12/09/2019 08:10
வீட்டிலிருந்து அலுவலகம்வரை
வாக் மேனை எடுக்க மறந்து விட்டேன். அருமையான காலை. வெய்யில் லேசாக அடித்துக்கொண்டிருந்தது. வாரநாட்களில் காலையில் ஓடினாள் சில காட்சிகளை ஒவ்வொரு நாளும் காணலாம். இரண்டு இந்திய பள்ளிக் குழந்தைகள் அவசர அவசரமாக பேருந்து எண் 30-ஐ பிடிக்க ஓடுவார்கள். இன்றும் அதே நடந்தது. எப்பவும் யோசிப்பது போல் இன்றும் அதே யோசனை அவர்களின் பெற்றோர்கள் ஏன் அவர்களை சற்று நேரம் முன்பாக பேருந்து நிலையத்திற்கு போக சொல்லக் கூடாது?? இந்த மொபைல் அப்ளிகேசனால் வருகின்ற வினை.
சர்ச்க்குள் ஒரு ஐயா இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு புரட்டி பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு "அருள் நிறைந்த மரியே" சொல்லிக்கொண்டே கடந்து ஓடினேன்.யூனுஸ் மேம்பாலம் வரை என்ன எண்ணினேன் என்று ஞாபகமில்லை. திடீரென்று அமெரிக்கா ஏன் குர்டிஸ்தானை கைவிட்டது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு காரணம் நேற்று தான் "The Empire And Five Kings" புத்தகத்தைப் வாசிக்க ஆரம்பித்தேன். சிவப்பு சிக்னல் வந்தது அதில் ஒரு இந்தியர் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார் என்னை உற்றுப் பார்த்தார் நான் ஹலோ என்றேன். "என்னண்ணே DMK கலர்ல டிரஸ் பண்ணிருக்க " என்று கேட்டார். நான் சிரித்துக்கொண்டு கடந்து சென்றேன். நான் சிவப்பு கலர் டீ-ஷர்ட்டும் கருப்பு ஷார்ட்ஸும் சிவப்பு ஷூவும் அணிந்திருந்தேன் !
அலுவலகத்தை நெருங்கும்போது திடீரென்று "The Final Countdown" பாடல் நினைவில் வந்தது.அலுவலகத்தை அடைந்ததும் அதைப் பற்றிய நினைப்பே. 1996 உலக கோப்பை கிரிக்கெட் கவுண்டன் நிகழ்ச்சி ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியின் டைட்டில் பாடல் இது. எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த beat song!

No comments:
Post a Comment
welcome your comments