Wednesday, May 9, 2018

Langston Hughes - கவிதைகள்


கவிதைக்கும் எனக்கும் நீண்ட தூரம் .ஆனால் 2017-ல்  ஒரு முடிவு எடுத்து தினமும் ஒரு கவிதை வாசிக்க ஆரம்பித்தேன். பல கவிதைகள் எனக்கு புரியவில்லை இருந்தாலும் விடாமல் படித்தேன். கவிதை எவ்வளவு சக்தி வாய்ந்தது. கவிதை வாசிப்பு  ஒரு விதமான பரவசத்தை என்னுள் உண்டாகியது . எனக்கு கவிதையை ரசிக்க கற்றுக்கொடுத்தது யாரென்றால் ஒருவர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர் தொடர்ந்து கவிதை பற்றி பேசியும் எழுதியும் வருகிறார். இன்னொருத்தர் அழகியசிங்கர். இவரும் தொடர்ந்து கவிதைகள் மற்றும்  அவை சம்பந்தமான தகவல்களை தன் முகப்புத்தகத்தில் வெளியிட்டு வருகிறார்.

தமிழ் கவிதைப் புத்தகம் நான் சென்ற நூலகத்தில் இல்லை. அதனால் நூலகத்தில் ஆங்கில கவிதை புத்தங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். பல ஆங்கில கவிதை நூல்கள் இருந்தன. முதலில் எனக்கு தெரிந்த கவிஞர்களின் புத்தகத்தைத் தேடினேன். எனக்கு தெரிந்த என்றால் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்ததுதான் பெரும்பாலும் - ஷேக்ஸ்பியர், வெர்டஸ்ஒர்த் மற்றும் ராபர்ட் பிரஸ்ட் .  அவர்களின் கவிதைகள் தெரியுமா என்று கேட்டல் இரண்டே கவிதைகள்தான் மனதிற்கு வருகிறது .ஒன்று ராபர்ட் பிரஸ்ட் எழுதிய  "The Road Not Taken" மற்றும்  வெர்டஸ்ஒர்த்தின் "Daffodils". சிறுவர்கள் பக்கம் சென்று தேடியபோது  கிடைத்த முதல் புத்தகம்  "Poetry For Young People  - Langston Hughes" .  சிறிதாக இருந்ததால் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன் .
Langston Huges
photo courtesy - Wikipedia

லாங்ஸ்டன் ஒரு ஆப்ரிக்கா அமெரிக்கர்.  பெப்ரவரி 1 1920-ல்  பிறந்தவர் . அப்பா விட்டுச்சென்ற பிறகு பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்தவர். பாட்டியின் கதையில்தான் தான் அனைத்தையும் கண்டடைந்ததாக அவர் பின்னர் கூறினார். இவரின் பல கவிதைகளில் அந்த பாட்டி வருகிறார். இந்த புத்தகத்தில் அவரின் மிகப் பிரபலமான கவிதைகள் சில உள்ளது .

எனக்கு பிடித்த லாங்ஸ்டனின் கவிதைகள்

Youth

We have tomorrow
Bright before us
Like a flame.

Yesterday
A night-gone thing,
A sun-down name.

And dawn-today
Broad arch above the road we came.

We march!

I Dream a World

I dream a world where man
No other man will scorn,
Where love will bless the earth
And peace its paths adorn
I dream a world where all
Will know sweet freedom's way,
Where greed no longer saps the soul
Nor avarice blights our day.
A world I dream where black or white,
Whatever race you be,
Will share the bounties of the earth
And every man is free,
Where wretchedness will hang its head
And joy, like a pearl,
Attends the needs of all mankind-
Of such I dream, my world!

Mother to Son

Well, son, I’ll tell you:
Life for me ain’t been no crystal stair.
It’s had tacks in it,
And splinters,
And boards torn up,
And places with no carpet on the floor—
Bare.
But all the time
I’se been a-climbin’ on,
And reachin’ landin’s,
And turnin’ corners,
And sometimes goin’ in the dark
Where there ain’t been no light.
So boy, don’t you turn back.
Don’t you set down on the steps
’Cause you finds it’s kinder hard.
Don’t you fall now—
For I’se still goin’, honey,
I’se still climbin’,
And life for me ain’t been no crystal stair.

இவரின் கவிதைகள்  பெரும்பாலும் சமூகநீதி மற்றும் இன அடக்குமுறை பற்றியதாக உள்ளது.இவருடைய மற்ற கவிதைகளையும் படிக்க வேண்டும் .  அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய கவிஞர். 

Monday, May 7, 2018

The Golden Legend - Nadeem Aslam


நூலகத்தில் எதார்த்தமாக பார்த்தவுடன் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இந்த புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கதையைப் பற்றி ஒன்றும் தெரியாது .  படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது இவ்வுலகு எவ்வளவு பயங்கரமானாலும் மனிதம் ,காதல் மற்றும் அன்பு என்றும் வெல்லும். கதை நடக்கும் இடம்  கற்பனை நகரமான  சமனா (zamana). இஸ்லாமியர்கள் பெரும்பான்மை ஆனால் அவர்களுக்குள்ளும் பிரிவினை. இங்கு கிறிஸ்தவர்கள் மிகவும் கீழ்த்தனமாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கென்று எல்லாமே தனி .  இந்த சூழ்நிலையில்தான் மசூத் மற்றும் நர்கிஸ் தம்பதியர் ஒரு கிறிஸ்தவ குடும்பத்திற்கு வெகுநாட்களாக உதவி செய்து வந்தனர். மசூத் மற்றும் நர்கிஸ் இருவரும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள் . அவர்கள் கிறிஸ்தவ பெண்ணான ஹெலனை படிக்க வைத்து தங்கள் சொந்த பெண்போல நடத்துகிறார்கள்.
This world is the last thing the God will ever tell us
மசூத் புத்தகங்களை புது கட்டிடத்திற்கு மாற்றிக்கொண்டிருக்கும் போது அமெரிக்கன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்படுகிறான். இந்த சம்பவம் நர்கிஸ் மற்றும் ஹெலன் குடும்பத்தையே தலைகீழாக மாற்றி அமைக்கிறது. நர்கிஸ் அந்த அமெரிக்கனை மன்னிக்க வேண்டுமென்று அரசாங்கம் நிர்பந்திக்கிறது . அவளோ அதில் எதிலும் தனக்கு விருப்பமில்லை என்று விலகிச்செல்கிறாள் . ஆனால் அரசாங்கம் அவளை மிரட்டுகிறது. மற்றொரு பக்கம்  இஸ்லாமியர்கள் நர்கிஸ் அவனை மன்னிக்கக்கூடாது  என்று மிரட்டுகிறார்கள் . இதற்கிடையில்  கிறிஸ்தவரான லில்லி (ஹெலனின் தந்தை)  மற்றும் முஸ்லீம் விதவையான ஆயிஷாவின் காதல் .இந்தக்  காதலால் சமனா கலவரபூமியாக மாறுகிறது. நர்கிஸ் ஹெலன் மற்றும் இம்ரான் தங்கள் வீட்டிலிருந்து தப்பித்து மசூத் மற்றும் நர்கிஸ் கட்டிய தீவிற்கு செல்கிறார்கள் .அங்கு ஹெலனும் இம்ரானும் காதல் கொள்கிறார்கள். இந்த இருவரின் கடந்த காலம் வன்முறையால் நிறைந்தது. மதத்தைத் தாண்டின மனிதநேயம் அவர்களை ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவுகிறது.

அந்த தீவு ஒரு குறியீடு . அந்த  தீவில் உள்ள கட்டிடங்கள் மத நல்லிணக்கத்திற்காகக்  கட்டப்பட்டவை ஆனால் அது முழுதாகக்  கட்டிமுடிக்கப்படவில்லை . இறுதியில் ஒருவரும் அங்கு தங்கவில்லை. அங்குதான் யாரும் தங்களைத் தேட மாட்டார்கள் என்று அவர்கள் மூவரும் அங்கு செல்கிறார்கள். அவர்கள் அங்கு தங்கியிருந்த நாட்கள் மிகவும் மகிழ்ச்சியானவை . இம்ரான் தன் கதையைச் சொல்கிறான். காஷ்மீரில் நடந்த மற்றும் நடக்கும் பிரச்சனைகளை ஆசிரியர் அவன் மூலம் விவரிக்கிறார்.  இந்திய இராணுவத்தின்  (தீய)செயல்களைப்  பெரிதாக விளக்குகிறார்.

இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரம் கிறிஸ்தவ ஆயர் சாலமன். அவர் இராணுவ அதிகாரியிடம் கூறும் பதில் முக்கியமானது -
Major Burhan : I would do anything for Pakistan
Bishop Soloman : For the Pakistani state, perhaps. Not the Pakistani people
பாகிஸ்தானிய அரசு அமெரிக்க அரசின் அடிமைபோல செயல்படுவதாக காட்டப்படுகிறது . அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆயர் சாலமன்  நீதிமன்றத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறார். ஏன் நீதிமன்றத்தில்? அவருக்கு தெரியும் அங்கு அவருக்கும் அவரை சார்ந்தவருக்கும் நீதி கிடைக்காதென்று.

மசூதின் வீடு பலவிதமான பொருட்களால் அலங்கரிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ஹாகிய சோபியா மற்றும் கொர்டோபா மசூதியின் மாதிரி வடிவங்கள். இந்த இரண்டும் இஸ்லாமிய படையெடுப்புக்கு முன்பு கிறிஸ்தவ ஆலயங்கள். ஏன் ஆசிரியர் இந்த இரண்டு கட்டிடங்களை மட்டும் தேர்ந்தெடுத்தார் ?  நர்கிஸின் ரகசியம் இதில்தான் உள்ளதா? அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் ஏனென்றால் நர்கிஸும் கிறிஸ்தவள் சூழ்நிலை காரணமாக இஸ்லாமியராக வாழ்கிறாள்.  மற்றொரு முக்கியமான பொருள் " That They Might Know Each Other" என்ற புத்தகம். தலைப்பே ஒரு விதமான கேள்வியை எழுப்புகிறது. மசூதிற்கு நர்கிஸின் ரகசியம் தெரிந்திருக்கலாம். 

எளிய மொழிநடை . பல இடங்களில் கவிதை ததுமும் வாக்கியங்கள் வாசிப்பை மேம்படுத்துகிறது.  இந்த உலகின் வீழ்ச்சிக்கிடையிலும் அதில் உள்ள இயற்கையின் அழகை ஆசிரியர் மிக அழகா எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் இன்றைய பாகிஸ்தான் எப்படி உள்ளது என்று புரிந்துகொள்ள ஓரளவு  உதவும்.  கிறிஸ்தவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை வாசிக்க நம்ப முடியவில்லை ஆனால் அதுதான் உண்மை. 

நல்ல கதை.வாசிக்கலாம்.

Thursday, May 3, 2018

யூகி கவாச்சி (Yuki kawauchi)

Photo Credit : Wikipedia
எல்லா வருடமும் நான் பாஸ்டன் மாரத்தான் போட்டியை மிகவும் எதிர்ப்பார்ப்புடன் பார்ப்பேன். இந்த வருடமும் அதே மாதிரி பார்த்தபோது எனக்கு ஒரு ஆச்சிரியம் காத்திருந்தது . அது ஜப்பானின்   யூகி கவாச்சி வெற்றி பெற்றததுதான்.  இதற்கு முன்பு இந்தப்  பெயரைக்  கேள்விப்பட்டதில்லை.  ஜப்பானில் நல்ல நெடுந்தூர ஓட்டக் கலாச்சாரம் இருக்கிறது என்பது எனக்குத்  தெரியும் ஆனால் ஜப்பானியர் ஒருவர் இந்த மாதிரிப்  பெரிய மரத்தானை வெல்வதை நான் பார்ப்பது முதல் முறை.

 யூகி கவாச்சி வெற்றிப் பெற்ற பிறகு அவரது பெயரை கூகிளில் தேடினேன். அப்போதுதான் புரிந்தது இந்த வெற்றிக்கு அவர் தகுதியானவர் மட்டுமல்ல அவர் ஒரு ஓடும் இயந்திரமென்று. அவர் 2017-ல் மட்டும் 12 மாரத்தானில் ஓடியுள்ளார்!. அனைத்துமே 2 மணி 20 நிமிடங்களுக்குள்!. ஒருவர் ஒரு வருடத்திற்கு ஆறு அல்லது ஏழு மாரத்தான் ஓடுவதே மிகவும் கடினம். உடம்பு தனது பலத்தை மீட்க சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும். ஆனால் யூகி கவாச்சி இப்படி பல மாரத்தான் ஓடுவது எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது.

இந்த பாஸ்டன் மாராத்தானில் யூகி கவாச்சி தொடக்கத்திலேயே மிகவும் வேகமாக ஓடினார். நான் நினைத்தேன் ஐந்து அல்லது ஆறு  கிலோமீட்டருக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியாதென்று ஆனால் இறுதிவரை மிகவும் தெளிவாக தனது வேகத்தைச் சரி செய்து கொண்டு போட்டியை வென்றார். ஐந்து முறை பின்னில் இருந்து முன்னுக்கு வந்தார். இப்படி நடப்பது மிகவும் அபூர்வம்.  மாரத்தான் நாளன்று பாஸ்டனில் குளிரும் மழையும் அது  வீரர்களுக்கு மிகவும் சவாலானது.  ஆனால் அதுவே தனக்கு வெற்றியை தந்தது என்றார் யூகி கவாச்சி. இந்த வருடம் கென்யர்களில் பலர் முதல் பத்தில்  இல்லை .  

யூகி கவாச்சின் வெற்றி ஆசிய மாரத்தான் வீரர்களுக்கு பெரிய boost.