Friday, August 31, 2018

Hello , Mr.Hulot - David Merveille


வார்த்தைகள் இல்லாத வரைபடங்கள் கொண்ட புத்தகம்.  பக்கங்களைத்  திருப்பத் திருப்ப ஒருவித உற்சாகம் பற்றிக்கொண்டது. ஹுலோட்  (Hulot) அவர் செய்யும் வெவ்வேறு செயல்களின் தொகுப்பு இந்த புத்தகம்.பிரெஞ்சு மொழியில் வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்ற புத்தகம். நான் படித்தது (பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும்) ஆங்கிலத்தில்.


யார் இந்த ஹுலோட் ? ஹுப்லோட் என்பவர் பிரெஞ்சின் பிரபலமான சினிமா கதாபாத்திரம். சார்லி சாப்ளின் கதைகளை தழுவி எடுக்கப்பட்ட படங்களில் இடம்பெற்ற கதாப்பாத்திரம் . இந்த நகைசுவை படங்களை இயக்கி நடித்தவர் பிரெஞ்சின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ஜகியூஸ் டாட்டி  (Jacques Tati ).இந்த புத்தகம் இப்படங்களை தழுவியது.ஒவ்வொரு பட தொகுப்புக்கும் ஒரு தலைப்பு. "The Moon Walk " என்ற தலைப்பில் உள்ள படத்தொகுப்பு அழகு. பேருந்து நிலையத்தில் காத்திருத்தல் , விலங்கியல் பூங்கா ,  பனி விளையாட்டு மற்றும் பல.


அனைத்து படங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. டேவிட் மெர்வெயிலே (David Merveille ) 2004-ல் ஹுலோட் படங்களைப் பார்த்ததாகவும் அதுவே அவரை இந்த புத்தகத்திற்கு அடித்தளமாக அமைந்ததாக கூறுகிறார்.

அற்புதமான புத்தகம் .எந்த நேரத்திலும் பார்க்கலாம் சிரிக்கலாம் .

Wednesday, August 15, 2018

Bullfight - Yasushi Inoue


இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் நடக்கும் கதை. அந்தப் போரால் ஜப்பான் பெரும் அழிவைப் பெற்றது. எங்கும் இடிந்த மற்றும் சிதைந்த கட்டங்கள். நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை தலைகீழானது. இந்த சூழ்நிலையில்தான் சுகமி ஒரு பத்திரிக்கைக்கு எடிட்டராக பொறுப்பேற்கிறான். சுகமி திருமணமானவன் குழந்தைகளையும் மனைவியையும் போர் பாதுகாப்பிற்க்காக வேறு இடத்தில் தங்கவைத்துள்ளான். ஒரு நாள்  தாஷிரோ என்பவன் சுகமியிடம் காளை சண்டை  பற்றி குறி  அதற்கு  அவனது பத்திரிகை ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறுகிறான். முதலில் ஈடுபாடில்லை என்றாலும் தாஷிரோ காளை மேல் பார்வையாளர்கள் பந்தயம் கட்டலாம் என்று சொன்னவுடன் சுகமிக்கு ஒருவித ஈர்ப்பு வருகிறது. போட்டியை நடத்துவதாக ஒத்துக்கொள்கிறான்.

சுகமி தனது முழு நேரத்தையும் போட்டியை நடத்துவதிலேயே செலவிடுகிறான்.அவனது உதவியாளர்கள் எச்சரிப்பையும் மீறி அவன் பெரும் பணம் செலவிடுகிறான். அவன் அதை நடத்தியே தீருவது என முடிவு செய்து அனைத்து வேலைகளையும் செய்கிறான். ஒகாபே என்ற பணக்காரனின் உதவியை பெறுகிறான். அவனுக்கு தெரியும் அது சரியான வழியில் வந்த பணமல்ல என்று இருந்தும் ஏற்றுக்கொள்கிறான். பத்திரிக்கையின் எதிர்காலத்தையே கேளிவிக்குள்ளாக்கும் அளவுக்கு செலவுகள் கூடிக்கொண்டே இருக்கிறது. எப்படியும் தன்னால் அனைத்தையும் திரும்ப பெற முடியுமென்று நம்புகிறான்.
It’s not which bull wins and which loses that they want to see decided, it’s whether they themselves have won or lost.
சுகமி தனது பத்திரிக்கையின் விமர்சர்கள் கூறுவது போல " A sensitive poet type would undoubtedly have been able to point out a certain shadow of emptiness, of devil-may-care negligence, of loneliness darkening the pages of a paper that was popular among smart city kids. These were qualities that Tsugami, who gave the paper its editorial direction, carried within himself, though he kept them carefully concealed."  இது சகிக்கோவிற்கு  மட்டும்தான் தெரியும்.

