர்பார்த்த மரத்தான் பந்தயம் இந்த வருட பெர்லின் மரத்தான்தான் அதற்கு காரணம் எலியட் கிப்சோகே. மரத்தான் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னரே உலக சாதனைப் பற்றிய பேச்சுக்கள் தொடங்கின அது மேலும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. Nike-ன் இரண்டுமணிக்குள் மரத்தான் பந்தயத்தில் முதலாவதாக வந்தவர்தான் இந்த எலியட் கிப்சோகே. அது மட்டும் அவரது சாதனை அல்ல. இவர் பங்கேற்ற 11 மராத்தானில் 10ல் முதலிடம். இப்போது பல நிபுணர்கள் இவரே அகச் சிறந்த மரத்தான் வீரர் என்கின்றனர்.
Only the disciplined ones in life are free. If you are undisciplined, you are a slave to your moods and your passions - Kipchoge
எலியட் கிப்சோகே கென்யா நாட்டுக்காரர். நான்கு பிள்ளைகளில் இவரே கடைசி.அம்மா ஒரு ஆசிரியை . தந்தையை சிறு வயதிலேயே இழந்தவர். பள்ளிக்கு தினமும் ஓடியே சென்றார். மற்ற நேரங்களில் பால் விற்று தன்னால் முடிந்த பொருளாதார பங்களிப்பை குடும்பத்திற்கு வழங்கினார். தனது பதினாறாவது வயதில் பேட்ரிக் சங் (Patrick Sang) என்ற பயிற்சியாளரை சந்தித்து தனது ஆர்வத்தை தெரிவித்தார். பேட்ரிக் சங் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் . பேட்ரிக் சங் கிப்சோகேவிற்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அவர்களது கூட்டணி இன்றும் தொடர்கிறது.

எலியட் கிப்சோகே பலமுறை உலக சாதனையை நூலிலையில் தவறவிட்டவர்.இந்த சூழ்நிலையில்தான் பெர்லின் மரத்தானில் மீண்டும் தான் பங்கேற்கப் போவதாக அறிவித்தார்.அப்போதே ரசிகர்கள் இது எலியட் கிப்சோகேவின் உலகசாதனை முறை என்றனர். எதிர்பார்த்தது போல எலியட் கிப்சோகே உலக சாதனை புரிந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காதது அவர் எடுத்துக்கொண்ட நேரம்  - 2:01:39 (மனுசன் மெஷின் மாதிரி ஓடிருக்காப்ல ). இதில் மேலும் ஆச்சிரியமென்றால் இறுதி 17 கிலோமீட்டர் அவர் ஒருவரே தனியாக ஓடியதுதான். அவரோடு எந்த
pacemaker-ம் ஓடவில்லை.  Pacemakers என்பவர்கள் முன்னிலையில் இருக்கும் வீரர்களுக்கு ஊக்கம் தருவதற்காக அவர்களுடைய வேகத்திலேயே சில கிலோமீட்டர்கள் ஓடுபவர்கள். வெவ்வேறு வேகத்திற்கு வெவ்வேறு pacemakers உண்டு. கீழே எலியட் கிப்சோகேவின் பெர்லின் மரத்தான் ஐந்து கிலோமீட்டர் split :

தூரம்          நேரம் எடுத்துக்கொண்டது              மொத்த நேரம்
5km                        14:24                                   14:24
10km                        14:37                                   29:01
15km                        14:36                                   43:37
20km                        14:19                                   57:56
21.0975km                  3:10                                1:01:06
25km                       14:28                                1:12:24
30km                       14:21                                1:26:45
35km                       14:16                                1:41:01
40km                       14:31                                1:55:32
42.195km                   6:07                                2:01:39

