04-09-2020 08:15
தஞ்சோங் காத்தோங் ரோடு
ஓட ஆரம்பித்த சில நொடிகளிலேயே வாக்மேன் வேலை செய்யவில்லை. அதனால் அதை கழற்றி விட்டு ஓட ஆரம்பித்தேன். நல்ல வெய்யில். ஓடிக்கொண்டே வரிசையாக நின்றிருக்கும் மரங்களைப் பார்த்தேன். எனக்கு மரங்கள் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு. சிங்கப்பூர் வந்த புதிதில் நான் பல தடவை NParks-கு தன்னார்வு தொண்டு செய்துள்ளேன். அப்படித்தேன் ஒரு முறை "Heritage Trees" பற்றி பேச்சு நடந்தது. அதற்கு பிறகு நான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த மரங்களை பார்க்க ஆரம்பித்தேன். மரங்களின் பெயர்களை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.மரங்கள் பேரழகு என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment