Monday, November 6, 2017

கறுப்புக் கொடியின் கீழ் ( Under The Black Flag - Sami Moubayed)


நான் படித்த பத்திகள் ,கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் ISIS பற்றிய சிறந்த அறிமுகம் இந்த புத்தகம் தான். ஆசிரியர் ஒரு சிரியன் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார் . புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் இந்த புத்தகமானது   IS மற்றும் caliphate-ன் சித்தாந்தம் என்ன  என்பதை  ஒட்டோமான் காலம் முதல் இன்று வரை உள்ள இஸ்லாமிய வரலாறு  கொண்டு விவரிக்கும் என்கிறார் . அவ்வாறே இந்த புத்தகம் உள்ளது.

caliphate எவ்வாறு உருவானது ? குர்ஆனில் caliph என்ற வார்த்தை மூன்று தடவை வருகிறது .முதலாவது Surat al -Baqara (Verse 30)  இதில் ஆதாமை முதல் khalifa என்று  கடவுள் கூறுகிறார்.   இரண்டாவது Surat Sad (Verse 26)இதில் தாவீது அரசனை இரண்டாவது khalifa என்று அழைக்கிறார்.மூன்றாவது   Surat al -Noor (Verse 55) இதில்
God has promised those of you who have attained to faith and do righteous deeds that, of a certainty, He will make them Khalifa on earth, even as He caused [some of ] those who lived before them to become Khalifa; and that , of a certainty, He will firmly establish for them the region which He has been pleased to bestow on them; and that, of a certainty, He will cause their erstwhile state of fear to be replaced by a sense of security [seeing that] the worship Me [alone]. not ascribing divine powers to aught beside Me. But all who, after [having understood] this, choose deny the truth -it is they, they who are truly iniquitous!
இதுவே caliphate-ன் அடித்தளம்.  தொடக்கம் முதலே caliphate குருதி கொட்டிய வரலாறு கொண்டது.  முதல் caliph-ஐ தவிர அடுத்து வந்த மூன்று caliph-களும் கொல்லப்பட்டனர்.   யார் caliph ஆக வேண்டும் என்பது மிக பெரிய பிரச்சன்னையாக மாறி ஒரு கட்டத்தில் அது இஸ்லாமை ஷியா ,சுன்னி  என்று  இரண்டாக பிரித்தது. இன்று வரை அந்த பிரிவு தொடர்கிறது.  அதன் பிறகு இஸ்லாம் பல பிரச்சன்னைகளை சந்தித்தது.

எவ்வாறு வஹ்ஹாபிசம் உருவானது அது எவ்வாறு  இன்றைய பல ஆயுதமேந்திய போராட்டக் குழுக்களுக்கு (அல் கொய்தா,ஜபாட் அல் நுஸ்ரா ,ISIS   )சித்தாந்த முறையில் உதவியது என்பதை ஆசிரியர் மிக தெளிவாக விளக்குகிறார்.  வஹ்ஹாபிசம் உருவானதற்கு முக்கிய காரணம் இபின் தய்மியா (Ibn Taymiya).இவர்தான் இஸ்லாமியர்களை caliph ஆள்வது  அவசியம் அதற்கு ஜிகாத் செய்ய வேண்டும் என்று தனது எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்கள் மூலம் அறைகூவல் விடுத்தார். அதாவது  " It is obligatory to know that the office in charge of commanding over the people (i.e the Khalifa) is one of the greatest obligations of religion. In fact there is no establishment of religion except by it. This is the opinion of the salaf (first Muslisms)." 

சிரியாவில்  2011-ல் இருந்து நடந்து கொண்டிருக்கும் போருக்கு பின்னாலிருக்கும்  அனைத்து போராட்ட குழுக்களும் தங்களது கொள்கைகள் ,சித்தாந்தம் அனைத்தும் முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim  Brotherhood ) என்ற சிரிய (syria ) அமைப்பிலிருந்துதான் வந்தது .1940-ல் இருந்து இந்த குழுக்களுக்கு இடையே  பல்வேறு  பிரச்சனைகள் இருந்தாலும் இரண்டு சம்பவங்கள் மிகவும் முக்கியமானது ஹமாவில்  (Hama ) 1964 (முஸ்லீம் சகோதரத்துவம், அளவிட்ஸ் (Alawites ) மற்றும் பாதிஸ்ட்ஸ்  (Baathists) மோதல்) மற்றும் 1982-ல் நடைபெற்ற வன்முறை. அதிலும் 1982-ல் நடந்து மிகக் கொடூரமானது .  இன்றைய ஜிஹாதி வன்முறைகளுக்கு இந்த சம்பவம் முக்கிய பங்கு வகிப்பதாக  ஆசிரியர் கூறுகிறார் . இந்நிகழ்வே ஜிகாதி குழுக்கள் சிரியாவின்  அசாத் குடும்பத்திற்கு எதிராக தீவிரமாக போராட வழிவகுத்தது.

அதற்கு பிறகு எவ்வாறு அல் கொய்தா உருவானது அதில் அல் சர்காவி (Al -Zarqawi ) எப்படி மற்றவர்களை விட வித்யாசமாக (சிரியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு இவன் தான் காரணம்)  செயல்பட்டு தன்னை இஸ்லாமிக் ஸ்டேட்டின் முதல் எமிர் என்று  அழைத்துக்கொள்ளும் அளவிற்கு உயர்ந்தான்  என்று ஆசிரியர் விளக்குகிறார் . அபு பாக்கர் அல் பாக்தாதியின்  (Abu Bakr al-Baghdadi) சிறு வயது வாழ்கை மற்றும் அவன் எவ்வாறு ஜிகாதி இயக்கத்தில் இணைந்தான் எனபதையும் ஆசிரியர் விளக்குகிறார். இந்த இருவரைப் பற்றி தெரிந்து கொள்வது இன்றைய ஜிகாதி இயக்கங்களைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.

ஷியா முஸ்லிம்களுக்கு ஒரு பெரும் தலைவர் இருந்துகொண்டே இருக்கிறார். அதாவது முதலில் ஈரானின் ருஹால்லாஹ் க்ஹோமெய்னி  (Ruhollah Khomeini) அவருக்கு பிறகு அலி காமேனி (Ali Khamenei) மற்றும் பல தலைவர்கள் ஷியா மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள் .   ஆனால் சுன்னி முஸ்லிம்களுக்கு ஒருங்கிணைத்த தலைவர் இல்லை  இதை  மிக தெளிவாக பயன்படுத்திக்கொண்டு தன்னை caliph என்று அபு பாக்கர் அல் பாக்தாதி (Abu Bakr Baghdadi) அறிவித்துக்கொண்டு அதற்கேற்ப எல்லைகளை விரிவுபடுத்தியது  ISIS.

ISIS ஈராக் மற்றும் சிரியா நிலப்பரப்புகளை அக்கிரம்பித்த பிறகு நடந்த விஷயங்கள் நாம் அறிந்ததே. ISIS எவ்வாறு தனக்கென்று ஒரு மீடியா குழுவை  ஏற்படுத்தி அதை திறம்பட செயல்படுத்தியது  என்பதை  எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறார் . குறிப்பாக அது  எவ்வாறு  சமூக வலைத்தளங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஐரோப்பிய மற்றும் அமெரிக்க இளைஞர்களை போர்முனைக்கு அழைத்தது என்று விவரமாக கூறுகிறார் . ISIS-ன் "தஃபீக் (Dabiq)" என்ற டிஜிட்டல் இதழ் இஸ்லாமியரிடையே பெரும் வரவேற்பைப்  பெற்றது .

இரண்டு நாட்களுக்கு முன் (04-11-2017) செய்தித்தாளில் சிரிய படைகள் ISIS-ன் இறுதி நிலப்பரப்பை கைப்பற்றினர் என்ற செய்தி இருந்தது. ISIS இன்று தோற்றாலும் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பல வருடங்களுக்கு நீளும்.  எவ்வாறு ஒரு சிறு அமைப்பு  இவ்வளவு பெரிய நிலப்பரப்பை இவ்வளவு நீண்ட காலம் அனைத்து எதிர்ப்பையும் மீறி ஆட்சி செய்தது என்பதை தெரிந்து கொள்ள இந்த புத்தகம் மிகவும் உதவும் .

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். 

ISIS பற்றி மேலும் தெரிந்து கொள்ள 

Wednesday, October 25, 2017

சீன அரசின் சமூக நன்மதிப்பு திட்டம் ( China's Social Credit System)

எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது - நம்முடைய அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு அதற்கு மதிப்பெண் வழங்கி அம்மதிப்பெண்ணிற்கேற்றார் போல் ஒருவனுக்கு அரசின் சேவை அமையுமென்பது . இதுதான் சீனாவில் 2020-ல் நடக்கவுள்ளது. சீன அரசு மக்களின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை இத்திட்டத்தின் மூலம் மேம்படும் என்கிறது.  இத்திட்டத்தின் கொள்கை "It will forge a public opinion environment where keeping trust is glorious. It will strengthen sincerity in government affairs, commercial sincerity, social sincerity and the construction of judicial credibility." -இவ்வாறு கூறுகிறது. ஆனால் இத்திட்டம் இதற்கு மட்டும்தான் பயன்படும் என்பது மிக பெரிய கேள்வி.

சிந்தித்து பார்த்தல் ஒருவன் எந்த புத்தகம் படிப்பது ,எந்த வீடியோ பார்ப்பது ,கடையில் என்ன வாங்குவது இப்படி அனைத்தையும் இத்திட்டம் தீர்மானிக்கும் . உண்மையில் அமேசான் ,கூகுள் மற்றும் பேஸ்புக் ஏற்கனேவே இதை செய்கின்றன ஆனால் அதை ஒரு அரசு ஒரு குடிமகனை மதிப்பிட பயன்படுத்துவதென்பது எண்ணி பார்க்கவே முடியாதது. சீன அரசு இத்திட்டத்தை(Pilot ) செயல்படுத்த எட்டு கம்பெனிகளுக்கு லைசென்ஸ் கொடுத்துள்ளது . இந்த எட்டு கம்பெனிகள் மிகப்பெரிய அளவில் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துவிட்டன.

  • China Rapid Finance (Tencent , Wechat)
  • Sesame Credit ( Ant Financial Services Group, Alibaba, AliPay)
  • Didi Chuxing - raid hailing company like Uber
  • Baihe - China's largest Online matchmaking service
மேலே கூறியுள்ள கம்பெனிகளின் பயன்பாடு  கிட்டத்தட்ட ஒருவனின்  தினசரி  வாழ்க்கையில் இன்றியமையாதது. அதில் ஒன்று Sesame Credit  அது ஒரு அலிபாபாவின் கம்பெனி. Sesame Credit - எப்படி ஒருவனை மதிப்பிடப் போகிறது?  அலிபாபா  என்ன algorithm பயன்படுத்தப்போகிறது என்பதை இதுவரை சொல்லவில்லை ஆனால் அது ஐந்து காரணிகளை  பயன்படுத்தப்போகிறது. அதாவது 

  1. Credit History - ஒருவன் சரியாக சரியான நேரத்தில் அனைத்து பில்களையும் (bills ( Electricity .Phone  etc ) ) கட்டுகிறானா ? 
  2. Fulfilment Capacity - ஒருவன் சரியாக ஒப்பந்தங்களை கடைபிடிக்க்கிறானா ? (fulfil contract obligation ) 
  3. Personal Characteristics - ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் சரியானதா ? மொபைல் எண் , விலாசம்  மற்றும் பல . 
  4. Behaviour and Preference - ஒருவன் என்ன பொருள் வாங்குகிறான் ? எவ்வளவு நேரம் இணையத்தில் செலவழிகிறான் மற்றும் பல.
  5. Interpersonal Relationship - யார் யார்  இணைய நண்பர்கள் . அவர்கள் எவ்வாறு ஒருவனை மதிப்பீடுகிறார்கள். 

Sesame  Credit 350 முதல் 950 வரை மதிப்பெண்கள் கொடுக்க உள்ளது.  நிறைய மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு சலுகைகள் பல உள்ளன. இத்திட்டம் 2020-ல் தான் வரவிருக்கிறது ஆனால் இப்போதே தன்னார்வலர்களுக்கு செயல்பட தொடங்கிவிட்டது. இப்போதே அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அதை ஒரு தனி அந்தஸ்தாக பார்க்க தொடங்கிவிட்டனர் . இத்திட்டத்தினால் யாரும் அரசை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் எழுத முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. குறைய மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வங்கி கடன் , வேலைவாய்ப்பு மற்றும் பல சலுகைகள் கிடைப்பது கடினமாகும்.

செப்டெம்பர் 25, 2016-ல் வெளியான கொள்கை டாக்குமென்ட்டான  "Warning and Punishment Mechanisms for Persons Subject to Enforcement for Trust-Breaking" -ல் ஒரு முக்கியமான விசயம் ""If trust is broken in one place, restrictions are imposed everywhere".  அரசே  "Allow the trustworthy to roam everywhere under heaven while making it hard for the discredited to take a single step" - இதை சொல்கிறது. இவை இரண்டும்  மிகவும் அபாயகரமானது.  இந்த மாதிரி திட்டம் மேற்கத்திய நாடுகளில் பல  ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது ஆனால் அது இந்த அளவுக்கு ஆழமாக இல்லை. 

இந்த திட்டம் உண்மையிலேயே மக்களின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துமா ? அல்லது மக்கள் ஒரு போலியான வாழ்க்கைக்கு தள்ளப் படுவார்களா ? . எனக்கென்னவோ இராண்டாவது தான் நடக்கும் என்று தோன்றுகிறது.  

Wednesday, October 18, 2017

19வது சீன தேசிய கம்யூனிச கட்சியின் கூட்டம்


உலக வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் சீனா இன்று இருக்கிறது. சீனாவின் இதே  வளர்ச்சி  தொடருமா? உலக அரசியலில் சீனாவின் பங்கு அடுத்த ஐந்து ஆண்டிற்கு எப்படிஇருக்கும் ? சீ  ஜின்பிங் (Xi Jinping) அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பாரா ? என்ற பல முக்கியமான விடைகளுக்கு நாளை  (18-10-2017) கூடும்  இந்த கூட்டம் ஓரளவு பதில் சொல்லும் .

இந்த கூட்டம் ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் கூட்டம். நம்ம தேர்தல் போல . இந்த கூட்டத்தில்தான்  புதிய தலைவர் , பொலிட்பீரோ  (Politburo Standing Committee (PSC)) மற்றும்  மத்திய இராணுவ கமிஷன்  உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவர். இந்த முறை பெரும் சிக்கலுக்கிடையே இந்த கூட்டம் கூடுகிறது. சீ  தலைவரானவுடன் செய்த முதல் காரியம் ஊழலுக்கு எதிரான பெரும் போராட்டம். நூறுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் .விசாரணையில் உண்மையிருந்தாலும் சீ தனக்கு போட்டி எனக் கருதும் அனைத்து தலைவர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறார் என்று மேற்கத்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சீ தலைவரான பிறகு  சீன இராணுவத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்தார் . குறிப்பாக அனைத்து இராணுவத்துறையையும் ஒரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் . அரசின் மிக முக்கிய பணியாக வறுமை ஒழிப்பை கொண்டு வந்து அதை ஓரளவு நடத்தியும் காட்டினார். மீண்டும் 'சீனர்களின் கனவு' (Chinese Dream)  என்ற  கொள்கையின்  கீழ் மேம்ப்பட்ட வாழ்வு என்பதை சீனர்களுக்கு எடுத்துரைத்தார் . வெளியுறவு கொள்கையில் வெகு அழுத்தமாக அனைத்து நாடுகளுடன் சீனா சீயின் கீழ் செயல்பட துவங்கியுள்ளது . தனது "ஒன்பது கோடு " எல்லைக்குள் எந்த ஒரு நாட்டையும் அனுமதிக்காமல் அந்த எல்லையை இராணுவ வலிமை கொண்டு பாதுகாக்கிறது.

சீ  அனைத்து முக்கியமான பொறுப்புக்களையும் தன் கீழ் வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் அடுத்த ஐந்து ஆண்டிற்கு பிறகு பதவியில் தொடர்வாரா? தொடர்வார் என்றுதான் எனக்குப்படுகிறது  . பொதுவாக சீன அதிபர்கள் பத்து வருடங்களுக்கு மேல் பதிவியில் இருக்க மாட்டார்கள். ஆனால் ஒருவர் கம்யூனிச கட்சியின் தலைவராக பத்து வருடங்களுக்கு மேல் பதவியில் இருக்கலாம் . சீ  தனது கனவான "பட்டு பாதை" நிறைவேறாமல் பதவியை விடமாட்டார்.   மாவோ மற்றும் டெங் ஜியோபிங்கிற்கு பிறகு சீயின் எழுத்துக்களும் பேச்சுக்களும் கம்யூனிச கட்சியின் அரசியலமைப்பில் இணைத்துக்கொள்ளபட இருக்கிறது .

வலுவான சீனா இவ்வுலகிற்கு அவசியம் ஆனால் அது எவ்வாறு இப்போது இருக்கும் உலக அமைப்பை மாற்றி அமைக்கும் என்பதே பெரிய கேள்வி. அமெரிக்காவும்  சீனாவும் "Thucydides's Trap"-ஐ தவிர்க்குமா? வியட்நாமை சீனா தன்னுடன் இணைத்து கொள்ளுமா? தெற்கு சீன கடல் பகுதியில் அமைதி நிலவுமா?  மற்றும் பல முக்கியமான கேள்விகளுக்கான பதில் கிடைக்காவிட்டாலும் சீனா அடுத்த ஐந்து வருடத்திற்கு எவ்வாறு இந்த கேள்விகளை எதிர்கொள்ளும் என்று இந்த கூட்டத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம் .

Wednesday, October 11, 2017

மனித தோற்றம் (Origin) - டான் பிரௌன் (Dan Brown)


It is in hearing the voice of the Devil that we can better appreciate the voice of God
நான் டான் பிரௌனின் ராபர்ட் லாங்டன் நாவல்களின் பெரிய ரசிகன்.  அதற்கு முக்கிய காரணம்  டான் பிரௌன்  எடுத்துக்கொள்ளும் கதைக்களம் -கிறிஸ்தவம் மற்றும்  புது புது ரகசிய அமைப்புகள். அனைத்து  ராபர்ட் லாங்டன் நாவல்களுமே ஒரே கதை வடிவத்தைக் (same template)கொண்டதே.  ஒரு ரகசியம் ,ஒரு கட்டிடம் (கிறிஸ்தவ ஆலயம் அல்லது அருங்கட்சியகம் அல்லது இரண்டும் ), வார்த்தை விளையாட்டு ,ஒரு அடியாள் மற்றும் ராபர்ட் லாங்டன் துணைக்கு ஒரு அழகான பெண்  இவை அனைத்தும் இப்புத்தகத்தில் உள்ளது.

1.நாம் எங்கிருந்து வந்தோம் ?
2.நாம் எங்கே செல்கிறோம் ?

இந்த கதை இந்த  இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முயன்றுள்ளது.   ராபர்ட் லாங்டன் தனது நண்பனின் (எட்மண்ட் கிறிஸ்ச் அழைப்பை ஏற்று ஸ்பெயின் வருகிறான். எட்மண்ட் ஒரு முக்கியமான அறிவிப்பு  வெளியிட இருப்பதாகவும் அது மிக பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துமென்றும் அதற்கு லங்கிடனின் ஆலோசனை தேவையென்றும் கூறுகின்றான்.  அறிவிப்பை வெளியிடுவதற்கு சற்று முன் எட்மண்ட் கிறிஸ்ச் கொல்லப்படுகிறான் . யார் அவனைக் கொன்றது ?அந்த அறிவிப்பு வெளியானதா ?   இது தான் கதை.
We comfort our physical bodies in hopes our souls will follow.
இந்த கதையில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் வின்ஸ்டன் -இது ஒரு  செயற்கை கம்ப்யூட்டர் உதவியாளர் (Artificial Intelligence) . தற்போது வின்ஸ்டன் மாதரி எனக்கு தெரிந்து எந்த மென்பொருளும் ரோபோட்டும்  இல்லை ஆனால் விரைவில் உருவாக்கப்படும். என்னை கவர்ந்த மற்றொரு விசயம் கதை நடக்கும் இடமான பார்சிலோனா .  பார்சிலோனா கால்பந்து அணியின் பெரிய ரசிகன் நான் .அங்குள்ள புகழ்பெற்ற இடங்கள் அனைத்தும் எனக்கு தெரியும் அதனால் கதையை காட்சியாக காண்பதில் எந்த சிக்கலும் இல்லை.  காசா மிலா(Casa Mila), சக்ராட பெமிலியா (Sagrada Familia) , Guggenheim  museum , valley of the fallen மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் வருகிறது.
Remember death. Even for those who wield great power, life is brief. There is only one way to triumph over death, and that is by making our lives masterpieces. We must seize every opportunity to show kindness and to love fully.
இந்த கதையில் ராபர்ட் லாங்டனின் தனித்திறன் வெளிப்படுவது  மிக குறைவே. ஒரே ஒரு இடத்தில் நாம் vintage  ராபர்ட்  லாங்டனை பார்க்கலாம் அது அவர் 47 எழுத்துக்களுள்ள பாஸ்வேடை (password) கண்டுபிடிக்கும் போது. அவருக்கு உதவியாக வரும் வருங்கால ஸ்பெயினின் ராணி அம்ப்ரா விடால் (Ambra Vidal ) மூலம் ஸ்பெயினின் கத்தோலிக்க வரலாற்றையும் மாறும்  இளம் தலைமுறையையும் ஆசிரியர்  சிறப்பாக விளக்குகிறார். 
The most self-righteous in life become the most fearful in death.
மற்ற   ராபர்ட் லாங்டன் நாவல்களைவிட இது சற்று மாறுபட்டது - இதில் சஸ்பென்ஸ் மற்றும் புதிர்கள் குறைவு மாறாக அறிவுசார் விசயங்களை பேசுகிறார் ஆனால் மத எதிர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை சொல்லப்போனால்  மத எதிர்ப்பு அதிகமாகவே இந்த புத்தகத்தில் இருக்கிறது.  எழுத்து நடையில் எந்த சிறப்பும் இல்லை ஆனால் வாசிக்கலாம்.   

Tuesday, September 19, 2017

மஞ்சள் ரிப்பன் ஓட்டம் -2017


பல வருடங்களாக நான் ஓடும் பந்தயம் இது. அதற்கு பல கரணங்கள் உண்டு. முதலாவது நான் மஞ்சள் ரிப்பன் ப்ராஜெக்ட் தன்னார்வல தொண்டூழியர்.  இந்த தொண்டூழியமானது சிறை சென்று மீண்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பணியை பல வருடங்களாக செய்து வருகிறது.  பல முறை என்னால் முடிந்தவற்றை அவர்களுக்கு செய்திருக்கிறேன். அதுவே இந்த வருடாந்திர ஓட்டத்திற்கும் பதிவு செய்ய என்னை தள்ளியது.

இந்த ஓட்டத்திற்கு ஓரளவு தயாராகவே இருந்தேன் ஆனால் எதிர்பாராமல் இரண்டு வாரங்களுக்கு முன்  ஏற்பட்ட இடது கால் வலியால் கிட்டத்தட்ட ஆறு நாட்கள் எந்த பயிற்சியும் செய்யாவில்லை.  போன வாரம் மீண்டும் பயிற்சியை தொடங்கினேன்.  இரண்டு நாட்கள் ஏழு கிலோமீட்டரும் ஒரு நாள் ஐந்து கிலோமீட்டரும் ஓடினேன்.இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பந்தயத்திற்கு எவ்வாறு தயார் செய்ய வேண்டுமென்று என் நண்பர்  (அவர் பல மராத்தான், அல்ட்ரா மராத்தான் மற்றும் ஐயன் மேன் (Iron  Man) போட்டியில் பங்கேற்றவர்  )ஒருவர் பல வருடங்களுக்கு முன் என்னிடம் சொன்னார் .அது என்னவென்றால் நீங்கள் மராத்தான் 42.1 கிமீ ஓட முடிவு செய்தீர்களென்றால் பந்தயத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன் நீங்கள் குறைந்தபட்சம் 84 கிமீ ஓட வேண்டும். அதுபோல ஒரு வாரத்திற்குமுன்  ஒரு நாள்  ஒரு  நீண்ட ஓட்டம் குறைந்தபட்சம் பந்தயத்தின் பாதி தூரம் ஓட வேண்டும்.  இவ்விரண்டையும் நான் முடிந்தவரையில் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.

 மஞ்சள் ரிப்பன் ஓட்டப்பந்தயத்தின் தூரம் 10 கிமீ.  ஓட்டம் சாங்கி வில்லேஜ்ல்   (Changi Village) இருந்து தொடங்கியது. ஓட்டத்திற்கு முன் warm up மிகவும் முக்கியம். பல வருடங்களாக நான் warm up  பண்ணியதே கிடையாது. கடந்த இரண்டு வருடங்களாக எனக்கென்று ஒரு warm up routine- ஐ  அமைத்துக் கொண்டேன். அதன் பயன் மிகவும் பெரிது.  ஓட்டத்தை சிங்கப்பூரின்  துணை பிரதம மந்திரி டீயோ சீ ஹென்  தொடங்கிவைத்தார்.  அவரும் ஐந்து கிலோமீட்டர் பந்தயத்தில் பங்கேற்றார் .எனக்கு இந்த பந்தயத்தின் ஓட்ட பாதை மிகவும் பிடித்த ஒன்று அதுவும் போட்டி முடியும் இடமான சாங்கி சிறை.

நான் ஓட்டத்தை மிகவும் நிதானமாக என்னுடைய பயிற்சி வேகத்திலேயே ஆரம்பித்தேன். தூரம் கூடக்கூட என்னுடைய வேகமும் கூடியது அதுபோல என்னுடைய உடம்பும் விரைவில் சோர்வடைந்தது. சில நேரங்களில் இப்படித்தான் முன்னாள் ஓடுபவரை முந்திச்செல்ல வேண்டுமென்று எனது வேகத்திலிருந்து மீறி சென்றிவிடுவேன் (இது நீண்ட ஓட்டத்திற்கு நல்லதல்ல) அதுதான் இந்த பந்தயத்திலும் நடந்தது .ஆனால் இங்குதான் அனுபவம் கைகொடுத்தது. ஓட வேண்டியதுரத்தை கணக்கில் கொண்டு எனது வேகத்தை சரி செய்தேன். அந்த வேகம் எப்போதும் என்னுடைய பயிற்சி வேகத்தை விட குறைவாகத்தான் இருக்கும். இந்த ஓட்டத்திலும் அதுதான் நடந்தது. இறுதியில் பந்தயத்தை எந்த ஒரு காயங்களும் உடல் உபாதைகளும் இல்லாமல் நிறைவுசெய்தேன்.

இரண்டு குறிப்பிட வேண்டிய விசயம் ஒன்று volunteers -அவர்களின் பங்களிப்பு மிகவும் பெரிது . ஓடும் தூரம் முழுதும் அவர்களின் சிரித்த முகமும் கைத்தட்டல்களும் கண்டிப்பாக ஓடுபவருக்கு ஒரு வகையான புத்துணர்வூட்டுமென்றால் மிகையாகாது.  மற்றொன்று சாங்கி சிறை.  இந்த சிறையை சாதாரண நாட்களில் பொதுமக்கள் பார்வையிட முடியாது. ஒரு வித்தியாசமான வடிவமைப்பு எனக்கு அது ஒரு பிரம்மாண்டமாகவே தெரிந்தது.
இந்த பந்தயத்திற்கென்றே  உருவாக்கிய  "playlist" .

  • ஒழுகி ஒழுகி  - ஒரு சினிமாக்காரன் (மலையாளம் )
  • காட்டுக்குயிலு  - தளபதி 
  • யாத்தே யாத்தே  -ஆடுகளம் 
  • தி பைனல் கவுண்டவன்  - ஐரோப் 
  • என்ட அம்மேட -வெளிப்படிண்டே புஸ்தகம்  (மலையாளம் )
  •  கடலம்மா -அயால் ஜீவிச்சிருப்புண்டு (மலையாளம் )
  • தீயமே  - அங்கமாலி டைரிஸ் (மலையாளம் )
  • தண்டர்  - இமாஜின் டிராகன் 
  • ஷேப் ஆப் யு - எட் ஷீரன் 
  • பொத்தி வச்ச மல்லிக மொட்டு -மண் வாசனை 
இந்த ஓட்டம் ஒரு நல்ல அனுபவம். அடுத்தது "Run By The Bay 21 KM .."

Monday, September 11, 2017

கடைசி நண்பன் (The Last Friend - Tahar Ben Jelloun)


இது ஒரு புதிய கதையல்ல. இரண்டு நண்பர்களுக்கிடையே நடக்கும் கதை. இது மொராக்கோவில் உள்ள Tangiers நகரில் நடக்கிறது.  மம்மது மற்றும் அலி இருவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் .பதின் வயதிற்குரிய அனைத்தையும் செய்து பார்க்கிறார்கள். பெண்கள்தான் அவர்களின் பெரும் கவனம். இருவருக்கும் அதில் ஒரு போட்டி.

மம்மது ஒரு கோபக்காரன்.போலித்தனமான சமுதாயத்தை சாடுகிறான். மேல்படிப்பிறகு பிரான்ஸ் செல்கிறான் அங்கு பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றுகிறான். மருத்துவம் படிக்கிறான்.  அலி  அமைதியானவன் சற்று வசதியான குடும்பத்திலிருந்து வந்தவன். சினிமாவில் ஈடுபாடுள்ளவன். ஆசிரியர் பணியில் சேருகிறான். இருவரும் மொராக்கோ அரசால் கைது செய்யப்பட்டு ஒரே சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பதினெட்டு மாதங்கள் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் காப்பாற்றிக்கொள்கிறார்கள்.
இருவருக்கும் திருமணம் நடக்கிறது இருவரின் மனைவிமார்கள் அவர்களின் நட்பை எதிர்கிறார்கள். திடிரென்று ஒரு நாள்  மம்மது அலி மீது பெரும் கோபம்கொண்டு அவனை திட்டுகிறான் அவர்களின் நட்பை கொச்சைப் படுத்துகிறான். ஏன் இந்த கோபம் -அது மற்றொரு  கதை.

மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் கதை நடக்கும் இடமான  Tangiers . கதை முழுவதும் அது தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.  மம்மது ஸ்வீடன் சென்ற பிறகு Tangiers-ஐ  நினைத்து ஏங்குகிறான்.  ஸ்வீடன் ஒரு அமைதியான நாடென்றும் அவன் அமைதியில்லாத  Tangiers-ஐ  விரும்புவதாக கூறுகிறான்.  அது அலி மீது பொறாமையாக மாறுகிறது. ஏனென்றால் அலி அங்கேயே இருக்கிறான்.

கதை மூன்று நபர்களால் சொல்லப்படுகிறது. முதலில் அலி அவர்களின் நட்பை மற்றும் அவர்களின் பிரிவை தனது நோக்கில் சொல்கிறான். அலி முடித்தவுடன்  மம்மது அவனது பார்வையில் அவர்களின் நட்பையும் அவனது கோபத்திற்கான காரணத்தையும் சொல்கிறான்.அவன் அலியின் கதையை மறுக்கவில்லை மாறாக அதற்கு மேலும் வலு  சேர்கிறான்.  இறுதியாக இவர்கள் இருவரின் நண்பன் அவனது நோக்கில் அவர்களின் நட்பை சொல்கிறான். இந்த கதைக்கு இந்த கதைசொல்லும் முறை மிக சரியாக பொருந்துகிறது.

இஸ்லாமிய நாட்டில் நடக்கும் கதையாதலால் பாரம்பரிய வகையில் எந்த விசயத்தையும் குறிப்பாக பாலியல் சம்பந்தமுடையவற்றை மறைத்து ஆசிரியர் கூறிருப்பார் என்று நினைப்பவர்களுக்கு பெரும் ஏமாற்றமே.  அனைத்தையும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இளம்பெண்களின் பாலியல் குறித்த செயல்பாடுகளும் எண்ணங்களும் ஆசிரியரால் மிகவும் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது . மொராக்கோவின் கலாச்சாரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் ஆசிரியர்.  எளிய எழுத்து நடை. தஹர்  பென் ஜெல்லோன் உலக புகழ் பெற்ற  மொராக்கோ எழுத்தாளர் பல விருதுகளை பெற்றவர்.  இவருடைய "The Blinding Absence of Light" என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். அந்த புத்தகத்தை வாங்க சென்று அதில்லாமல் இப்புத்தகத்தை வாங்கினேன். 

வாசிக்கலாம்.

     

Wednesday, August 23, 2017

மறையும் கலை (The Art Of Invisibility - Kevin Mitnick)


எனது நண்பர் ஒருவர் "நீ IT-யில் தான இருக்கே அப்ப இந்த புத்தகத்த வாசி " என்று கூறி அந்த புத்தகத்தையும் கொடுத்தார். எப்போதும் செய்வதுபோல் உடனே வாசிக்க ஆரம்பித்தேன். எனக்கு எப்படி அமெரிக்கா தனது மக்களை கண்காணிக்கிறது என்பது ஓரளவு தெரியும்.  ஆனால் ஒருவனது ஈமெயில் மற்றும் மற்ற இணைய செயல்பாடுகள் இவ்வளவு எளிதாக ஒருவனால் திருடவும் கண்காணிக்கவும் முடியும் என்பது ஆச்சிரியமாகவும் அதே சமயம் பயமாகவும் இருக்கிறது.

நான் நினைத்தேன் எனது பாஸ்வேர்ட் கடினமான ஒன்று யாரும் கண்டுபுடிக்க முடியாதென்று  ஆனால்  இரண்டு வருடங்களுக்கு முன் என்னுடைய ஜீமெயில் hack செய்யப்பட்டது. என்னுடைய இமெயிலில்   இருந்து எனது address book-லிருந்த அனைவருக்கும் நான் எங்கோ ஐரோப்பாவில் பணமில்லாமல் தவிப்பதாகவும் உடனே பணம் அனுப்பவேண்டுமென்று மின்னஞசல் சென்றுள்ளது. மிக கஷ்டப்பட்டு  மீண்டும் எனது பாஸ்வேர்டை மீட்டேன். அதன் பிறகு நான் செய்த முதல் காரியம்  இரண்டு அடுக்கு அங்கீகாரத்தை  (Two Factor authentication(2FA) )  செயல்படுத்தியதுதான்.பல சமூகவலைத்தளங்களில்  சில முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் நாம் அதை பயன்படுத்துவதில்லை. அது hackers வேலையை எளிதாகக்கிறது. இந்த புத்தகம் இது போல நமது சோம்பேறித்தனத்தையும் அறியாமையையும் எவ்வாறு அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள்  மற்றும் hackers பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறது. அதுமட்டுமால்லாமல் எவ்வாறு நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
To become truly invisible in the digital world you will need to do more than encrypt your messages
ஆசிரியர் எவ்வாறு இணையம் வந்த காலம் முதல் இன்றுவரை  நமது தனியுரிமை பறிக்கப்படுகிறது என்று பல எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறார்.  நமது இணைய அனுபவத்தை பெருக்க என்ற பெயரில் எவ்வாறு நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதையும் ஆசிரியர் மிக அழகாக கூறியுள்ளார். இந்த புத்தகத்தில் ஆசிரியர் விவாதித்த சில விசயங்கள் :

  • எப்படி  மின்னஞ்சலை  பாதுகாப்பது (Pretty Good Privacy (PGP)
  • எப்படி  SSL மற்றும்   HTTPS  வலைத்தளங்களை மட்டும் பயன்படுத்துவது
  • Location-ஐ ஆன் செய்து வைத்திருந்தால் வரும் பிரச்சனைகள்
  • VPN-ஐ எவ்வாறு  பயன்படுத்துவது
  • TOR Onion browser-ஐ எவ்வாறு  பயன்படுத்துவது
  • பிட்காயின்களின் பிரச்சனைகள்


என்னை கவர்ந்த  இரண்டு சுவாரசியமான விசயங்கள் ஒன்று எட்வர்ட் ஸ்நோடன் எவ்வாறு அனைத்து கட்டுப்பாடுகளை மீறி கோப்புகளை வெளியிட்டார் எனபதையும் சில்க் ரோடு டார்க் வெப் (Silk Road Dark web) எவ்வாறு இயங்குகிறது என்பதையும் தெளிவாக விளக்குகிறார்.

கெவின் மிட்னிக் ஒரு hacker. FBI-யால் தேடப்பட்டவர் அவரது கைது ஒரு சர்ச்சைக்குரிய புத்தகமாக வெளிவந்தது.ஐந்து வருடம் சிறையில் இருந்தவர்.  முடிந்தவரை தொழில்நுட்ப விளக்கங்களை எளிய முறையில் விளக்கியிருக்கிறார். இந்த துறையில் அவரது அனுபவம் மிக தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. மிட்னிக் கூறும்  சில இணைய பாதுகாப்பு  டிப்ஸ்:

  •  மின்னஞ்சலின்  பாஸ்வேர்ட் ஒரு சொல்லுக்கு பதிலாக ஒரு சொற்றொடராக இருக்க வேண்டும் .
  • பாஸ்வேர்ட்டை நிர்வகிக்க பாஸ்வேர்ட் மேனேஜர் உபயோகிக்க வேண்டும் .
  • பொது wi-fi-யை உபயோகிக்க கூடாது .
  • அடிக்கடி backup எடுக்கவேண்டும் 
  • தவறாமல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்ய வேண்டும் 
  • USB உபயோகத்தை தவிர்க்க வேண்டும்   

ஜோனாதன் டப்ளின் தனது "Move Fast And Break Things" புத்தகத்தில் " நம்மிடம் இருந்து எவ்வளவு தனிப்பட்ட தகவல்கள் எவ்வளவு மலிவாக பெறமுடியுமோ அவ்வளவு பெற்று எவ்வளவு பெரிய லாபத்திற்கு விற்க முடியுமோ அவற்றை விற்பதுதான் அனைத்து சமூக வலைதளங்களின் நோக்கம்" என்று மிக தெளிவா கூறுகிறார். அவர் கூறுவதுபோல பெரிய நிறுவனங்களுக்கு நமது பாதுகாப்பு ஒரு பெரிய விசயமே அல்ல அதனால்  நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த புத்தகம் சரியான நேரத்தில் வெளிவந்திருக்கிறது. யார்யார் இணையத்தை பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

மேலும் வாசிக்க 

Monday, August 21, 2017

அஜ்வா - சரவணன் சந்திரன் (Ajwaa - Saravanan Chandran)


விரும்பினதை விட்டால் பாவம். விரும்பாததைத் தொட்டால் பாவம்.
இந்த புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் தோன்றியது வணிகத் தன்மைகொண்ட எழுத்து. அணிந்துரையில் திரு.அப்பணசாமி கூறுவதுபோல சரவணன் சந்திரன் ஒரு தமிழ் சேட்டன் பகத். வாசிக்க தடையில்லை. கதைக்களம் மிகப்பெரியது ஆசிரியர் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் எனக்கு படுகிறது. நான் இவரது இரண்டாவது புத்தகமான "ஐந்து முதலைகளின் கதை " படித்துள்ளேன். அக்கதை பிடித்திருந்தது அப்போது அந்த எழுத்துநடை பெரிதாக என்னை பாதிக்கவில்லை .
எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாகப் பெருந்தன்மையுடன் இருப்பதும் பழி வாங்கும் உணர்ச்சிதான்
எனக்கு அஜ்வா பேரிச்சம்பழம் 2015-ல் தான் தெரியும். ரம்ஜான் மார்க்கெட்டில் ஒரு ஈரானியர் விற்றுக்கொண்டிருந்தார். அங்கிருந்த பேரீச்சம்பளங்களிலேயே மிகவும் விலை உயர்ந்தது  அஜ்வா வகை  பேரீச்சம்பளங்கள்தான். அவரிடம் கேட்டதற்கு ஒரு கதையை சொன்னார். நான் அந்த பழங்களை வாங்கவில்லை ஆனால் மற்ற விலைகுறைந்த  பழங்களை வாங்கியவுடன் ஒரே ஒரு அஜ்வா  பழம் தந்தார். அருமையான சுவை.  காலையில் ஏழு அஜ்வா பழங்கள் சாப்பிட்டால் மாலைவரை விஷம் மற்றும் மாந்த்ரீகம் ஒருவனை ஒன்றும் செய்யாது என்பது ஒரு நம்பிக்கை.
ஒரே நேரத்தில் ஒன்றைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே திரும்பத் திரும்ப சிந்திப்பவர்களைப் பைத்தியம் என்று வழக்கமாக இந்த உலகம் சொல்கிறது.
ஒரு வரியில் இக்கதையை சொல்லவேண்டுமானால் எப்படி ஒருவன் போதையில் இருந்து வெளிவருகிறான் என்பதுதான் .கதைசொல்லிதான் கதையின் நாயகன் அவனது  பார்வையில்தான் கதை விரிகிறது.அவனது தந்தை எப்படி எதற்கும் பயப்படுபவராக இருந்தாரோ அதேபோல அவனும் அனைத்திற்கும்  பயப்படுகிறான்.  அட்டையில்  "பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம்"   என்று எழுதப்பட்டுள்ளது அதுபோல நாயகன் எவ்வாறு தனது அனுபவங்களோடு பயத்திலிருந்து வெளிவருகிறான் என்பதுதான் கதை. அவனது குடும்பம் ஒரு அன்பான குடும்பமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. அவனது அத்தையின் கதைதான் சுவாரசியமான ஒன்று. அவனது  மாமன்தான்  அவர்கள் குடும்பத்து எதிரி. ஒரு தடவை மாமன் அவனை திருக்கை வாலால் அடிக்கிறான்.அது அவனது மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.

குடிபழக்கத்திற்கும் போதை மருந்து பழக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை ஆசிரியர் எளிமையாக விளக்குகிறார்.அவர்கள் குடும்பத்திற்குள்ளும் வெளியேயும் இருக்கிறார்கள். மாமாவை தவிர அவனை சுற்றி அனைவரும் அன்பானவர்களாக இருக்கிறார்கள் ஜார்ஜ் அந்தோணி மற்றும் அவனது அம்மா விஜி அண்ணன் ,சுந்தர் சிங் அண்ணன்... மற்றும் டெய்சி.  அவன் தன்  பயத்திலிருந்து வெளிவர இந்த போதையுலகிற்குள் நுழைகிறான்.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைபோல எழுதப்பட்டுள்ளது.கதையில் வரும் ஒவ்வொருவரும் ஒரு அனுபவத்தை சொல்லிச் செல்கிறார்கள். டெய்சி உறவுகளால் தன் சுதந்திரம் பறிபோய்விடும் என்று பயந்து வீட்டைவிட்டு வெளியேறி போதை உலகில் தஞ்சம் அடைகிறாள் .

இந்த கதையை சற்று வித்தியாசமாக்கியது போதை உலகின் அனைத்து சமாச்சாரங்களையும் நமக்கு காட்டுவதுதான்.ராஜபோதை ,காரின் கதவுகளை அடைத்துக்கொண்டு எடுத்துக்கொள்ளும் போதைப்பொருள் வெவ்வேறு உறுப்புகளில் குத்திக்கொள்ளும் பழக்கம் என அனைத்தையும் கதையோடு பேசிச் செல்கிறார் . போதைக்கு அடிமையானவர்களின்  பாலுணர்வு எப்படி இருக்கும் என்று நாயகன் கூறுவது எனக்கு தெரிந்து உண்மைதான் . அவர்கள் ஒருபோதும் ஆண்மையை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கதையில் இறப்பு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது . டெய்சியின் இறப்பு அவனை பெரிதும் பாதிக்கிறது . அதுவே அவனை போதையிலிருந்து மீள தூண்டுகிறது. அஜ்வா செடி துளிர்விடுவதுடன் கதை முடிகிறது.

 சாரு நிவேதிதாவின் தாக்கம் சரவணன் சந்திரனிடம் உள்ளது என்பது அவரது இரண்டாவது நாவலிலே தெரிந்தது இதிலும் அப்படியே. ஒரு முக்கிய வித்யாசம் சரவணன் சந்திரன் ஒரு முடிவை நோக்கி கதையை நகர்த்துகிறார். பல்வேறு மதங்களின் மாந்தர்கள் வருகிறார்கள்  அனைவரையும்  மிக அழகாக ஆசிரியர் கையாண்டுள்ளார் .  இந்த புத்தகத்தின் பெரிய குறை எதுவுமே என் மனதில் நிற்கவில்லை அதற்கு எழுத்துநடை ஒரு காரணமாக இருக்கலாம். அனைத்தையும் மிக எளிதாக கடந்து செல்ல முடிகிறது . திரைப்படங்களில் வருவதுபோல பல வசனங்கள் அங்கும் இங்குமாக வருகிறது. இக்கதையில் அனைவரும் ஒரு பயத்துடன் வருகிறார்கள் - அதுதானே வாழ்க்கை . பயம் இல்லாதவர் இவ்வுலகில் யார் ?

வாசிக்க வேண்டிய புத்தகம் .
  

Tuesday, August 15, 2017

ஒரு சுருக்கமான திருமணத்தின் கதை - அனுக் அருட்பிரகாசம் (The story Of A Brief Marriage - Anuk Arudpragasam)


Being close to someone meant more than being next to them after all, it meant more than simply having spent a lot of time with them. Being close to someone meant the entire rhythm of that person's life was synchronized with yours, it meant that each body had to learn how to respond to the other instinctually, to its gestures and mannerisms, to the subtle changes in the cadence of its speech and gait, so that all the movements of one person had gradually come to be in subconscious harmony with those of the other.
இந்த வருடம் நான் வாசித்த பூதங்களில்  என்னை மிகவும் பாதித்த புத்தகம்.  இந்த புத்தகத்தின் முதல் பத்தியை ஒருவன் அழாமல் வாசிப்பது கடினம். என் கண்ணிலும் கண்ணீர் வந்தது.  இதோ அந்த முதல் பத்தி  " MOST CHILDREN HAVE two whole legs and two whole arms but this little six-year-old that Dinesh was carrying had already lost one leg, the right one from the lower thigh down, and was now about to lose his right arm. Shrapnel had dissolved his hand and forearm into a soft, formless mass, spilling to the ground from some parts, congealing in others, and charred everywhere else. Three of the fingers had been fully detached, where they were now it was impossible to tell, and the two remaining still, the index finger and thumb, were dangling from the hand by very slender threads. " 

இக்கதை ஈழ இறுதிப்போரின் போது நடக்கிறது நூலின் தலைப்பைப் போல மிக சிறிய புத்தகம். இது தினேஷ் மற்றும் கங்காவின் சுருக்கமான திருமணத்தின் கதை.  நிலைமை மோசமாக கங்காவின் தந்தை அவளை எப்படியாவது யாருக்காவது திருமணம் செய்ய வேண்டுமென்று நினைப்புடன்  இருக்கையில் அவர் அந்த முகாமில் தினேஷை பார்க்கிறார் உடனே அவனிடம் அவர் விருப்பத்தையும் தெரிவிக்கிறார். அவனும் அதற்கு ஒப்புக்கொள்கிறான். திருமணமும் நடக்கிறது. அனைத்தும் ஒரே நாளில் நடந்து முடிகிறது.
What it would be like to be separated from all these things he did not know, he could not envision, but the more he dwelled on it the more he understood that it was not so much fear of being separated that he felt as sadness at the idea of parting.
தினேஷ்  தன் தாய் உட்பட அனைத்தையும் இழந்து வெகுதூரம் நடந்து இந்த முகாமிற்கு வந்தவன்.முகாமில் உள்ள மருத்துவமனையில் தன்னால் முடிந்ததை செய்து வருபவன். முகாமில் அவன்  செய்யும் அனைத்தையும் ஆசிரியர்  மிக நுட்பமாக விவரிக்கிறார் குறிப்பாக இரண்டு இடங்களில் ஒன்று அவன் கடற்கரையோரமாக மலம் கழிப்பதும்  மற்றும் குளிப்பதும். சாதாரணமாக செய்யும் இந்த இரண்டும் போர்க்காலங்களில் எவ்வளவு கடினமானது என்று ஆசிரியர் மிக நுணுக்கமாக துளித்துளியாக நாமே அதை செய்வதுபோல உணரச்செய்கிறார். இரண்டாவது திருமணத்திற்கு பிறகு கங்கா சமைத்த உணவை  தினேஷ்  ஒவ்வொரு பருக்கையின் சுவையை தனித்தனியாக  மிகவும்  ரசித்து  உண்ணும்போது. இதோ அந்த வரிகள் - "The food was hot in his mouth, and as he rolled it around with his tongue he savoured the shape and taste of the soft grains, his tongue cleaving the rice into separate sections of his mouth then goading it back into a single mass. His jaws moved of their own accord and his molars mushed the rice together, turning the separate grains into a single soft warm whole that slowly made its way to the back of his mouth and was then swallowed, something he became aware of only by the sensation of a warm substance slipping down his throat, past his bulging Adam’s apple, down into his gullet."

தினேஷ் அனைத்தையும் ஒரு தத்துவவாதி போல யோசிக்கிறான். தான் இறக்கப்போவது உறுதி என்று நம்புகிறான். அதனாலேயே அனைத்தையும்  மிக பெரிய நிகழ்வாக நினைக்கிறான். சுவாசிப்பதைக்கூட ஒருபெரும் நிகழ்வாக கருதுகிறான்.  எங்கே கங்கா தன்னை அழகில்லாதவன் என்று நினைப்பாளோ என்று அஞ்சுகிறான். அவளோடு பேசுவதற்கு தயங்குகிறான்.  அவர்களுக்கிடையே ஒரு விதமான அமைதி நிலவுகிறது. அந்த அமைதியான நேரம் எவ்வளவு முக்கியம் என்று இரண்டுபேருக்கும் தெரியும். அடிப்பட்ட காக்காவுடன் சிறிது நேரம் செலவழிக்கிறான். அவன் அதை கொள்ளவுமில்லை அதற்கு மருத்துவமும் பார்க்கவில்லை அவன் அப்பறவையோடு இருந்தான். இருத்தல் எவ்வளவு முக்கியம் என்பதை ஆசிரியர் இதன் மூலம் உணர்த்துகிறார்.அவளோடு தான் உறவுகொள்ள முடியாது என்ற போது கண்ணீர் சிந்துகிறான். அந்த இரவு அவனது முதல் இரவு வெகுநாட்களுக்கு பிறகு நன்றாக தூங்குகிறான். அந்த ஒரு நாளில் அவன் அனைத்தையும் வாழ்ந்து முடிக்கிறான்.

Dinesh felt an urge to say something, but hesitated. He wanted to respond to Ganga’s silence by accepting it somehow, by acknowledging what it contained, but at the same time the thought of disrupting it by speaking seemed in some way inappropriate. There had been silence between them before, of course, as they had stood transfixed after the marriage ceremony, as they had sat next to each other for the first time in the clearing, and as they had eaten together afterwards in the camp, but this silence felt different somehow. The earlier silence had been the silence that existed between people living in different worlds. It had been the silence that existed between everybody in the camp, the silence between two people separated by a sheer wall of polished stone. The silence that was present between them now on the other hand was one that connected them rather than separated them. It charged the air between them so completely that the slightest movement by either one of them could be sensed at once by the other, so that their bodies were as if suspended together in a medium that was outside time

எனக்கு  எப்போது தினேஷ் கொல்லப்படுவான்  என்ற கேள்வி எழுந்து கொண்டேயிருந்தது .  போர் ஒரு சாதாரண மனிதனை எவ்வாறு மாற்றுகிறது என்பதை மிக எளிய எழுத்துநடை மூலம் சொல்லியிருக்கிறார். இறப்பு கண்முன்னே இருந்தாலும் வாழவேண்டும் என்ற ஆவல் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் என்று அழுத்தமாக ஆசிரியர் இக்கதையின் மூலம் சொல்லுகிறார் .
But if they couldn’t talk about their pasts, what could they say to each other at all, given that there was no future for them to speak of either?
இந்த புத்தகம் ஈழப் போரை வேறுவிதமாக பார்க்க உதவும். எந்த அரசியலும் இல்லாமல் மனித மரியாதையும் போரின் அவலத்தையும் மிக அழகாக நம் கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார் ஆசிரியர் .கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.  

Friday, August 11, 2017

ரோபோக்களின் எழுச்சி (The Rise Of Robots - Martin Ford)


இந்த புத்தகத்தைப் வசித்து முடித்தவுடன் ஒரு விதமான பயம் என்னை பற்றிக் கொண்டது.  எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது ஒரு மிக பெரிய கேள்விக்குறி. இந்த புத்தகத்தை வாசிக்கும்போது  நமது பள்ளிகளும் கல்லூரிகளும் நமது பிள்ளைகளை எதிர்காலத்திற்கு சரியாக தயார் செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. இந்த கேள்விக்கு பதில் 100% இல்லை என்றுதான் ஆனால் எவ்வளவு தூரம் பின்னே இருக்கிறோம் என்பதுதான் பயமாக இருக்கிறது.
The astonishing wealth and comfort we have achieved in modern civilization are a direct result of the forward march of technology––and the relentless drive toward ever more efficient ways to economize on human labor has arguably been the single most important factor powering that progress. It’s easy to claim that you are against the idea of too much automation, while still not being anti-technology in the general sense. In practice, however, the two trends are inextricably tied together.
ரோபோக்கள் மற்றும் தொழில்நூட்ப வளர்ச்சியை எப்படி எதிர்கொள்வதென்றால் அடிப்படைகளை  மறுசீரமைத்தல் (fundamental restructuring) மூலம் என்கிறார் ஆசிரியர். எதிர்கால trends-ஐ கணிப்பது கடினமாகிக்கொண்டே  இருக்கிறது  ஏனெனில் அறிவியல் மற்றும் தொழில்நூட்ப வளர்ச்சி வெகுவிரைவாக மாறிவருகிறது என்று  சிங்கப்பூரில் நடந்த பிக் டேட்டா (Big Data) மாநாட்டில் பல அறிஞர்கள் கூறினார்கள். இது மிகவும் முக்கியமான விசயம் ஏனென்றால் அரசின் பல்வேறு செயல்திட்டம் இந்த கணிப்பை பொறுத்துதான் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை எனக்கு தெரிந்து கல்வியில் குறிப்பிடத்தக்க  (அவசிய) மாற்றம் வந்ததாக தெரியவில்லை .  அரசும் அரசியல்வாதிகளும் பழங்காலத்திலேயே தங்கிவிட்டார்கள்.

"வேலையில்லா எதிர்காலம்" உருவாகுமா ? என்ற கேள்விக்கு ஆசிரியர் கூறுவது அது  சாத்தியம் என்று அதை அவர் பல புள்ளிவிவரங்கள் மூலம் எடுத்துரைக்கிறார். அவர் கூறும்  புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்தது. ஆனால் வெகுவிரைவில் அது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். முதலில் அழிவது "routine" வேலைகள் அதாவது தினசரி ஒரே மாதிரி (same flow) பணிகள் செய்யும் வேலை. பல்லாயிரம் clerical வேலைகள் காணாமல் போகும். இப்போதே தொழிற்சாலைகளில் பல வேலைகளை இயந்திரங்கள்தான் பார்க்கின்றன இனி மேலும் இயந்திரங்களின் பங்கு அதிகரிக்கும்.  அதுபோல வழக்கறிஞர்கள் , ஆராய்ச்சியாளர்கள் , சாப்ட்வேர் டிசைனர்கள் மற்றும் பல மருத்துவ வல்லுநர்கள் வேலை குறையும். அது மட்டுமல்லால் இன்னும் பத்து வருடங்களில் 90% செய்தி கட்டுரைகள் சாப்ட்வேரால்  எழுதப்படும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது - இது நூற்றுக்கணக்கான  பத்திரிக்கையாளர்களுக்கு வேலையில்லாமல் செய்யும். ஓட்டுநரில்லா வண்டிகள் பல்லலாயிரம் ஓட்டுனர்களை பாதிக்கும்.

மனித இனம் இயந்திர வளர்ச்சிக்குகேற்ப தாங்கள் வேலை செய்யும் முறையை மாற்றி படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது அதுபோல் இந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டு செயல்படுமா என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் மிக பெரிய கேள்வி  . ஏனென்றால் இந்த (ரோபோ ,செயற்கை நுண்ணறிவு ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகவும் வேகமாக வளர்கின்றது.  கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் மிகவும் வேகமா நிகழ்ந்து வருகிறது. பெருளாதார வல்லுநர்கள் இந்த மற்றும் விவசாய புரட்சி போலத்தான் என்கிறார்கள். ஆனால் ஆசிரியர் இந்த தொழில்நுட்பப் புரட்சி சற்று வித்தியாசமானது  ஏனென்றால் இந்த மாற்றங்கள் அனைத்து தரப்பையும் பாதிக்கிறது என்கிறார்.  அதற்கு அவர் கூறும் சில புள்ளிகள் :
  • குறையும் வேலைவாய்ப்பு (New  job creation)
  • பெருகும் சமத்துவமின்மை 
  • சம்பள உயர்வில் தேக்கம் 
  • ஜிடிபியில்  (GDP) குறையும் தொழிலார்கள் பங்கு 
  • ஜிடிபியில்  (GDP) பெருகும் கார்பொரேட் லாபம் 
அனைத்து புள்ளிகளும் இன்றைய சூழ்நிலையில் உண்மையே. மனிதன் இயந்திரங்களுடன் போட்டிபோடுவதைவிட இயந்திரங்களுடன் சேர்ந்து வேலை செய்ய பழகிக்கொள்ளவும் . இன்றும் பல தொழிற்சாலைகளில் அப்படிதான் ஆனால் வருங்காலத்தில் தினம் செய்யும் செயல்களும் இயந்திரங்களுடன்தான் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் . எப்படியானாலும் வேலைவாய்ப்பு குறையத்தான் செய்யும் என்கிறார் ஆசிரியர்.

இதனால் வரும் பிரச்சனைகளுக்குத் ஆசிரியர் கூறும் தீர்வு - (Guaranteed Basic Income) அனைவருக்கும் அடிப்படை வருமானம் அதாவது ஒருவர் வேலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு அவருக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட பணம் கொடுப்பது. இதைப் பற்றி இப்போதே பல நாடுகள் ஆராய தொடங்கிவிட்டன. அனைவருக்கும் அடிப்படை வருமானம் தீர்வாகாது என்று பல பொருளாதார வல்லூநர்கள் கூறுகிறார்கள். காலம்தான் பதில் சொல்லும்.
The promise of education as the universal solution to unemployment and poverty has evolved hardly at all. The machines, however, have changed a great deal.
நமது தற்போதையக் கல்விமுறையைக்  கொண்டு எதிர் காலத்தில் வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினம். மதிப்பெண்களை பிரதானப்படுத்தும் முறை மாற வேண்டும். சிங்கப்பூரில் நடந்த கல்வியாளர்கள் கூட்டத்தில் எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர்கள் கூறிய பதில்  தனித்திறன்தான்  ஒருவனுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்று. மாணவர்களின்  திறமையை அறிந்து அதற்கேற்ப அவர்களை வருங்காலத்திற்கு தயார் படுத்துவதே நமது பள்ளிகளும் கல்லூரிகளும் செய்ய வேண்டியவை.

ஐ டி துறையில் அடுத்த சில வருடங்களுக்கு கீழே குறிப்பிட்ட பகுதியில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது :

  • Data Scientist (Python, Hadoop, R, SQL)
  • Machine Learning & AI (Python, OpenAI )
  • Healthcare ( EMR, PACS, HL7 )
  • Security Analyst

 ஐ டி  துறையைப்  பொறுத்தவரை படித்துக்கொண்டே இருக்க வேண்டும் , இல்லையெனில் விரைவில் பின்னுக்குத் தள்ளப்படுவோம்.

மார்ட்டின் போர்ட் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் பல வருட அனுபவமுள்ளவர். பல கருத்துக்களை மிக எளிய முறையில் விளக்கியுள்ளார். இந்த புத்தகம் 2015-ம் ஆண்டிற்கான சிறந்த பிசினஸ்  புத்தகமாக தேர்வுசெய்யப்பட்டது . அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

March For Science India

மாணவர்களின் திறனைக் கூட்டுங்கள்

Friday, August 4, 2017

அவமதிப்பு (Disgrace - J.M. Coetzee)


நிறவெறி காலத்திற்கு பிறகு  தென்னாபிரிக்காவில் நடக்கும் கதை இது.  ஒரு metaphor -கறுப்பர்கள் கையில் அதிகாரம் கிடைத்தவுடன் அவர்கள் செய்யக்கூடியவை பற்றி ஆசிரியர் இந்த கதையின் மூலம் விவரிக்கிறார். கல்லூரி பேராசிரியரான டேவிட் லூரி தனது மாணவியுடன் தகாத உறவு கொண்டதாக புகார் கூறப்படுகிறது. அவர் அதை எதிர்க்கவில்லை ஆனால் விசாரணைக் குழு சொல்வதுபோல் ஏதும் செய்யப் போவதில்லை என்று கூறி அவர்கள் அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்கிறார்.இது அவருடைய முதல் அவமதிப்பு .
(I)f we are going to be kind, let it be out of simple generosity, not because we fear guilt or retribution.
சிறிது காலம் தனது மகளோடு செலவிட முடிவு செய்து ஈஸ்டர்ன் கேப் (Eastern Cape) செல்கிறார். மகள் லூசி ஒரு ஓரினச்சேர்க்கையாளர் தனியாக விவசாயம் செய்து வாழ்கிறார்.நாய்கள் பலவும் அவளுக்கு உண்டு . அவருக்கு உதவியாக பெட்ரஸ் ஒரு கறுப்பர் மற்றும் அவரது குடும்பம்.லூரிக்கு இந்த அமைப்பே முதலிலிருந்து பிடிக்கவில்லை. லூஸிதான் அவரை சமாதானம் செய்கிறாள். லூரி மற்றும் பெட்ரஸின் முதல் சந்திப்பு முக்கியமானது. பெட்ராஸ் தன்னை நாய் மனிதன் (dog-man ) என்று அறிமுகப்படுத்துகிறான் . இங்கு பெட்ராஸ் சொல்வதையெல்லாம் கேட்கிறார்.வரலாறு மெதுவாக திரும்புகிறது ஒரு வெள்ளையர் கறுப்பர் சொல்வதைக்  கேட்டு வேலை செய்வது.
Temperament is fixed, set. The skull, followed by the temperament: the two hardest parts of the body. Follow your temperament. It is not a philosophy, It is a rule, like the Rule of St Benedict.
பெட்ரஸ் அங்கு வேலை செய்தாலும் அவன் மெதுவாக லூசியின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிறான் . புது வீடு காட்டுகிறான். லூரிக்கு அவன்மேல் ஒரு புரியாத பயம் அதை லூசியிடமும் சொல்கிறான். அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு நாள் லூசி லூரியின் கண்முன்னே மூன்று கறுப்பர்களால் கற்பழிக்க படுகிறாள் .லூரியை அடித்து குளியலறையில் போட்டு விட்டு அனைத்து வன்முறையும் நிகழ்த்தப்படுகிறது.அவன் கதவின் ஓரமாக தனது மகளை பரிதாபமாக பார்க்கிறான்.   இந்த நிகழ்வில் முக்கியமான ஒன்று தந்தைக்கும் மகளுக்கும் நடக்கும் உரையாடல்
              Lucy :‘But why did they hate me so? I had never set eyes on them.’ 
              Lurie:‘It was history speaking through them'
இந்த உரையாடலே கதையின் ஜீவன்.இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் அல்ல. அந்த மூவரில் ஒருவன் பெட்ரஸ் உறவினன். அதை அறிந்து லூரி பெட்ரஸிடம் முறையிடுகிறான். ஆனால்  பெட்ரஸ் தனக்கு ஏதும் தெரியாது என்று மறுக்கிறான். லூஸியோ போலீஸிடம் புகார் செய்ய மறுக்கிறாள். ஆசிரியர் இந்த தருணத்தை இவ்வாறு விவரிக்கிறார் -
How humiliating,’ he says finally. ‘Such high hopes, and to end like this.’
‘Yes, I agree, it is humiliating. But perhaps that is a good point to start from again. Perhaps that is what I must learn to accept. To start at ground level. With nothing…No cards, no weapons, no property, no rights, no dignity.’
‘Like a dog.’
‘Yes, like a dog.’ 
இப்படித்தான் கறுப்பர்களை வெள்ளையர்கள் பல காலமாக வைத்திருந்தனர். இப்போது அது வெள்ளையர்களுக்கு நடக்கிறது. இந்த மாற்றத்தை ஆசிரியர் மிக அழகாக பெட்ரஸ் மற்றும் லூரியின்  'role reversal' மூலம் சொல்கிறார். "டாக் மேனகா (dog man) இருந்த பெட்ராஸ் லூசியின் அனைத்து நாய்களும் கொல்லப்பட்டவுடன் 'free man" ஆகிறான் லூரியோ தன்னார்வத்தில் நாய்கள் உறைவிடத்தில் வேலை செய்கிறான். அங்கு அவன் யாருமற்ற நாய்களை வலியில்லாமல் கொல்லும் மருத்துவருக்கு உதவுகிறான்.இந்த மருத்துவமனையில் மிகவும் காயப்பட்ட நாய்களை கவனித்துக் கொள்கிறான். அவைகளின் வலியை புரிந்து கொள்கிறான். தான் லூசிக்கு ஏதும் செய்ய இயலாது அவள் தனித்து செயல்படுவது சரிதான் என்று புரிந்து கொள்கிறான். தான் மிகவும் நேசித்த நாயின் வலியைப்போக்க அதை மருத்துவரிடம் ஊசிபோட்டு கொல்லக் கொடுப்பதுடன் கதை முடிகிறது.      

லூரி நினைத்திருந்தால் அவன் மீண்டும் கேப் டவுனிற்கே சென்றிருக்கலாம் அவனுக்கு தெரியும் அவன் அங்கு வாழ முடியாதென்று.இதுவும் ஒரு குறியீடு தான். ஆசிரியர் கதை முழுதும் விலங்குகள் வதை பற்றி பேசுகிறார். ஒரு விதத்தில் இந்த கதைக்கு அது பொருந்தும் - "Yes we eat up a lot of animals in this country…It doesn’t seem to do us much good. I’m not sure how we will justify it to them." 

இந்த கதைக்கு இந்த பெயர் சரியாக பொருந்தும்.பலரும் பலவிதத்தில் அவமதிப்புக்குள்ளாகிறார்கள் லூரிதான் மிகவும்.எழுத்துநடை நேரடியான  எளிய  நடை ஆனால் அந்த எளிய நடைக்குப் பின் பல உணர்வுபூர்வமான  கருத்துக்கள் உள்ளன. பல குறியீடுகள் நமக்கு தென்னாப்பிரிக்க வரலாறு கொஞ்சம் தெரிந்திருந்தால் அதை புரிந்துகொள்ளலாம். இந்த நாவல்  ஒரு இருண்ட நிகழ்காலத்தை பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது.

நல்ல புத்தகம்.

Wednesday, August 2, 2017

மெதுத்தன்மை ....Slowness - Milan Kundera


இந்த சிறிய புத்தகத்தில் குந்தேரா பல விசயங்களைப் பற்றி பேசுகிறார். மெதுத்தன்மைக்கும் நினைவாற்றலுக்கும் உள்ள சம்பந்தம், தொழில்நுட்ப வளர்ச்சியால் வரும் இன்ப துன்பம் மற்றும் பல விசயங்களை ஆசிரியரே இந்த கதையின் கதைசொல்லியாக வந்து சொல்லுகிறார்.தொடக்கத்திலேயே ஆசிரியர் "வேகம் என்பது தொழில்நுட்பம் மனிதனுக்கு  வழங்கிய ஒரு வகையான இன்பம்" (Speed is the form of ecstasy the technical  revolution has bestowed on man) என்று கூறுவதோடு  "மெதுத்தன்மையின் மகிழ்ச்சி எங்கே சென்றது ?" என்று வாசகர்களைப் பார்த்துக் கேட்கிறார் .
The degree of slowness is directly proportional to the intensity of memory; the degree of speed is directly proportional to the intensity of forgetting.

ஆசிரியர் ஒரு நாட்டுப்புற வீட்டிற்கு செல்கிறார் .அங்கு அவர் ஒரு புத்தகத்தை  ( ''Point de Lendemain'' (''No Tomorrow''), by Vivant Denon) நினைவு கூறுகிறா ர்.கதை முன்னும் பின்னுமாக செல்கிறது . அது 200 வருடங்களுக்கு முன்னாள் அதே வீட்டில் நடந்த காதல் கதை. அதில் ஒரு குதிரை வீரன் அந்த வீட்டின்  முதலாளி அம்மாவால் தனது காதலுக்கு உபயோகப்படுத்தப்படுகிறன்.  ஆசிரியர்  தனது நண்பன் வின்சென்டை இந்நாள்  குதிரை வீரன் போல சித்தரிக்கிறார். வின்சென்டிற்கும் ஜூலிக்கும் உள்ள உறவு மிக வேகமாக ஒரே நாளில் வளர்கிறது.  குந்தேரா இந்த வேகமான காதலை விட அந்த பழைய காதலே  அது   ஒரு நாடகமாக இருந்தால் கூட சிறந்தது போல சித்தரிக்கிறார் . அதை இவ்வாறு விவரிக்கிறார்  ''Everything is composed, connected, artificial, everything is staged, nothing is straightforward, or in other words, everything is art; in this case: the art of prolonging the suspense, better yet: the art of staying as long as possible in a state of arousal.

 அது ஒரு பக்கமிருக்க மற்றொரு பக்கம் ஆசிரியர்  பிரெஞ்சு  அறிவுஜீவிகளை "dancers" என்று அழைக்கிறார்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக ஒழுக்க நெறிகளை பின்பற்றுபவர்கள், அவர்கள் தங்கள் வாழ்நாளில் எதையும் சாதிக்கப் போவதில்லை என்கிறார்.   புகழ் என்பது எவ்வாறு கேமராவின் கண்டுபிடிப்பால் மாறியது என்று எடுத்துக்காட்டுடன் விவரிக்கிறார்.இந்த கதையின் இறுதியில் அந்த குதிரை வீரனும் வின்செண்டும் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள் ஆனால் எதுவும் பெரிதாக நிகழவில்லை. வின்சென்ட் வேகமா அந்த சந்திப்பை கடந்து விடுகிறான் .
Because beyond their practical function, all gestures have a meaning that exceeds the intention of those who make them; when people in bathing suits fling themselves into the water, it is joy itself that shows in the gesture, notwithstanding any sadness the divers may actually feel. When someone jumps into the water fully clothed, it is another thing entirely: the only person who jumps into the water fully clothed is a person trying to drown; and a person trying to drown does not dive headfirst; he lets himself fall: thus speaks the immemorial language of gestures.” 
இதுவே குந்தேராவின் முதல் பிரெஞ்சு நாவல் ஆங்கில மொழியாக்கம் எளிய நடையில் மிகவும் நன்றாகவுள்ளது .சில இடங்களில் குழப்பமாக இருந்தாலும் கதையின் கருப்பொருள் வாசகனை முன்னே நகர்த்துகிறது .என்னை மிகவும் பாதித்து ஆசிரியரின் மெதுத்தன்மையைக் குறித்த கருத்துக்கள்தான். இந்த 'selfie' உலகில் எவருக்கும் எதையும் நின்று நிதானமாக செய்யும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது.நான் இந்த புத்தகத்தை தாய்லாந்திற்கு செல்லும் விமானத்தில் வாசித்தேன். என்னவோ தெரியவில்லை தாய்லாந்தில் சென்ற இடங்களில் எல்லாம் நிதானமாக நின்று ரசித்தேன் புகைப்படம் எடுப்பதைவிட.  என்னைப் பொறுத்தவரை  இதுவே இந்த புத்தகத்தின் வெற்றி.

வாசிக்க வேண்டிய புத்தகம். 

Tuesday, August 1, 2017

காதல் கலை ( The Art Of Love - Ovid)


கிறிஸ்து பிறப்பிற்கு  முன் எழுதப்பட்ட இந்த புத்தகத்தைத் படித்தவுடன் நினைத்தது   இந்நூலில் ஆசிரியர் கூறும் பெரும்பாலான கருத்துகள் இன்றும் பொருந்தும் என்றுதான். இந்த புத்தகம் பெண்கள் எவ்வாறு ஆண்களை கவருவது மற்றும் ஆண்கள் எவ்வாறு பெண்களை காதல் கொள்ள வைப்பது என்று கூறுகிறது.  இந்நூலை எழுதிய ஆசிரியர் கண்டிப்பாக நிறைய படித்தவராகத்தான் இருப்பார் .
"If you want to be loved, be lovable."
"உங்களில் யாராவது  காதல் கலை அறியாதவர்களென்றால்  , அவன் இந்த நூலை படித்து இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ளட்டும் " இப்படித்தான் இந்த நூல் தொடங்குகிறது. ஒரு ஆண் பெண்களிருக்கும் இடத்தில்  எப்படி பேச வேண்டும் , எப்படி மது அருந்த வேண்டும் , எப்படி காதலியின் சேவகியை நடத்த வேண்டும். அது போல பெண்களுக்கும் பல ஆலோசனைகளை ஆசிரியர் கூறுகிறார்.

ஏன் ஓவிட் இந்த நூலை எழுதினார் என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.பேரரசர் அகஸ்டஸின் திருமண சட்டத்திற்கு எதிராக எழுதப்பட்டது என்று பெரும்பாலோரால் நம்மப்படுகிறது. இந்த புத்தகம்
"The Art of Love" மற்றும் "The Cure For Love" என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலிலுள்ள சில "quotes" :

Yield to the opposer, by yielding you will obtain the victory.
Love is a kind of warfare.
A field becomes exhausted by constant tillage.
Chance is always powerful. Let your hook always be cast; in the pool where you least expect it, there will be fish.
Let who does not wish to be idle fall in love.
Who is allowed to sin, sins less.
Love yields to business. If you seek a way out of love, be busy; you'll be safe then.

 படித்து ரசிக்கலாம்.

Monday, July 24, 2017

The Tuner of Silences - Mia Couto


மியா கோட்டோ ஆப்பிரிக்க இலக்கியத்தில் தவிர்க்க முடியாத எழுத்தாளர் . போர்ச்சுகீசிய பெற்றோருக்கு மொசாம்பிக்கில் பிறந்தவர் .காலனிய அரசியலை எதிர்ப்பவர் .காமோஸ் (Camoes) மற்றும் நியூஸ்டேட்ட் (Neustadt) இலக்கிய விருதுகளைப் பெற்றவர் .இவரின் நூலொன்று  சமீபத்தில்  ஆங்கில மொழியாக்கத்தில் வெளிவந்தது .அதன் பெயர்   "தி டியூனர் அப் சைலென்ஸ் ".
He who seeks eternity should look at the sky, he who seeks the moment, should look at the cloud
இந்த கதை இரண்டு கதாபாத்திரங்களால் சொல்லப்படுகிறது .முதலாவது சிறுவன் (Mwanito) மவானிட்டோ தனது வாழ்க்கையை சொல்லுகிறான். அவனும் அவனது அண்ணன் மற்றும் தந்தை சில்வெஸ்டர் விட்டலிசியோ  ஒரு பாதுகாக்கப்பட்ட காட்டுக்குள் வாழ்கிறார்கள் . அவனது தந்தை அந்த இடத்தை ஜெசூசலேம் (Jezoosalem) என்று அழைக்கிறார். அந்த நிலத்தில் அவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அவர்களின் வெளியுலக தொடர்பு அவர்களின் மாமா மட்டுமே. மவானிட்டோவிற்கு அதுவே உலகம். அங்கு சில்வெஸ்டர் விட்டலிசியோ அவர்களை கொடுமைப்படுத்தி ஒரு ராணுவ ஆட்சி போல் ஆட்சி செய்கிறார். அவர் அவர்களை எழுதவோ படிக்கவோ அனுமதிக்கவில்லை. வெளியுலகில் யாரும் இல்லை  என்று அவர்களை நம்பவைக்கிறார். விட்டலிசியோ இங்கு வந்தவுடன் அனைவரின் பெயரையும் மாற்றினார் ஆனால் மவானிட்டோவிற்கு மட்டும் மாற்றவில்லை.

