18-08-2020 08:28
தஞ்சோங் கத்தோங் ரோடு
மழை மேகம் குளிர்ந்த காற்று இவை இரண்டும் என்னை ஓட உற்சாகப் படுத்தியது. ஓட ஆரம்பித்த சிறிது நேரத்தில் தோனியின் ஞாபகம் வந்தது. நான் தோனி விளையாடி அதிகமாக பார்த்ததில்லை. எனக்கு தெரிந்த தோனி எழுத்தின் மூலமும் நண்பர்கள் சொல்லித்தான். ஏனோ தோனியை எனக்குப் பிடிக்கும். அவரது ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் இழப்புத்தான். நான் 20-20 பார்ப்பதில்லை. அதனால் இனிமேல் யூடூப்பில் தான் தோனியின் பேட்டிங்கை பார்க்க வேண்டும். என்னை மிகவும் பாதித்த விளையாட்டு வீரர் ஓய்வு என்றால் அது பிரைன் லாராவின் ஓய்வுதான்.அன்று என்னை அறியாமல் அழுதேன். மெஸ்ஸி ஓய்வு பெற்றால் என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment