Thursday, May 3, 2018

யூகி கவாச்சி (Yuki kawauchi)

Photo Credit : Wikipedia
எல்லா வருடமும் நான் பாஸ்டன் மாரத்தான் போட்டியை மிகவும் எதிர்ப்பார்ப்புடன் பார்ப்பேன். இந்த வருடமும் அதே மாதிரி பார்த்தபோது எனக்கு ஒரு ஆச்சிரியம் காத்திருந்தது . அது ஜப்பானின்   யூகி கவாச்சி வெற்றி பெற்றததுதான்.  இதற்கு முன்பு இந்தப்  பெயரைக்  கேள்விப்பட்டதில்லை.  ஜப்பானில் நல்ல நெடுந்தூர ஓட்டக் கலாச்சாரம் இருக்கிறது என்பது எனக்குத்  தெரியும் ஆனால் ஜப்பானியர் ஒருவர் இந்த மாதிரிப்  பெரிய மரத்தானை வெல்வதை நான் பார்ப்பது முதல் முறை.

 யூகி கவாச்சி வெற்றிப் பெற்ற பிறகு அவரது பெயரை கூகிளில் தேடினேன். அப்போதுதான் புரிந்தது இந்த வெற்றிக்கு அவர் தகுதியானவர் மட்டுமல்ல அவர் ஒரு ஓடும் இயந்திரமென்று. அவர் 2017-ல் மட்டும் 12 மாரத்தானில் ஓடியுள்ளார்!. அனைத்துமே 2 மணி 20 நிமிடங்களுக்குள்!. ஒருவர் ஒரு வருடத்திற்கு ஆறு அல்லது ஏழு மாரத்தான் ஓடுவதே மிகவும் கடினம். உடம்பு தனது பலத்தை மீட்க சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும். ஆனால் யூகி கவாச்சி இப்படி பல மாரத்தான் ஓடுவது எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது.

இந்த பாஸ்டன் மாராத்தானில் யூகி கவாச்சி தொடக்கத்திலேயே மிகவும் வேகமாக ஓடினார். நான் நினைத்தேன் ஐந்து அல்லது ஆறு  கிலோமீட்டருக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியாதென்று ஆனால் இறுதிவரை மிகவும் தெளிவாக தனது வேகத்தைச் சரி செய்து கொண்டு போட்டியை வென்றார். ஐந்து முறை பின்னில் இருந்து முன்னுக்கு வந்தார். இப்படி நடப்பது மிகவும் அபூர்வம்.  மாரத்தான் நாளன்று பாஸ்டனில் குளிரும் மழையும் அது  வீரர்களுக்கு மிகவும் சவாலானது.  ஆனால் அதுவே தனக்கு வெற்றியை தந்தது என்றார் யூகி கவாச்சி. இந்த வருடம் கென்யர்களில் பலர் முதல் பத்தில்  இல்லை .  

யூகி கவாச்சின் வெற்றி ஆசிய மாரத்தான் வீரர்களுக்கு பெரிய boost.

2 comments:

welcome your comments