மவானிட்டோ  தான் தந்தை சொல்வதைக் கேட்பதற்கே பிறந்தவன் என்று நம்புகிறான். அவன் தந்தையும் மூத்த மகனைவிட மவானிட்டோமே அனைத்தையும் பகிர்கிறார். அவனின் அமைதி தனக்கு ஆறுதல் தருகிறது என்று அவர் நம்புகிறார்.மணிக்கணக்கில் அவனிடம் பேசுகிறார் .  மவானிட்டோவிற்கு தன் தாயைப் பற்றி பல கேள்விகள் -அவள் எப்படி இருப்பாள் ,அவளது குரல் எப்படி இருக்கும். அவன் இந்த கேள்விகளை சில்வெஸ்டர் விட்டலிசியோவிடம் கேட்டதே இல்லை.
Love is a territory where orders can't be issued
 அவர்களின் இந்த அமைதியான வாழ்க்கை மார்தா  (Marta) என்ற பெண்ணின் வருகையால் பாதிக்கப்படுகிறது. மவானிட்டோ அவன் அம்மாவிற்கு பிறகு பார்த்த முதல் பெண்  மார்தா. அவன் அவளை அம்மாவாக பார்கிறான். அதற்க்கு எதிர்மாறாக அவனது அண்ணன் மார்தாவை கனவு பெண்ணாக காதலியாகப்  பார்கிறான். அவளின் வருகை சில்வெஸ்டர் விட்டலிசியோவிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.அவளை எச்சரிகிறான். மார்தா தனது கணவனைத் தேடி ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா வந்தவள். மார்தா தன் கதைச் சொல்கிறாள்.அவளது கதையும் துயரமானதுதான். அவள்  ஜெசூசலேம்  தனது அடையாளத்திருந்து  விடுதலை அளிக்கிறது என்று நினைக்கிறாள்.

இரண்டு வெவ்வேறு உலகங்கள் சந்திக்கையில் , நான் எதிர் பார்த்தது போல, ஜெசூசலேமைவிட்டு அவர்கள் வெளியே வருகிறார்கள் .அங்கு வந்த பிறகுதான் மார்தா தன் கணவன் இறந்துவிட்டான் என்று தெரிகிறது. மவானிட்டோவிற்கோ அது ஒரு மறுபிறப்பு ,பிற மனிதர்களை பார்கிறான். தன் தாயைப் பற்றி அறிகிறான். அவன் ஒருபோதும் அவனது தந்தையை விட்டு பிரியவில்லை.

ஏன் ஒரு தந்தை தனது இளம் மகன்களை இப்படி மக்களே இல்லாத ஒரு இடத்திற்கு கொண்டு செல்கிறார்? மனைவின் இறப்பிற்கு பிறகு இந்த உலகத்தின் மீது இருந்த கோவம் ? அவருக்கு  இந்த உலகம் ஒரு கழிவு. அக்கழிவில் இருந்து மீள அவருக்கு வேறு வழி தெரியவில்லை . இந்த கதையின் முக்கியமான ஒன்று ஆசிரியரின் அந்த நிலத்தின் வர்ணனை. ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒரு கவிதையுடன் தொடங்குகிறார். இக்கவிதைகள் இக்கதைக்கு பெரும் வலிமை சேர்க்கிறது. கோட்டோவின் எழுத்துநடை வாசகரை கதையில் ஒரு அங்கமாகவே மாற்றுகிறது என்றால் மிகையாகாது.

இந்த புத்தகம் மனிதன் தனக்கொரு எல்லையைத்  திணித்துக்கொள்வதும் அதை மீறுவதற்கு ஏற்படும் ஆசையைப் பற்றி பேசுகிறது. தந்தை எல்லையைத் திணிப்பதும்  மகன்கள் அதை மீற நினைப்பதுவும்தான்  கதை. இந்த மொத்தக்கதையையும் ஒரு "allegory" என்றும் எடுத்துக்கொள்ளலாம். மொசாம்பிக்கின் சமீபத்திய வரலாறு அதற்கு சான்று.

வாசிக்க வேண்டிய புத்தகம். 

Monday, July 17, 2017

அமைதி (Silence - Shusaku Endo)


Silence என்று பெயரிட்ட புத்தகம் ஒன்றை இரண்டு வருடங்களுக்கு முன் பழைய புத்தகக் கடையில் வாங்கினேன் .அதுவரை ஸுசக்கு என்டோ (Shusaku  Endo) என்ற பெயரைக் நான் கேள்விப்பட்டதேயில்லை. கூகுளில் தேடியபோது இந்த புத்தகம் எவ்வளவு பிரபலமானதென்று தெரிந்தது .எந்த புத்தகம் வாங்கினாலும் உடனே 10-20 பக்கங்கள் வாசிப்பது என் வழக்கம் .இந்த புத்தகத்தையும் அதுபோல உடனே வாசித்தேன் . நாற்பது பக்கங்கள் வாசித்த பிறகு இனி ஒரேமூச்சில் வாசிக்க முடிவு செய்து புத்தகத்தை எங்கோ வைத்தேன் . உண்மையில் இந்த புத்தகம் எங்கு இருக்கிறதென்று மறந்தேவிட்டது .

கடந்த வருடம் ஒரு magazine-ல் மார்ட்டின் ஸ்கோர்செஸி (Martin Scorsese) இந்த புத்தகத்தின் கதையை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று படித்தேன் .உடனே புத்தகத்தைத் தேடி கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன். ஒரு சேசு சபை  (Jesuits) பாதிரியார்  தனது குரு கிறிஸ்துவத்தை துறந்தார் என்று கேள்விப்பட்டு அவரை தேடி ஜப்பான் செல்கிறார் அங்கு அவர் சந்திக்கும் பிரச்சனைகளே இந்த நாவலின் கதை .இந்த கதை ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவியது . புனித பிரான்சிஸ் சேவியர் 1549-ஆம் ஆண்டு ஜப்பான் சென்று இரண்டு வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றுகிறார் .அவரைத் தொடர்ந்து அடுத்த 50 ஆண்டுகளில் பல்வேறு கிறிஸ்தவ குழுக்கள் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை மதம் மாற்றினர் . இந்த குழுக்களுக்குள் நடந்த உள் மோதலால் .அவர்களை 1587-ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது  . உச்சக்கட்டமாக 1597-ல் இருபத்தியாறு  கிறிஸ்தவர்கள் ஆறு பாதிரியார்கள் உட்பட நாகசாகியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டனர் .

பதினேழாம் நூற்றாண்டு ஜப்பானில் கிறிஸ்தவர்கள் பெரும் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இந்த சூழ்நிலையில்தான் இரண்டு பாதிரியார்கள் ரொட்ரிகோஸ் மற்றும் கர்ப்பே தங்களின் குருவை தேடி வருகிறார்கள்.அங்கு அவர்களை மறைந்து வாழும் கிறிஸ்தவர்கள் ஆதரித்து அடைக்கலம் கொடுக்கிறார்கள் .அந்த மக்களின் இறை நம்பிக்கையும் அதற்காக அவர்கள் படும் துன்பமும் பாதிரியார்கள் இருவரையும் ஆச்சரியப்படுத்துகிறது .அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றுகிறார்கள் .அவர்களுக்கு வழிகாட்டியாக கிச்சிஜிரோ ,ஒரு கோழை மொழிப்பெயர்ப்பாளர். .அப்படி வெளியே சென்ற ஒரு தடவை விசாரணைக் குழு ஒன்று கிராமத்தின் மூன்று முக்கிய பெரியோரை மிகக் கொடுமையாக கொலை செய்கிறது.அவர்கள் செய்த குற்றம் இயேசு கிறிஸ்துவின் படத்தை(fumi-e) மிதிக்காதது  . இந்த சம்பவம் இரு பாதிரியார்களையும் மிகவும் பாதிக்கிறது . அவர்கள் நினைத்தது தாங்கள்தான் இம்மக்களை மீட்க வேண்டுமென்று ஆனால் நடந்து கொண்டிருப்பதோ நேரெதிர் .ரொட்ரிகோஸ் இவ்வளவு கொடுமைக்கு பிறகும் எப்படி கடவுள் அமைதியாக இருக்கிறார் என்று தனக்குள் கேள்வி கேட்கிறார் .

அவர்கள் கைது செய்யப்படுமுன்புவரை மக்களை இயேசு கிறிஸ்துவின் படத்தை மிதித்து உயிரைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்ய மறுக்கிறார்கள். ஜப்பான் அதிகாரிகள் பாதிரியாரை துன்புறுத்தாமல் அவர் முன் மக்களை துன்புறுத்துகிறார்கள். அதிகாரிகள் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான் பாதிரியார் ரொட்ரிகோஸ் கிறிஸ்துவை நிராகரித்து அவரின் படத்தை மிதிக்க வேண்டும். முகுந்த மன போராட்டத்திற்குப்பிறகு ரொட்ரிகோஸ் இயேசு கிறிஸ்துவின் படத்தை மிதிக்கிறான் .அப்போது சேவல் கூவுகிறது. ஒரு குரல் கேட்கிறது "மிதி ,மிதி , யாரையும் விட உனது காலின் வலி எனக்கு தெரியும்.மிதி, மனிதனால் மிதிக்கப்படுவதர்காகவே  இந்த பூமியில் பிறந்தேன்.அவர்களின் வலியில் பங்கெடுப்பதர்காகவே சிலுவை சுமந்தேன் ." இது யாருடைய குரல் இயேசுவின் குரலா அல்லது சாத்தானின் குரலா? சேவல் கூவுவது எதைக் குறிக்கிறது - பீட்டரின் மறுப்பை போன்றதா?

ரொட்ரிகோஸ் தனது குரு பெரேராவை  சந்திக்கிறான் .அவன் அவரைப் பற்றி கேள்விப்பட்ட அனைத்தும் உண்மையென்று உணர்கிறான் . பெரேரா ஜப்பான் ஒரு சதுப்பு நிலம் அதில் கிறிஸ்தவம் வளராது என்கிறார்  .ரொட்ரிகோஸும் பெரேராவைப் போல மாறுகிறார்  .சில காலங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஜப்பான் அரசிற்கு வேலை செய்கிறார்கள் -அவர்களின் வேலை ஜப்பானுக்குள் வரும் பொருட்களில் கிறிஸ்தவம் சார்ந்த ஏதாவது இருக்கிறதா என்று சோதிப்பது. அடுத்த முப்பது வருடங்கள் மீண்டும் மீண்டும் இயேசு கிறிஸ்துவின் படத்தை ஜப்பானிய அரசுக்கினங்க மிதிக்கிறான்.அவ்வாறே வாழ்ந்து மடிகிறான் .

சேவல் கூவுவது என்னைப் பொறுத்தவரை பீட்டரின் மறுப்பைப் போன்றதல்ல ஏனெனில் பீட்டர் திருந்தி இறுதிவரை கிறிஸ்துவிற்காக வாழ்ந்தார் .ஆனால் ரொட்ரிகோஸ் இறுதிவரை மறுதலித்துக் கொண்டே இருக்கிறான். இன்னொரு முக்கியமான கதாபாத்திரம்  கிச்சிஜிரோ. அவன் பாதிரியார்களைக் காட்டிக் கொடுத்தாலும் மனம் திரும்பி மன்னிப்பு வேண்டுகிறான்.பலமுறை தவறு செய்தாலும் மனம் மாறுகிறான்.கிச்சிஜிரோ கிறிஸ்துவைத் துறந்தாலும் கிறித்தவர்களுக்கு உதவுகிறான் .

பல விதமான கேள்விகளுடன் இந்த நாவல் நிறைவடைகிறது.மக்களைக் காப்பாற்ற பாதிரியார் கிறிஸ்துவைத் துறப்பது சரியா ? கிறிஸ்துவிற்காக உயிர் துறக்கும் மக்களின் நம்பிக்கை பெரிதா? எப்படி கடவுளின் அமைதியைப் புரிந்துக்கொள்வது?

இந்த நாவல் வாசித்த பிறகு அதே பெயரில் வந்த படத்தையும் பார்த்தேன் . மார்ட்டின் ஸ்கோர்செஸி நாவலுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் .இந்த திரைப்படத்திற்கும் நாவலுக்கும் உள்ள பெரிய வேறுபாடு இறுதி காட்சிதான். திரைப்படத்தில் பாதிரியார் ரொட்ரிகோஸ் இறந்த பிறகு அவரது சவப்பெட்டிக்குள் அவரது ஜப்பானிய மனைவி ஒரு சிலுவைவையை யாருக்கும் தெரியாமல் வைக்கிறார் அதோடு படம் நிறைவடைகிறது.இந்த குறியீடு எதைக்குறிக்கிறது ?

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

Monday, July 10, 2017

நானும் ஹரி போட்டரும்


ஹரி போட்டர் புத்தக வரிசையில் முதல் புத்தகம் வந்து இந்த ஜுனுடன் இருபது வருடங்கள் ஆகிவிட்டது . ஆனால் நான் படிக்க ஆரம்பித்தது பத்து வருடங்களுக்கு முன்னால்தான். நான் இந்த புத்தகங்களை வாசிக்க முதல் காரணம் சிங்கப்பூரில் எங்கு பார்த்தாலும் பதின் வயது இளைஞர்களிடம் இருந்த இந்த வரிசையின் இறுதி புத்தகமான "Harry Potter and the Deathly Hallows" தான் .வெகுநாட்களாக படிக்க வேண்டுமென்று நினைத்ததை இந்த இளைஞர்களின் ஆர்வம் மேலும் தூண்டியது.

முதல் புத்தகமான "Harry Potter and the Philosopher's Stone" ஒரு பிரம்மாண்ட மேஜிக் உலகத்திற்கான விதையை விதைத்ததென்றால் மிகையாகாது . என்னுள் அது ஒரு காத்திருப்பையும் எதிர்பார்ப்பையையும் உருவாக்கியது. கதாபாத்திரங்களின் அறிமுகம் மிகவும் நுட்பமானது . துர்சலேவின் வீட்டின் அமைப்பும் அவரின் மனைவி மகனின் சித்தரிப்பு மற்றும் ஹரியின் தங்கும் இடமும் அவரின் எதிர்கால போராட்டத்தின் குறியே .  உண்மையில் முதல் மூன்று புத்தகங்களில்  கதாபாத்திரங்களை மெல்ல மெல்ல ஒரு பெரிய போருக்கு தயார் செய்வதுபோல் உள்ளது. நான்காவது புத்தகமான "Harry Potter and the Goblet of Fire"-ல் வோல்டேர்மட் மனித உருவம் எடுக்கிறான் .அடுத்த மூன்று புத்தகங்கள் ஹரியின் வோல்டேர்மாட்டுடன் போராட்டமே .

