17-08-2020 08:32
தஞ்சோங் கத்தோங் ரோடு
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ஓடினேன். மெதுவாக ஓடவேண்டுமென்று முன்னரே முடிவு செய்துவிட்டுத் தான் ஓட ஆரம்பித்தேன். நல்ல வெய்யில். வாக்மேனில் இளையராஜா வழக்கம் போல தனது மேஜிக்கை நிகழ்த்த ஆரம்பித்தார். அப்படியே இளையராஜாவை பற்றி நான் வாசித்த ஒரு கட்டுரை மனதில் ஓடியது . "இளையராஜாவின் இசையில் சாதி எதிர்ப்பு அரசியல் – ராஜேஷ் ராஜாமணி" நமது நாட்டில்தான் அவரது இசையை ஆராயாமல் அவரது சாதியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த கட்டுரை ஒரு முக்கியமான ஒன்று.. இளையராஜாவை மற்றொரு கோணத்தில் நமக்கு காட்டுகிறது. இதை எண்ணிக் கொண்டே மவுண்ட் பேட்டன் ரோடை அடைந்தேன். எதிரே ஒரு அம்மாவும் மகனும் வந்து கொண்டிருந்தனர். மகனின் கையில் கிரிக்கெட் பேட் இருந்தது. பார்ப்பதற்கு ஆஸ்திரேலியர் போல் தெரிந்தார் . அவன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான். நான் அவனைப் பார்த்து கையை அசைத்தேன் அவனும் சிரித்துக்கொண்டே கை காட்டினான். வாக்மேனில் "என்னை தாலாட்ட வருவாளா" ஆரம்பித்தது ..பாடிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment