எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது - நம்முடைய அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு அதற்கு மதிப்பெண் வழங்கி அம்மதிப்பெண்ணிற்கேற்றார் போல் ஒருவனுக்கு அரசின் சேவை அமையுமென்பது . இதுதான் சீனாவில் 2020-ல் நடக்கவுள்ளது. சீன அரசு மக்களின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை இத்திட்டத்தின் மூலம் மேம்படும் என்கிறது. இத்திட்டத்தின் கொள்கை "It will forge a public opinion environment where keeping trust is glorious. It will strengthen sincerity in government affairs, commercial sincerity, social sincerity and the construction of judicial credibility." -இவ்வாறு கூறுகிறது. ஆனால் இத்திட்டம் இதற்கு மட்டும்தான் பயன்படும் என்பது மிக பெரிய கேள்வி.
சிந்தித்து பார்த்தல் ஒருவன் எந்த புத்தகம் படிப்பது ,எந்த வீடியோ பார்ப்பது ,கடையில் என்ன வாங்குவது இப்படி அனைத்தையும் இத்திட்டம் தீர்மானிக்கும் . உண்மையில் அமேசான் ,கூகுள் மற்றும் பேஸ்புக் ஏற்கனேவே இதை செய்கின்றன ஆனால் அதை ஒரு அரசு ஒரு குடிமகனை மதிப்பிட பயன்படுத்துவதென்பது எண்ணி பார்க்கவே முடியாதது. சீன அரசு இத்திட்டத்தை(Pilot ) செயல்படுத்த எட்டு கம்பெனிகளுக்கு லைசென்ஸ் கொடுத்துள்ளது . இந்த எட்டு கம்பெனிகள் மிகப்பெரிய அளவில் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துவிட்டன.
Sesame Credit 350 முதல் 950 வரை மதிப்பெண்கள் கொடுக்க உள்ளது. நிறைய மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு சலுகைகள் பல உள்ளன. இத்திட்டம் 2020-ல் தான் வரவிருக்கிறது ஆனால் இப்போதே தன்னார்வலர்களுக்கு செயல்பட தொடங்கிவிட்டது. இப்போதே அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அதை ஒரு தனி அந்தஸ்தாக பார்க்க தொடங்கிவிட்டனர் . இத்திட்டத்தினால் யாரும் அரசை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் எழுத முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. குறைய மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வங்கி கடன் , வேலைவாய்ப்பு மற்றும் பல சலுகைகள் கிடைப்பது கடினமாகும்.
செப்டெம்பர் 25, 2016-ல் வெளியான கொள்கை டாக்குமென்ட்டான "Warning and Punishment Mechanisms for Persons Subject to Enforcement for Trust-Breaking" -ல் ஒரு முக்கியமான விசயம் ""If trust is broken in one place, restrictions are imposed everywhere". அரசே "Allow the trustworthy to roam everywhere under heaven while making it hard for the discredited to take a single step" - இதை சொல்கிறது. இவை இரண்டும் மிகவும் அபாயகரமானது. இந்த மாதிரி திட்டம் மேற்கத்திய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது ஆனால் அது இந்த அளவுக்கு ஆழமாக இல்லை.
இந்த திட்டம் உண்மையிலேயே மக்களின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துமா ? அல்லது மக்கள் ஒரு போலியான வாழ்க்கைக்கு தள்ளப் படுவார்களா ? . எனக்கென்னவோ இராண்டாவது தான் நடக்கும் என்று தோன்றுகிறது.

- China Rapid Finance (Tencent , Wechat)
- Sesame Credit ( Ant Financial Services Group, Alibaba, AliPay)
- Didi Chuxing - raid hailing company like Uber
- Baihe - China's largest Online matchmaking service
மேலே கூறியுள்ள கம்பெனிகளின் பயன்பாடு கிட்டத்தட்ட ஒருவனின் தினசரி வாழ்க்கையில் இன்றியமையாதது. அதில் ஒன்று Sesame Credit அது ஒரு அலிபாபாவின் கம்பெனி. Sesame Credit - எப்படி ஒருவனை மதிப்பிடப் போகிறது? அலிபாபா என்ன algorithm பயன்படுத்தப்போகிறது என்பதை இதுவரை சொல்லவில்லை ஆனால் அது ஐந்து காரணிகளை பயன்படுத்தப்போகிறது. அதாவது
- Credit History - ஒருவன் சரியாக சரியான நேரத்தில் அனைத்து பில்களையும் (bills ( Electricity .Phone etc ) ) கட்டுகிறானா ?
- Fulfilment Capacity - ஒருவன் சரியாக ஒப்பந்தங்களை கடைபிடிக்க்கிறானா ? (fulfil contract obligation )
- Personal Characteristics - ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் சரியானதா ? மொபைல் எண் , விலாசம் மற்றும் பல .
- Behaviour and Preference - ஒருவன் என்ன பொருள் வாங்குகிறான் ? எவ்வளவு நேரம் இணையத்தில் செலவழிகிறான் மற்றும் பல.
- Interpersonal Relationship - யார் யார் இணைய நண்பர்கள் . அவர்கள் எவ்வாறு ஒருவனை மதிப்பீடுகிறார்கள்.
Sesame Credit 350 முதல் 950 வரை மதிப்பெண்கள் கொடுக்க உள்ளது. நிறைய மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு சலுகைகள் பல உள்ளன. இத்திட்டம் 2020-ல் தான் வரவிருக்கிறது ஆனால் இப்போதே தன்னார்வலர்களுக்கு செயல்பட தொடங்கிவிட்டது. இப்போதே அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அதை ஒரு தனி அந்தஸ்தாக பார்க்க தொடங்கிவிட்டனர் . இத்திட்டத்தினால் யாரும் அரசை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் எழுத முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. குறைய மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வங்கி கடன் , வேலைவாய்ப்பு மற்றும் பல சலுகைகள் கிடைப்பது கடினமாகும்.
செப்டெம்பர் 25, 2016-ல் வெளியான கொள்கை டாக்குமென்ட்டான "Warning and Punishment Mechanisms for Persons Subject to Enforcement for Trust-Breaking" -ல் ஒரு முக்கியமான விசயம் ""If trust is broken in one place, restrictions are imposed everywhere". அரசே "Allow the trustworthy to roam everywhere under heaven while making it hard for the discredited to take a single step" - இதை சொல்கிறது. இவை இரண்டும் மிகவும் அபாயகரமானது. இந்த மாதிரி திட்டம் மேற்கத்திய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது ஆனால் அது இந்த அளவுக்கு ஆழமாக இல்லை.
இந்த திட்டம் உண்மையிலேயே மக்களின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துமா ? அல்லது மக்கள் ஒரு போலியான வாழ்க்கைக்கு தள்ளப் படுவார்களா ? . எனக்கென்னவோ இராண்டாவது தான் நடக்கும் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment