picture courtesy -Nike |
மராத்தான் என்றாலே நம்மில் பலர் "அது ரெம்ப கஷ்டம்பா " என்றுதான் சொல்வார்கள் . அது உண்மையும் கூட. கடந்த எட்டு வருடங்களில் நான் ஐந்து மராத்தான் ஓடியுள்ளேன் . முதலாவதைத் தவிர அனைத்திற்கும் தீவிர பயிற்சி மேற்கொண்ட பிறகே ஓடினேன். மரத்தானை ஓடி முடித்தாலே அது ஒரு பெரிய வெற்றி .ஓடி முடித்தவர்களுக்கே அந்த உணர்வு புரியும் .
என்னை போன்ற amateurs மராத்தானை மூன்று முதல் நான்கு மணிக்குள் முடித்தாலே அது ஒரு நல்ல ஓட்டம் என்று கருதப்படும். நாளை (06-05-2017) மூன்று professionals Eluid Kipchoge ,Lelisa Desisa மற்றும் Zersenay Tadese மராத்தனை இரண்டு மணிக்குள் ஓட முயற்சி செய்வார்கள்.அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நேரம்தான் முக்கியம் . வெற்றியும் தோல்வியும் அதை சார்ந்ததே .அதுவும் ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு நேரமே எல்லாம். இந்தமூவரின் குறிக்கோள் 42.195 கிலோமீட்டர் தூரத்தை 1:59:59 மணி அல்லது குறைவாக கடக்க வேண்டும் . தற்போதைய உலக சாதனை நேரம் 2:02:57 மணிதுளிகள் , 2014-ல் அதை செய்தவர் கென்யாவை சேர்ந்த Dennis Kimetto.
இரண்டு மணி நேரம் என்பது அனைத்து மராத்தான் வீரர்களுக்கும் ஒரு மேஜிக் எண் . வருடங்களாக வெவ்வேறு இடங்களில் இந்த முயற்சி நடந்து கொண்டேதான் இருந்தது இருக்கிறது .ஆனால் இந்த முறை பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம். இந்த மூன்று வீரர்களும் நைக் (Nike) நிறுவனத்தால் பயிற்சி அழைக்கப்பட்டவர்கள் .
நைக் இந்த முயற்சிக்கென்றே பிரத்தியோக சூ (shoe called Zoom Vaporfly Elite), 2.4 கிலோ மீட்டர் ஓட்ட தடம், உடன் ஓடும் குழு (pacers) , ஓடும் போது எடுத்துக்கொள்ளும் நீர் மற்றும் ஜெல் தயாரித்துள்ளது .இந்த முயற்சி வெற்றி பெற்றாலும் தோற்றாலும் நைக்கிற்கு (Nike) இது ஒரு பெரிய விளம்பரம் .விரைவில் அது ஒரு சூவை (high tech running shoe) வெளியிட உள்ளது..
என்னதான் பயிற்சியும் ஏற்பாடுகளும் செய்தாலும் பிற வெளி காரணிகளின் பங்களிப்பு முக்கியம்- வானிலை , ஓடும் வழி (சம தளம் ,மலை ,செங்குத்து), திருப்பங்கள் (turns) மற்றும் drafting. இவைகளில் ஏதேனும் ஒன்று உதவாவிட்டால் ஓடும் நேரம் அதிகமாகும்.
இந்த முயற்சி தேவையா ? இந்த கேள்வி ஓட்டப்பந்தைய வீரர்களிடையே பெரும் சர்ச்சையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது .ஒலிம்பிக் பதக்கமா அல்லது உலக சாதனையா என்று எந்த வீரரை கேட்டாலும் அவர்கள் சொல்லும் பதில் ஒலிம்பிக் பதக்கமே. என்னை பொறுத்தவரை இந்த முயற்சியில் தவறில்லை , மனிதன் எவ்வளவு விரைவாக ஓட முடியும் என்பதை அறிந்துகொள்ள உதவும்.பொறுத்திருந்து பாப்போம் .
3 comments:
அருமையான பதிவு. தலைப்பு இன்னும் சிறப்பு. ஂமேலும் தனிப்பட்ட அநுபவங்களை சேர்த்தால் இன்னும் சிறப்பாகும்.
சிறப்பாக இருந்தது. வார்த்தைகளின் கோர்வை சிறப்பு. சுருங்கச் சொல்லி விளங்கச் செய்தமைக்கு நன்றி.
Post a Comment