06-03-2021 06:00
கிழக்கு கடற்கரை பூங்கா
நல்ல குளிர். இன்று கலீல் ஜிப்ரானின் "On Children" கவிதையைச் சொல்லிப் பார்த்தேன். கிட்டத்தட்ட முழுக் கவிதையையும் சொன்னேன். அந்தக் கவிதை எவ்வளவு உண்மை.
Your children are not your children.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.
போனில் பாடல்களைப் ஓட செய்தேன். "இது ஒரு பொன்மாலை பொழுது .." ஆரம்பித்தது. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது ஆம்புலன்சும் காவல் கார்களும் நின்றிருந்ததன. ஒரு பெண்ணை காவலர்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர். என்ன நடந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டே ஓடினேன் . சற்றுதூரம் ஓடினேன் .மீண்டும் மீண்டும் எண்ணத்தில் ஆம்புலன்சே வந்தது. ஏனோ அதற்குமேல் ஓட மனம்வரவில்லை. திரும்பி வீட்டிற்கு ஓட ஆரம்பித்தேன்.முக்கிய சாலையை அடைந்தபோது இருவர் கையில் கிரிட்கெட் பேட்டோடு என்னை நோக்கி நடந்து வந்தனர்.எங்க விளையாட போறீங்க என்று கேட்டேன். ஹாஸ்டல தான் அண்ணா என்றார்கள். நான் கிரிக்கெட் மேட்ச் விளையாடி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. பேட்டைப் பிடித்தே இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பேட் ஒன்று வாங்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment
welcome your comments