03-03-2021 09:00
உபியிலிருந்து வீடுவரை
கடுமையான வெய்யில். ஓடுவாதா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டே பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன். சிக்னலில் பேருந்து வர எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கைபேசியில் பார்த்தபோது பதினான்கு நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்றது. காத்திருப்பத்திற்கு பதில் ஓடுவதே சிறந்தது என்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன்.earpiece இல்லை. வெகுநாட்களுக்குப் பிறகு இன்றுதான் காதில் எதுவும் இல்லமால் ஓடினேன். ஓட ஆரம்பித்தக் கனமே எண்ணத்தில் தோன்றியது இரண்டு வார்த்தைகள் "lateral surveillance". ஒரு வாரமாக அதைப் பற்றி வாசித்து வருகிறேன். குடிமகனே குடிமகனைக் கண்காணித்தல். மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே இதை அமல்படுத்தி இருக்கிறார்கள் என்று வாசித்த ஞாபகம். அதன் பெயர் C-Plan app. "To receive inputs from Certain identified individuals in villages across the state". யார் அந்த "certain identified individuals". எப்படி இவர்களை தேர்வு செய்கிறார்கள் என்பதெல்லாம் மார்மமாக இருக்கிறது. ஹைதராபாத்தில் "Hawk Eye" என்ற செயலி நடைமுறையில் இருக்கிறது. அது "to empower common man to become Citizen Police" என்று விளம்பரப்படுத்தப்படுகிறது . பல நாடுகளில் இப்படி இருக்கிறது . Right to Privacy மற்றும் Right to freedom of speech and expression என்னவாகும் . இது எங்கு போய் முடியுமோ என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment
welcome your comments