01-10-2020 18:05
தஞ்சோங் காத்தோங் ரோடு
இன்று காலையில் வேலை இருந்ததால் ஓட முடியவில்லை. அதனால் சாயங்காலம் நேரம் கிடைத்தததும் ஓட ஆரம்பித்தேன். கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே திரும்பி சென்று விடலாமா என்று தோன்றியது. அப்போதுதான் எனக்கு முன்னாள் ஓடிக் கொண்டிருந்தவரை கவனித்தேன். அவரைப் பின்தொடர்ந்து ஓடலாம் என்று முடிவு செய்து அவரைத் தொடர்ந்தேன். அவர் மிக அழகாக சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார். அப்படி ஓடுபவர்களைப் பார்ப்பதே பெரும் அழகு. என் கவனம் முழுவதும் அவரின் கால்களில்தான் இருந்தது .கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் அவரின் பின்தொடர்ந்து ஓடினேன். அதற்கு பிறகு அவர் வேறு திசையில் சென்றுவிட்டார். அப்போதுதான் காதில் ஒலித்த பாடலைக் கவனித்தேன் .SPB " உன்னை நெனச்சேன் " பாடிக் கொண்டிருந்தார். அவர் என்றும் வாழ்வார். அவரின் மறைவுக்கு மக்கள் பெரும் திரளாய் அஞ்சலி செலுத்தியதை நம் எழுத்தாளர் சாரு நிவேதிதா எப்படி அப்படி புரிந்து கொண்டார் என்று எனக்கு புரியவில்லை. கலைஞர்களை ஒப்பிடுவது சரியல்ல அதுவும் வேறு வேறு துறையில் இருப்பவர்களை. அதற்கு விளக்கங்கள் கொடுப்பது பெரும் சிரிப்பிற்குரியது. அது என்னவோ நம் எழுத்தாளர்களில் பலருக்கு நம் திரைத்துறையை பிடிப்பதில்லை. நல்லதோ கேட்டதோ கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக திரைத்துறை நம்மில் கலந்து விட்டது அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகா வேண்டும். இதையே எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன் .
No comments:
Post a Comment