10-03-2021 18:05
கிழக்கு கடற்கரை பூங்கா
நல்ல வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது கீழே உள்ள இரா. மீனாட்சி அவர்களின் கவிதைதான் :
===
மதுரை நாயகியே
-இரா. மீனாட்சி
===
மதுரை நாயகியே!
மீனாட்சித்தாயே!
படியேறி
நடை தாண்டி
குளம் சுற்றி
கிளி பார்த்து
உன்னருகே ஓடிவரும்
உன்மகளை
உன்மகனே
வழிவம்பு செய்கின்றான்
கோயிலிலும் காப்பில்லை
உன் காலத்தில்-
அழகி நீ
எப்படி உலாப்போனாய்?
===
நேற்று இரவு இந்தக் கவிதையை மீண்டும் வாசித்தேன். சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு இணைய தளத்திலிருந்து copy செய்து வைத்திருந்தேன். அற்புதமான கவிதை. மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தவுடன் போனில் playlist-ஐ shuffle-லில் ஓட விட்டேன். " ஒரு ஜீவன் அழைத்தது.." என்று இளையராஜாவும் சித்ராவும் பாடகிக் கொண்டிருந்தனர். பாடல் ஓடிக் கொண்டிருக்கும்போது கோகுல் பிரசாத் அவர்களின் இளையராஜாவை பற்றிய பதிவுதான்.எனக்கு இந்த பாடலின் இசை மிகவும் பிடிக்கும். மீண்டும் மீண்டும் இந்த பாடலை ஓடவிட்டேன்.வீட்டிற்குத் திரும்பி வரும்போதுதான் கவனித்தேன். வழக்கத்திற்கு மாறாக நிறையப் பேர் கடற்கரையில் விளையாடிக் கொண்டும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். இந்த கோவிட் காலத்தில் இன்றே முதல் முறையாக இப்படியானக் காட்சிகளைப் பார்த்தேன். என்னை முந்திக் கொண்டு ஒருவர் ஓடினார். அவரின் வலது தோளில் சிகப்பு .பச்சை மற்றும் கறுப்பு நிறத்தில் பச்சைக் குத்திருந்தது. அது என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டுமென்று அவரைப் பின்தொடர்ந்து ஓடினேன். நான் அவர் அருகில் சொல்லும்போதெல்லாம் அவர் வேகத்தைக் அதிகரித்தார். என்ன ஆனாலும் பரவாயில்லை இன்று அவர் என்ன பச்சைக் குத்திருக்கிறார் என்று பார்த்தே ஆகவேண்டுமென்று நானும் விடாமல் பின்தொடர்த்தேன் ஐந்து கிலோமீட்டருக்குப் பிறகு நான் அவருக்கு மிக அருகில் பின்தொடர்ந்தேன். அவர் பச்சைக் குத்தி இருந்தது ஒரு பெண்ணின் உருவம் பச்சை முகம் கருப்பு முடி மற்றும் சிகப்பு கழுத்து.அவரை முந்திச் சென்றேன். நான் முக்கிய சாலையை அடைந்த போது அவரும் என் பின்னல் வந்து கொண்டிருந்தார். போக்குவரத்து சிக்னலில் இருவரும் நின்றோம் . நான் அவரிடம் "nice tattoo" என்றேன். அவர் சிரித்துக் கொண்டே "you are running good " என்றார். நான் சிரித்தேன். இருவரும் இரு திசையில் சென்றோம். நான் நடந்து வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment