25-09-2020 08:25
தஞ்சோங் காத்தோங் ரோடு - ஓல்ட் ஏர்போர்ட் ரோடு
இன்று போனிலிருந்து பாடல்கள் கேட்கலாம் என்று ப்ளூடூத் இயர் போன்களை எடுத்து வந்திருந்தேன். எனது போனில் இரண்டே playlists தான். ஒன்று "Symphonies" மற்றொருன்று "Classical short". காதுகளில் வைத்துவிட்டு "Classical short"-ல் shuffle கிளிக் செய்து விட்டு ஓட ஆரம்பித்தேன். என்ன இசைக் கோர்வை வரும் என்று பெரிய ஆவலுடன் கவனம் முழுவதையும் அதில் செலுத்தினேன். முதலில் வந்தது "Godfather suite " என்ன ஒரு அற்புதமான இசை. என் மனது ஓடுவதில் இருந்து இசைக்கு மாறியது.Godfather பட வரிசைகள் என் கண்முன்னே வந்து சென்றன. "Finance is a gun. Politics is knowing when to pull the trigger." இந்த டயலாக் மறக்க முடியாதது.இந்த திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர் Nino Rota. மனுஷன் அணு அணுவா ரசிச்சு இசை அமைத்திருக்கிறார். இந்த இசையில் லயித்து கொண்டிருக்கையில் இந்த கோர்வை முடிந்து அடுத்தது ஆரம்பித்தது. என்னத்த சொல்ல . ஆரம்பித்த இசை கோர்வை "The good the bad and the ugly theme" . மனம் ஓட்டத்தை முழுவதும் மறக்க ஆரம்பித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு இசை அமைத்தவர் Ennio Morricone. இவர் ஒரு genuis. இது முடிந்தவுடன் வந்தது எனக்கு மிகவும் பிடித்த "Sabre Dance" .இதை இசை அமைத்தவர் Aram Khachaturian. என்ன ஒரு துள்ளலான இசை . எனக்கு Aram Khachaturian பற்றி ஒன்றும் தெரியாது இந்த இசைக் கோர்வையைத் தவிர. வீட்டிற்கு அருகில் வந்தவுடன் Richard Wagner-ன் "Ride of the Valkyries" ஆரம்பித்தது. ஓடுவதை நிறுத்தி விட்டு இசையை ரசித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்
No comments:
Post a Comment