பல வருடங்களாக நான் ஓடும் பந்தயம் இது. அதற்கு பல கரணங்கள் உண்டு. முதலாவது நான் மஞ்சள் ரிப்பன் ப்ராஜெக்ட் தன்னார்வல தொண்டூழியர். இந்த தொண்டூழியமானது சிறை சென்று மீண்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பணியை பல வருடங்களாக செய்து வருகிறது. பல முறை என்னால் முடிந்தவற்றை அவர்களுக்கு செய்திருக்கிறேன். அதுவே இந்த வருடாந்திர ஓட்டத்திற்கும் பதிவு செய்ய என்னை தள்ளியது.
இந்த ஓட்டத்திற்கு ஓரளவு தயாராகவே இருந்தேன் ஆனால் எதிர்பாராமல் இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட இடது கால் வலியால் கிட்டத்தட்ட ஆறு நாட்கள் எந்த பயிற்சியும் செய்யாவில்லை. போன வாரம் மீண்டும் பயிற்சியை தொடங்கினேன். இரண்டு நாட்கள் ஏழு கிலோமீட்டரும் ஒரு நாள் ஐந்து கிலோமீட்டரும் ஓடினேன்.இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பந்தயத்திற்கு எவ்வாறு தயார் செய்ய வேண்டுமென்று என் நண்பர் (அவர் பல மராத்தான், அல்ட்ரா மராத்தான் மற்றும் ஐயன் மேன் (Iron Man) போட்டியில் பங்கேற்றவர் )ஒருவர் பல வருடங்களுக்கு முன் என்னிடம் சொன்னார் .அது என்னவென்றால் நீங்கள் மராத்தான் 42.1 கிமீ ஓட முடிவு செய்தீர்களென்றால் பந்தயத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன் நீங்கள் குறைந்தபட்சம் 84 கிமீ ஓட வேண்டும். அதுபோல ஒரு வாரத்திற்குமுன் ஒரு நாள் ஒரு நீண்ட ஓட்டம் குறைந்தபட்சம் பந்தயத்தின் பாதி தூரம் ஓட வேண்டும். இவ்விரண்டையும் நான் முடிந்தவரையில் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.
மஞ்சள் ரிப்பன் ஓட்டப்பந்தயத்தின் தூரம் 10 கிமீ. ஓட்டம் சாங்கி வில்லேஜ்ல் (Changi Village) இருந்து தொடங்கியது. ஓட்டத்திற்கு முன் warm up மிகவும் முக்கியம். பல வருடங்களாக நான் warm up பண்ணியதே கிடையாது. கடந்த இரண்டு வருடங்களாக எனக்கென்று ஒரு warm up routine- ஐ அமைத்துக் கொண்டேன். அதன் பயன் மிகவும் பெரிது. ஓட்டத்தை சிங்கப்பூரின் துணை பிரதம மந்திரி டீயோ சீ ஹென் தொடங்கிவைத்தார். அவரும் ஐந்து கிலோமீட்டர் பந்தயத்தில் பங்கேற்றார் .எனக்கு இந்த பந்தயத்தின் ஓட்ட பாதை மிகவும் பிடித்த ஒன்று அதுவும் போட்டி முடியும் இடமான சாங்கி சிறை.
நான் ஓட்டத்தை மிகவும் நிதானமாக என்னுடைய பயிற்சி வேகத்திலேயே ஆரம்பித்தேன். தூரம் கூடக்கூட என்னுடைய வேகமும் கூடியது அதுபோல என்னுடைய உடம்பும் விரைவில் சோர்வடைந்தது. சில நேரங்களில் இப்படித்தான் முன்னாள் ஓடுபவரை முந்திச்செல்ல வேண்டுமென்று எனது வேகத்திலிருந்து மீறி சென்றிவிடுவேன் (இது நீண்ட ஓட்டத்திற்கு நல்லதல்ல) அதுதான் இந்த பந்தயத்திலும் நடந்தது .ஆனால் இங்குதான் அனுபவம் கைகொடுத்தது. ஓட வேண்டியதுரத்தை கணக்கில் கொண்டு எனது வேகத்தை சரி செய்தேன். அந்த வேகம் எப்போதும் என்னுடைய பயிற்சி வேகத்தை விட குறைவாகத்தான் இருக்கும். இந்த ஓட்டத்திலும் அதுதான் நடந்தது. இறுதியில் பந்தயத்தை எந்த ஒரு காயங்களும் உடல் உபாதைகளும் இல்லாமல் நிறைவுசெய்தேன்.
இரண்டு குறிப்பிட வேண்டிய விசயம் ஒன்று volunteers -அவர்களின் பங்களிப்பு மிகவும் பெரிது . ஓடும் தூரம் முழுதும் அவர்களின் சிரித்த முகமும் கைத்தட்டல்களும் கண்டிப்பாக ஓடுபவருக்கு ஒரு வகையான புத்துணர்வூட்டுமென்றால் மிகையாகாது. மற்றொன்று சாங்கி சிறை. இந்த சிறையை சாதாரண நாட்களில் பொதுமக்கள் பார்வையிட முடியாது. ஒரு வித்தியாசமான வடிவமைப்பு எனக்கு அது ஒரு பிரம்மாண்டமாகவே தெரிந்தது.
இந்த பந்தயத்திற்கென்றே உருவாக்கிய "playlist" .
- ஒழுகி ஒழுகி - ஒரு சினிமாக்காரன் (மலையாளம் )
- காட்டுக்குயிலு - தளபதி
- யாத்தே யாத்தே -ஆடுகளம்
- தி பைனல் கவுண்டவன் - ஐரோப்
- என்ட அம்மேட -வெளிப்படிண்டே புஸ்தகம் (மலையாளம் )
- கடலம்மா -அயால் ஜீவிச்சிருப்புண்டு (மலையாளம் )
- தீயமே - அங்கமாலி டைரிஸ் (மலையாளம் )
- தண்டர் - இமாஜின் டிராகன்
- ஷேப் ஆப் யு - எட் ஷீரன்
- பொத்தி வச்ச மல்லிக மொட்டு -மண் வாசனை
இந்த ஓட்டம் ஒரு நல்ல அனுபவம். அடுத்தது "Run By The Bay 21 KM .."
No comments:
Post a Comment