அதாவது ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டரைக் கடப்பதற்கு கிப்சோகே எடுத்துக்கொண்டது சராசரியாக 14:24:90 நிமிடங்கள்(!). மேலேயுள்ள புள்ளிவிவரத்தில் மற்றொன்று முக்கியமானது அவர் இரண்டாது பாதியை முதல் பாதியைவிட விரைவாக கடந்தது. இதற்கு முந்திய உலக சாதனை நேரம் 2:02:57 . டெனிஸ் கிமெட்டோ என்பவரால் 2014 பெர்லின் மரத்தானில் நிகழ்த்தப்பட்டது.இப்போது அதை கிப்சோகே 2:01:39-ஆக குறைத்துள்ளார். அதாவது முந்தையதை விட 78 வினாடிகள் குறைவு. இந்த மாதிரி உலக சாதனைகளுக்கிடையே  பெரிய வித்யாசம் வருவது 1967-ற்கு பிறகு இப்போதுதான்.

இந்த பெர்லின் மரத்தானைப் பொறுத்தவரை சிறப்பு என்னவென்றால்  கிப்சோகே எந்த திட்டமுமின்றி ஓடியதுதான். எனக்கு அப்படிதான் படுகிறது. ஏனென்றால் தொடக்கமுதல் இறுதிவரை அவரின் வேகம் குறையவே இல்லை. ஒரு இடத்தில் கிப்சோகேவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை மற்றும் படிப்படியாக pacemakers-சும் ஒருவர்பின் ஒருவராக நின்றுவிட்டனர்.இருந்தும் கிப்சோகே எந்த சலனமும் அடையாமல் ஓடினார் அவரது ஒரே எதிரி நேரம்தான். அவர் சோர்வடைந்ததற்கான எந்த அறிகுறியும்(தோல்பட்டை சுருங்குவது, கால்கள் தடம் மாறுவது ) இல்லாமல் இறுதிக் கோட்டைக்  கடந்தார் . கடந்த பிறகும் நிற்காமல் ஓடி தனது பயிற்சியாளரை கட்டித் தழுவினார். அந்த புகைப்படம் ஒரு ஆவணம் .இனி வரும் வீரர்களுக்கு அது ஊக்கத்தைக் கொடுக்கும்.
Only the disciplined ones are free in life. If you are undisciplined you are a slave to your emotions and your passions - Eliud Kipchoge
எலியட் கிப்சோகே ஒரு தேர்ந்த வாசகர்.அவர் பேசும்போது பல குறிப்போடு பேசுபவர்.தனது ஒவ்வொரு நாள் பயிற்சியையும் எழுதிவைத்துக் கொள்பவர்.தற்போது அவரிடம் பதினைந்து பயிற்சி ஏடுகள் உள்ளன. வருடத்திற்கு ஒன்று . ஆம் அவர் பயிற்சி ஆரம்பித்து பதினைந்து வருடங்களாகின்றன. அவருடைய ஒரு பதிவு  "Motivation + Discipline = Consistency".
இதுவரை கிப்சோகே எந்த ஒரு ஊக்கமருந்து விசயங்களில் சிக்கதாவர். அவ்வாறே வருங்காலத்திலும் இருப்பார் என்று நம்பூவோம்.

பெர்லின் மரத்தான் முடிந்த பிறகு கிப்சோகே கொடுத்த பேட்டியில் வளரும் மரத்தான் வீரர்களுக்கு அவர் கூறிய அறிவுரை  "Of course, training is important. But more important is the passion you put in it. You have to strongly believe that you are able to make it and be able to run this distance. That’s the magic of a marathon."  ஆம் மரத்தான் என்பது ஒரு மேஜிக் தான்.

இந்த சாதனை கொண்டாட பட  வேண்டியது. கொண்டாடுவோம் .

Wednesday, September 12, 2018

ஓ ... செரினா !!

செரினா வில்லியம்ஸ் உலகின் மிக சிறந்த டென்னிஸ் வீரர் என்பதில்  எவருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் அவர் யு எஸ் ஓப்பன் இறுதி போட்டியில்  செய்தது சரியா? என்பதே இப்போது டென்னிஸ் ரசிகர்களுக்கிடையே எழும் பெரும் கேள்வி. செரினா வில்லியம்ஸ் விளையாட்டிற்கு அப்பாற்பட்டு பல சமூகம் ,இனம் மற்றும் பெண்ணியம் பற்றி தொடர்ச்சியாக பேசியும் எழுதியம் வருபவர்.  பலவிதமான இன்னல்களுக்கிடையே வில்லியம்ஸ் சகோதரிகள் டென்னிஸ் உலகத்தை தங்களின் பக்கம் திருப்பி அதை தங்கள் கைகளுக்குள் வைத்திருந்தனர் என்றால் மிகையாகாது.
  • பயிற்சியாளர் சைகைமூலம் பயிற்சி அளித்தது.
  • டென்னிஸ் racquet-ஐ சேதப்படுத்தியது .
  • நடுவரை கள்ளன் என்று அழைத்து .
மேற்கூறிய அனைத்தும் போட்டி விதிகளின்படி  தவறு. நடுவர் செய்தது விதிகளின்படி சரியே. பிறகு ஏன் செரினா இவ்வளவு கோபப்பட்டார் என்பது புரியாத புதிரென்றாலும் அதற்கு சில காரணங்கள் என்று நான் நம்புவது முதலில்  பயிற்சியாளர் சைகைமூலம் பயிற்சி அளித்தார் என்பதை செரினா ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பயிற்சியாளரை பார்க்க வில்லையென்றாலும் பயிற்சியாளர் செய்தது தவறுதான். செரினாவின் கோபத்திற்கு இன்னொரு காரணம் பல ஆண் வீரர்கள் தங்கள் பயிற்சியாளர்களால் பலமுறை பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் அதுமட்டுமல்லாமல்  பல ஆண் வீரர்கள் மிக மோசமாக நடுவரைத்  திட்டியுமுள்ளனர்  அப்போதெல்லாம் விதிகள் இவ்வளவு தீவிரமாக நடுவார்களால் பின்பற்றபடவில்லை.

நடுவர் கார்லோஸ் இதற்கு முன்னரும் பல முன்னணி வீரர்களுக்கு விதிகளின் படி தண்டனை வழங்கியுள்ளார். நாம் நடுவரை இந்த போட்டியில் குறை சொல்ல முடியாது . மற்ற நடுவர்கள் விதியை சரியாக பின்பற்றவில்லை என்பதற்காக கார்லோஸ் செய்தது தவறென்று ஆகாது. இங்குதான் ITF(International Tennis Federation) ,ATP (The Association of Tennis Professionals) மற்றும் WTA(The Women's Tennis Association)  விதிகள் இருபாலருக்கும் சமமாக பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதி செய்யவேண்டும்.

செரினா தனது மகளை இதில் இணைத்து சரியல்ல. அது தேவையில்லாதது. அவரின் மகளே அவரின் இச்செயலை ஏற்றுக்கொள்ளமாட்டாள். மேல கூறியதுபோல டென்னிசிலும் பெண்களுக்கே அதிக  கட்டுப்பாடுகள் அதை உடைத்தெறிவதே செரினாவின் நோக்கமென்றால் அதை இவ்வாறு செய்வது சரியல்ல. இந்த சம்பவங்களில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்தது அது நயோமி ஒசாக்காவின் அற்புதமான ஆட்டத்தை  மக்கள் மறந்தது. இந்த இறுதி போட்டியை ஒசாக்காவிற்காகத்தான் நான் பார்த்தேன் ஏனென்றால் அவர் ஒரு ஜப்பானியர். ஆண்களில் நிஷிகோரியையும் நான் follow செய்வதுண்டு.

ஒசாக்காவின் கதையும் செரினாவை போன்றதுதான். அமெரிக்க தந்தைக்கும் ஜப்பானிய தாயிற்கும் பிறந்தவர் ஒசாக்கா. அவருக்கு ஒரு அக்காவும் உண்டு. அவரும் டென்னிஸ் வீரர்தான்.ஜப்பானில் இவ்வாறு கலப்பு திருமணத்தின் குழந்தைகளை "half " (அரை ) ஜப்பானியர் என்று அழைப்பதுண்டு. ஜப்பானிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை அமெரிக்காவிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த சூழ்நிலையில்தான் ஒசாக்காவும் அவரது சகோதிரியும் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்கள். ஒசாக்கா செரினாவின் தீவிர ரசிகை . செரினாதன் அவருக்கு ரோல் மாடல்.ஒசாக்கா சகோதரிகள் சில வருடங்களுக்கு முன்னரே டென்னிஸ் ஆர்வலர்களால் அடுத்த வில்லியம்ஸ் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள். ஒசாக்காவின் மிக உன்னதமான தருணம் இப்படி அழுகையிலும் கோஷத்தாலும் நிகழ்ந்தேறியது வருத்தமளிக்கிறது.

டென்னிஸ் நிர்வாகிகள் செரினாவை தண்டித்தது சரியென்றாலும் விதிகள் இருபாலருக்கும் சமமாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.செரினா நடுவர் கார்லோஸிடம் மன்னிப்பு கேட்ப்பாரெனில் அதுவே அவர் அவர் பெயருக்கு செய்யும் பெரும் சிறப்பு.

Thursday, September 6, 2018

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage - Haruki Murakami


Everything has boundaries. The same holds true with thought. You shouldn't fear boundaries, but you should not be afraid of destroying them. That's what is most important if you want to be free: respect for and exasperation with boundaries.
அது என்னவோ தெரியல  ஹருகி முரகாமி புத்தகம் என்றால் என்னை அறியாமலே வாசிக்க ஒரு ஆர்வம் . அந்த ஆர்வத்தில்தான் இந்த புத்தகத்தைப்  பார்த்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். இவருடைய முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு விதமான dullness இருக்கும் இதிலும் அப்படித்தான். சுக்குரு ஒரு என்ஜினீயர் ரயில் நிலயம் வடிவமைப்பவன். முப்பத்தியாறு வயதானவன்.அவனது வாழ்கை ஒரேவிதமான வழக்கங்களை (monotonous routine ) கொண்டது. அவனது தற்போதைய காதலி அவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவனது கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறாள். சுக்குரு தனது நெருங்கிய நண்பர்கள் தன்னை திடீரென ஒதுக்கி வைத்துவிட்டார்கள் தானும் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை என்கிறான்.
As we go through life we gradually discover who we are, but the more we discover, the more we lose ourselves.
சுக்குரு தன்னிடம் எந்த தனித்திறமையும் கலையறிவும் இல்லை என்று நம்புபவன்.மற்றவர்களோடு சரியாக பழகாதவன். அவர்கள் ஐந்துபேர் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்.அவர்கள் ஒரு கட்சிதமான பென்டகன் (Pentagon )போல. அவர்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி தங்களுக்குள் யாரும் dating செய்யக்கூடாது.சுக்குருவை தவிர அனைவரின் பெயர்களிலும் வண்ணத்தின் பெயருள்ளது. அதுவே தன்னை அவர்களிடமிருந்து பிரித்துக்காட்டுகிறது என்று நினைக்கிறான். ஏன் அவர்கள் தன்னை திடீரென ஒதுக்கிவைகிறீர்கள் என்று கேட்க தைரியமில்லாதவன்.
Talent is like a container. You can work as hard as you want, but the size will never change. It'll only hold so much water and no more.
காதலியின் உந்துதலால் பதினாறு வருடங்களுக்கு பிறகு தனது பால்ய நண்பர்களை ஒவ்வொருவராக சென்று பார்க்கிறான்.ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் நடந்தவற்றை விளக்குகிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் அவனுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் ஒற்றுமைக்காக அவன் பலிகடாக்கப்படுகிறான்.ஒன்றன்பின் ஒன்றாக தனது ஆழ்மனதில் இருந்த ரகசியங்களும் அவனுக்கு வெளிப்படுகிறது. தான் யார்? தனது கடந்த காலம் எத்தகையது ? என பல கேள்விகள் அவனுள் எழுகிறது.அவன் தன்னைப்பற்றி மேலும் பல விவரங்களை தெரிந்துகொள்கிறான்.
You can hide memories but you can't erase the history that produced them.
மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம் ஹைடா. நீச்சல் குளத்தில் சந்தித்து நண்பனானவன். அவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகுகிறார்கள். ஹைடவும் திடீரென அவனை விட்டுச் செல்கிறான். அவன் ஏன் அப்படி செய்தான்? அவனுக்கு இவன்மேல் காதலா? அல்லது சுக்குருவின் கனவு ஹைடாவிற்கு எவ்வகையிலோ தெரிந்தா? பல கேள்விகளுடன் அந்த உறவு முடிகிறது.ஹைடாவிற்கும் மற்ற நான்கு நண்பர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றபோது ஏன் இந்த ஹைடா கதாப்பாத்திரம் இடையில் வருகிறது?
No matter how honestly you open up to someone, there are still things you cannot reveal. 
முரகாமி தனக்கே உரிய பாணியில் பலவித உளவியல் விசயங்களை சுக்குரு மூலம் விவரித்துள்ளார். ஒருவனை அவன் யாரென்று எப்படி மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதையும் அந்த நான்கு நண்பர்களின் முடிவுகொண்டு விவரித்துள்ளார்.கனவில் வரும் கற்பழிப்புகள் மற்றும்  தன் புதிய ஆண் நண்பருடன் உறவு பற்றிய விவரங்கள் ஏன் என்றே தெரியாமல் தவிக்கும் சுக்குரு. ஏன் இந்த கனவுகள் வந்துகொண்டே இருக்கிறது என்று அவனுக்கு புரியவே இல்லை. இந்த பயணம் மற்றும் சந்திப்புக்கள் அவனுக்கு அமைதி தந்ததா ?  என்ற கேள்வி தொங்கிக்கொண்டே இந்த நாவல் முடிகிறது. முரகாமிக்கே உரிய நடையில் முடிகிறது. என்னைப் பொறுத்தவரை சுக்குரு தனது மன அமைதியை கண்டுகொண்டான் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவன் தேடல் நிற்கவே நிற்காது. அவனுடைய குணம் அப்படிதான் அவன் அதை அறியாவிட்டாலும்.
The human heart is like a night bird. Silently waiting for something, and when the time comes, it flies straight toward it.
எல்லா முரகாமியின் நாவலிலுள்ளது போல இதிலும் இசை முக்கிய கதாப்பாத்திரம்.இந்த நாவலில் பிரான்ஸ் லிஸ்ஸ்ட்டின்  (Franz Liszt ) Le mal du pays என்ற இசைக்கோவை வந்து கொண்டே இருக்கிறது. இந்த இசைக்கோவை  "Years of Pilgrimage" என்ற தொகுப்பில் உள்ளது. அற்புதமான பியானோ இசை இந்த நாவலை வாசிக்கும்போது பெரும்பாலும் நான் இந்த இசையைக் கேட்டேன் . நாவலில் இரண்டு விசயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது . முதலாவது சுக்குருவின் வேலை - இரயில் நிலையம் வடிவமைப்பது. ஜப்பானில் ஒவ்வொரு ரயில் நிலையமும் ஒரு குட்டி கவிதையைப் போல அதிலும் நாகனோவிற்கு செல்லும் வழியிலுள்ள நிலையங்கள் மேலும் அழகு.சுக்குரு தன் வேலையை விரும்பி செய்கிறான். இரண்டாவது அவன் வார இறுதியில் தவறாமல் செய்யும் நீச்சல். நீச்சல் அவனுக்கு ஒரு புது உலகத்தைக் காட்டுகிறது. நீச்சலைப் பற்றி முரகாமி மிகவும் அழகாக எழுதியுள்ளார்.
நாவலில் சில இடங்களில் தட்டையான எழுத்துநடை இருந்தாலும்  பல இடங்களில் கவித்துவமான எழுத்துநடை நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

