16-11-2020 09:05
தஞ்சோங் காத்தோங் ரோடு
இன்று ஓடுவதற்கு சற்று தாமதமானது. கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது நூலக புத்தங்களை திருப்பிக் கொடுப்பது பற்றித்தான். கிட்டத்தட்ட 21 புத்தங்கள் இந்த வார இறுதிக்குள் return செய்ய வேண்டும். 21 புத்தங்களில் பதினாரை நான் படித்துவிட்டேன். "Caste: The Lies That Divide Us - Isabel Wilkerson" இந்த புத்தகத்தை நேற்றுத் தான் வாசிக்க ஆரம்பித்தேன்.இந்த வாரத்திற்குள் அதை படித்து முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். திடீரென்று "சூரரைப் போற்று" படம் எண்ணத்தில் தோன்றியது. அந்த படம் என்னைப் பெரிதும் கவரவில்லை. ஒரு முறை பார்க்கலாம். இந்த படத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment