16-09-2019 18:53
அலுவகத்திலிருந்து வீடுவரை
வாக்மேனை on செய்தவுடன் ஒலித்த பாட்டு "ஊரு சனம் தூங்கிருச்சு" பாட்டு முடியும்வரை ஜானகி அம்மாளின் முகமும் MSV-ன் முகமும் மாறி மாறி மனதில் தோன்றியது. சிக்னலில்இருவர் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தனர். சிக்னல் மாறியவுடன் இருவரும் இருவேறு திசைகளில் சென்றனர். என் எண்ணம் கிரண் பேடி அவர்கள் மேல் சென்றது. அவருக்கு புதுச்சேரி மக்களுடன் பேசுவதற்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறதாம். கடினம்தான்! புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் அதற்காக மக்கள் அனைவரும் ஹிந்தி கற்க வேண்டுமென்று சொல்வதை - என்னத்த சொல்ல!!
சமந்தமேயில்லாமல் காந்திஜி நினைவில் வந்தார். அவர் இப்ப இருந்திருந்தா என்ன செய்து கொண்டு இருப்பார் ஒரு எண்ணம். நம்மவர்கள் இவரைவிட வேறு யாரையும் தவறுதலாக கொண்டதாக எனக்கு தெரியவில்லை. காந்திஜியின் ட்விட்டர் பெயர் என்னவாக இருக்கும் @gandhi அல்லது @ahimsa இந்த இரண்டில் ஒன்றைத்தான் அவர் வைத்திருப்பர் என்பது என் உறுதியான நம்பிக்கை.சிரித்துக் கொன்டே அவரை எப்படியெல்லாம் troll செய்வார்கள் என்று எண்ணினேன். மீண்டும் மீண்டும் சிரிப்பு வந்தந்து.
மெரின் பரேட் நூலகத்தின் அருகில் வந்தவுடன் உள்ளே செல்லலாமா சென்ற யோசனை வந்தது.உள்ளே போனால் உடனே வருவது சிரமம் அதனால் ஓட்டத்தைத் தொடர்ந்தேன். சிங்கப்பூர் போல் இந்தியாவில் நூலகங்கள் எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் வீடு வந்தடைந்தேன்.

No comments:
Post a Comment