இதற்கிடையே சுகமிக்கும் சகிக்கோவிற்கும்  உள்ள உறவின் கதை. அவனுக்கும் சகிக்கோவிற்கும் மூன்று வருட தொடர்பு. சகிக்கோ போரில் கணவனை இழந்தவள். முதல் சந்திப்பிலேயே அவளுக்கு சுகமியிடம் காதல். அவர்கள் இருவரின் உறவு எவருக்கும் தெரியாது. எதற்கும் கவலைப்படாத அவனது தோற்றம் அவளுக்கு பிடித்திருந்தது. அவனைவிட்டு விலகவேண்டுமென்று பலமுறை எண்ணி விலகாமல் இருப்பவள். அவள் அவனை மிகவும் நேசிக்கிறாள் ஆனால் அவனோ அவளை ஏனோதானோ என நடத்துகிறான். அவர்களின் உறவு ஒருவித உடைந்த கண்ணாடி போல. இருவருக்கும் தெரியும் அவர்களால் சாதாரணமாக வாழ இயலாதென்று. அனைவரும் காளைகளின் மேல் பந்தயம் காட்டுகிறார்கள். அவனும் அவளும் கூட. அது அவர்களின் வாழ்க்கையின் மேல் கட்டப்பட்ட பந்தயம்.

இது ஒரு தனி மனிதனின் கதையானாலும் ,அன்றைய ஜப்பானைதான் ஆசிரியர் விவரித்துள்ளார். பலவிதமான கதைமாந்தர்கள் கதைக்கு மேலும் அழகு. உலகப்போருக்கு பின்னர் ஜப்பானியர்கள் எவ்வாறு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினார்கள் என்பதையும் இக்கதையின் மூலம் கூறியுள்ளார் ஆசிரியர். மிக அருமையான மொழிபெயர்ப்பு . ஜப்பானின் உயரிய பரிசான  "Akutagawa prize " வென்ற புத்தகம் இது. ஆசிரியர் யசூஷி இனோ ஜப்பானின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர்.

Monday, August 6, 2018

Are You An Echo ? - Misuzu Kaneko


ஜப்பானிய கவிஞர் மிசுஸு கணேக்கோவின் வாழ்க்கை வரலாறு, கவிதைகள் மற்றும்  அழகான வரைபடங்கள்  கொண்ட புத்தகம் . நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் இந்த புத்தகத்தைப் பார்த்தேன். உடனே வாசிக்க ஆரம்பித்தேன். மிகவும் எளிய மொழியில் எழுதப்பட்ட கவிதைகள். இவருடைய கவிதைகள் இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்டது. அவருடைய நண்பர்  யசாகி பதினாறு வருடம் பல  போராட்டங்களுக்குப் பிறகு  மிசுஸுவின் கவிதைகளை சேகரித்து வெளியிட்டுள்ளார்.   மிசுஸுவின் சகோதரரை தேடி கண்டுப்பிடித்து அவரிடம் இருந்த மிசுஸுவின் டைரியைப்  பெற்றார்.  அதில்  512 குழந்தைகள் கவிதைகள் இருந்தன, பெரும்பாலானவை அச்சில் வராதது. அதிலிருந்து சில முக்கிய கவிதைகளை எடுத்து இந்த புத்தகத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் கவிதைகள் உள்ளன.

மிசுஸுவின் வாழ்க்கை பெரும் துயரிலானது. சிறு வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். கணவர் சரியில்லாதலால் திருமண வாழ்க்கை நான்கு வருடங்களிலேயே முடிந்தது. மிசுஸுவை பெரிதும் பாதித்தது தனது ஒரே குழந்தையை பிரிந்ததுதான். தனது இருப்பத்தியேழாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.  அவர் மிகவும் பிரபலமானது 2011 சுனாமியின் பொது அவரது கவிதை "Are You An Echo ?"  விளம்பரத்தில் வந்தபோதுதான்.

Are You an Echo?

If I say, “Let’s play?”
you say, “Let’s play!”

