The striking feature of this book is the language. Simply awesome. I read many paragraphs more than once. One of the few Tamil books which we can just read for the sake of language.
I was intrigued by the name of this book - Reyinees looks typical christian or rather western but Iyer as well know indicates Brahmin. How come a street name with this combination ? I searched and found out that Iyen / Iyer in Tamil indicates good person.
இந்த ஐயர் என்கிற சொல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பிராமணர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஐயர் என்கிற சொல்லிற்குச் சிறந்தவன் என்று பொருள். வள்ளுவன், ஐயன் வள்ளுவனானது அப்படித்தான். தமிழகத்தினுடைய தென்கோடி மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டத்திலேயும் , கன்னியாகுமரி மாவட்டத்திலேயும் கிறிஸ்துவப் பாதிரிமார்களைக் குறிப்பதற்காக இந்த ஐயர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். கேரளத்தில் ஃபாதர் தாமஸை, தாமஸ் அச்சன் என்று சொல்வாரகள். ஆனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஃபாதர் தாமஸ் என்றேதான் சொல்கிறார்கள். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஃபாதர் தாமஸ், தாமஸ் ஐயர் ஆகிறார். அப்படியான ஒரு ஐயர்தான் ரெயினீஸ் ஐயர். - மு இராமனாதன் (taken from Thinnai website. thanks to them)
This is a story of Reyinees Iyer street, a street with only six houses on both sides. How many of us living in cities know our neighbours? If you are from village , you will definitely miss the 'typical' street environment. This book brought back lots of great memories of my childhood specially the camaraderie among the people.Each house and it's inhabitants has their own stories.This book brings their happiness and struggles with raw emotions. By loving others these people move forward in their life.
Its a small book, I love all the characters . I cannot forget these characters easily. The way the author describes this street's days of the week is simply amazing :
திங்கட் கிழமை ஏராளமான வீட்டு வேலைகள் இருப்பது போன்ற தோற்றம் தந்து கழித்தது .
செவ்வாய் கிழமை , மீண்டும் வாழ்கையில் நிகழபோகும் ஒரு ஆனந்த்தத்துக்கு உறுதியளிப்பது .
புதன் கிழமையோ இன்னும் முக்கியமானது . முன் தினத்தில் பெற்ற சிறு சிறு சந்தோஷங்களையும் , வரப்போகிற ஓய்வு நாளைக் குறித்த ஞாபகத்தையும் மேலும் உறுதிப்படுத்துகிறது ."
The book ends with this (What else one can expect , this is simply too good)
எல்லாவற்றையும் உய்விக்கிற மழைதான் ரெய்னீஸ் ஐயர் தெருவை பெருமைப்படுத்துகிறது. டாரதி நினைத்தபடியே அன்று மழை வந்தது. மழையில் ரெய்னீஸ் ஐயர் தெருவைப் பார்க்க அழகாக இருந்தது. தெருவின் அமைதியில் மழை மேலும் பிரகாசம் எய்தியது. மழை தெருவுக்குப் புது மணலைக் கொண்டு வரும். எதிர்த்த வீட்டு இருதயத்து டீச்சர் வீட்டுக் கோழிகள் தங்களுடைய எளிய அலகுகளால் மண்ணைக் கிளறுகிற சந்தோஷத்தையும் மழைதான் தருகிறது. மழை எப்பொழுதும் நல்லதே செய்யும் என்பதை ரெய்னீஸ் ஐயர் தெருக்காரர்கள் நம்பினார்கள். இருதயத்து டீச்சர் இந்த மழைக்கு பிறகு சேசய்யா திடீரென ஆச்சரியப்படத்தக்க விதமாய் குணமடைந்து விடுவானென்று நம்பினாள். அன்னமேரி டீச்சர் ஓட்டிலிருந்து இறங்கி வரும் தண்ணீரை பிடிப்பதற்காக வரிசையாக பாத்திரங்களை மழையில் நனைந்துக்கொண்டே வைத்தாள். சாம்ஸனுக்கும் மழையை வேடிக்கை பார்க்க மனம் இருந்தது. டாரதி, தாத்தாவின் கால்மாட்டில் கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டாள், மழையைப் பார்க்க.”
“ஆசீர்வாதம் பிள்ளையின் மனைவி ரெபேக்காள் மழைத் தண்ணீர் வீட்டுக்குள் வந்து விடாதபடி பழைய சாக்குத்துண்டுகள் இரண்டை எடுத்து வாசல் நடையில் போட்டாள். மழையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத் தோன்றுவார்கள் மழையின் போது
Just read it.
No comments:
Post a Comment