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை .சில நாட்கள் ஆந்தை கடிதம் கொண்டுவராதா  என்று ஏங்கியது உண்டு. வாசகர்களை ஒரு விதமான மனநிலைக்கு ஆசிரியர் கொண்டு செல்கிறார் -அதுவே ஆசிரியரின் வெற்றியும் கூட. ஆசிரியர் பல மொழிகளிலிருந்து பல வார்த்தைகளை எடுத்து ஆங்கிலத்தோடு இணைத்து உபயோகித்துள்ளார் .சில புதிய வார்த்தைகளையும்(Muggle, Quidditch) உருவாக்கியுள்ளார் . எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் ஹக்ரீட்(Hagrid) ,டம்பெல்டோர் (Dumbledore) மற்றும் ஹெர்மியோன் (Hermione Granger). அதிலும் ஹக்ரிடின் அறிமுகம் மறக்கமுடியாதது.

இந்த வரிசை புத்தங்களை இரண்டாவது முறையாக படிக்கும்போதுதான் அதிலுள்ள சில patterns அறிய முடிந்தது. முதலாவது அன்பின் வெற்றி - தன் மகனுக்காக தாயின் அன்பு .திரும்ப திரும்ப இது வெளிப்படுத்திக்கொன்டே இருக்கிறது. உண்மையில்  ஹரியின் நண்பர்களும் அவனுக்காக பலவற்றை இழக்கின்றனர் ஆனால் அவர்களின் அன்பு மாறவே இல்லை .ஹரியும் அனைவரையும் நேசிக்கிறான் .இரண்டாவது ஹரி மற்றும் டம்பெல்டோரின் உறவு. இந்த உறவை தந்தை மகன் அல்லது குரு சிஷ்யன் என்று எப்படிப் பார்த்தாலும் ஒரு தூய்மையான உறவு வெளிப்படுகிறது .,டம்பெல்டோர் தான் ஹரியின் தூண் , எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் அவர்தான் ஹரியை மீட்கிறார்.அவர் ஒரு கடவுள் மாதிரி காட்சியளிக்கிறார் .

மூன்றாவது மனிதன் இறப்போடு போடும் போராட்டம் .ஹரி தொடர்ச்சியாக சாவின் உச்சத்திற்கே சென்று மீள்கிறான் .தொடர் முழுவதும் அவனை சுற்றி சாவு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது அவனும் பயந்து கொண்டே அனைத்தையும் எதிர் கொள்கிறான் .என்னதான் முடிவை யூகிக்க முடிந்தாலும் இறுதிவரை thrilling-காகவே  கதையை நகர்த்திச்சென்றது ஆசிரியரின் பெரிய வெற்றியே .நான்காவது ஹரி மற்றும் வோல்டேர்மாட்டின் உறவு .எதெல்லாம் நல்லவையோ அது ஹரி எதெல்லாம் தீயவையோ அது வோல்டேர்மாட்.  இருவரின் உயிரும் ஒன்றோடொன்று இணைத்துள்ளது . வோல்டேர்மாட்டை அழிக்க ஹரி சாக வேண்டும் . வோல்டேர்மாட்டை விட ஹரியே அதிக action-ல் ஈடுபடுகிறான் .அதுவும் சரியே .ஒரு பயங்கர தீய சக்தியை அழிக்க ஹரி தனது அணைத்து திறனையும் பயன்படுத்தியே வேண்டும், அதைத்தான் அவன் செய்கிறான் .

இந்த வரிசை புத்தகங்கள்  வாசகர்களுக்கு ஒரு விதமான சுதந்திரத்தை கொடுத்தது .பல விதமான கிளைக் கதைகள் வாசகர்களால் எழுதப்பட்டது .ஹரி போட்டர் 'தீம் பார்ட்டிகளும் புத்தக விமர்சனங்களும் ஆய்வுகளும் நடந்து கொண்டேயிருக்கிறது .Young adult fiction-வகையை  ஹரி போட்டர் புத்தகங்கள் உயிர்ப்பித்தது என்றால் மிகையாகாது . ஒரு நாள் சர்ச்சில் ஹரி போட்டர்  படித்துக்கொண்டிருந்தேன் அப்போது வயசான ஒருவர் இந்த வரிசை புத்தகங்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்றார் .எனக்கு அப்படி படவில்லை. ஆம் கிறிஸ்தவம் மேஜிக் மற்றும் மாந்த்ரீகம் போன்றவற்றை எதிர்க்கிறது .ஆனால் இந்த வரிசை புத்தங்களில்  அந்த மாதிரி இல்லை . சாத்தான்  வழிபாடும் இல்லை .என்னை பொறுத்தவரை இது ஒரு fairy tale வகையை சார்ந்தது.

கடந்த மூன்று மாதங்களாக நான் என் மகளுக்கு முதல் புத்தகமான "Harry Potter and the Philosopher's Stone-ஐ வாசித்துக்கொண்டிருக்கிறேன்.அவளுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது .இரண்டு வார இடைவெளிக்கு பிறகு இன்று அவளிடம் ஹரி போட்டர் ஞாபகம் இருக்கிறதா ? என்று கேட்டேன் .அவள் உடனே "I want Gringotts - that money is funny" என்றாள் .  கதை புரிகிறதோ இல்லையோ அதில் வரும் பெயர்களும் பொருட்களும் அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. மீள்வாசிப்பு எனக்கு இன்னொரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தக வரிசை.

Wednesday, June 7, 2017

இசையும் ஓட்டமும்

Photo Courtesy : u-VIB Blog

நான் ஓட்டம்தான் எனது உடற்பயிற்சி என்று முடிவு செய்தவுடன்  செய்த முதல் காரியம் ஓடும் போது  எந்த இசையைக்  கேட்பது என்று யோசித்ததுதான் . 2008-ல் Polar watch company ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் பயிற்சியாளர் classical music-ல் இருந்து ஆரம்பிங்கள் என்று சொன்னார் .அன்றுலிருந்து எனது தேடல் ஆரம்பமானது .

தேடல் 

அப்பொழுதுதான் மொசார்ட்டும் பீத்தோவனும் எனக்கு அறிமுகமானார்கள் .மேற்கத்திய இசையைத் தேடித்தேடி கேட்டக் காலம் . காலையில் பீத்தோவனின் ஐந்தாம் மற்றும் ஒன்பதாம்  சிம்பொனி ,மொசார்டின் ஐம்பதாவது  மற்றும்  இருபத்திஐந்தாம்(Symphony No.25 in G minor K) சிம்பனியும் இரவில் Vivaldi-யின் four seasons-ம் ,அண்டோனின் ட்வொர்க்கின் "New World Symphony"-ம்  என்னை கொள்ளை கொண்ட நாட்கள் . ஒருநாள்  உடன் ஓடிக்கொண்டிருந்தவர் "நீங்கள் மௌரிஸ் ரவேலின்(Maurice Ravel's Bolero) "பாலெரோ" கேட்டிருக்கிங்களா  ?" என்று கேட்டார் .நான் இல்லை என்று சொன்னேன் . அதற்கு அவர் முதலில் அதை கேளுங்கள் என்றார் .அதன் பிறகு இன்றுவரை நீண்ட தூர ஓட்டத்திற்கு நான் இந்த அற்புதமான இசை இல்லாமல் சென்றதில்லை .

மேற்கத்திய இசையைக் கேட்க தொடங்கிய போதுதான் இந்திய பாரம்பரிய இசையைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம்  எழுந்தது .கர்நாடக சங்கீதத்திற்கும் எனக்கும் பெரிய தூரம் .அதனால் எனக்கு தெரிந்த / கேள்விப் பட்ட கலைஞர்களின் இசையைக் கேட்க ஆரம்பித்தேன் .முதலில் வாங்கியது நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளையின் சிடி அடுத்தது விக்கு விநாயக்ராமினுடையது .இரண்டுபேரின் இசையும் முதலில் புரியவில்லை , கேட்க கேட்க விக்கு விநாயக்ராமின் இசை எனக்கு புடித்தது .அடுத்து கேட்க ஆரம்பித்தது இளையராஜாவின் "Nothing but Wind","How to Name It" மற்றும் டிரம்ஸ் சிவமணியின் "மஹாலீலா " . தூக்காமல் தொடர்ச்சியாக இசை கேட்ட நாட்கள் . மற்றொரு குறிப்பிட்ட ஆல்பம் ஹரிபிரசாத் சவ்ராஷியாவின் "Call of the Valley" .புல்லாங்குழலின்  அற்புதமான இசை .Fusion இசையில் நான் ரசித்தது பிலிப் கிளாஸ் (Philip Glass) மற்றும் ரவிஷங்கரின் கூட்டணி. அதிலும் எனக்கு மிகவும் பிடித்தது "Passages" ஆல்பம். அதில் இடம்பெற்றிருக்கும் " Ragas in Minor Scale" என்னும் இசை கோப்பு அற்புதம்.

திரைப்பாடல்கள் ,பாப் ,R & B , Jazz  :
என்னதான் பாரம்பரிய இசையைக் கேட்டாலும் திரைப்பாடல்கள் இல்லாமல் ஒரு நாளும் சென்றதில்லை .சிங்கப்பூர் வந்த பிறகு ஹிந்தி பாடல்கள் கேட்பது குறைந்து ஆங்கில பாடல்கள் கேட்பது அதிகமானது .மைகேல் ஜாக்சன் ,பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் ,பாய் சோன் மற்றும் போன் ஜோவி தவிர வேறு எந்த பாடகர்களின் பாடல்களையும் இந்தியாவில் இருந்த வரை கேட்டதில்லை . சிங்கப்பூரில் ஒரு புது  இசை உலகிற்கு அறிமுகமானேன் .

திரைப்பாடல்களில்  இளையராஜாவே ஆட்சி செய்தார் ,செய்கிறார் இன்னும் செய்வார் . அவரின் நூற்றுக்கணக்கான பாடல்களில் சில  என் running  playlist-ல் உள்ளது. ஓரளவு இசையைப் பற்றி தெரிந்த பிறகு இளையராஜாவின் இசையின் நுட்பம் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது . இளையராஜாவின் இசை ஒரு பெரும் கடல். இப்போதுதான் அதில் ஒரு துளியை ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன் .ஏ .ஆர் ரஹ்மானின் இசை முதலில் பிடிக்காவிட்டாலும்  கேட்க கேட்க பல பாடல்கள் பிடித்து போயின. மற்ற பல இசை அமைப்பாளர்களின் சில  பாடல்களும் என் running  playlist-ல் உள்ளது.

மேற்கூறியது போல நான்கு ஐந்து ஆங்கில பாடகர்கள் மற்றும் குழுக்களை  தவிர வேறு யாரையும் இந்தியாவில் இருந்த வரை எனக்கு தெரியாது.இங்கு உலகத்தின் அனைத்து   இசையும் கிடைத்தது . எல்விஸ் ப்ரெஸ்லி முதல் அடேல் வரை அனைத்தும் அறிமுகமானது .
பிடித்த குழுக்கள்

  • Take That
  • Coldplay
  • Air Supply
  • U2
  • Back Street Boys 
  • Daft Punk 
நிறைய பாடகர்களையும்  பிடிக்க ஆரம்பித்தது .Beyonce ,Adele,Drake ,Ne Yo, Brad Paisley மற்றும் பழைய படர்களில் Michael Jackson,Stevie Wonder,Eric Clapton ஆகியோரின் பாடல்கள் மிகவும் பிடித்து போனது .என் இசையின் ரசனையும் நெடுந்தூர ஓட்டத்தின் பயிற்சியும் ஒருசேராக முன்னேறியது . இந்த பெருங்கடலில் எனக்கு பிடித்ததை தேர்வு செய்வதென்பது மிக கடினமான செயல் .

இசை கேட்டுக்கொண்டே ஓடுவது நல்லதா கெட்டதா என்று கேட்டால்  ஆமாம் இல்லை என்று இரண்டு பதில்களும் வரும்.விளையாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஓட்டப்பந்தய வீரர்களை இரண்டு பிரிவுகளாக வகை படுத்துவார்கள் .ஒன்று "இணையாளர்கள் (associators)" - அதாவது இவர்கள் ஓடும்போது உள்நோக்கி கவனிப்பவர்கள் (இதய துடிப்பு ,உடலின் வலி ,நீர் தேவை ,வியர்வையின் அளவு  மற்றும் பல ) மொத்தத்தில் ஓடுவதற்கு இணையாக. இரண்டாவது  "எதிர் இணையாளர்கள் (dissociators)"  இவர்கள் ஓடும்போது ஏற்படும் வலியை ,கஷ்டத்தை எப்படி மறப்பது என்று சிந்திப்பவர்கள் . பொதுவாக இசை கேட்டுக்கொண்டு ஓடுபவர்கள் இரண்டாவது ராகம்.நான் ஓடும் போது  இசை என்னை ஊக்கப்படுத்துகிறது . ஆனால் பெரும்பான்மையான 'elite'  வீரர்கள் ஓடும்போது இசை கேட்க மாட்டார்கள் . ஓடுவோம்,இசையை ரசிப்போம் !!

ஒரு நாள் 'East Coast Park'  பீச்சில் ஓடிக்கொண்டிருக்கும்போது ஒருவர் என்னிடம் "என்ன பாட்டு கேட்கிறீங்கே ?' என்று கேட்டார் .நான்  "ஏன் ?" என்றேன் ."இல்ல நான் பார்க்கும்போதெல்லாம் சந்தோசமா ஓடுறீங்களே அதான் கேட்டான் " என்றார்.அவர் ஒரு வட இந்தியர் .அவருக்கு இளையராஜாவை தெரிந்திருந்தது  நான் அவருக்கு என் முழு "playlist"-ஐ காண்பித்தேன் . அவருக்கு காண்பித்த பாடல்கள் பட்டியல் கீழே. சில பாடல்களை தூரத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்வேன் .

