28-02-2020 08:22
வீட்டிலிருந்து அலுவலகம்வரை
ஓட ஆரம்பித்ததிலிருந்தே பேங்க் லோன் பற்றிய எண்ணங்களே வந்து கொண்டிருந்தன. எவ்வளவு டாக்குமெண்ட்ஸ். நான் இதுவரை லோன் எடுத்ததில்லை. எனக்கு அதைப் பற்றி சரியாக தெரியவும் செய்யாது. பிறகு பார்க்கலாம் என்று கட்டாயப் படுத்தி மனதை ஓடிக் கொண்டிருந்த பாடலில் செலுத்தினேன். அங்கே வழக்கம்போல இளையராஜா என்னும் மருத்துவர் எனது மனதை அறிந்ததுபோல "தென்றல் வந்து தீண்டும் போது" என்று பாடிக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் மறந்து ஒரு புத்துணர்வு. வெய்யில் இல்லை. மழை வரும் என்று நினைத்து சற்று வேகமாக ஓடி அலுவலகத்தை அடைந்தேன்.

1 comment:
Welcome to LOAN members club Bro :)
Post a Comment