Tuesday, February 26, 2019

Being Mortal - Atul Gawande


We know less and less about our patients but more and more about science.
இந்த வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். மருத்துவம் முதுமை மற்றும் இறப்பை பற்றி பேசும் புத்தகம்.அதுல் கவாண்டே ஒரு மருத்துவர். அவரின் அப்பாவின் நோய் பற்றி தெரிந்த பின்பு அவருடைய எண்ணங்களை இந்த நூலில் எழுதியுள்ளார் . குணப்படுத்த முடியாத நோய் வந்தால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் நோயாளியிடம் அவரின் விருப்பதைக் கேட்கிறோமா மருத்துவர் அதை ஏற்றுக்கொள்வாரா  இப்படி பல முக்கியமான கேள்விகளைக் கேட்கிறார்.
For human beings, life is meaningful because it is a story. A story has a sense of a whole, and its arc is determined by the significant moments, the ones where something happens.
 முன்பு கிராமங்களில் வயதானவர்களை அதிலும் நோய்வாய்ப்பட்டவர்களை எப்படி குடும்பங்கள் பார்த்துக்கொண்டன என அவர் மிகவும் அழகாக விவரிக்கிறார். அவரின் தாத்தா தனது இறுதிவரை தனக்கு பிடித்ததை செய்துக் கொண்டிருந்தார் என்கிறார் அதுல் அதற்கு முக்கிய காரணமென கருதுவது அவரின் குடும்பத்தாருக்கு அவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரியும் அவர்களும் அவரை அவரின் விருப்பத்திற்கு விட்டதுதான். காலங்கள் மாற குடும்ப அமைப்பும் மாறின நாம் எப்படி நோய்களையும் வயதானவர்களையும் நடத்துகிறோம் என்பதும் மாறிக்கொண்டே வருகிறது.
Our ultimate goal, after all, is not a good death but a good life to the very end.
Life is choices, and they are relentless. No sooner have you made one choice than another is upon you. 
இறப்பைப் பற்றி பேசுவதே தவறென கருதும் சூழலில்  எத்தனை மருத்துவர்கள் இறப்பைப் பற்றி தங்களின் நோயாளிகளுக்கு விவரித்து கூறுகிறார்கள். பெரும்பாலும் எந்த மருத்துவரும் அதை பற்றி பேசுவதில்லை ஏனென்றால் அவர்களுக்கு எப்படி நோயை குணப்படுத்த வேண்டுமென்று மட்டும்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது.அதுல் மருத்துவர்களை மூன்று விதமாகப் பிரிக்கிறார் :
1.Paternalistic - தந்தைப் போல நோயாளி என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறுபவர்.
2.Informative  - மேலே கூறியவருக்கு எதிர் இவர். அனைத்து விவரங்களையும் நோயாளியிடம் சொல்பவர். இறுதி முடிவை நோயாளியிடம் விட்டுவிடுவார்.
3.Interpretive - இவர் மேலே கூறிய இருவரின் கலப்பு. நோயாளியிடம் எடுத்துக் கூறி அவரிடம் அவருக்கு முக்கியமானது எது என்று கேட்பவர்.
ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான நோய்களுக்கு பொருந்தும். குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மூன்றாவது வகை மருத்துவர்கள் தான் பொருந்தும் ஏனென்றால் அவர்கள் வாழப்போகும் காலம் குறுகியது.  அதுல் இந்த மூன்று வகையையும் தனது தந்தையின் சிகிச்சையின் போது எதிர்கொள்கிறார்.
Courage is strength in the face of knowledge of what is to be feared or hoped. Wisdom is prudent strength.
Your chances of avoiding the nursing home are directly related to the number of children you have. 
எப்படி முதியவர்களைப்  பரமரிக்கும் நிறுவனங்கள் தோன்றின  மற்றும் அது எப்படி  சேவையிலிருந்து தொழிலாக மாறியது என்பதையும் விரிவாக எழுதியுள்ளார். முதுமை என்றவுடன் பணம் செலவழிப்பு என்று சொல்லும் அளவுக்கு அது வியாபாரமானது  என்றால் மிகையாகாது. இறுதி காலத்தைப் பற்றி  நோயாளிகள் மற்றும் முதியவர்களுடன் உரையாடுவதே சிறந்தது என்கிறார் அதுல். அது கடினம் தான் ஆனால் அதுவே அனைவருக்கும் சிறந்தது.
We’ve been wrong about what our job is in medicine. We think our job is to ensure health and survival. But really it is larger than that. It is to enable well-being.
இந்த புத்தகத்தை நான் ஏன் கீழே வைக்காமல் படித்தேன் என்று எனக்கே தெரியவேயில்லை இதில் எனக்கு முன்னரே தெரியாத விசயங்கள் பெரிதும் ஏதும் இல்லை ஆசிரியரின் வாதங்களும் புதிதல்ல ஆனால் அவர் கூறிய முறை . மிகவும் எளிய முறையில் எடுத்துக்காட்டுகளுடன் கூறியதுதான். ஒவ்வொன்றையும் ஒரு கதையின் மூலம் சொல்கிறார். முதலில் அவரின் தந்தையின் நோய் பற்றி இரண்டாவது குணப்படுத்த முடியாத நோயாளிகளின் வாழ்க்கை அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களை கவனித்துக் கொள்பவர்கள் பற்றி மூன்றாவது இறப்பை பற்றி நான்காவது மருத்துவர்களை பற்றி ஐந்தாவது மருத்துவச் செய்திகள். மருத்துவத்தை இவ்வளவு அழகாக கதையினுடன் சொல்வது மிகவும் கடினம் ஆனால் அதுல் அதை மிக அற்புதமாக செய்துள்ளார்.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

No comments: