தன்மன் ரோடு
இன்றும் தன்மன் ரோட்டில் தான் ஓடினேன். ஓட ஆரம்பித்தபோதே பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனி ஞாபகத்தில் வந்தது. கடந்த இரண்டு மாதத்தில் கிட்டத்தட்ட ஒவ்வெரு நாளும் குறைந்தது ஒரு முறையாவது கேட்டிருப்பேன். ஏனோ கேட்கும் போதெல்லாம் என்னுள் பலவிதமான எண்ணங்கள் ஓடும். என் வாக்மேனில் அந்த சிம்பொனி இல்லை. வேறொரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது ஆனால் மனதோ அந்த சிம்பொனியை சிந்தித்துக் கொண்டே இருந்தது. கடந்த வாரம் இந்த சிம்பொனியைப் பற்றி ஒரு புத்தகம் படித்தேன். கலையின் உச்சம் இந்த சிம்பொனி என்கிறார் அதன் ஆசிரியர். குழந்தைகளுக்கு இசை கற்றுக் கொடுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
1 comment:
Inspiring. write more ! very nice. I too love jogging. Nowadays waiting for allergy season and corona fears to fade away.
Post a Comment