09-12-2020 9:05
உபியிலிருந்து வீடுவரை
கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது இந்திய கிரிக்கெட் வீரர் நட்ராஜ் தான். நான் அவரது பௌலிங்கை ஹயிலைட்ஸில் தான் பார்த்திருக்கிறேன். நல்ல தொடக்கம். பார்ப்போம் என்றெண்ணிக் கொண்டேன். தாந்தேயின் "The Divine Comedy" புத்தகத்தை மீண்டும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இது எனது மூன்றாவது முறை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம்.பல வரிகள் மனதில் வந்து கொண்டே இருந்தன. தமிழில் ஏன் நல்ல மொழிப்பெயர்ப்பு வரவில்லை என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment
welcome your comments