17-09-2018 18:27
அலுவதிலிருந்து வீடுவரை
ஓட ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் எதையும் எண்ணவில்லை. சிக்னலில் நிற்கும் போது ஊரைப் பற்றிய எண்ணம் வந்தது. எம்மக்கள் எதையும் ஒற்றுமையாக செய்ததாக எனக்கு ஞாபகமில்லை. எதற்கெடுத்தாலும் அடுத்தவரைக் குறை சொல்வது. அப்படியே பெரியப்பா நினைவில் வந்தார். என் அப்பாவின் பெரியம்மா மகன். ஊரைப் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம் வரும் முகம் பெரியப்பாவுடையது. பெரியாப்பாவை ஊர் மக்கள் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. உண்மைகளை சட்டென்று சொல்லிவிடுவார் அதனால்தான். ஆனால் பெரியப்பாவால் வாழ்க்கை அடைந்தவர் பல நூறு. பலமுறை பெரியப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதுகொண்டே நன்றி சொல்லிய அம்மாக்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஏனோ எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் நினைவில் வந்தார். அவரது facebook போஸ்ட் தான் காரணம் என்று நினைக்கிறேன். அப்படியே தனுஸ்க்கோடி நினைவில் ஓடி முடித்தேன்.

No comments:
Post a Comment