  1. ராஜ ராஜ சோழன் நான் 
  2. குருவாயுரப்பா 
  3. மயங்கினேன் சொல்ல தயங்கினேன் 
  4. காட்டுக்குள்ளே மனசுக்குள்ளே 
  5. பூவே செம்பூவே 
  6. ஊரு விட்டு ஊரு வந்து 
  7. காதோரம் லோலாக்கு 
  8. என்ன சத்தம் இந்த  நேரம் 
  9. கேளடி கண்மணி பாடகன் 
  10. சின்ன மணி குயிலே 
  11. சுந்தரி நீயும் 
  12. ஆகாய வெண்ணிலவே 
  13. Bolero - Maurice Ravel
  14. Beeethoven 5th Symphony
  15.  Ragas in Minor Scale - Passage
  16. It's a final countdown - Europa
  17. Jai Ho - Slumdog Millionaire
  18. Can't stop the feeling - Justin Timberlake
  19. Shape of You - Ed Sheeran
  20. மாதா மன்றாட்டு மழை 
  21. Hero Intro Theme -Tharai Thappattai
  22. Because of You - Ne Yo
  23. அய்யய்யோ ஆனந்தமே 
  24. கண்கள் இரண்டால் 
  25. கூடமேல கூடவச்சு 
  26. Someone Like You - Adele
  27. Hello - Lionel Richie
  28. Kiss From A Rose - Seal
  29. Right Rount - Flo Rida
  30. பச்சை கிளிகள் தோழோடு 
  31. Uptown Funk - Bruno Mars
  32. Happy - Pharrel Williams
  33. You are Beautiful - James Blunt
  34. You are not alone - Michael Jackson
  35. You belong with me - Taylor Swift
  36. Need you now - Lady Antebellum
  37. Right Here Waiting - Richard Max
  38. From This Moment - Shania Twain
  39. Un-Break My Heart - Toni Braxton
  40. The Flood - Take That
  41. All out of love - Air Supply
  42. I will Always Love You - Whitney Houston
  43. வெற்றி வெற்றி என்று சொல்லும் 
  44. ஒரு நாளும் உன்னை மறவாத 
  45. முத்து மணி மாலை 
  46. என்னை தாலாட்ட வருவாளா 
  47. I shot the sheriff - Eric Clapton
  48. Buffalo soldier - Bob Marley
  49. Don't worry be happy - Bob Marley
  50. Over the Rainbow - Israel Kamakawiwo'ole
  51. I just called to say I love you - Stevie Wonder
  52. When you say nothing at all - Ronan Keating
  53. Straight Through My heart -Backstreet Boys
  54. மேகமாய் வந்து போகிறேன் 
  55. நமக்சிவாய நமக்சிவாய 
  56. Ashichavan - Punyalan Agarbathis
  57. vaathilil - Ustad Hotel
  58. Ambazham Thanal- Oru Second Class yathra
  59. Aluva Puzha - Premam
  60. Muthuchipi - Thattathin Marayathu
  61. You are my everything - Santa Esmeralda
  62. Ente Ellam Ellam 
  63. Karimzhi kuruvi
  64. புத்தம் புது மலரே 
  65. அந்திமழை பொழிகிறது 
  66. கண்ணாளனே 
  67. It's My Life - Bon Jovi
  68. Royals -Lorde
  69. Viva La Vida - Coldplay
  70. Rolling In the Deep - Adele
  71. My Life Would Suck Without you - Kelly Clarkson
  72. I'm Gonna Miss Her - Brad Paisley
  73. Mud On The Tiers - Brad Paisley
  74. Amazing Grace - Royal Scots Dragoon Guards
  75. I dreamed a dream - Susan Boyle
  76. மன்றம் வந்த தென்றலுக்கு 
  77. With you - Chris Brown
  78. Just The Way You Are - Bruno Mars
  79. Grenade - Bruno Mars
  80. Be Without You - Mary J.Blige

Friday, May 12, 2017

சீயின் கனவு (Xi's Dream) - One Road One Belt

சீ சின்பிங் (Photo Credit : Wikipedia) 

செப்டம்பர் 7, 2013 அன்று சீன  அதிபர் சீ (Xi) ஒரு உரையில் எவ்வாறு பழைய பட்டு  பாதை சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் வர்த்தகம் மற்றும் கலாச்சார தொடர்ப்பை  ஏற்படுத்தியது மற்றும் அதன் இன்றைய தேவையை மிக தெளிவாக எடுத்து உரைத்தார் . புது பட்டு  பாதையே சீ(Xi) ஆட்சியின் கனவாய் மாறியது . இது ஒரு பெரிய சிக்கலான கனவு .சீ(Xi) எங்கு சென்றாலும் இந்த புதிய பாதையை பற்றி பேசினார் . பேசினது மட்டும் அல்லாமல் செயலிலும் இறங்கினார் . எதிர்பார்த்தது போலவே அமெரிக்கா இப்புதிய பாதைத் திட்டத்தில் பங்குபெற மாட்டோம் என்று அறிவித்தது மட்டுமல்லாமல் அதன் நட்பு நாடுகளையும் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவித்தது .

இப்புதிய பாதையானது  இரண்டு முக்கிய திட்டங்களைக் கொண்டது . முதலாவது பட்டு  பாதை பொருளாதார பகுதி (Silk Road Economic Belt) - இது சீனாவையும் மத்திய ஆசியாவையும் இணைப்பது .இரண்டாவது கடல் சார்ந்த பட்டு  பாதை(Maritime Silk Road) -இது சீனாவின் தெற்கு பகுதியை இணைப்பது . இத்திட்டத்தில் இந்தியா மிக கவனமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது . சீனாவும் பாகிஸ்தானும் பொருளாதார கூட்டு உடன்படிக்கை (China Pakistan Economic Corridor) செய்து கொண்டதுதான் அதற்கு முக்கிய கரணம். மற்றொரு காரணம் சீனா இந்தியாவின் "Nuclear Supplier Group" உறுப்பினராவதற்கு ஒப்புக்கொள்ளாதது .
Photo Credit - CGTN America

"Pivot To Asia" -இதுதான் அமெரிக்காவின் ஆசிய வெளியுறவு கொள்கை .ஆனால் அது ஒபாமாவின் தோல்வியே .இந்த தருணத்தில்தான் சீனா தனது முழு அதிகாரத்தையும் (ராணுவ  மற்றும் பொருளாதார) பயன்படுத்தி தனது வலிமையை வெளிப்படுத்தியது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் இரு பெரும் அதிகாரத்திற்கிடையே சிக்கிக் கொண்டது .  இந்நேரத்தில் டிரம்ப் "Trans Pacific Patnership(TPP)" என்னும் கூட்டு பொருளாதார உடன்படிக்கையை ரத்து செய்தார். இது மேலும் ASEAN நாடுகளை சீனாவின் பாகம் திசை திருப்பியது .  பல  நாடுகள்  ஒவ்வொன்றாக தங்களை அமெரிக்காவின் எதிர்ப்பை  மீறி இத்திட்டத்தில் தங்களை  சேர்த்துக் கொண்டார்கள்  .  இது சீனாவிற்கு கிடைத்த பெரிய வெற்றி .

இந்தியா  உட்பட இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் தங்களின் பங்கேற்பை உறுதி செய்துள்ளன . விரைவில் இந்த எண்ணிக்கை மேலும் கூடுமே தவிர குறையாது.இத்திட்டம் ஐந்து  வழிகளை (Five Routes)கொண்டது :
  1. சீனாவை மத்திய ஆசியா மற்றும் ரஷ்யா மூலம் ஐரோப்பாவோடு  இணைக்கும் வழி  .
  2. சீனாவை மத்திய ஆசியா மூலம் மத்திய கிழக்கு நாடுகளுடன்  இணைக்கும் வழி .
  3. சீனா ,தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவை இந்திய பெருங்கடலுடன்  இணைக்கும் கடல் வழி .
  4. சீனாவை தென்கிழக்கு சீனக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் மூலம் ஐரோப்பாவோடு இணைக்கும் கடல் வழி.
  5. சீனாவை தென்கிழக்கு சீனக்கடல் மூலம் தெற்கு பசிபிக் நாடுகளுடன் இணைக்கும் கடல் வழி.

மேலே உள்ள ஐந்து  வழிகளை செயல்படுத்த சீனா ஆறு பொருளாதார பாதைகளை (Economic Corridors)வெவ்வேறு நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ளது  அவைகளில் இந்தியாவிற்கு ஒத்து வராதது சீனா -பாகிஸ்தான் பொருளாதார பாதை  (China- Pakistan Economic Corridor). சீனா இதன் மூலம் பாகிஸ்தானிற்கு பெரிய உதவிகளை செய்து கொண்டு வருகிறது . சீனா பாகிஸ்தானில்  ரயில் பாதைகளையும் ,சாலைகளையும் வெகு விரைவாக கட்டிக்கொண்டு வருகிறது .

இவ்வளவு பெரிய திட்டத்திற்கு பணம் எங்கிருந்து வரும்? இந்த கேள்விக்கு சீனாவின்  பதில்தான் "ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி "(Asian Infrastructure and Investment Bank). இது ஆசிய வளர்ச்சி வங்கிற்கு (Asian Development Bank) நேரடி எதிரி மாதிரி . சீனா ஆசியாவின் உள்கட்டமைப்பு தேவைகளை நன்கு அறியும் .ஆசிய வளர்ச்சி வங்கியின் கண்டிப்பான அணுகுமுறையும் பண நெருக்கடியும்  பல நாடுகளை ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி நோக்கி செலுத்தியது . அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இங்கிலாந்தும் இவ்வங்கியில்  தன்னை இணைத்து கொண்டது.சீனா ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கிற்கு முதல் கட்டமாக 40 பில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்துள்ளது .ஏற்கனவே சீனா வளர்ச்சி வாங்கி 900 பில்லியன் டாலர் இவ்வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கி வைத்துள்ளது . 2016-ல் மட்டும் சீன வங்கிகள் வெவ்வேறு நாடுகளுக்கு இத்திட்டத்திற்காக 90 பில்லியன் டாலரை கடனாக அளித்துள்ளது .

பழைய வரலாற்று சிறப்புமிக்க பட்டு பாதையானது வணிகத்திற்கு மட்டுமல்லாமல் கலாசார பரிமாற்றத்திற்கு வழி செய்தது .அதன் தாக்கத்தை நாம் சீனாவிலும் மற்ற நாடுகளிலும் இன்றும் பார்க்கலாம் .இன்று இந்த புதிய பட்டு  பாதை தேவையா என்றால் சீனாவிற்கு இது மிகவும் தேவையே . சீனாவின் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்துள்ளது ,அது அவ்வாறே நீடிக்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்  , இந்த சூழ்நிலையில் சீனா தனது வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள இத்திட்டம் மிகவும் அவசியம் .சீனாவின் இதுவரை உள்நோக்கி இருந்த பொருளாதாரம் இனி வெளி நோக்கி சொல்லும்.இத்திட்டத்திற்கான மற்ற முக்கிய காரணங்கள் :

  • மலாக்கா ஜலசந்திற்கு(Malacca Strait) மாற்று 
  • சீனா ரென்மினிபி பரிவர்த்தனை -அமெரிக்க டாலருக்கு மாற்றாக 
  • ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கை குறைப்பது 
  • மற்றும் ஐந்து இலக்கை அடைவது  (கொள்கை ஒருங்கிணைப்பு ,வசதிகள் இணைப்பு ,தடையற்ற வர்த்தகம் ,நிதி ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் கூட்டணைப்பு )

சீனாவின் இந்த கனவு நிறைவேறுமா?  இத்திட்டத்தின் பல பணிகள் ஆரம்பித்துவிட்டன.லாவோஸ் 418 கிலோ மீட்டர் ரயில் பாதை, மேற்கூறியது போல பாகிஸ்தானில் பல கட்டுமான பணிகள் மற்றும் சீன-ஐரோப்பிய ரயில் பாதை .சீனா இதிலிருந்து பின்வாங்க போவதில்லை . பல நாடுகளில் இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தி  கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால்  சீனா  தங்கள் வேலைகளையும் இயற்கை வளங்களையும் எடுத்துக்கொள்ளுமென்று அஞ்சி . ஆனால் சீனாவின் இரும்பு கரம் நீளும் , இப்பொழுது இல்லாவிட்டாலும் வரும் காலத்தில் இந்த கனவு நிறைவு பெரும்.

Friday, May 5, 2017

இரண்டு மணிக்குள்

picture courtesy -Nike

மராத்தான் என்றாலே நம்மில் பலர்  "அது ரெம்ப கஷ்டம்பா " என்றுதான் சொல்வார்கள் . அது உண்மையும் கூட. கடந்த எட்டு வருடங்களில் நான் ஐந்து மராத்தான் ஓடியுள்ளேன் . முதலாவதைத் தவிர அனைத்திற்கும் தீவிர பயிற்சி மேற்கொண்ட பிறகே ஓடினேன். மரத்தானை ஓடி முடித்தாலே அது ஒரு பெரிய வெற்றி .ஓடி முடித்தவர்களுக்கே அந்த உணர்வு புரியும் .

என்னை போன்ற amateurs மராத்தானை  மூன்று  முதல் நான்கு மணிக்குள் முடித்தாலே அது ஒரு  நல்ல ஓட்டம் என்று கருதப்படும். நாளை (06-05-2017) மூன்று professionals Eluid Kipchoge ,Lelisa Desisa மற்றும் Zersenay Tadese மராத்தனை இரண்டு மணிக்குள் ஓட முயற்சி செய்வார்கள்.அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்  நேரம்தான் முக்கியம்  . வெற்றியும் தோல்வியும் அதை சார்ந்ததே .அதுவும் ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு நேரமே எல்லாம். இந்தமூவரின் குறிக்கோள் 42.195 கிலோமீட்டர் தூரத்தை 1:59:59 மணி அல்லது குறைவாக கடக்க வேண்டும் . தற்போதைய உலக சாதனை நேரம் 2:02:57 மணிதுளிகள் , 2014-ல் அதை செய்தவர் கென்யாவை  சேர்ந்த Dennis Kimetto.

இரண்டு மணி நேரம் என்பது அனைத்து மராத்தான் வீரர்களுக்கும் ஒரு மேஜிக் எண் . வருடங்களாக வெவ்வேறு இடங்களில் இந்த முயற்சி நடந்து கொண்டேதான் இருந்தது இருக்கிறது .ஆனால் இந்த முறை பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம். இந்த மூன்று வீரர்களும் நைக் (Nike) நிறுவனத்தால் பயிற்சி அழைக்கப்பட்டவர்கள் .

நைக் இந்த முயற்சிக்கென்றே பிரத்தியோக சூ (shoe called Zoom Vaporfly Elite), 2.4 கிலோ மீட்டர் ஓட்ட தடம், உடன்  ஓடும்  குழு (pacers) , ஓடும் போது எடுத்துக்கொள்ளும் நீர் மற்றும் ஜெல் தயாரித்துள்ளது .இந்த முயற்சி வெற்றி பெற்றாலும் தோற்றாலும் நைக்கிற்கு (Nike) இது ஒரு பெரிய விளம்பரம் .விரைவில் அது ஒரு சூவை  (high tech running shoe) வெளியிட உள்ளது..

என்னதான் பயிற்சியும் ஏற்பாடுகளும் செய்தாலும் பிற வெளி காரணிகளின் பங்களிப்பு முக்கியம்- வானிலை , ஓடும் வழி (சம தளம் ,மலை ,செங்குத்து), திருப்பங்கள் (turns) மற்றும் drafting. இவைகளில் ஏதேனும் ஒன்று உதவாவிட்டால் ஓடும் நேரம் அதிகமாகும். 

இந்த முயற்சி தேவையா ? இந்த கேள்வி ஓட்டப்பந்தைய வீரர்களிடையே பெரும் சர்ச்சையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது .ஒலிம்பிக் பதக்கமா  அல்லது  உலக சாதனையா  என்று  எந்த வீரரை கேட்டாலும் அவர்கள் சொல்லும் பதில் ஒலிம்பிக் பதக்கமே. என்னை பொறுத்தவரை இந்த முயற்சியில் தவறில்லை , மனிதன் எவ்வளவு விரைவாக ஓட முடியும் என்பதை அறிந்துகொள்ள உதவும்.பொறுத்திருந்து பாப்போம் .