Monday, September 3, 2018

Sadako's Cranes - Judith Loske


சடகோ சசாகி ஜனவரி  7 1943-ல்  ஹிரோஷிமாவில் பிறந்தவர். அணு குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் பிரபலமானவர். குண்டுவீச்சால் லுகேமியா அவருக்கு வந்தது. மருத்துவமனையில் இருந்தபோது  அவர் ஜப்பானிய நம்பிக்கையின்படி நோய் குணமாவதற்காக   பேப்பர் கொக்குகள் செய்தார். பிற்காலத்தில்  பேப்பர் கொக்குகள் அமைதியின் சின்னமாக மாறின.  அவர் பிரபலமானதற்கு அதுவே முக்கிய காரணம். இது அவரின் கதை.

நாங்கள் ஜப்பான் சென்றபோது ஹிரோஷிமாவிற்கு சென்றோம். ஹிரோஷிமாவை வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது. அதுவும் அந்த இடிந்த கட்டிடமும் அருங்காட்சியமும் என்றும் நினைவில் நிற்பவை.நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கும் அமைதி பூங்காவிற்கும் நடந்தபோது எங்கும் நாங்கள் கண்டது பேப்பர் கொக்குகள்தான். மாணவர்களும் சுற்றுலா பயணிகளும் பேப்பர் கொக்கு மாலைகளை பூங்காவைச் சுற்றி தொங்கவிடுகிறார்கள். அந்த பூங்காவில் சடகோவின் சிலை உள்ளது.

இது குழந்தைகளுக்கான புத்தகம். மிகவும் அழகான வரைபடங்கள் கொண்டது.  1954 ஆகஸ்ட் ஆறாம் தேதி வழக்கம்போல சடகோ விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென பெரும் சத்தத்துடன் கரும்புகை பரவியது . முதலில் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. அனைத்தும் இயல்பாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் 1954-ல் கழுத்தில் கட்டி தோன்றுகிறது.தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் பிரச்சனைகள் வருகிறது .இறுதியாக மருத்துவர்கள் அவளுக்கு  லுகேமியா இருப்பதாக கொண்டுபிடிக்கிறார்கள் . மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அவளது தந்தை பேப்பரில் கொக்கு செய்தால் குணமாகலாம் என்கிறார். அந்த நம்பிக்கையில் அவள் கொக்கு செய்ய ஆரம்பிக்கிறாள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொக்குகளை செய்தால். இறுதியில் சிகிச்சை பலனின்றி 1955 அக்டோபர் 25 அன்று மரணமடைகிறாள். அப்போது அவளுக்கு வயது 12.

இன்று அமைதியின் அடையாளமாக இந்த கொக்குகள்  இருக்கின்றன.உலகம் முழுவதும் குழந்தைகள் பேப்பரில் கொக்குகள் செய்து ஹிரோஷிமாவிற்கு அனுப்பி வைகின்றனர்.அணு ஆயுதம் ஒரு பெரும் துயரம். இந்த புத்தகம் குழந்தைகளுக்கு ஒரு பாடம். அந்த துயரத்தை எஸ்.ராமகிருஷ்ணன் மிக தெளிவாக கீழ் காணும் காணொளியில் எடுத்துரைக்கிறார் .


அவசியம் அனைவரும்  தெரிந்துக் கொள்ளவேண்டிய விசயம்.

நன்றி :குலுக்கை

No comments: