வார்த்தைகள் இல்லாத வரைபடங்கள் கொண்ட புத்தகம். பக்கங்களைத் திருப்பத் திருப்ப ஒருவித உற்சாகம் பற்றிக்கொண்டது. ஹுலோட் (Hulot) அவர் செய்யும் வெவ்வேறு செயல்களின் தொகுப்பு இந்த புத்தகம்.பிரெஞ்சு மொழியில் வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்ற புத்தகம். நான் படித்தது (பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும்) ஆங்கிலத்தில்.
யார் இந்த ஹுலோட் ? ஹுப்லோட் என்பவர் பிரெஞ்சின் பிரபலமான சினிமா கதாபாத்திரம். சார்லி சாப்ளின் கதைகளை தழுவி எடுக்கப்பட்ட படங்களில் இடம்பெற்ற கதாப்பாத்திரம் . இந்த நகைசுவை படங்களை இயக்கி நடித்தவர் பிரெஞ்சின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ஜகியூஸ் டாட்டி (Jacques Tati ).இந்த புத்தகம் இப்படங்களை தழுவியது.ஒவ்வொரு பட தொகுப்புக்கும் ஒரு தலைப்பு. "The Moon Walk " என்ற தலைப்பில் உள்ள படத்தொகுப்பு அழகு. பேருந்து நிலையத்தில் காத்திருத்தல் , விலங்கியல் பூங்கா , பனி விளையாட்டு மற்றும் பல.
அனைத்து படங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. டேவிட் மெர்வெயிலே (David Merveille ) 2004-ல் ஹுலோட் படங்களைப் பார்த்ததாகவும் அதுவே அவரை இந்த புத்தகத்திற்கு அடித்தளமாக அமைந்ததாக கூறுகிறார்.
அற்புதமான புத்தகம் .எந்த நேரத்திலும் பார்க்கலாம் சிரிக்கலாம் .
No comments:
Post a Comment
welcome your comments