Thursday, April 2, 2020

ரன்னிங் டைரி -83

01-04-2020 16:15
வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை  பூங்கா

சில நாட்களுக்கு பிறகு இன்று ஓடியே ஆக வேண்டும் என்று முடிவு செய்து கிடைத்த ஒரு மணி நேரத்தை ஓடுவதில் செலவழித்தேன். வெகு சில தூரமே ஓடினேன். ஓரளவு  என்னுடைய "rhythm" வந்தவுடன் சீராக ஓட ஆரம்பித்தேன்.  கடலை பல நாட்களுக்கு பிறகு பார்த்தேன். என்ன ஒரு புத்துணர்வு. பேசாமல் தினமும் கடற்கரையில் இருந்தே வேலை பார்க்கலாம் போல. அங்கிருந்து மீண்டும் ஓட ஆரம்பித்தபோது எனக்கும் என் தம்பிக்கும் வாட்சப்பில் நடந்த உரையாடல்தான் ஞாபகத்தில் வந்தது. இனிமேல் வாட்சப்பில் இந்த மாதிரி உரையாடக் கூடாது என்று முடிவு செய்தேன். நல்லதல்ல! வீட்டை நெருங்கியவுடன் கைப்பேசி ஒலித்தது வாட்சப்பில் எனது இந்திய அணியின் அழைப்பு.

1 comment:

MaryPena said...

Hi thanks foor sharing this