01-10-2019 (18:25)
அலுவதிலிருந்து நூலகம் வரை
மழை வருமா என்ற கேள்வியுடன் வானத்தைப் பார்த்துக்கொண்டே ஓட ஆரம்பித்தேன். ட்ராபிக் சிக்னல் வந்தவுடன்தான் எந்த பாட்டு ஓடிக்கொண்டிருக்கிறது என்று கவனித்தேன். "கேளடி கண்மணி" ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று காபி ஞாபகம் வந்தது. இன்று "சர்வதேச காபி நாள்". காபி என்றவுடன் எனக்கு "தையல்நாயகி " என்ற பெயர்தான் முதலில் ஞாபகத்தில் வரும். தையல்நாயகி ஒரு உணவகம். கோயம்புத்தூர் சூலூரில் உள்ளது. அங்கு காபி பிரபலம். 2003 முதல் 2005 வரை சூலூரில் வீடெடுத்து நாங்கள் தங்கி இருந்தோம். வீட்டிற்கு பக்கத்தில்தான் தையல்நாயகி உள்ளது. அங்கு காபி குடிப்பதென்பது எங்களுக்கு ஒரு ஆடம்பர நிகழ்வு. பலதடவை எங்கள் வீட்டிற்குமேல் தங்கி இருந்த எங்கள் professors தான் வாங்கிக் கொடுப்பார்கள்.
அப்படியே அங்கிருந்து சிங்கப்பூர் காபி ஞாபகம் வந்தது. மாமா வீட்டில் அத்தை பில்டர் காபி போடுவார்கள். அது ஒரு தனி ருசி. அலுவலகத்தில் 3 in 1 காபிதான். முதலில் Nescafe அடுத்து Owl brand 2 in 1 . Nescafe-யை விட Owl brand பலமடங்கு better .சிங்கப்பூரில் பாலுக்கு பதிலாக condensed milk தான் .எனக்கு முதலில் பிடிக்கவில்லை . சிங்கப்பூர் kopitiam களில் ஓரளவு காபி நான்றாக இருக்கும். நாங்கள் தம்பினீஸில் இருக்கும்போது Toastbox காபி அருமையாக இருந்தது இன்று அந்த சுவை இல்லை. எனக்கு favourite என்றால் தமிபின்ஸ் wet மார்க்கெட்டில் இருக்கும் ஒரு காபி கடையும் haigh road food courtல் இருக்கும் "Coffee Boy" கடையின் காபிதான். "Coffee Boy" கடை ஐயா காபி போடுவதே ஒரு அழகு.அவரையே நினைத்துக் கொண்டு நூலகத்தை அடைந்தேன். அங்கு சென்று புத்தகத்தை return பண்ணிக்கொண்டிருக்கும் போது அருகிலிருந்த கஃபேவிலிருந்து காபி மனம் வந்துகொண்டிருந்தது. புத்தகத்தை return பண்ணிவிட்டு ஒரு காபி குடித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்பினேன் .

1 comment:
interesting lines..
Post a Comment