Monday, September 3, 2018

Sadako's Cranes - Judith Loske


சடகோ சசாகி ஜனவரி  7 1943-ல்  ஹிரோஷிமாவில் பிறந்தவர். அணு குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் பிரபலமானவர். குண்டுவீச்சால் லுகேமியா அவருக்கு வந்தது. மருத்துவமனையில் இருந்தபோது  அவர் ஜப்பானிய நம்பிக்கையின்படி நோய் குணமாவதற்காக   பேப்பர் கொக்குகள் செய்தார். பிற்காலத்தில்  பேப்பர் கொக்குகள் அமைதியின் சின்னமாக மாறின.  அவர் பிரபலமானதற்கு அதுவே முக்கிய காரணம். இது அவரின் கதை.

நாங்கள் ஜப்பான் சென்றபோது ஹிரோஷிமாவிற்கு சென்றோம். ஹிரோஷிமாவை வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது. அதுவும் அந்த இடிந்த கட்டிடமும் அருங்காட்சியமும் என்றும் நினைவில் நிற்பவை.நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கும் அமைதி பூங்காவிற்கும் நடந்தபோது எங்கும் நாங்கள் கண்டது பேப்பர் கொக்குகள்தான். மாணவர்களும் சுற்றுலா பயணிகளும் பேப்பர் கொக்கு மாலைகளை பூங்காவைச் சுற்றி தொங்கவிடுகிறார்கள். அந்த பூங்காவில் சடகோவின் சிலை உள்ளது.

இது குழந்தைகளுக்கான புத்தகம். மிகவும் அழகான வரைபடங்கள் கொண்டது.  1954 ஆகஸ்ட் ஆறாம் தேதி வழக்கம்போல சடகோ விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென பெரும் சத்தத்துடன் கரும்புகை பரவியது . முதலில் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. அனைத்தும் இயல்பாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் 1954-ல் கழுத்தில் கட்டி தோன்றுகிறது.தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் பிரச்சனைகள் வருகிறது .இறுதியாக மருத்துவர்கள் அவளுக்கு  லுகேமியா இருப்பதாக கொண்டுபிடிக்கிறார்கள் . மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அவளது தந்தை பேப்பரில் கொக்கு செய்தால் குணமாகலாம் என்கிறார். அந்த நம்பிக்கையில் அவள் கொக்கு செய்ய ஆரம்பிக்கிறாள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொக்குகளை செய்தால். இறுதியில் சிகிச்சை பலனின்றி 1955 அக்டோபர் 25 அன்று மரணமடைகிறாள். அப்போது அவளுக்கு வயது 12.

இன்று அமைதியின் அடையாளமாக இந்த கொக்குகள்  இருக்கின்றன.உலகம் முழுவதும் குழந்தைகள் பேப்பரில் கொக்குகள் செய்து ஹிரோஷிமாவிற்கு அனுப்பி வைகின்றனர்.அணு ஆயுதம் ஒரு பெரும் துயரம். இந்த புத்தகம் குழந்தைகளுக்கு ஒரு பாடம். அந்த துயரத்தை எஸ்.ராமகிருஷ்ணன் மிக தெளிவாக கீழ் காணும் காணொளியில் எடுத்துரைக்கிறார் .


அவசியம் அனைவரும்  தெரிந்துக் கொள்ளவேண்டிய விசயம்.

நன்றி :குலுக்கை