If I say, “Stupid!”
you say, “Stupid!”

If I say, “I don’t want to play anymore,”
you say, “I don’t want to play anymore.”

And then, after awhile,
becoming lonely

I say, “Sorry.”
You say, “Sorry.”

Are you just an echo?
No, you are everyone.

Snow Pile

Snow on top
must feel chilly,
the cold moonlight piercing it.

Snow on the bottom
must feel burdened
by the hundreds who tread on it.

Snow in the middle
must feel lonely
with neither earth nor sky to look at.



Big Catch

At sunrise, glorious sunrise
it’s a big catch!
A big catch of sardines!

On the beach, it’s like a festival
but in the sea, they will hold
funerals
for the tens of thousands dead.

மிசுஸுவின் கவிதைகள் இயற்கையின் மீது பெரும் இரக்கம் கொண்டவை.  விலங்குகள் ,மரம் ,செடி கோடி, மீன் கடல் என அனைத்தயும் இரக்கத்துடன் பார்க்கிறது இவருடைய கவிதைகள்.

Fish 

I feel sorry for the fish in the sea.

Rice is grown by people,
cows are raised on pastures,
even carp are fed in their ponds.

But the fish in the sea-
no one looks after them;
they do no harm.
And yet, here I am about to eat one.

I feel sorry for the fish in the sea.

Waves

Waves are children
laughing and holding hands.
Together,they come.

Waves are erasers
wiping away words
written on the sand.

Waves are soldiers
advancing from the open sea,
firing their guns.

Waves are forgetful,
leaving pretty,pretty shells
behind on the sand.


Day And Night

After day comes night,
after night comes day.

From where can i see
this long,long rope,
its one end, and the other?

இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து ஓவியங்களும் மிகவும் அழகாக உள்ளன. சிறிது மங்கா சாயல் உள்ளது.

அற்புதமான புத்தகம்.


