24-08-2020 08:40
தஞ்சோங் காத்தோங் ரோடு
ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது இன்று அனுப்பவேண்டிய ஒரு ஈமெயில் தான். வெள்ளிக்கிழமையே நான் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டேன். ஆனால் மற்றொரு என்ஜினீயரின் ஒப்புதல் இல்லாமல் நான் அந்த ஈமெயிலை அனுப்ப முடியாது. இந்த ப்ராஜெக்ட் ஒரு இந்திய கம்பெனிக்கு செய்ய டெமோ காட்ட வேண்டும். அதற்குரிய flowchart-ஐ நான் வரைந்து வைத்திருக்கிறேன். ஈமெயிலுடன் அதையும் சேர்த்து அனுப்ப வேண்டும். அப்படியே எண்ணம் முழுவதும் நான் இதுவரை வரைந்த flow diagrams மேல் சென்றது. Microsoft Visio-தான் எனக்கு எல்லாமாகி போனது. ஒரு மணிநேரம் பேச வேண்டியதை ஒரு flow diagram ஐந்து நிமிடத்தில் புரிய வைத்து விடும். இந்த 12 வருடங்களில் நான் பல மீட்டிங்களுக்கு சென்றுள்ளேன் என்னைப் பொறுத்தவரை diagrams இல்லாமல் ப்ரொஜெக்ட்டை கஸ்டமருக்கு விளக்குவது பெரும் கஷ்டம். அப்படி யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று "Hi Sasi" என்று ஒருவர் என் முன்னாள் ஓடி வந்துகொண்டிருந்தார். எனக்கு உடனே அது யாரென்று புலப்படவில்லை. மிக அருகில் வந்தவுடன் தான் அது யாரென்று எனக்கு தெரிந்தது -அவர் என் பாஸ்(Boss). அவரும் ஓடிக்கொண்டிருந்தார். அவருக்கு "Hi" சொல்லிவிட்டு இருவரும் நிற்காமல் எதிரெதிர் திசையில் ஓடினோம். அப்போதுதான் கவனித்தேன் எனக்கு முன்னால் ஒருவர் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார். அவரை பின்தொடர முடிவு செய்து வேகத்தை கூட்டி அவருக்கு மிக அருகில் ஓடினேன். வீடு வரும் வரை அவரை பின் தொடர்ந்தேன், மனதெல்லாம் அவரின் கால்கள் தான் ... அவர் என் வீட்டைத் தாண்டி ஓடினார். வீட்டிற்குள் வந்ததும் மொபைலைப் பார்த்தேன் "Hope u had a good run 👍" என என் பாஸ் மெசேஜ் அனுப்பியிருந்தார்.
No comments:
Post a Comment
welcome your comments