20-10-2020 16:10
தஞ்சோங் காத்தோங் ரோட்டிலிருந்து உபி வரை
மகனை பள்ளியில் இருந்து அழைத்துவர வேண்டும். சரி ஓடலாம் என்று முடிவு செய்து. கண்ணாடி தொப்பி மற்றும் பேருந்து கார்டு எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். நல்ல வெய்யில் . ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது லத்தின் மொழிதான். ஏனோ அந்த மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தெரிந்த முதல் லத்தீன் வார்த்தைகள் "Totus tuus". போப் இரண்டாம் ஜான் பாலின் motto. அதன் அர்த்தம் "all yours" - எல்லாம் உமதே". அன்னை மரியிடம் அவருக்கு இருந்த பற்றால் இதை வைத்துக் கொண்டார். எனக்கும் இப்படி ஒரு லத்தீன் மொழியில் ஒரு motto வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டே யூனுஸ் ஸ்டேஷனை அடைந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து மகனின் பள்ளிக்குச் சென்றேன்.
No comments:
Post a Comment