Saturday, August 4, 2018

Convenience Store Woman - Sayaka Murata


நான் ஜப்பான் ரசிகன். ஜப்பானைப் பற்றி தேடித்தேடி படிப்பவன். என்னமோ ஜப்பானியர்களின் வாழ்க்கைமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த தேடலில் தான் இந்த புத்தகத்தை பற்றி தெரிந்துகொண்டேன். இது ஒரு வித்தியாசியமான கதை.  தற்போது ஜப்பானில் நிலவும் சில முக்கிய பிரச்சனைகளை இக்கதையில் ஆசிரியர் விவரித்துள்ளார்.  சமீபகாலமாக ஜப்பானிய ஆண்கள் வீட்டில் தனியாக இருப்பதையே அதிகமாக விரும்புகிறார்கள். உடலுறவு கொள்ளாத திருமணவாழ்கை . ஏற்கனவே ஜப்பானில் குழந்தைப்பிறப்பு குறைந்துகொண்டே வருகிறது.  இந்த சூழலில் நிகழும் கதை.
“This society hasn't changed one bit. People who don't fit into the village are expelled: men who don't hunt, women who don't give birth to children. For all we talk about modern society and individualism, anyone who doesn't try to fit in can expect to be meddled with, coerced, and ultimately banished from the village.” 
கதையின் நாயகியை புரிந்து கொள்வது சற்று கடினம்.இப்படியும் இருப்பார்களா என்ற எண்ணமே இறுதிவரை இருந்தது. கெய்க்கோ வீட்டில் முதல் குழந்தை சிறுவயது  முதல் தேவையென்றால் வன்முறையில் ஈடுபடுபவள். அவளுக்கு அவையெல்லாம் சரியாகவே படுகிறது. வாசிக்கும் நமக்கும் அவள் செய்வது சரிதான் என்று தோன்றுகிறது.  எது சரி
எது தவறு என்று சமூகம்தான் தீர்மானிக்கிறது. சமூகம் எப்படி ஒருவரது வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதை மிக அழகாவும் எதார்தமாகவும் இக்கதையின் மூலம் ஆசிரியர் எழுதியுள்ளார்.
When something was strange, everyone thought they had the right to come stomping in all over your life to figure out why. I found that arrogant and infuriating, not to mention a pain in the neck. 
பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு "Hiiromachi Station Smile Mart" என்ற கடையில் வேலையில் சேர்கிறாள் கெய்க்கோ. தொடர்ந்து 18 வருடங்கள் அதே கடையில் வேலை செய்கிறாள். அவள் ஏன் அந்த வேளையிலேயே இருக்கிறாள் என்று அனைவரும் கேட்கிறார்கள். அவளோ அவள் தங்கை சொல்வதுபோல் அனைவரிடமும் தனக்கு உடம்புக்கு சரியில்லை என்று அனைவரிடமும் சொல்கிறாள். அவள் திருமனம் செய்யாமல் இருப்பதையும் அனைவரும் ஏன் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் அதே கடையில் வேலை பார்க்க  ஷிராக (Shiraha) வருகிறான். அவனைப் பற்றி சொல்வதென்றால் அவன் மனிதர்கள் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறான்.
You eliminate the parts of your life that others find strange--maybe that's what everyone means when they say they want to 'cure" me.
சந்தர்ப்ப சூழ்நிலையும் கெய்க்கோவின் "getting cured" முயற்சியும் அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் தங்கவைக்கிறது. அவர்களுக்கிடையே எந்த உடலுறவும் இல்லை . ஆனால் மற்றவர்கள் அவர்களை  தம்பதியர் என்று நம்புகிறார்கள். ஷிராக எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருக்கிறான். அவனுக்கு இந்த setup பிடித்திருந்தது. அவனை  பொறுத்தவரை "Strong men who bring home a good catch have women flocking around them, and they marry the prettiest girls in the village. Men who don’t join in the hunt, or who are too weak to be of any use even if they try, are despised".அவனின் வலியுறுத்தலினால் கெய்க்கோ அவள் வேலையை விடுகிறாள். அவளது வாழ்வே தலைகீழாக மாறுகிறது. அவள் ஒரு இன்டெர்வியூவிற்கு செல்கிறாள் ஆனால் வழியில் ஒரு கடையைப் பார்க்கிறாள். எல்லாமே மாறுகிறது.  அந்த கடை தன்னோடு பேசுவதாக நம்புகிறாள் .இறுதியில் அவளால் வேறேதும் செய்ய முடியாதென்றும். கடை வேலைதான் தன வாழ்கை என்று முடிவெடுக்கிறள். ஷிராக அவளை கோபத்துடன் திட்டுகிறான்.
The normal world has no room for exceptions and always quietly eliminates foreign objects. Anyone who is lacking is disposed of. So that’s why I need to be cured. Unless I’m cured, normal people will expurgate me
ஏன் கெய்க்கோவை இந்த சமூகம் ஒரு சாதாரண பெண்ணாக ஏற்றுக்கொள்ளவில்லை ? அவளை ஏன் வாழ்க்கையில் தோல்வியடைந்த பெண்ணாக இந்த சமூகம் பார்க்கிறது? திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தவறா? சம்பளம் குறைந்தது என்றாலும் தனக்கு மகிழ்ச்சி தரும் வேலையிலேயே இருப்பது தவறா ? இந்த கட்டமைப்புக்களை உருவாக்கியது யார் ? ஷிராக கூறுவது போல் மனிதன் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறானா ? ஒருவர் என்னதான் செய்ய வேண்டும் இந்த சமூகம் தன்னை ஒரு சாதாரண நபராக கருதுவதற்கு ? என்ற பல முக்கியமான கேள்விகளை இந்த புத்தகம் எழுப்புகிறது.

சயாக முரட்டாவிடம் கெய்க்கோ கதாபாத்திரத்தை பற்றி என்ன நினைகிறீர்கள் என்று கேட்டதற்கு **"I think Keiko was the most natural when she was as naked as nature intended, like in kindergarten, when she was able to say what she would like to say. But when she started working at a convenience store, she became so constrained by it, and those constraints turned her into a very human creature. When she wears the mask of a cashier, she can act like a human, as if she were a human. It’s not her original self, but it enables her to meet people who accept her and don’t treat her like a weirdo. She was freed from her isolation, so in that sense, it meant freedom for Keiko."

கடை ஊழியர்களின் வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளார்  முரட்டா. அங்கு நிகழும் சின்ன சின்ன விசயங்களையும் மிக சுவாரஸ்யமாக கூறியுள்ளார். அதுவே வாசிப்பை நல்ல அனுபவமாக்குகிறது .இந்த புத்தகம் ஜப்பானின் முதன்மை இலக்கிய விருதான அக்குடகவா(Akutagawa) விருதை வென்றது .கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

**நன்றி lithub